பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண்மையும் சுற்றுச்சூழலும் / வேளாண்மையில் சுற்றுப்புறச்சூழல் அறிவியலின் முக்கியத்துவம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வேளாண்மையில் சுற்றுப்புறச்சூழல் அறிவியலின் முக்கியத்துவம்

வேளாண்மையில் சுற்றுப்புறச்சூழல் அறிவியலின் முக்கியத்துவம் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பூமியில் வேளாண்மையும், சுற்றுச்சூழலும் ஒன்றுடன் ஒன்று இயைந்து செயல்படுகின்றன. விளை பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்களுடைய விவசாயத்திற்கும், இயற்கை வளத்துக்கும் இடையேயான தொடர்பினை புரிந்து செயல்பட வேண்டும். வேளாண் உற்பத்தி முறைகளில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டு, புதிய தொழில் நுட்பங்கள் அதிக அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்பங்களினால் மண் மற்றும் நீர் வளங்களில் ஏற்படும் தாக்கங்களால் பயிர் மற்றும் கால்நடை உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பங்களினால் உணவு உற்பத்தி அதிகரித்திருந்தாலும், மண் வளம் மற்றும் நிலத்தடிநீர் பாதித்தல் என்ற விலையை இதற்கு ஈடாக நாம் தர வேண்டியுள்ளது. வளங்குன்றா வேளாண்மையை கடைபிடித்தால் மட்டுமே சுற்றுச்சூழல் வளம் மற்றும் பயிர் உற்பத்தியை பாதுகாக்க முடியும். வருங்கால சந்ததியினருக்கு நஞ்சில்லா உணவு மற்றும் வளங்குன்றா இயற்கை வளத்தைக் கொடுத்துச் செல்ல வேண்டியது நம் கடமையாகும்.

பன்னிரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்த வேளாண்மையில், ஏழாயிரம் வகையான தாவரங்கள் சாகுபடி செய்யப்பட்டு, மனித உபயோகத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்றோ, பதினைந்து வகையான தாவர வகைகள் மற்றும் எட்டு வகையான விலங்கினங்களின் மூலம் தொன்னுறு சதவிகித உணவுத் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. பெருகிவரும் மனித இனம் மற்றும் உலக நுகள்வுமுறையில் ஏற்படும் மாற்றங்கள், வேளாண்மையை மரபுமுறையிலிருந்து புதிய தொழில்நுட்ப முறைக்கு மாற்றி வருகிறது.

வளங்குன்றா வேளாண்மை

வேளாண்மை உற்பத்தி மற்றும் வளங்குன்றா வேளாண்மைக்கு உயிரின முறையில் ஏற்படும் வேறுபாடுகள் அடிப்படையாக உள்ளன. இன்றைய வேளாண்மையில் மரபணு வேறுபாட்டின் மூலம் கிடைக்கும் விதை மற்றும் தாவர நடவு பொருட்கள் மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு உள்ளது. மண் வளத்திற்கான கனிம சுழற்சியில், நுண்ணுயிர்களின் பல்வகையானது மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

சுற்றுச்சூழல்களோடு இயைந்த வேளாண் பண்முகமையானது, சிதைவு, கனிம சுழற்சி, பூச்சிக் கட்டுப்பாடு, மண் வளம் பாதுகாத்தல், மகரந்தச் சேர்க்கை மற்றும் விதை பரவல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேளாண் பல்லுயிர்வகைமையை உயிரியல் சார்ந்த முறைகள் மூலம் நிர்வகித்தலால், வேளாண் முறைகளை செறிவாக்கலாம்.

பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் இரசாயன உரங்களை அதிகப்படியாக உபயோகிப்பதால், மண்ணின் தரம் குறைதல், மண் அரிப்பு, மண் உப்பாகுதல், மண்ணின் அமிலத்தன்மை அதிகரித்தல் மற்றும் மண் இறுகுதல் போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன. மண்ணின் உற்பத்தித் திறன், மண்ணிலுள்ள கனிமம், கரிம சத்துக்கள், மண்ணின் அமைப்பு மற்றும் கட்டுமானம் ஆகியவற்றை சார்ந்துள்ளது.

வளங்குன்றா வேளாண்மை, இயற்கை மற்றும் பண்ணை சார்ந்த இடுபொருட்களை சார்ந்துள்ளது. இந்த இடுபொருட்கள், குறைவான நச்சுத் தன்மையுடையதாகவும், அதிகப்படியான ஆற்றலை பயன்படுத்தாததாகவும், உற்பத்தி திறனுடையதாகவும், இலாபகரமானதாகவும் இருக்க வேண்டும். முறையான வேளாண் உழவு நுட்பங்கள் மற்றும் காற்றுத் தடுப்பான்கள் ஏற்படுத்துவதன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்புகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டினை தடுக்கலாம்.

வேளாண் இடுபொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் மூலம் அதிகப்படியான கரியமில வாயு, உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் வெளியேற்றப்படுகிறது. காலநிலை மாறுபாட்டின் மூலம் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், கடலோர பகுதிகள் மற்றும் வறட்சி நிலங்களில் வாழும் ஏழை மக்களை அதிக அளவு பாதிக்கிறது. மேலும், பருவநிலை மாறுபாட்டினால் ஏற்படும் கடல் மட்ட உயர்வும், வறட்சி நிலப்பகுதிகளில் நிலவும் அதிகப்படியான பருவநிலை மாற்றமும் மக்களை வெகுவாக பாதிக்கிறது.

பருவநிலை மாற்றம் வேளாண் தொழிலுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த பருவநிலை மாற்றம் பயிர் உற்பத்தி முறைகளை மிகவும் பாதிக்கிறது. வேளாண்மையும் பருவ நிலை மாற்றம் ஏற்பட ஓர் முக்கிய காரணியாக உள்ளது. பசுமை இல்ல வாயுக்களான மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுக்களை அதிக அளவில் வெளியிடுகிறது. இப்பசுமைக்குடில் வாயுக்கள், கால்நடைகளின் செரிமானம், அங்ககக் கழிவுகளின் சிதைவு, அதிகப்படியான தழைச்சத்து சுழற்சி ஆகியவற்றின் மூலமும் வெளியிடப்படுகிறது.

இவை மட்டுமின்றி, அதிகப்படியான தழைச்சத்து உரங்களை பயன்படுத்துதல், சுண்ணாம்புச் சத்து இடுதல் மற்றும் வேளாண்மையில் படிம எரி பொருட்களை பயன்படுத்துதல் போன்ற பலசெயல்பாடுகளாலும் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியாகின்றன.

வளங்குன்றா வேளாண்மையின் நோக்கமே மண் வளத்தைப் பாதுகாத்தல், நீர் மாசுபாட்டை குறைத்தல், பயிர் மற்றும் கால்நடை பல்வகைமை வேறுபாடு பாதுகாப்பது மற்றும் ஆற்றல் திறனை அதிகரித்தல் போன்றவை ஆகும். இதன் மூலம் கரியமில வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைத்து புவி வெப்பமயமாதலைக் குறைக்கலாம். வளங்குன்றா வேளாண்மையின் மூலம் விவசாயிகள் அதிக பயிர் உற்பத்தி மற்றும் அதிக வருமானத்தை ஈட்ட முடியும்.

முக்கிய தொழில் நுட்பங்கள்

  • பயிர்ச் சுழற்சி முறை மூலம் மண்வளத்தை அதிகரித்தல்.
  • முக்கியப் பயிர்களுடன் ஊடுபயிர்களாக நிலப்போர்வை பயிர்வகைகளை சாகுபடி செய்வதன் மூலம் மண் அரிப்பு தவிர்க்கப்படுகிறது.
  • ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு மூலம் அதிக பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகத்தை தவிர்க்க முடியும். கால்நடைக் கழிவுகளை, உரமாக பயன்படுத்துவதன் மூலம் இரசாயன உரய் பயன்பாட்டை தவிர்க்கலாம்.
  • பசுந்தாள் உர தாவரங்களை பயிரிடுவதால் மண்ணில் தழைச்சத்தின் அளவை அதிகரிக்கலாம்.
  • மண்ணரிப்பைத் தடுக்க காற்று தடுப்பு மற்றும் உயர அமைப்பு வரப்பு போன்ற விவசாய முறைகளை பின்பற்ற வேண்டும்.
  • சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மேற்கூறப்பட்ட வேளாண் தொழில்நுட்ப முறைகளை நடைமுறை படுத்தி, ஒவ்வொரு விவசாயியும் தங்கள் எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதத்தில் வேளாண்மையை மேற்கொள்ள வேண்டும்.

கேள்வி பதில்கள்

1. வளங்குன்றா வேளாண்மை என்றால் என்ன?

வளங்குன்றா வேளாண்மை  தற்போதைய உற்பத்திக்குக் குறைவில்லாமல் அதிக உணவு, தீவனம், அல்லது ஆற்றல் பயிர் விளைச்சலை வழங்க முடியும். பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களுக்கு மாற்றாக விவசாயிகள் ஒரு நிலையான அணுகுமுறையை எடுக்கிறார்கள். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் பயிர் சுழற்சி மற்றும் விவசாய அமைப்பின் மற்ற மாற்றங்களை பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக, மண் செறிவூட்டல், ஆரோக்கியமான தாவரங்களை உருவாக்கிவிடும், அது நோய் எதிர்ப்புத் தன்மையைப் பெறும். கவர் பயிர்கள் அரிப்பைத் தடுத்தல் மற்றும் களைகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் இயற்கை விலங்குகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவி செய்கிறது. இதன் விளைவாக விவசாயிகள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல் மூலம் பண சேமிப்பு மற்றும் சூழலை பாதுகாக்கிறது.

2. அங்கக வேளாண்மை வளங்குன்றா வேளாண்மையின் மற்றொரு பெயரா?

இல்லை. இல்லை அது ஒரு தவறான கருத்தாகும். அது உண்மை என்றாலும் வளங்குன்றா வேளாண்மையின் குடையின் கீழ் வரும். அது வளங்குன்றா வேளாண்மையைப் பின்பற்றாமல், எப்பொழுதும் அங்கக வேளாண்மையைப் பின்பற்றுகிறது.

3. எப்படி அங்கக வேளாண்மை வளங்குன்றா வேளாண்மையிலிருந்து வேறுபடுகிறது?

கரிம விவசாயம், எந்தெந்த  செயற்கை கூட்டு ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயிர்கள் மீது பயன்படுத்த முடியும் என கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. கனிம உரங்கள் அல்லது கூடுதல் பயன்பாடு அனுமதிக்க முடியாது மண் அல்லது நுண்ணுயிர் கொல்லிகள் பயன்படுத்தப்பட வேண்டும் விலங்கு உற்பத்தி செய்ய வேண்டும். மண்ணில் கனிம உரங்கள் அல்லது அதன் கூடுதல் பயன்பாட்டை அனுமதிக்க முடியாது, விலங்கு உற்பத்தியில் நுண்ணுயிர்க் கொல்லிகளைப் பயன்படுத்த முடியாது. பயிர்களை இயற்கை வழிப்பயிராக சந்தைப்படுத்துவதற்கு முன்பு பயிர் வயல்கள் மூன்று வருடங்கள் வரை இரசாயன உரங்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். வளங்குன்றா வேளாண்மை முறைக்கு இந்தக் கட்டுப்பாடுகள் தேவையில்லை.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

3.0625
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top