பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / தகவல் அறியும் உரிமை சட்டம் / ஆன்லைன் வசதிகள் / ஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமச் சட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமச் சட்டம்

ஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமச் சட்டத்தைப் பற்றின தகல்வல்கள்

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசின் செயல்பாடுகள் தொடர்பாக தகவல் அறிய விரும்பும் நபர்கள், தகவல் அறியும் உரிமை அலுவலகத்திற்கு சென்று ஒரு தகவலுக்கு ரூ. 10 கட்டணம் செலுத்தி மனு செய்தால், மனுதாரர் அறிய விரும்பும் தகவல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கையொப்பத்துடன் வீடு தேடி வரும் வகையில் இச்சட்டம் செயல்பாட்டில் உள்ளது.

வயதான நபர்கள் மற்றும் பெண்கள் தகவல் அறியும் உரிமை மாவட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று மனு செய்வதில் சில சிரமங்கள் இருப்பதாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, மனுவையும் கட்டணத்தையும் ‘ஆன்லைன்’ மூலம் சமர்ப்பிக்கும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சேவையை பெற விரும்பும் பொதுமக்கள், பாரத ஸ்டேட் வங்கி அல்லது அதன் குழுமத்தை சேர்ந்த பிற வங்கி கணக்கின் வாயிலாக ரூ. 10/- ஐ ஆன்லைன் மூலம் செலுத்தி, தாங்கள் அறிய விரும்பும் தகவலுக்கான மனுவை சமர்ப்பிக்கலாம்.

இதேபோல், இதர கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் மூலமாகவும் மனுவுக்கான கட்டணத்தை வீட்டில் இருந்தே இன்டர்நெட் மூலமாக செலுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

ஆதாரம் : மாநில தகவல் ஆணையம், சென்னை

3.04032258065
Dineshkumar Aug 03, 2020 09:30 PM

மிகவும் அருமையான தேவையான தகவல்

ப.கலிலூர் ரஹ்மான் Jun 04, 2020 09:32 PM

ஒருவருடைய சொத்துக்களின் தகவலை எப்படி மட்ரேருவர் பேருவது

SUNILKUMAR A May 05, 2020 04:11 PM

கடந்த 5 வருடம் பஞ்சாயத்து ஆட்சியில் செய்த பொதுமக்கள் நலத்திட்டங்கள் என்னவை??
அரசு நம் மக்கள் பணிக்கு கொடுத்த செலவுத்தொகை அதாவது பஞ்சாயத்து ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டது எவ்வளவு???

Balamuruganv May 04, 2020 10:09 AM

கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வாகன வசதி உண்டா

எம்.அன்பு குமார் Mar 17, 2020 06:10 PM

நீதிமன்றத்தில் வருகை பதிவு குறித்து தகவல் கேட்கலாமா!

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top