பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / அரசு திட்டங்கள் / மத்திய அரசின் திட்டங்கள் / பிரதம மந்தரி பசல் பீமா யோஜனா (பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டுத் திட்டம்)
பகிருங்கள்

பிரதம மந்தரி பசல் பீமா யோஜனா (பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டுத் திட்டம்)

பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டுத் திட்டம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஒரு தேசம் ஒரே திட்டம் என்ற சிந்தனையின் அடிப்படையில் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அறிமுகமாகியுள்ளது. இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அனைத்து திட்டங்களிலும் உள்ள சிறப்பான கூறுகளை எடுத்துச் சேர்த்தும், பலவீனமான குறைபாடுகளுள்ள கூறுகளை நீக்கிவிட்டும் இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டத்தையும், மாற்றம் செய்யப்பட்ட அதன் இன்னொரு வடிவத்தையும் நீக்கிவிட்டு இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

நோக்கங்கள்

1,. இயற்கை இடர்கள், பூச்சிகள், நோய்கள் ஆகியவற்றினால் பயிர்கள் விளையாமல் போகும் நிலையில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கவும், காப்பீட்டு வசதியை ஏற்படுத்தி தரவும் இது வந்துள்ளது.

2, விவசாயிகளின் வருமானம் பாதிப்படையாமல் பாதுகாத்து அவர்கள் விவாசயத்தை தொடர்ந்து செய்துவருவதற்கு உதவுகிறது.

3. விவசாயிகள் புதுமையான நவீன வேளாண் நடைமுறைகளை கையாளுவதை ஊக்குவித்தல்.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

காரிப் பருவப் பயிர்களுக்கு 2%, ரபி பருவப் பயிர்களுக்கு 1.5% என்ற வீதத்தில் ஒரே சீரான காப்பீட்டுக் கட்டணம் விவசாயிகளிடமிருந்து பெறப்படும். ஆண்டுப் பயிர்களான பணப் பயிர்கள், தோட்டடக் கலைப் பயிர்கள் ஆகியவற்றிற்கு 5% காப்பீட்டுக் கட்டணத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும். விவசாயிகள் செலுத்தும் காப்பீட்டுக் கட்டணம் மிகக் குறைவானவை. எனவே, மீதி கட்டணத்தை அரசாங்கம் செலுத்திவிடும். இயற்கைப் பேரிடர்களால் பயிர் இழப்புகள் ஏற்படும்போது விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டுத் தொகையும் கிடைக்கும்.

அரசாங்கம் வழங்கக்கூகூய மானியங்களுக்கு உச்சவரம்பு ஏதுமில்லை. காப்பீட்டுக் கட்டண பாக்கி 90% இருந்தாலும்கூட அதை அரசே ஏற்கும்.

காப்பீட்டுக் கட்டணத்தை குறைவாக நிர்ணயித்து விவாசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை குறைவாக வழங்குவதற்கு முன்னர் வழி இருந்தது. காப்பீட்டுக் கட்டணத்திற்கு அரசு செலுத்தும் மானியச் செலவைக் குறைப்பதற்காக இப்படி செய்யப்பட்டது. இப்போது இந்த நிலை மாற்றப்பட்டுவிட்டது. காப்பீடு செய்யப்பட்டதொகையை விவசாயிகள் முழுமையாகப் பெற்று கொள்ளமுடியும்.

தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு மிக அதிக அளவில் ஊக்கம் தரப்படுகிறது. சீர்மிகு கைபேசிகள் (Smart Phones)  மூலம் எவ்வளவு பயிர் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்பது பற்றிய தரவுகள் பெறப்பட்டு பதிவேற்றப்பட்டு விவசாயிகளுக்கு சேரவேண்டிய தொகை தாமதமின்றி கிடைக்க வழி செய்யப்படும். தொகை உணர்வு செயற்கைக்கோள்களும் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத்திட்டம் இதற்கு முன்பு இருந்த வேளாண் காப்பீட்டு தேசியத்திட்டம், மாற்றியமைக்கப்பட்ட வேளாண் காப்பீட்டு தேசியத் திட்டம் ஆகியவற்றிற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் திட்டமாகும். இந்தத் திட்ட செயலாக்கத்தில் சேவை வரிக்கு விலக்கு தரப்பட்டுள்ளது. புதிய திட்டம் காப்பீட்டுக் கட்டணத்தில் விவசாயிகளுக்கு 75 முதல் 80% மானியத்தை உறுதி செய்யும்.

எந்தெந்த விவசாயிகளுக்கு இந்தத்திட்டம் செல்லுபடியாகும்?

அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் அறிவிப்பு செய்யப்பட்ட பயிர்களை பருவகாலத்தின்போது பயிர் செய்யும் பயிர்க் காப்பீட்டில் ஆர்வமுள்ள விவசாயிகள் அனைவருக்குமானது இந்தத்திட்டம்.

கட்டாயக் காப்பீடு:

அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் பயிர்க்கடன் கணக்கு வைத்துள்ள விவசாயிகள் / விவசாயி கடன் அட்டை வைத்திருப்பவர்களில் கடன் பெற அனுமதிக்கப்பட்டவர்கள், அரசாங்கம் அவ்வப்போது சேர்த்துக் கொள்ள முடிவெடுக்கும் விவசாயப் பிரிவினர் ஆகியோருக்கு காப்பீடு கட்டாயமாக செய்யப்படும்.

விருப்பக் காப்பீடு:

மேலே குறிப்பிடப்பட்ட வகைகளைச் சாராத பிற விவசாயிகள் அனைவரும் பயிர்க்காப்பீட்டை தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் பெறலாம்.

இந்தத்திட்டம் ஏற்றுக் கொள்ளக்கூடிய இழப்புகள்

அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்களின் விளைச்சலில் ஏற்படக்கூடிய இழப்புகள். இயற்கையாக உருவாகும் தீ, மின்னல், புயல்காற்று, ஆலங்கட்டி மழை, சூறைக்காற்று போன்றவற்றால் ஏற்படக்கூடிய தவிர்க்க இயலாத விளைச்சல் இழப்புகளுக்கு காப்பீடு தரப்படுகிறது. வெள்ளம், நிலச்சரிவு, வறட்சி, மழையின்மை, பூச்சி/நோய் தாக்குதல், பயிர் மூழ்கிப் போதல் போன்றவற்றால் ஏற்படும் இழப்புகளும் சேர்த்துகொள்ளபடும்.

அறிவிப்பு செய்யப்பட்டுள்ள பகுதியைச் சேர்ந்த காப்பீடு செய்துகொண்டுள்ள விவசாயிகளில் பெரும் பகுதியினர் பயிர் செய்யும் எண்ணத்தில் செலவுகள் செய்திருந்து, மோசமான பருவநிலை காரணமாக காப்பீடு செய்யப்பட்ட பயிர்களைப் பயிரிட இயலாமல் போகும் நிலையில், காப்பீடு செய்துகொண்டுள்ள தொகையில் 25 விழுக்காடு அளவுக்கு முன் காப்பீடாகப் பெறுவதற்கு அவர்கள் தகுதி வெறுவார்கள்.

அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளுக்கு அறுவடை நடந்ததிலிருந்து 14 நாட்கள் வரை இழப்பீடு கோர முடியும். அறுவடை செய்து உலருவதற்காக வயல்களில் பரப்பி வைக்கப்பட்டு இழப்பு ஏற்படும் பயிர்களுக்கு இது பொருந்தும்.

உள்ளூர் அளவில் ஏற்படக்கூடிய சில குறிப்பிட்ட பிரச்சனைகள், ஆலங்கட்டிமழை, நிலச்சரிவு, பயிர் மூழ்கிப் போதல் போன்றவற்றால் ஆங்காங்கே தனிப்படுத்தப்பட்ட நிலைகளில் ஏற்படும் இழப்புகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும்.

காப்பீட்டு அலகு

இந்தத்திட்டம், அறிவிக்கை செய்யப்பட்ட ஒவ்வொரு பயிரினமும் பயிரிடப்படும் வரைவயறைக்குட்பட்ட பகுதிகளில் பரவலாக ஏற்படக்கூடிய இடர்கள் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் அனைவரையுமே பாதிக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

உள்ளூர் அளவில் ஏற்படக்கூடிய இடர்களுக்கும், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளுக்கும் இழப்பினைக் கணக்கிடும் அலாகாக பாதிக்கப்பட்ட விவசாயியின் காப்பீடு செய்யப்பட்ட நிலம் எடுத்துக் கொள்ளப்படும்..

செயல்பாடுகளின் காலநிரல்

செயல்பாடு

காரிப் பருவம்

ரபி பருவம்

கடன்பெறும் விவசாயிகளுக்கான கடன் காலம்

ஏப்ரல் - ஜூலை

அக்டோபர் - டிசம்பர்

விவசாயிகளிடமிருந்து (கடன் பெற்ற, கடன் பெறாத) கருத்துருக்களைப் பெற இறுதி நாள்

31 ஜுலை

31 டிசம்பர்

விளைச்சல் பற்றிய விவரங்களைத் தருவதற்கான கடைசி நாள் ஏப்ரல்-ஜுலை

இறுதி அறுவடை முடிந்ததில் இருந்து ஒரு மாதத்திற்குள்

இறுதி அறுவடை முடிந்ததில் இருந்து ஒரு மாதத்திற்குள்

முந்தைய திட்டங்களுடன் ஒப்பீடு

வரிசை எண்

கூறுகள்

வேளாண் காப்புறுதி தேசியத்திட்டம் NAIS 1999

திருத்தியமைக்கப் பட்ட வேளாண் காப்புறுதி தேசியத் திட்டம் MNAIS 2010

பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டம்

1

காப்பீட்டுக் கட்டண விதிம்

குறைவு

அதிகம்

வேளாண் காப்புறுதி தேசியத்திட்டத்தை விடவும் குறைவு (விவசாயி செலுத்தும் காப்புறுதிக் கட்டணத்தைப்போல 5 மடங்கு கட்டணத்தை அரசு செலுத்தும்.

2

ஒரு பருவம் ஒரு காப்பீட்டுக் கட்டணம்

உண்டு

இல்லை

உண்டு

3

காப்பீட்டுத் தொகை வழங்கல்

முழுத்தொகை

வரம்புக்குட்பட்டது

முழுத் தொகை

4

நலனுக்கான தொகை வழங்கல்

இல்லை

உண்டு

உண்டு

5

உள்ளூர் இடர்களுக்கான காப்பீடு

இல்லை

ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு.

ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, பயிர் மூழ்கிப்போதல்

6

அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளுக்கான காப்பீடு

இல்லை

கடலோரப் பகுதிகள் - புயல் மழைக்கு உண்டு

தேசம் முழுவதும் புயல் மழைக்கும், எதிர்பாராத மழைக்கும்

7

விதைப்பு நின்று போனதற்கான இழப்பீடு

இல்லை

உண்டு

உண்டு

8

இழப்பீடு விரைவாக வழங்குவதற்கு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல்

இல்லை

பயன்படுத்தும் நோக்கம் இருந்தது

நிச்சயமாக உண்டு.

9

விழிப்புணர்வு

இல்லை

இல்லை

உள்ளது. (காப்பீட்டை இருமடங்காக்கும் இலக்கு உள்ளது.)


பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்

ஆதாரம்:  வேளாண்மை, விவசாயிகள் நல அமைச்சகம், இந்திய அரசாங்கம்.

3.15942028986
நெவிகடிஒன்
Back to top