অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

நெற்பயிரில் இயற்கை பூச்சி மேலாண்மை

நெற்பயிரில் இயற்கை பூச்சி மேலாண்மை

பச்சை தத்துப்பூச்சி

 • ஐ. ஆர் 50, சி ஆர் 1009, கோ 46, பட்டாம்பி 2 மற்றும் 18 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்துதல்.
 • விளக்குக் கம்பத்தின் அருகில் நாற்றாங்கால் அமைப்பதை தடுத்தல்.
 • 20 சென்ட் நாற்றாங்காலுக்கு 12.5 கிலோ வேப்பபுண்ணாக்கினை இட வேண்டும்.
 • நாற்று நட்ட நாள் முதல் , 3 நாட்கள் வரை 2.5 சென்டி மீட்டர் அளவு நீரானது இருக்குமாறு பாதுகாக்க வேண்டும்.

பழுப்புஇலை தத்துப்பூச்சி

 • பட்டாம்பி 33 &  21 , பையூர் 3 , கோ 42, ஆஷா, திவ்யா, அருணா, கர்நாடகா, கார்த்திகா, கிருஷ்ண வேணி போன்ற  எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்துதல்.
 • நடவு வயலில் ஒவ்வொரு 2.5 மீட்டர் அகலத்திற்கு 30 சென்டி மீட்டர் இடைவெளி விடுதல்.
 • தேவைக்கேற்ப நீர் பாய்ச்சுதல்.
 • விளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல்.
 • 5 சதவிகித வேப்பங்கொட்டைச் சாறு (25 கிலோ / ஹெக்டர்) அல்லது 2 சதவிகித வேப்பஎண்ணெய் (10 லிட்டர் / ஹெக்டர்) தெளித்தல்.

வெண் முதுகு தத்துப் பூச்சி

முட்டை ஒட்டுண்ணியான , அனாகிரஸ் எனும் பூச்சியின் முதிர்பூச்சி மற்றும் இளங்குஞ்சுகளை வயலில் விடுவிக்கலாம்.

மாவுப் பூச்சி

 • நாற்று நடுவதற்கு முன்பாக வரப்புகளில் உள்ள புற்களையும், களைகளையும் அகற்ற வேண்டும்.
 • தாக்கப்பட்ட பயிர்களையும் சேர்த்து அழிக்க வேண்டும்.

நெல் கருநாவாய்ப் பூச்சி

 • களைகள் இல்லாமல் நிலத்தினைப் பாதுகாக்க வேண்டும்.
 • தேவைக்கு அதிகமான நீரை அகற்ற வேண்டும்.
 • விளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல்.
 • கருநாவாய்ப் பூச்சிகளை, வாத்துகளை  நாற்றுகளில் விடுவதன் மூலம் கட்டுப்படுத்துதல்.

கதிர் கருநிற நாவாய்ப் பூச்சி

வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம்.

நொச்சி இலைப் பொடியின் சாறு 5 சதம்.

நெல் தண்டுதுளைப்பான்

 • ரத்னா, ஜெயா, டி.கே.எம் 6 , ஐ. ஆர் 20 & 26 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயிரிடுதல்.
 • நாற்றுப் பறித்து நடவு செய்வதற்கு முன் நாற்றின் நுனியை கிள்ளி எடுத்தல் வேண்டும். இதனால் பூச்சிகளின் முட்டைகளையும் அகற்றலாம்.
 • முட்டைகளை சேகரித்து அழித்தல்.
 • பாதிக்கப்பட்ட கொத்தினை பிடுங்கி அழித்தல்.
 • டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணியை 5 மிலி / ஹெக்டர் என்ற அளவில் 30 வது மற்றும் 37 வது நாட்களில் விட வேண்டும்.

ஆணைக் கொம்பன்  ஈ

 • எதிர்ப்பு திறன் கொண்ட பயிர் வகைகளான சக்தி , விக்ரம், சுரேகா , எம்.டி.யூ -3 ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
 • அறுவடை செய்தவுடனேயே நிலத்தை உழ வேண்டும்.
 • குறைந்த காலத்தில் முதிர்ச்சி அடையக்கூடிய பயிர்களை தேர்வு செய்தல் நன்று.
 • அகச் சிவப்புக் கதிர் விளக்கப் பொறி , ஆணைக் கொம்பன் ஈக்களை கவரக் கூடியவை.
 • புழுப் பருவ ஒட்டுண்ணியை (பிளாட்டிகாஸ்டர் ஒலைசே) நாற்று நடவு செய்த 10 நாட்களுக்குப் பின்னர் 10 X 10 மீட்டர் அளவு நிலத்திற்கு ஒரு ஒட்டுண்ணி என்ற கணக்கில் வயலில் விடுவிக்கவும்.
 • நன்மை பயக்கும் பூச்சியான தரைவண்டு (கராபிட்) ஆணைக் கொம்பன் ஈக்களை உணவாக உட்கொள்ளும்.
 • எட்டுக்கால் பூச்சிகளை வயல்களில் பயன்படுத்தலாம்.

கூட்டமாக வாழும் புழு

 • புழுப் பருவ ஒட்டுண்ணிகளை உபயோகிக்கலாம். எ.டு. மெட்டியோரஸ் , சாரோபஸ் பைக்காலர், அபான்டலஸ் , டாக்கினியா , கீலோனஸ்
 • நாற்றங்காலில்  நீர் பாய்ச்சி , நீரை தேக்கினால் , மண்ணில் புதைந்துள்ள முட்டைகள் மேலே மிதந்து வரும். அவ்வாறு வரும் முட்டைகளை, பறவைகள் கொத்தித் திண்று விடும்.
 • மண்ணெணையை நீரில் கலந்து நீர்ப்பாசனம் செய்வதினால்ஈ புழுக்கள் சுவாசிக்க வழியின்றி அழிந்து விடும்.
 • வாத்துக்களை பூச்சி உண்ண வயல்களில் அனுமதிக்கலாம்.

கதிர் கூண்டுப்புழு

 • எதிர்ப்புதிறன் கொண்ட பயிர் வகைகளான , காவேரி , டி.ஏன்.ஏ.யூ எல். எஃப்.ஆர் 831 311 , ஆகாஷி, டிகே.எம்-6 , ஜ.ஈ.டி751 , ஜ.ஈ.டி 9225, ஜ.ஈ.டி 9797 ஆகியவற்றை பயன்னடுத்தலாம்.
 • பாதிக்கப் பட்ட இலைகளை கிள்ளி எரிதல் வேண்டும்
 • வரப்புகளை புற்களின்றி சுத்தமாக வைத்தல் அவசியம்.
 • அதிகப்படியான தழைச் சத்து உரத்தின் பயன்படுத்தாமலிருப்பது நல்லது.
 • வேப்பங் கொட்டை சாற்றிளை பயன்படுத்தலாம்
 • டிரைக்கோகிராமா கிலோனிஸ் எனும் ஒட்டுண்ணியை நாற்றுநட்ட 37, 44,57 நாட்களுக்கு பிறகு வயலில் விடுவிக்கலாம். பின்னர் மூன்று முறை மோனோகிரோடோபஸ் எனும் பூச்சி கொல்லியை 58 , 65 , 72 ஆம் நாள் தெளிக்க வேண்டும்.

வெட்டுக் கிளி

 • நிலத்தை உழுவதன் மூலம் , மண்ணில் புதைந்நுள்ள பூச்சி முட்டைகளை வெளியே கொண்டு வரலாம். இவற்றை பறவைகள் கொத்தி தின்றுவிடும்.
 • உயிரியல் முறை கட்டுப்பாட்டு காரணிகளான காக்கலஸ், பாரிக்கோமஸ் , சீலியோ போன்ற முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்தலாம்.

முள்ளுவண்டு

 • வெளிறிய பரப்பு கொண்ட இலை நுணிகள் கிள்ளி எறியப் பட வேண்டும்.
 • வண்டுகளை சிறிய வலைகளைக் கொண்டு பிடித்து அழிக்கலாம்.

நெல்லின் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

A. சாகுபடி முறை

 • அறுவடைக்குப் பின் நிலத்தில் உள்ள தாள்களை அகற்றவும்.
 • களைகள் நிலத்தில் இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.
 • எலிகளின் சேதத்தை கட்டுப்படுத்த, படுக்கினை சிறியதாகவும் , அகலம் குறைந்ததாகவும் இருத்தல் வேண்டும்.
 • எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்துதல்.
 • வடிகால் வாய்க்கால்களை அமைத்து பூச்சியினை கட்டுப்படுத்துதல்.
 • தேவைக்கு அதிகமான உரத்தின் பயன்பாட்டைத் தவிர்த்தல்.

உயிரியல் முறைகள்

டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணியை 5 மிலி / ஹெக்டர் என்ற அளவில் 30 வது மற்றும் 37 வது நாட்களில் விடுவதால் தட்டுத்துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.

டிரைக்கோகிரம்மா சில்லோனிஸ் என்ற ஒட்டுண்ணியை 5 மிலி / ஹெக்டர் என்ற அளவில் 37வது, 44வது மற்றும் 51 வது நாட்களில் விடுவதால் இலைப்புழுவினை கட்டுப்படுத்தலாம்.

தாவர பொருட்கள்

வேப்பங்கொட்டைச் சாறு கரைசல் 5 சதம் ( 25 கிலோ / ஹெக்டர்) வேப்ப எண்ணெய் 3 சதம் ( 15 கிலோ / ஹெக்டர்) என்ற அளவில் தெளிக்கும் போது பழுப்பு தத்துப்பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம்.

தாவர பொடிகளான வேப்பங்கொட்டைப் பொடி, நொச்சி , புரோஸோபிஸ் போன்றவற்றினை 5 சதம்  என்ற அளவில் தெளிக்கும் போது கதிர் நாவாய்ப் பூச்சி மற்றும் கருநாவாய்ப் பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம்.

கேள்வி பதில்கள்

பச்சைத் தத்துப்பூச்சி

1. பச்சைத் தத்துப்பூச்சியை எதிர்க்கும் திறன் கொண்ட நெல் இரகங்கள் யாவை?

ஐஆர் 50, சிஆர் 1009, கோ 46.

2. பச்சைத்தத்துப் பூச்சியை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

20 சென்ட் நாற்றங்காலில் 12.5 கிலோ வேப்பம் புண்ணாக்கை அடியுரமாக அளிக்க வேண்டும். தத்துப்பூச்சிகளைக் கவர்ந்து அதனைக் கட்டுப்படுத்துவதற்காக ஒளிப்பொறிகளை வைக்க வேண்டும்.நாற்று நடவு செய்து 15 மற்றும் 30 வது நாட்களில் இருமுறை கீழ்வரும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க வேண்டும். பாஸ்போமிடான் 40 SL @ 1000 மிலி/எக்டர் (அ)ப்ரோஃபென்பாஸ் 50 EC (திரவமாற்று திரட்டு) @ 1000 மிலி/எக்டர்.

தண்டு துளைப்பான்

3. நெற்பயிர் தண்டு துளைப்பானுக்கான எதிர்ப்புத் திறன் கொண்ட நெல் இரகங்கள் யாவை?

ரத்னா, ஜெயா மற்றும் டி.கே.எம் 6.

4. தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்துவதற்காக சிறந்த பூச்சிக்கொல்லி என்ன? ஒரு எக்டருக்கு என்ன அளவு பரிந்துரைக்கப்படுகிறது?

பென்தியான் 100 EC (திரவமாற்று திரட்டு) 500 மிலி/எக்டர் (அ) மோனோக்ரோட்டோபாஸ் 36 SL 1000 மிலி/எக்டர் (அ) ஃபெனிட்ரோதியான் 50 EC (திரவமாற்று திரட்டு) 1000 மிலி/எக்டர் (அ) போசலோன் 35 EC (திரவமாற்று திரட்டு) 1500 மி/லி எக்டர் (அ) குயினால்பாஸ் 25 EC (திரவமாற்று திரட்டு) 1000 மிலி/எக்டர் (அ) பாஸ்போமிடான் 40 SL 600 மிலி/எக்டர் (அ) ப்ரோஃபெனோபாஸ் 50 EC (திரவமாற்று திரட்டு) 1000 மிலி/எக்டர் ஆகியவை ஆகும்.

கூண்டுப்புழு

5. நெல் வயலில் கூண்டுப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கான உழவியல் மேலாண்மை முறைகள் என்ன?

தேங்கியிருக்கும் நிலையான நீரில் 250 மிலி மண்ணெண்ணெயை கலக்க வேண்டும். பயிர்ச் செடிகளின் நுனிப்பகுதியின் மேல் வயல்களின் இருபுறமும் நின்று கயிற்றைக் கொண்டு பயிர்களின் மேல் மெதுவாக இழுக்க வேண்டும். இதனால் பூச்சிகள் நீரில் விழுகின்றன. பின் வயலிலிருந்து நீரை வடிகட்டி விட வேண்டும். பின் கூண்டுப்புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும்.

6. நாற்றங்கால் மற்றும் நடவு வயலிலிருக்கும் கூண்டுப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கான பூச்சிக்கொல்லிகள் யாவை?

நாற்றங்காலில் இருக்கும் நீருடன் 100 மிலி மண்ணெண்ணெயை கலக்க வேண்டும். பின் 8 சென்ட் நிலத்திற்கு 30 மிலி என்ற அளவில் குயினால்பாஸ் 25 EC (திரவமாற்று திரட்டு) தெளிக்க வேண்டும்.

நடவு வயலில்   குயினால்பாஸ் 25 EC (திரவமாற்று திரட்டு) 1000 மிலி/எக்டர் (அல்லது) மோனோக்ரோட்டோபாஸ் 36 WSC (நீரில் கரையும் திரள்) 500 மிலி/எக்டர் ஆகியவற்றைத் தெளிக்க வேண்டும்.

7. கூண்டுப்புழுவின் பொருளாதார சேத நிலை அளவு என்ன?

ஒரு குத்துக்கு 1-2 கூண்டுப்புழுக்கள்

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate