தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்களும் அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், செயலாக்கங்கள், சாதனைகள் மற்றும் அரசின் புதிய அறிவிப்புகளை பயனாளிகளான பொதுமக்களுக்கு, செய்தி இதழ்கள், தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் வழியாக விளம்பரப்படுத்தும் பணியினை செம்மையுறச் செயல்படுத்துகின்றன.
மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்கள் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் ஒரு முக்கிய அங்கமாகும். அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களைப் பற்றிய விவரங்கள் மற்றும் அரசின் சாதனைகளைப் பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பரம் செய்வதுடன் அரசு நலத்திட்டங்களின் பலனை பயனாளிகள் முழுமையாகப் பெற்றிடுவதற்கு ஏதுவாக அவற்றைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்கும் பணியினையும் மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
ஊடகங்களுக்கு அரசின் செய்தி வெளியீடுகள் மற்றும் புகைப்படங்களை வழங்குதல், மக்கள் கூடுமிடங்களில் வீடியோ படக் காட்சிகள் நடத்துதல், பத்திரிக்கையாளர் கூட்டங்களை ஏற்பாடு செய்தல், கேபிள் தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்பணி செய்தல், அரசு விழாக்களை நடத்துதல், பல்துறைப் பணிவிளக்க முகாம்கள் மற்றும் சிறு கண்காட்சிகள் நடத்துதல், நினைவகங்களைப் பராமரித்தல் போன்ற பணிகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் செய்து வருகிறார்கள். மக்கள் தொடர்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள ஏதுவாக மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்கள் நவீன தகவல் தொடர்பு சாதனங்களால் மேம்படுத்தப்பட்டு ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு வருகின்றன.
மாவட்டம் |
அலுவலகம் |
அரியலூர் |
04329-228115 |
சென்னை |
044-25268103 |
கோயம்புத்தூர் |
0422-2301060 |
கடலூர் |
04142-233887 |
தருமபுரி |
04342-230052 |
திண்டுக்கல் |
0451-2460093 |
ஈரோடு |
0424-2266266 |
காஞ்சிபுரம் |
044-27237919 |
கன்னியாகுமரி |
04652-279262 |
கரூர் |
04324-257142 |
மதுரை |
0452-2532066 |
நாகப்பட்டினம் |
04365-253040 |
நாமக்கல் |
04286-281011 |
பெரம்பலூர் |
04328-224749 |
புதுக்கோட்டை |
04322-221454 |
இராமநாதபுரம் |
04567-230034 |
சேலம் |
0427-2421077 |
சிவகங்கை |
04575-240370 |
தஞ்சாவூர் |
04362-230843 |
தேனி |
04546-251997 |
நீலகிரி |
0423-2443820 |
திருவள்ளூர் |
044-27662865 |
திருவாரூர் |
04366-221352 |
திருச்சிராப்பள்ளி |
0431-2460351 |
திருநெல்வேலி |
0462-2500455 |
திருப்பூர் |
0421-2218230 |
திருவண்ணாமலை |
04175-232194 |
தூத்துக்குடி |
0461-2340571 |
வேலூர் |
0416-2252633 |
விழுப்புரம் |
04146-223660 |
விருதுநகர் |
04562-252028 |
ஆதாரம் : செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறை