অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் -2006

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் -2006

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006 என்ற புதிய சட்டம் அரசாணை எண் G.S.R. 362 இன் படி 05.08.2011-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டம் ஏற்கனவே அமலில் இருந்து வந்துள்ள உணவுக் கலப்படத் தடைச்சட்டம் 1954க்கு (PREVENTION OF FOOD ADULTERATION ACT  1954) மாற்றாக மத்திய அரசினால் இயற்றப்பட்டுள்ளது. இப்புதிய சட்டத்தில் விஞ்ஞானப்பூர்வமான குழுக்கள் எதுவும் அமைத்து உணவுப் பொருள்களின் தரங்கள் குறித்து உரிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டு தரங்கள் நிர்ணயிக்கப்படவில்லை. தேவையான மாற்றங்கள் எதுவும் செய்யப்படாமல் 1954-ம் ஆண்டுச் சட்டத்தை அப்படியே பிரதி எடுத்தாற்போல் உருவாக்கி அமலாக்கியிருக்கிறார்கள். புதிய சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாறுதல்கள் உணவுப் பொருள்கள் தயாரிப்பு மற்றும் வணிகத்திற்கு முன்னர் வெறும் ரூபாய் – 15 /-மட்டும் கட்டணம் செலுத்தி (PFA) லைசென்ஸ் பெற்று வந்த நடைமுறைகளை, வெகுவாகக் கட்டணங்களை உயர்த்தியும், பல புதிய நிபந்தனைகளைப் புகுத்தியிருப்பதும் தான். மேலும் உணவுக் கலப்படக் குற்றங்களுக்கான தண்டனைகளும், அபராதங்களும் மிகுதியாகப் பல மடங்குகள் உயர்த்தப்பட்டுள்ளன. கலப்படமே இல்லாத நடைமுறையில் ஏற்படும் சிறிய பிழைகள் கூட, கலப்படமாக அறிவிக்கப்பட்டு, பெரிய அபராதங்களுக்கு வழி செய்வதாக உள்ளது.

லைசென்ஸ் பெறுவதிலிருந்து விலக்குப் பெற்றவர்கள் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் விற்பனைத் தொகை (TURN OVER) உடைய சிறு வணிகர்கள் (PETTY BUISNESS OPERATOR ) இப்புதிய சட்டத்தின் கீழ் லைசென்ஸ் பெற வேண்டிய நடை முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் கண்டிப்பாக இதற்கென நியமிக்கப்பட்டுள்ள பதிவு அதிகாரிகளிடம் (REGISTERING AUTHORITY) படிவம் ‘A (FORM A) ஐப் பூர்த்தி செய்து தங்களைப் பதிவு செய்து கொள்வதற்காக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இவர்களும் ஒவ்வொரு ஆண்டும் தங்களின் உரிமத்தைப் புதுப்பித்து வர வேண்டும். சிறிய உணவுப் பொருள் தயாரிப்பாளர்களோ அல்லது வணிகர்களோ கண்டிப்பாக அடிப்படைச் சுகாதார வசதிகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பதிவு அதிகாரிகளால் வழங்கப்படும் ரிஜிஸ்ட்ரேசன் சான்றிதழையும் போட்டோ ID கார்டையும் கடை, அல்லது தயாரிப்பு இடத்தில் பிரதானமான இடத்தில் பார்வைக்குத் தெரியும்படி மாட்டியிருக்க வேண்டும். மேற்படி இடங்களை உரிய அதிகாரிகள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது கண்டிப்பாக மேற்பார்வைக்கு (INSPECTION) வருவார்கள். உணவுப் பொருள்களின் தரம் மேம்படுத்தப் பட வேண்டும். நுகர்வோர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். என்ற நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டம் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இந்தச்சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றாமல் செயல்படுபவர்களுக்கு, விதிக்கப்படும் தண்டனையும் மிகக் கடுமையானது என்ற கருத்து உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் மற்றும் வர்த்தகர்களிடையே நிலவுகிறது.

நாட்டில் தகவல் தொழில் நுட்பத்துறை, மருந்துகள் தயாரிப்புத் துறைகளுக்கு அடுத்தபடியாக உணவுப் பொருள்கள் தயாரிப்புத் தொழில் உள்ளது. இது நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகிறது. 2015 க்குள் உணவுப் பொருள் தயாரிப்புத்துறையில் 12 லட்சம் கோடி அளவுக்கு விற்பனை இருக்கும். என்று உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது புதிய சட்டத்தில் சில கடுமையான விதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளதால் சிறு தொழில்கள் பாதிக்கப்படும். பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்று சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அச்சம் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு, மற்றும் தர நிர்ணயச்சட்டத்திற்கு மதுரை உயர்நீதி மன்றம் இடைக்காலத்தடை வழங்கி இருக்கிறது. தமிழத்தில் 5000க்கும் அதிகமான வணிகர் சங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு சங்கமும் தனித்தனியாக நீதி மன்ற உத்தரவு பெறுவதென்பது சாத்தியமானதல்ல.

இச்சட்டம் கொடுமையானதும், தேவையற்றதுமாகப் பலரால் கருதப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பதாலேயே நீதிபதி இப்படித் தீர்ப்பளித்திருக்கிறார். தரம் குறைந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்வோர் மீதும் உற்பத்தி செய்வோர் மீதும் நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசின் தரக்கட்டுப்பாட்டுத்துறை இன்று வரை செயல்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு புதிய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளைப் பரிசீலித்துத் தக்க சீர்திருத்தங்களை மேற்கொண்டு அதன் பின்னரே அவற்றைச் செயல்படுத்த முன் வர வேண்டும். கடுமையான குழப்பமான, விதிமுறைகள் கொண்ட இச்சட்டத்தால் வணிகர்களுக்குப் பல்வேறு நடை முறைச் சிக்கல்கள் அதிகமாகி லஞ்சமும், ஊழலும், பெருகும் எனபதில் ஐயமில்லை. ஆகவே “”ஆதிக்கத்தை முறியடிப்போம். பெற்ற சுதந்திரத்தைக் காப்போம்”.

ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate