பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பாரம்பரிய நெல் பூங்கார்

பாரம்பரிய நெல் பூங்கார் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்

பூங்கார்

நெற்பயிர் தண்ணீரிலேயே இருந்தாலும், நாற்பது நாட்களுக்கு விதை உறக்கத்தில் இருந்து, அதற்குப் பிறகே முளைக்கக்கூடிய திறன்கொண்ட மாறுபட்ட ரகம் பூங்கார்.

பாரம்பரிய நெல் ரகங்களில் குறுகிய காலப் பயிர். எல்லாப் பருவங்களுக்கும் ஏற்ற பயிர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மண் வகைகளுக்கும் ஏற்ற ரகம். ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்ய ஏற்ற ரகம் பூங்கார்.

மண்ணுக்கேற்ற விதை

இதன் வயது எழுபது நாட்கள் என்றாலும், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிர் செய்யும்போது எழுபதிலிருந்து தொண்ணூறு நாட்களில் அறுவடைக்குத் தயாராகிறது. சிவந்த, நடுத்தரமான நெல் ரகம். அரிசியும் சிவப்புதான். நடவு செய்யவும் நேரடி விதைப்புக்கும் ஏற்ற ரகம்.

தாங்கும் திறன்

பாரம்பரிய நெல் ரகங்களில் மழை, வெள்ளத்தைத் தாங்கி வளரக் கூடியது, விதைப்பு செய்து நாற்றங்கால் அல்லது வயலில் பத்து நாட்களுக்கு மேலாகத் தண்ணீர் வடிய வழியில்லாமல் இருந்தாலும் முளைக்கும் திறனும், முளைத்த விதையும் பாதிக்கப்படாது. கதிர் முற்றி அறுவடை நேரத்தில் தொடர் மழையாலும் மழை நீர் சூழ்ந்திருக்கும் காலத்தில் நெல் கதிர் தண்ணீருக்குள் இருந்தாலும், அது முளைக்காது. குறைந்தபட்சம் 40 நாள் விதை உறக்கத்துக்குப் பிறகே முளைக்கும் தன்மை கொண்டது.

மருத்துவக் குணம்

மருத்துவக் குணம் கொண்ட இந்த ரக அரிசியை மகப்பேறு காலங்களில் சாப்பிட்டுவந்தால், ஆரோக்கியமும் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைப்பதுடன் மருத்துவச் செலவு குறையும். தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பால் நன்கு சுரக்கும். இதனால் `டப்பா பால்பவுடர்’களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. தாய், சேயின் ஆரோக்கியம் நீடிக்கும்

ஆதாரம் : நெல் ஆராய்ச்சி மையம், திருவள்ளுவர் மாவட்டம்

2.992
கார்த்திகேயன் Jan 12, 2018 10:57 PM

இதன் விதை எங்கு கிடைக்கும் மகசூல் எவ்வளவு வரும்?

அன்புமுனுசாமி Sep 10, 2017 05:03 PM

இவ்வகை நெல்லின் மகசூல் பற்றிய விவரம் சேர்த்தால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.

வெங்கட்ராமன் May 26, 2017 02:23 PM

பராம்பரிய அரிசி வகைகள் பற்றிய கட்டுரை அருமை. இந்த வகை அரிசிகள் எங்கே கிடைக்கின்றன? அதையும் தெரிவித்தால் கட்டுரை முழுமை பெற்றிருக்கும் என்பது என் கருத்து.
வெங்கட்ராமன்
திண்டுக்கல்.

TASNA Nov 30, 2015 10:35 AM

தங்கள் அருகில் உள்ள வேளாண் துறையை அணுகவும்.

p.ஆசைத்தம்பி Nov 29, 2015 05:34 PM

விதை நெல் வேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top