பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வெள்ளம்

தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்குவதையே வெள்ளம் என்கிறோம்.

வெள்ளம்

தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்குவதையே வெள்ளம் என்கிறோம். தொடர் மழை, சூறாவளி மற்றும் அணைக்கட்டுகள் உடைதல் போன்றவை வெள்ளத்திற்கு காரணமாகும். ஏனெனில் நிலம், கால்வாய், குளம் மற்றும் மனிதனால் வடிவமைக்கப்பட்ட நீர் நிலைகளில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் நீர் சேமித்து வைக்க இயலாது. இதனால், அதிகப்படியான நீர் நிலத்தில் வழிந்தோடி வெள்ளம் ஏற்பட காரணமாகிறது.

1. வகைகள்

வெள்ளம் அவை உண்டாகும் இடத்திற்கேற்ப வகை படுத்தப் பட்டுள்ளது.

2. ஆற்று வெள்ளம்

ஆற்றின் கொள்ளளவை தாண்டி நீர் வரத்து அதிகரிக்கும்போது, அதிகப்படியான நீர் அருகாமையிலுள்ள இடங்களில் வெள்ளத்தை உண்டாக்கும். கங்கை, யமுனா போன்ற ஆறுகளில் நீர் வரத்து அதிகமாவதற்கு முக்கிய காரணம் இமயமலையிலுள்ள பனிக்கட்டிகள் உருகுதலே ஆகும். மிக அதிகமான அளவில் மழை பெய்தாலும் ஆற்றில் வெள்ளம் ஏற்படும். இது ஒரு இயல்பான நிகழ்வு ஆகும்.

3. கரையோர வெள்ளம்

கடற்கரையோர பகுதிகளில் அதிக மழை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக வெள்ளம் ஏற்பட்டு அப்பகுதியை பாதிப்படைய செய்யும்.

4. நகர்ப்புற வெள்ளம்

நகர்ப்புறத்தில் கட்டிடங்கள் அதிகமாக உள்ள காரணத்தால் மழை நீர் நிலத்தினுட்புகுதல் தடுக்கப்படுவதாலும், வடிகால்கள் சரியாகப் பராமரிக்கப்படாத காரணத்தாலும் வெள்ளம் உண்டாகிறது.

நகர்ப்புறத்தில் மழையின் நாச வேலை

மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் 2005 ஆம் ஆண்டு பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டது. முறையாக திட்டமிடப்படாத கட்டுமானப் பணிகள், குறைந்து வரும் பசுமைப்பகுதி, சதுப்புநிலப்பகுதி, பாலீத்தின் பைகளால் அடைபட்டுக் கிடக்கும் வெள்ள வடிகால்கள் பாசனப்பிடிப்பு பகுதிகளான ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு ஆகியவையே இவ்வெள்ளப் பாதிப்புக்களின் முக்கியக் காரணங்களாகும்.

திடீர் வெள்ளம்

மிகச்சிறிய இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு பெய்யும் பலத்த மழையினால் இவ்வகையான வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இவ்வெள்ளப்பெருக்கானது குறுகிய நேரத்தில் வடிந்துவிடும்.

இந்திய வெள்ளங்கள்

இந்தியாவில் சாதாரணமாக நிகழும் இயற்கைப் பேரழிவுகளில் வெள்ளம் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு ஆகும். ஒரு சில மாநிலங்களைத் தவிர இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுமே வெள்ள அபாயம் உள்ளவையே. இந்தியாவில் பெய்யும் மொத்த மழையளவில் 75% ஜுன் தொடங்கி செப்டம்பர் வரையிலான நான்கு மாத காலங்களுக்குள் இருப்பதால் பிரம்மபுத்திரா, தாமோதர் போன்ற முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரப்பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இயற்கை வெள்ள வடிகால்கள்

மழைகாலங்களில், இந்திய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நிலத்தில் விழும் நீரை உறிஞ்சும் தன்மையை நிலம் இழந்துவிட்டதால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கிவிடுகிறது. ஏரி, ஓடை, ஆறு போன்றவற்றில் வெள்ளநீரை திருப்பிவிட்டு தாழ்வான பகுதியில் வெள்ள நீர் தேங்காமல் பாதுகாக்கலாம். ஆனால், கட்டுபாடில்லாமல் நீர்நிலைகளை தூற்று நகரங்கள் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் வெள்ளநீர் வடிய வழியில்லாமல் போகிறது. மேலும்,  ப்ளாஸ்டிக் மற்றும் திடக்கழிவுகளை கொட்டுவதால் நீர் போக்கு பாதை அடைந்துவிடுகிறது. ஆகவே,  நகரங்களில் வெள்ளநீர்  தேங்காமல் முறையாக வடியவேண்டும் என்றால்,  நீர்போக்கு பாதையில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றுதல், ஏரி போன்றவற்றை தூர்வாரி ஆழபடுத்துதல்   போன்ற செயல்களால் மட்டுமே வெள்ள நீரால் ஏற்படும் அழிவை தடுக்க முடியும்.

பள்ளிக்கரணை சதுப்புநிலம் சென்னை நகரின் தென் பகுதியில் வேளச்சேரியை ஒட்டி அமைந்துள்ளது. இன்றளவும் அழியாமல் இருக்கும் ஒரு சில இயற்கை சூழல்களில் பள்ளிக்கரணை சதுப்புநிலமும் ஒன்று. நீரின் போக்கை ஒழுங்கு செய்வது, நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்துவது, மேலும் மழைக்காலங்களில் சுற்றியுள்ள பகுதியிலிருந்து வரும் வெள்ளத்தை வடிய வைக்க இந்த சதுப்புநிலம் உதவியாக உள்ளது. இந்த சதுப்பு நிலத்தில் குப்பை கொட்டுதல், கழிவுநீரை கலக்க செய்தல், கட்டிட இடிபாடுகளை கொட்டுதல் மேலும் பல நிறுவனங்கள் கட்டிடங்கள் கட்டுதல், இரும்பு ரயில் பாதை மற்றும் ரயில் நிலையம் அமைத்தல் ஆகிய காரணங்களால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பரப்பளவு வெகுவாக குறைந்து வருகிறது.

வறட்சி

தொடர்ச்சியாக சில காலங்களுக்கு போதுமான அளவு மழை பெய்யாததையே வறட்சி என்கிறோம். கால்நடைகள், வன உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் இவ்வறட்சியின் காரணமாக உயிரிழக்க நேரிடுகிறது. தீ மற்றும் புழுதிப் புயலால் நிலப்பகுதிகள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், வறட்சி பகுதிகளில் குடிநீரின் தன்மை மற்றும் அளவு குறைந்து கொண்டே வரும்.

மறைமுகப் பேரழிவு

பூகம்பம், புயல், சுனாமி போன்றவை எதிர்பாராத வகையில் தோன்றி பேரழிவை ஏற்படுத்துவதால் நாம் இவற்றை இயற்கை பேரழிவு என்கிறோம். வறட்சியும் இவ்வகையை சார்ந்ததே என்பதை நாம் உணருவதில்லை. இதற்கு காரணம் மற்ற நிகழ்வுகளைப் போல் இதற்கு ஆரம்பம் மற்றும் முடிவு கிடையாது. இவை நீண்ட காலத்துக்கு நீடிக்கும். இதனை நாம் பூகம்பம் போல பார்க்கவோ, உணரவோ முடியாது. அதன் விளைவுகளை மட்டுமே காண முடியும்.

விளைவுகள்

வறட்சியினால் சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சமூகநல பாதிப்புகள் ஏற்படும். அவற்றுள் சில பின்வருமாறு:

பட்டினிச்சாவு, நோய் பரவுதல், காட்டுத்தீ, சமூகபிரச்சனைகள், போர் போன்றவை.

ஆதாரம் : சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்

Filed under:
2.98611111111
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top