பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பசுமைப் புரட்சி

பசுமைப்புரட்சி மூலம் மனிதன் நடத்திய போராட்டம் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல்

பசிக்கும் பஞ்சத்திற்கும் எதிராக பசுமைப்புரட்சி மூலம் மனிதன் நடத்திய போராட்டம் சிறிய வெற்றியை தந்தாலும் மக்கள் தொகை பெருக்கத்தின் முன் இந்த வெற்றி பயனற்று போய்விட்டது. இது ஒருபுறம் இருப்பினும் நவீன விவசாயத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் அளவிட முடியாததாகும்.

நீர்பாசனம்

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக ஏரி, குளம் மற்றும் நீராதார பகுதிகள் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நூற்றாண்டில் முன்பு அதிக பொருட்செலவில் பெரிய அணைக்கட்டுகள் கட்டப்பட்டன.

இதனால் சுமார் 80 மில்லியன் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறமுடிந்தது.

சிறந்த நீராதார மேலாண்மை காரணமாக “பசுமை புரட்சி” வெற்றிகரமாக செயலாக்கப்பட்டது.

பூமியிலிருந்து வெளி கொணரப்படும் நிலத்தடி நீரில் 50% மட்டுமே மீண்டும் நிலத்தடிக்கு சென்று சேருகிறது.

காடுகளை அழிப்பதினால் மழையளவு குறைவடைகிறது.

விவாசய நிலங்களில் அதிகப்படியான பாசனம் அத்தகைய நிலம் உவர்ப்பு தன்மையடைய வழிவகுக்கிறது•  விவசாய விரிவாக்க திட்டங்களினால் புல்வெளிகள், சரிவான மணற்பகுதிகள், சதுப்பு நிலக்காடுகள் போன்ற எளிதில் பாதிப்படையக் கூடிய இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

பூச்சிக்கொல்லி மருந்துகள்

தற்போது இந்தியாவில் பல வகையான பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஞிஞிஜி, ஙிபிசி, மாலத்தியான், கார்போஃபுரான் மற்றும் எண்டோசல்பான் போன்றவை பொதுவாக உபயோகப்படுத்தப்படும் மருந்துகளாகும்•  ஒவ்வொரு ஆண்டும் 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 83,000 டன் பூச்சிக்கொல்லி மருந்துகளை நாம் உபயோகப்படுத்துகிறோம்.  நாம் ஒரு ஹெக்டேருக்கு பயன்படுத்தும் 570 கிராம் பூச்சிக்கொல்லி மருந்தில் 1% மட்டுமே பூச்சியை அழிக்கின்றது மீதமுள்ளவை சூழலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தொடர்ந்து ஒரே பூச்சிக்கொல்லி மருந்தை உபயோகப்படுத்தி வருவதினால் பூச்சிகளுக்கு எதிர்ப்புதன்மை அதிகமாகியுள்ளது. எனவே தற்போது பூச்சிக்கொல்லிகளின் வீரியத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. பூச்சிக்கொல்லி மருந்துகள் தீமை செய்யும் உயிரிகளை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நன்மை செய்யும் உயிர்களான மண்புழு, சிலந்திகள், பறவைகள் மற்றம் பல உயிரினங்களையும் அழித்துவிடுகிறது. வயல்களில் நாம் உபயோகப்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் நீர்நிலைகளுக்கு அடித்து வரப்பட்டு மீன்கள், நீர்வாழ் தாவரங்கள், நத்தைகள் போன்ற சூழல் சமன்பாட்டிற்கு உதவும் பல்வேறு நீர்வாழ் தாவர விலங்குகளை அழித்து உணவு வலையை சிதைக்கின்றன.

பூச்சிக் கொல்லி மருந்துகள் எளிதில் உயிர்சிதைவு அடைவதில்லை. பாலில் கூட பூச்சிக்கொல்லி மருந்தின் எச்சம் இருக்கின்றது. எனவே ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு உணவின் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் எடுத்து செல்லப்படுவது உறுதியாகிறது. பாரம்பரிய முறையில் வேப்ப மரத்திலிருந்து பெறப்பட்ட சாறு, நச்சு விதைகள், விளக்கெண்ணெய், புகையிலை, ஊமத்தை, எருக்கு போன்றவைகள் பூச்சிகளை அழிக்க உபயோகிக்கப்பட்டு வந்தது. இவற்றின் பயன்பாட்டால் பக்க விளைவுகள் மிக குறைவாகவே இருந்தது.

இரசாயன உரங்கள்

மண்ணில் உள்ள சத்து குறைவை ஈடுசெய்ய இரசாயன உரங்களை தற்போது நாம் பயன்படுத்துகிறோம். இத்தகைய உரங்கள் விளைச்சலை அதிகமாக்குகிறது. எனினும் பக்கவிளைவாக மண்ணின் தன்மையை பாதிப்பதோடு நீர்நிலைகளில் அதிகளவு நீர்தாவரங்கள் பெருகி சூழலுக்கு கேடு விளைவிக்கிறது.  மண்ணிலுள்ள நுண்ணூயிரிகளும் மிகச்சிறிய தாவர விலங்கினங்களும் மடிகின்றன. இரசாயன உரத் தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் கந்தக-டை-ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் அமில மழை பொழிவற்கு வழி வகுக்கின்றன.

பாரம்பரிய விவசாய முறைகளில் விவசாய கழிவுகள், சாணம், பண்ணை கழிவுகள், எலும்புகள் போன்றவற்றை அவ்வப்போது நிலத்திலிட்டு அவற்றின் வளத்தை நிலைநிறுத்தினர்.  இம்மாதிரி முறையில் மண்ணில் பூஞ்சைகள், காளான்கள், புரோட்டோசோவாக்கள், சிலந்திகள், மண்புழுக்கள் மற்றும் பல உயிரினங்கள் தங்குதடையின்றி வாழ்ந்து நிலத்தின் வளத்தை பாதுகாத்து வந்தன.

வேளாண் இடு பொருட்கள்

இயந்திரங்களைக் கொண்டு செய்யப்படும் தீவிர விவசாயத்தினால் செய்யப்படும் பணிகளை எளிதாகவும், விரைவாகவும் செய்து முடித்து உற்பத்தியை அதிகரிக்க முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் ரூ 33,000 கோடி வேளாண் இயந்திரங்களை தயாரிக்க செலவிடப்படுகிறது. ஆனால் கனரக இயந்திரங்களான டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரம் போன்றவை விவசாய நிலத்தில் இயக்கப்படும்போது மண் இறுகி நீர் உறிஞ்சும் தன்மை குறைகிறது. மேலும் மண்ணிலுள்ள சிறு உயிரினங்களும் பாதிக்கப்படுகிறது.

வரும் காலத்திற்கான வளமான வேளாண்மை

தற்போதைய சூழ்நிலையில் செயற்கை உரங்களை அதிக அளவில் பயன்படுத்துதல், பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயன்பாட்டை ஊக்குவித்தல், இயந்திரமயமான விவசாயம் போன்ற நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் மென்மேலும் சீரழிந்து வருகிறது. எனவே பொருளாதார முறையிலும், கலாச்சார சமூக ரீதியிலும் மேம்பட்ட விவசாய முறைகளை கண்டறிந்து அமல்படுத்த வேண்டும்.

பாரம்பரிய வேளாண்மையின் முக்கியத்துவம்

தற்போது பாரம்பரிய விவசாய முறைகள் குறித்து கற்று அறிவதில் பலரும் ஆர்வமாக உள்ளனர். இத்தகைய கல்வியால் நவீன விவசாயத்திற்கு மாற்றாக பாரம்பரிய விவசாய வழிமுறைகளை கண்டறிந்து புதுப்பித்துக் கொள்ளலாம்

நம்நாட்டு விவசாயிகள் அனுபவ ரீதியாக கற்றறிந்த விவசாய ரகசியங்களை அவர்களின் சந்ததியினர் வழிவழியாக கற்றுக்கொண்டனர்.  எனினும் சூழலுக்கு தீங்கிழைக்காத இத்தகைய விவசாய முறைகளில் மிக குறைந்த செய்திகளுக்கு மட்டுமே குறிப்புகள் உள்ளன.

விவசாய பல்லுயிர் பெருக்கம்

ஓரின பயிர்வளர்ப்பு முறையில் விளைச்சல் அதிகமாக இருந்தபோதிலும் இத்தகைய பயிர்முறையில் நிலத்தின் வளம் குறைவதோடு தீங்கிழைக்கும் உயிரினங்கள் ஓரின பயிர்களை எளிதில் அழித்துவிடும். பாரம்பரிய வேளாண்மையில் சூழலுக்கு உகந்த பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்பட்டன.

விதைக்கும் முன் விதைகளின் முளைப்பு திறன், வறட்சியை தாங்கும் சக்தி, பூச்சிகள் மற்றும் தீங்குயிரிகளின் தாக்குதலை எதிர்த்து வளரும் தன்மை போன்ற பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து அவற்றை ஒருவருக்கொருவர் பரிமாரிக்கொண்டனர்.

ஆனால் தற்போது டெர்மினெட்டர் தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகள் நன்கு முளைத்து வளர்ந்தாலும் அவற்றிலிருந்து பெறப்படும் விதைகள் முளைப்புத்திறன் அற்றதாக உள்ளது. இத்தகைய விதைகள் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளன. வருங்காலத்தில் இத்தகைய விதைகளை உபயோகப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்க்கையும், பல்லுயிர் வளமும் அழிந்துவிடும் என்பதில் ஐயமில்லை.

ஆதாரம் : சி.பி.ஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம்.

Filed under:
3.02631578947
கருண் Mar 14, 2020 09:08 AM

# சூப்பர்

Hari Aug 10, 2019 07:19 PM

மிக அருமை

Vicky Aug 04, 2019 04:55 PM

மிகவும் பயன் தரும் கருத்துக்கள்

ர.மஹாலட்சுமி Jan 18, 2017 09:26 PM

மிக சிறப்பு...😀😁😊☺☺☺🙌🙋👧👍👌

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top