பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இரகங்கள் மற்றும் விதைப்பு நாள்

நெல் இரகங்கள் மற்றும் விதைப்பு நாள் குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இரகங்கள்

சேற்று நடவைப் போன்றே பலவகையான உள்நாட்டு இரகங்களும் வீரிய ஒட்டு இரகங்களும் புழுதி விதைப்பிற்கும் உகந்தவை. குறைவான நீர்த் தேவை மற்றும் மழை பாதிப்பில்லாமல் அறுவடை செய்ய ஏதுவாக குறுவைப் பருவத்தில் குறுகிய கால ரகங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. நீண்ட கால ரகங்களான சி.ஆர். 1009, ஆடுதுறை 44 மற்றும் ஆடுதுறை 50 ஆகிய ரகங்களும் ஒருபோகமாக சம்பா பருவத்தில் பயிரிடப்படுகின்றன.

விதைப்பு நாள்

முக்கியமாக கவனிக்க வேண்டியவை

-- குறுவைக்கு ஏற்ற விதைப்பு நாள் மே 20 முதல் ஜூன் 25 வரை

-- சம்பாவிற்கு ஏற்ற விதைப்பு நாள் ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 10 வரை

-- பாசன நீர் கிடைக்கும் பட்சத்தில் மேற்குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னரே விதைப்பது சிறந்தது

-- தாளடிப் பருவத்தில் புழுதிக்கால் விதைப்பு செய்யக்கூடாது

பாசன நீர் கிடைக்கும் பட்சத்திலோ அல்லது முன் பருவமழை தூறலுக்கு அதிக வாய்ப்புள்ள சூழலிலோ, புழுதிக்கால் விதைப்பினை 10-15 நாட்கள் முன்னதாகவோ பருவமழை தொடங்கும் முன்னரோ மேற்கொள்வது மிகச் சிறந்ததாகும். குறுவைப் பருவத்தில் மே மாத கடைசி முதல் ஜூன் மாதம் 2வது வாரம் வரை புழுதி விதைப்பிற்கு மிகவும் உகந்ததாகும். ஏனெனில் தாமதமான விதைப்பினால் முதிர்ச்சியடைந்த பயிர்கள் வடகிழக்கு பருவமழையில் சிக்கி பெரிதும் பாதிப்படையச் செய்யும். அதிகமான மழை, குறிப்பாக களிப்பான மண்வகையில் பயிர் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கிறது. முன் கூட்டியே சம்பா விதைப்பு நீர்த் தேவையை அதிகரித்தாலும் அறுவடையை பாதிக்காது.

ஆதாரம் : விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச வேளாண் நிதிக்கான வளர்ச்சித் திட்டம் (IFAD) “வளங்களை சேமிக்கும் தொழில்நுட்பம்" திட்டம் (IFAD மானியம் எண் C - ECG-46-IRRI, துணை திட்டம் 2) மற்றும் தெற்காசியாவிற்கான தானிய திட்ட துவக்கத்தின் (CSISA) பதிப்பு.

3.35714285714
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top