অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

இந்திய தண்டனை சட்டம்

இந்திய தண்டனை சட்டம்

இந்திய தண்டனைச் சட்டம்-1860

இந்திய தண்டனைச் சட்டம்(Indian Penal Code) குற்றவியல் சட்டத்தின் அனைத்து பிரத்தியேக அம்சங்களையும் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டது. இது 1860 ல் வரையப்பட்டு 1862 ல் பிரித்தானிய ஆட்சியின் போது காலனித்துவ இந்தியாவில் அமலுக்கு வந்தது. இது பல முறை திருத்தம் செய்யப்பட்டு, இப்போது மற்ற குற்றவியல் விதிமுறைகளையும் தன்னுள்ளே கொண்டு விரிவடைந்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் வரைவு லார்ட் மெக்காலேய் தலைமையில் இயங்கிய முதல் சட்ட ஆணையத்தால் தயாராக்கப்பட்டது. இது இங்கிலாந்து சட்டத்திலிருந்து அவ்வூரின் தனித்தன்மையைகளை விடுத்த பின் வந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டது. பிரெஞ்சு தண்டனைச் சட்டம் மற்றும் லூசியானாவின் லிவிங்ஸ்டன் சட்டத்திலிருந்து ஆலோசனைகள் எடுக்கப்பட்டு இது வரையப்பட்டது

இந்திய தண்டனைச் சட்டம் 1837 ஆம் ஆண்டு சபையில் இந்திய கவர்னர் ஜெனரலிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அது இந்திய சட்டவரையறை புத்தகதில் இடம் பெற 1860ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டி இருந்தது.இது அக்காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டங்களில் சிறந்ததாக கருதப்பட்டது .இது முக்கிய திருத்தங்கள் இல்லாமல் பல சட்ட வரம்புகளில் 150 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. மெக்காலேயின் காலத்தில் இல்லாத தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட நவீன குற்றங்கள் கூட இச்சட்டத்தின் கீழ் எளிதாக இடம்பெறுகிறது.

ஊடகம் சார்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 1860, கீழ்க்கண்ட குற்றங்களை உள்ளடக்கியுள்ளது.

பிரிவு 124A:  இராஜ துரோக குற்றம்

சட்டபூர்வமாக இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பையும் விரோத உணர்ச்சியையும் தூண்டி விடுவதற்காக எழுத்தால் பேச்சால் ஜாடையால், படத்தால் அல்லது வேறு எந்த விதமாகவாது காரியம் ஆற்றுவது குற்றமாகும்

இந்த குற்றம் புரிபவர்களுக்கு ஆயுள் தண்டனையுடன் அபராதவும் விதிக்கப்படலாம் அல்லது 3 ஆண்டு சிறக்காவலும் அபராதவும் விதிக்கப்படும்

விளக்கம்

  • விரோதம்- தேசத்துரோகத்தையும் குறிக்கும்
  • சட்டத்துக்கு உட்பட்டு அரசாங்கத்தின் செயல்களை குறை கூறுவதும் கண்டிப்பதும் குற்றமாகாது
  • ஜனநாயக மரபுகளின் படி அரசின் நிர்வாக முறைகளைப் பற்றியும் கண்டனம் தெரிவிப்பது குற்றமாகாது

பிரிவு 153A(1)

பேச்சாலோ எழுத்தாலோ அல்லது சைகையாலோ, மத இன மொழி சாதி சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்வது குற்றமாகும். குற்றத்தினை புரிபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறைக்காவலுமடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்

பிரிவு 153B(1)

பேச்சு எழுத்து அல்லது சைகை அல்லது காணத்தகும் பொருள்களின் மூலமாகவாவது அல்லது வேறெந்த விதத்திலாவது

A ) ஒரு சமய இன மொழி அல்லது சாதி சமூகம் ஆகியவற்றில் உறுப்பினராக இருக்கின்ற காரணம் காட்டி எவரேனும் சட்ட ரீதியாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசிடம் உண்மையான நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் இருக்க முடியாது அல்லது இந்திய அரசாட்சியின் உரிமையும் முழுமையாக நிலை நிறுத்த முடியாது என்கிற வகையில் குற்றச்சாட்டை செய்தாலும் சுமத்தினாலும்

B) சமய இன மொழி அல்லது பிராந்திய குழு சாதி, சமூகம் அல்லது பிரிவு எதனிலேனும் உறுப்பினராக காரணம் காட்டி எவருக்கேனும் இந்தியாவின் குடிமக்கள் என்ற முறையில் அவர்களுக்குள்ள உரிமைகள் மறுக்கப்பட வேண்டும் பறிக்கப்பட வேண்டும் என்று உரைக்கிற அல்லது ஆலோசனை சொல்கின்ற பிரசாரம் செய்கின்ற அல்லது வெளியிடுகின்ற

C) சமய இன மொழி அல்லது பிராந்திய குழு சாதி, சமூகம் அல்லது பிரிசவு எதனிலேனும் உறுப்பினராக காரணம் காட்டி எந்த ஓர் உறுப்பினருக்குரிய கட்டுப்பாடு பற்றி உரைத்தல், ஆலோசனை, கோரிக்கை அல்லது வேண்டுகோள் எதையேனும்வெளியிடுதல் ஆகியவற்றால் அந்த வகுப்பினருக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒற்றுமையின்மை பகை உணர்ச்சி அல்லது குரோதம் அல்லது வெறுப்பை உண்டாக்கும் விதத்தில் கோரிக்கை வேண்டுகோள், ஆலோசனை அறிவிப்பு வெளியிடுதல் போன்றவை குற்றமாகும்

மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

பிரிவு 292

  • ஆபாசமான புத்தகத்தை, விளக்கத்தை, படத்தை, ஓவியத்தை, பொருளை அல்லது அமைப்பதும் விற்பதும் வாடகைக்குத் தருவதும் பிறருக்கு வழங்குவதும் பொதுமக்களுக்குக் காட்டுவதும் பொது மக்கள் அடையும் படி செய்வதும், உருவாக்குவதும், உற்பத்தி செய்வதும் தம் வசம் வைத்திருப்பதும் குற்றமாகும்.
  • அத்தகைய ஆபாசமான பண்டத்தை மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக இறக்குமதி செய்வதும் ஏற்றுமதி செய்வதும் குற்றம்
  • மேலே கூறப்பட்ட ஆபாசப் பொருட்களை மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக உண்டாக்கும் உற்பத்தி செய்யும், வாங்கும், வைத்திருக்கும், இறக்குமதி ஏற்றுமதி செய்யும், பிறருக்கு வழங்கும் அல்லது பொது மக்களின் பார்வையில் படும்படி அல்லது காட்டும் படி வைத்திருப்பது இதன் மூலம் வியாபாரத்தில் லாபம் பெறுவதும் குற்றமாகும்.
  • மேலே குறிப்பிட்டுள்ளபடி பிரிவின் கீழ் குற்றம் என்று கொள்ள தகும் எந்தக் காரியத்தையும் செய்கிறேன் அல்லது செய்ய தயாராக இருக்கிறேன் என்று விளம்பரம் செய்வதும் பிறருக்கு அறிவிப்பதும் குற்றமாகும்.இத்தகைய ஆபாசப் பொருட்கள் இன்னாரிடம் கிடைக்கும் என்று தெரியப்படுத்துவதும் குற்றமாகும்.
  • இந்த பிரிவின் கீழ் குற்றம் செய்ய முயற்சிப்பதும் குற்றமாகும்

மூன்று மாத சிறைக் காவல் மற்றும் அபராதம் விதிக்கப்படும்

விளக்கம்

மத சம்பந்தமான புத்தகம் வெளியீடு, எழுத்து, படம், ஓவியம் ஆகியவற்றிற்கும்; கோவிலில் அல்லது கோவில் ரதங்களில் பொறிக்கப்பட்டுள்ள செதுக்கப்பட்டுள்ள அல்லது உருவாக்கியுள்ளவற்றுக்கும் விளக்கப்பட்டுள்ளவையும் இந்த பிரிவில் பொருந்தாது

பிரிவு 292A

292 ஆம் பிரிவுக்குத் தமிழ்நாடு அரசாங்கம் ஒரு திருத்தத்தை செய்கின்றது. அந்தத் திருத்தத்தின் படி இந்த குற்றத்துக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்க்காவலல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்

பிரிவு 293

இதற்கு முன் சொல்லப்பட்ட பிரிவின்படி குற்றம் என்று கொள்ளத்தக்க ஆபாசப் பொருளை இருபட்து வயதுக்குக் குறைந்தவர்களுக்கு விற்பதும் வாடகைக்கு கொடுப்பதும் வழங்குவதும் காட்டுவதும் அவர்கள் மத்தியில் புழங்க விடுவதும் அல்லது அவர்களிடையே இத்தகைய செயல்களைப் புரிவதற்கு முயற்ச்சி செய்வதுன் குற்றமாகும். இந்தக் குற்றத்துக்கு ஆறு மாதங்கள் வரை சிறைக் காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தம் படி பொருளை கொடுப்பது மட்டுமல்ல பரப்பினாலும் தண்டனைக்கு உரிய குற்றமாகும். 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை கொடுக்கப்படுகின்றது

பிரிவு 294

பிறருக்குத் தொல்லை தரும் வகையில் பொது இடங்களில் பாடலை பாடினாலும் வாசகத்தை உச்சரித்தாலும் , சொன்னாலும் மூன்று மாதம் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

295A

மதவழிபாட்டில் ஈடுபடுவோரின் உணர்ச்சிகளை சீற்றமுற்று எழச் செய்ய வேண்டும் என்ற தீய கருத்துடன் வேண்டுமென்றே பேச்சாலோ, எழுத்தாலோ, அல்லது ஜாடையாலோ அவர்கள் மதத்தை அல்லது மத உணர்வுகளை புண்படுத்துவதும் அல்லது புண்படுத்த முயற்சி செய்வதும் குற்றமாகும். 3 ஆனண்டு சிறைத்தண்டனை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்

ஆதாரம் : லாயர்ஸ் லைன் மாத நாளிதழ்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate