பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / இந்தியாவிலுள்ள - சட்டங்கள் / பொதுச் சேவைகளை பெறும் உரிமைச் சட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பொதுச் சேவைகளை பெறும் உரிமைச் சட்டம்

பொதுச் சேவைகளை பெறும் உரிமைச் சட்டம் பற்றிய குறிப்புகள்

பொதுச் சேவைகளை பெறும் உரிமைச் சட்டம்

ஒரு அரசை தேர்ந்தெடுக்க தேர்தலில் வாக்களித்து, அரசின் செலவுக்கான வரி கட்டிய நமக்கு அரசிடமிருந்து சில பொதுச் சேவைகளைப் பெரும் உரிமை இல்லை, அதற்காக ஒரு சட்டம் தேவைப்படுகிறது, அதுதான் பொதுச் சேவைகளைப் பெறும் உரிமைச் சட்டம் (Right to Public Services Act RPSA).

இதற்கான ஒரு சட்ட வரைவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இது போன்ற சட்டங்கள் 2௦ மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த முயற்சி மேலும் வளரவேண்டும்.

சட்டத்தின் அம்சங்கள்

தமிழகத்தில் உள்ள சில அரசு அலுவல கங்களில் ஒவ்வொரு சேவைக்கும் யாரை அணுகவேண்டும், அந்த சேவை எத்தனை நாட்களில் கொடுக்கப்படும்; புகார் இருந்தால் யாரிடம் கொடுக்கவேண்டும் என்ற விவரங்கள் எழுதப்பட்டிருக்கும். இவை போன்ற அம்சங்களை கொண்டது தான் RPSA.

ஒரு குடிமகன் சிரமமில்லாமல், செலவு இல்லாமல் சில குறிப்பிட்ட பொதுச் சேவைகளை அரசிடமிருந்து பெறுவதற்காகவும், அவை பெறுவதில் உள்ள குறைகளை நீக்கவும், RPSA வழி செய்யும். இதனால் மக்களுக்கு அரசின் பொது சேவைகளை குறித்த நேரத்தில் குறித்த தரத்தில் பெறுவது உறுதிசெய்யப்படும்.

RPSA கீழ் வரும் எல்லா பொதுச் சேவை களுக்கும், அளிக்கப்படும் மனுக்களை பெற்றதற்கான ரசீது வழங்கப்படவேண்டும். அதே போல் அதில் அந்தச் சேவை எவ்வளவு நாட்களில் வழங்கப்படும் என்பதையும் குறிப்பிடவேண்டும். சேவையை அளிப்பதற்கான பொறுப்பு எந்த அரசு அதிகாரியிடம் கொடுக்கப்பட்டது என்பதும் இச்சட்டத்தில் குறிப்பிடப்படும்.

குறிப்பிட்ட பொதுச் சேவைகளை அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டாலோ அல்லது கொடுக்கவில்லை என்றாலோ அல்லது வேறு குறைகள் இருந்தாலோ அதற்காக மேல்முறையீடு செய்யலாம். குறைகள் களையப்படுவதுடன் அதற்கான நஷ்ட ஈடும் வழங்கப்படவேண்டும்.

இவ்வாறு உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு சிவில் நீதிமன்றத்தில் உள்ளது போல அலுவலர்களை அழைப்பது, கோப்புகளை கேட்பது போன்ற உரிமைகள் உண்டு. இந்த RPSA சட்டத்தை செயல்படுத்த ஒரு குறிப்பட்ட அரசுத் துறை நியமிக்கப்படும். அதேபோல் விண்ணப்பதாரர் கேட்ட பொது சேவை கொடுக்கப்படாதபோது, அதற்கான நஷ்டஈடும் சட்டத்தில் குறிப்பிடப்படும்.

RPSA சட்டத்தில் சாதி சான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், தேர்தல் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, நிலம் தொடர்பான சான்றிதழ்கள் என்ற பல பொது சேவைகளை பெறுவது இந்த RPSA கீழ் வரும்.

RPSA அவசியம்

பொதுவாக அரசு அலுவலகங்களில் ஒரு குறிப்பிட்ட சான்றிதழைப் பெறு வதில் பல சிக்கல்கள் உள்ளன. யாரிடம் முறையிடுவது என்பதில் தொடங்கி, என்னென்ன சான்றிதழ்களை வழங்கவேண்டும், எவ்வளவு காலம் ஆகும், என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம். அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பதும் மற்றுமொரு சிக்கல்.

இவை யெல்லாம் ஊழலுக்கும், சேவையை உரியகாலத்தில் பெறமுடியாமல் இருப் பதற்கு காரணங்கள். இவற்றை களைவதே RPSAவின் நோக்கமாகும். ஒருவர் இந்திய நாட்டின் குடியுரிமை பெற்றதாலேயே அவருக்கு அரசு செய்யவேண்டிய சேவைகள் பல உண்டு.

அரசு எவ்வித செலவும் இல்லாமல் குறித்த நேரத்தில் அச்சேவைகளை கொடுப்பது அரசின் கடமை, அச்சேவைகளை பெறுவது குடிமகனின் உரிமை. நமது தேர்தலில் வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் உரிமை, இந்த உரிமை நம் எல்ேலாருக்கும் சமமாக வழங்கப்பட்டுள்ளது அதேபோல் பொது சேவையை பெறுவதும் நமது உரிமை அதனை RPSA நிறைவேற்றுகிறது.

RPSA மேலும் செய்யவேண்டியது என்ன?

இதுவரை RPSA அமலில் உள்ள மாநிலங் களில் எல்லாம் எல்லா அடிப்படை சேவைகளும் இச்சட்டத்தில் சேர்க்கப்பட வில்லை. இங்குள்ள அட்டவணையில் சில குறிப்பிட்ட மாநிலங்களில் RPSAயின் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஏழைகள் அதிக சிரமப்பட்டு பெற வேண்டிய நிலம் தொடர்பான சான்றிதழ்கள் இந்த சட்டத்தில் சேர்க்கப்படுவதில்லை.

அப்படி சேர்த்தால் நிலம் தொடர்பான எல்லா அரசு ஆவணங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டு பல சிக்கல்கள் தீர்க்கப்படும். மேல்முறையீட்டு அதிகாரிகள் மாவட்ட தலைமை அலுவலகத்திலோ அல்லது மாநில தலைமை அலுவலகத்திலோ இருப்பதால் ஏழைகள் தங்கள் குறைகளைத் தீர்க்க சிரமப்படவேண்டியுள்ளது.

இதற்கு கம்ப்யூட்டர்-இணையம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேல்முறையீட்டை எளிமைப்படுத்தவேண்டும். RPSA வந்த பிறகு பல அரசு அலுவலகங்கள் சீராக செயல்படத் துவங்கியுள்ளன. ஆனாலும் இவை மேலும் வளர வேண்டும். தமிழக அரசு இதுபோன்ற சட்டத்தை எப்போது கொண்டுவரும்?

ஒரு குறிப்பிட்ட சான்றிதழைப் பெறுவதில் பல சிக்கல்கள் உள்ளன. யாரிடம் முறையிடுவது என்பதில் தொடங்கி, என்னென்ன சான்றிதழ்களை வழங்கவேண்டும், எவ்வளவு காலம் ஆகும், என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம். அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பதும் மற்றுமொரு சிக்கல். இவையெல்லாம் ஊழலுக்கும், சேவையை உரியகாலத்தில் பெறமுடியாமல் இருப்பதற்கு காரணங்கள்.

ஆதாரம் : இராம.சீனுவாசன் - வணிகம்

3.05797101449
Ravi Jun 21, 2020 07:46 AM

சட்டங்கள் நிறைய இந்தியாவில் உள்ளது ஆனால் செயல்பாடு என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது பாவம் மக்கள்

Balamanickam Aug 17, 2017 06:40 PM

அரசு பணிகள் சிறப்பாக செயல்பட வேன்டும் என்றால் இனையத்தின் மூலமே அனைத்து பணி களும்
மேற்கொண்டால் மட்டுமே மக்களின்
வேதனைகள் அகலம் மனமும் நேரமும் மிச்சமாகும் அரசு உழியர்களுக்கும் அச்சத்தை ஏற்ப்படுத்தும்

TASNA Oct 13, 2015 03:00 PM

பொது தகவல் அதிகாரிகளை அல்லது செயலாளர்களுக்கு கீழ் இயங்கும் துறைகளை அனுகவும்.

k.uthirasamy Sep 25, 2015 09:50 PM

இந்த சட்டத்தை எப்படீ எந்த முகவரிக்கு அனுப்புவது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top