பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண்மையும் சுற்றுச்சூழலும் / தட்ப-வெப்பம் அறிந்து பயிரிடுவோம்!
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தட்ப-வெப்பம் அறிந்து பயிரிடுவோம்!

தட்ப-வெப்ப காலநிலைகளுக்கு ஏற்ற பயிர்களை சாகுபடி செய்து மூலம் அதிக மசூலை பெற குறிப்புகள்.

வடகிழக்குப் பருவமழையும், மானாவாரி சாகுபடியும்

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பருவம் வடகிழக்குப் பருவமழை பருவம் என அழைக்கப்படுகிறது. தக்காண பீடபூமியின் தென்பகுதியில் இது மிக முக்கியமான மழைப் பருவமாகும். கடலோர ஆந்திர மாவட்டப் பகுதிகள், ராயலசீமா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகள் வடகிழக்குப் பருவமழை பருவத்தில் அதிக மழை பெறுகின்றன.

பருவமழைக்கு முன்பாகவே நிலம் தயாரித்தல் போன்ற சாகுபடி செயல்களை ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் வேலையாள்கள் பற்றாக்குறை போன்ற சில இடையூறுகளைத் தவிர்க்கலாம். காலதாமதம் ஏற்பட்டால் பயிரின் பிந்தைய வளர்ச்சி பருவம் வறட்சியால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

பருத்தி

உகந்த வானிலை காரணிகள்- முளைத்தலுக்கு உகந்த குறைந்தபட்சம் வெப்ப நிலை 16 டிகிரி செல்சியஸ். வளர்ச்சிக்கு உகந்த குறைந்தபட்ச வெப்பநிலை 21-27 டிகிரி செல்சியஸ். தாங்கி வளரும் வெப்ப நிலையின் உச்ச அளவு 43 டிகிரி செல்சியஸ். காய் பிடித்தலுக்கு உகந்த பகல் நேர வெப்ப நிலை 27-32 டிகிரி செல்சியஸ். ஆண்டு மழையளவு 50 செ.மீ., பருவம்- முன்பருவம். விதைக்கும் காலம் - செப்டம்பர் இறுதி வாரம். அறுவடை செய்யும் காலம்- பிப்ரவரி 2-வது வாரம்.

சோளம்

உகந்த வானிலை காரணிகள்- வளர்ச்சிக்கு உகந்த வெப்பநிலை 26-30 டிகிரி செல்சியஸ், அதிக வெப்பநிலையையும், வறட்சியையும் தாங்கக் கூடியது. பருவம்-முன்பருவம், விதைக்கும் காலம்- செப்டம்பர் இறுதி வாரம். அறுவடை செய்யும் காலம்-டிசம்பர் இறுதி வாரம்.

மக்காச்சோளம்

உகந்த வானிலை காரணிகள்-வளர்ச்சிக்கு உகந்த வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். 50-75 செ.மீ. சீரான பரவலுடன் கூடிய மழை.

கம்பு

உகந்த வானிலை காரணிகள்-வளர்ச்சிக்கு உகந்த வெப்பநிலை 20-28 டிகிரி செல்சியஸ். பருவம்-பருவ விதைப்பு, விதைக்கும் காலம்- அக்டோபர் 2-ம் வாரம். அறுவடை செய்யும் காலம்- டிசம்பர் கடைசி வாரம்.

பாசிப்பயறு

உகந்த வானிலை காரணிகள்-மழை 60-75 செ.மீ., கடல் மட்டம் முதல் 2 ஆயிரம் மீட்டர் உயரம் வரை பயிரிட உகந்தது. மிக அதிகளவு வறட்சியைத் தாங்கக் கூடியது.

உளுந்து

உகந்த வானிலை காரணிகள்-வெப்பநிலையும், ஈரப்பதமும் கொண்ட பருவம் உகந்தது. கடல் மட்டம் முதல் 1800 மீட்டர் உயரம் வரை பயிரிட உகந்தது. பூக்கும் பருவத்தில் அதிக மழை பாதிப்பை உண்டாக்கும்.

சூரியகாந்தி

உகந்த வானிலை காரணிகள்-பூக்கும் பருவம் முதல் முதிர்ச்சியடையும் பருவம் வரை பிரகாசமான சூரிய வெளிச்சம் தேவை. பூக்கும் பருவத்தில் கனமழை மகரந்தச் சேர்க்கையை பாதிக்கும். பருவம்-பின்பருவ விதைப்பு, விதைக்கும் காலம்-அக்டோபர் 3-ம் வாரம், அறுவடை செய்யும் காலம் - ஜனவரி முதல் வாரம்.

கொண்டைக்கடலை

உகந்த வானிலை காரணிகள்-குளிர்கால பயிர். ஆனால், மிக அதிக குளிரும், உறை பனியும் பயிரை பாதிக்கும். மழை 60-90 செ.மீ.

கொத்தமல்லி

உகந்த வானிலை காரணிகள்-இலைக்காக சாகுபடி செய்யும்போது கோடைக் காலத்தை தவிர மற்ற அனைத்துப் பருவங்களிலும் சாகுபடி செய்யலாம். உறைபனியற்ற வறண்ட குளிர்காலம் உகந்தது. கொத்தமல்லி (1) இலைகள்: பருவம்- பின்பருவ விதைப்பு. விதைக்கும் காலம்-அக்டோபர் 3-ம் வாரம். அறுவடை செய்யும் காலம் - டிசம்பர் 3-வது வாரம்.

கொத்தமல்லி (2) விதை

பருவம்-பின்பருவ விதைப்பு. விதைக்கும் காலம்-அக்டோபர் 3-ம் வாரம். அறுவடை செய்யும் நேரம் - ஜனவரி கடைசி வாரம்.

சென்னா

உகந்த வானிலை காரணிகள்-உகந்த மண்ணின் கார அமில நிலை 7 - 8.5. நீர் தேங்கியிருத்தல், கனமழை மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவற்றால் பாதிக்கப்படும். சென்னா (1) இலைகள்: பருவம்-மிகவும் பின்தங்கிய விதைப்பு.விதைக்கும் காலம்-நவம்பர் முதல் வாரம். அறுவடை செய்யும் காலம் - ஜனவரி 2-வது வாரம்.

சென்னா (2) விதை

பருவம்- மிகவும் பின்தங்கிய விதைப்பு. விதைக்கும் காலம்-நவம்பர் முதல் வாரம். அறுவடை செய்யும் காலம்- ஏப்ரல் 2-வது வாரம்.

பருத்தி, சோளம், பயறு வகைகள் போன்ற பயிர்களை முன் பருவ விதைப்பு செய்யலாம். பிற பயிர்களான மக்காச்சோளம், கம்பு மற்றும் குறுதானியங்களை அக்டோபர் 2-வது மற்றும் 3-வது வாரங்களில் பருவ விதைப்பு செய்யலாம்.

அக்டோபர் 3-வது வாரத்திற்கு பின்பு மழை காலதாமதமாக தொடங்கினால், பின்பருவத்திற்கு உகந்த பயிர்களான சூரியகாந்தி, எள், கொத்தமல்லி மற்றும் சென்னா போன்ற பயிர்களை விதைப்பு செய்யலாம்.

ஆதாரம்: கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்

3.05434782609
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top