பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / டிஜிட்டல் இந்தியா / இ கையொப்பம் – ஆன்லைன் டிஜிட்டல் கையொப்ப சேவை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இ கையொப்பம் – ஆன்லைன் டிஜிட்டல் கையொப்ப சேவை

இ கையொப்பம் – ஆன்லைன் டிஜிட்டல் கையொப்ப சேவை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மக்கள் தற்சமயம் தாங்கள் சமர்ப்பிக்கின்ற பல விண்ணப்பங்களிலும் படிவங்களிலும் கையொப்பம் இட வேண்டியுள்ளது. இதற்குப்பதிலாக டிஜிட்டல் கையொப்பம் என்பது வழக்கமான தாள் – பேனா எதுவும் இன்றி, மின்னனு மூலமான தனது அடையாளத்தை – அதாவது மின்னணு ‘விரல்ரேகையை’ பதிப்பதாகும். உண்மையில் இது விரல் ரேகை அல்ல. ஆனால் அது பிரத்யேகமான ஒரு சங்கேத மொழி. ஓர் ஆவணத்திற்கும், அதில் கையொப்பம் இடுபவருக்கும் இருதரப்பையும் கட்டுப்படுத்தும் பிரத்யே அடையாளக் குறியீடு. நேரிடையாகக் கையெப்பம் இடுவதற்குப் பதிலாகத் தற்போது இந்த மின்னணு கையொப்பங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மின்னனு கையொப்பத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் எனது கையொப்பம் இதுவல்ல என்று மறுக்கமுடியாது என்பதுடன அது அதிகாரப்பூர்வமானதாக ஏற்றுக்கொள்ளக்கூடியது. தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000த்தின்படி, மின்னனு கையொப்பங்களுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இ - கையொப்ப சேவை

இந்திய அரசின் அரசிதழ் அறிவிக்கை எண் D.L.33004/99, நாள் 28-01-2015 ன்படி, ஆதார் அடையாளம் உள்ள இந்தியக்குரமக்களுக்கு இ.கையொப்ப வசதியை வழங்குவதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பாகவும், சட்டபூர்வமாக ஏற்கக்கூடிய வடிவத்திலும் ஆவணங்களில் உடனடியாகக் கையொப்பம் இடுவதற்கான ஆன்லைன் சேவையைக் குடிமக்களுக்கு ஏற்படுத்தித் தருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதில் உள்ள இரண்டு முக்கிய சவால்கள் (1) கையொப்பம் இடுகின்ற நபரை அடையாளப்படுத்துவது (2) நம்பகமான கையொப்பம் இடும்முறை ஆதார் அடிப்படையிலான அடையாளப்படுத்துதல் மூலம் முதல் பிரச்சினை தீர்க்கப்படுகிறது. பொதுச்சாவிக் கூட்டமைப்பு (public Key Infrasture) மூலம் பாதுகாப்பாகக் கையொப்பம் இடவும், நம்பகத் தன்மையை ஏற்படுத்தவும் வகை செய்யப்பட்டுள்ளது.

ஆதார் அடையாளச்.சான்று பெற்றுள்ளகுடிமக்கள். இ – கையொப்ப சேவைக்கு வேண்டிய ஆவணங்களைப் பதிவேற்ற முடியும். ஆதார் சேவை மூலம் அவரது அடையாளம் நிரூபணம் செய்யப்படுகின்ற அதே சமயத்தில், மின்னணு கையெர்பத்திற்கான இரட்டைச் சாவிகள் (பொதுச் சாவி மற்றும் தனிநபர்சாவி) உருவாக்கப்படும் (இங்கு சாவி என்பது சங்கேத வார்த்தையை / குறியீடுகளைக் குறிக்கும்) அடுத்து, மின்னனு கையொப்பம் இட்ட ஆவணமும், டிஜிட்டல் கையொப்பச் சான்றும் வழங்கப்படும்.

C-DAC தன்னுடைய இ ஹஸ்தாக்‌ஷர் என்ற மின்னணு கையொப்ப சேவையின்மூலம், ஆதார் எண்ணும், அதோடு பதிவுசெய்யப்பட்ட செல்பேசி எண்ணும் வைத்துள்ளவர்களுக்கு ஆன்லைன் வழியாகத் தமது ஆவணங்களில் மின்னணு கையொப்பத்தைப் பெற உதவுகிறது.

சிறப்பு ஆம்சங்கள்

 • செலவும் நேரமும் மிச்சமாகிறது
 • ஆதார்; மூலமாக அடையாளப்படுத்துதல்
 • பயன்படுத்துபவரின் வசதியை எளிதாக்குகிறது.
 • மின்னனு கையொப்பம் பெற விண்ணப்பிப்பது எளிது
 • பயோமெட்ரிக் அல்லது ஒருமுறை கடவுச் சொல் (DTP) மூலம் கையொப்பமிடுதல்
 • கையொப்பத்தையும், கையொப்பம் இட்டவரையும் இன்னாரென்று சரிபார்த்துக்கொள்ளலாம்.
 • விண்ணபத்துடன் துரிதமாக ஒருங்கிணைக்கும் வகையில் நெகிவுத்தண்மை கொண்டது.
 • சட்டப்பூர்வமாக அங்கிகரிக்கப்பட்டது
 • தனிநபர்கள் வணிக நிறுவனங்கள், அரசுத்துறைகளுக்கு ஏற்றது
 • உரிமம் அளிக்கப்பட்ட முகவர்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது
 • அந்தரங்க உரிமை பாதுகாக்கப்படுகிறது.
 • முழுமையான தணிக்கை வழியிலான நேர்மை
 • எளிதான முறையில் மின்னணு கையொப்பப்பங்களை சரிபார்த்துக் கொள்ளும் வழி
 • பயன்பாடு முடிந்தவுடன் சாவிகள் (சங்கேதக்குறியீடுகள்) உடனடியாக அழிக்கப்பட்டுவிடும்.
 • குறுகியவடிவிலான செல்லுபடியாகும் சான்றிதழ்கள்
 • சாவிகள் சேமிக்கப்படுவதில்லை: எனவே பாதுகாப்புப்பற்றிய கவலையில்லை

பயன்கள்

எந்த இடத்தில் இருந்தும் எந்த நேரத்திலும் ஆன்லைன் மூலமாக பாதுகாப்பான முறைியல் எளிதாக டிஜிட்டல் கையொப்பம் இட முடியும். ஆதார் மற்றும் மன்னணு வடிவிலான வாடிக்கையாளரை அறியும் சேவை மூலம் கையொப்பம் இடுபவர்கள் இன்னாரென்று அடையாளம் காட்டப் படுகிறார்கள்.

சட்டப்பூர்வமாகச் செல்லலுபடியாகக்கூடிய கையொப்பங்கள் உருவாக்கப்படுகின்றன

முதலில் கையொப்பம்; இடுபவரின் ஒப்புதல் பெறப்படுகிறது. அடுத்து டிஜிட்டல் கையொப்பம் சான்று தயாரிக்கப்படுகிறது. டிஜிட்டல் கையொப்பம் தோற்றுவிக்கப்படுகிறது: பின்னர் அக்கையொப்பம் பதியப்படுகிறது. இவையாவும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் வகையுரைகளுக்கு ஏற்பவே நடைபெறுகின்றன. மேலும் ஏற்புகையை உறுதிப்படுத்தி, கையொப்பம் இடல் முதலான நடவடிக்கைகளின் செல்லுபடியாகும் தன்மையையும் உறுதிபடுத்தி, அனைத்தையும் சேமித்து வைக்கிறது.

இந்தமுறை எளிதில் செயல்படுத்தக் கூடிய நெகிழ்ச்சி போக்குடையது

கையொப்பம் இடுபவர் இன்னாறை அடையாளத்தை ஆதார் அடையாளம் மூலம் சரிபாக்கமுடியும். பயோமெட்ரிக்மூலமாக கையொப்பம் இடலாம். அல்லது, விவரங்களில் பதிவுசெய்யப்பட்ட செல்பேசி மூலம் ஒருமுறை கடவுச் சொல் (OTP) பெற்று கையொப்பம் இடலாம். ஆதார் எண் பெற்றுள்ள கோடிக்கணக்கான மக்கள் சட்டப்ப்டி செல்லுபடியாகும் டிஜிட்டல் கையொப்ப சேவையை எளிதாகப் பெறமுடியும்.

அந்தரங்கத்தைப் போற்றுதல்

மின்னணு கையொப்பம் இடுபவரின் அந்தரங்கம் பேணப்படுகிறது. எவ்வாறெனில், கையொப்பம் இடவேண்டிய ஆவணம் முழுமைக்கும் பதிலாக, ஆவனத்தின் கட்டைவிரல் பதிவு (Hash) என்ற ஒருசிறுபகுதியை மட்டுமே சமர்ப்பித்தால் போதுமானது.

பாதுகாப்பான ஆன்லைன் சேவை, மின்னணு கையொப்பப்சேவை, மின்னணு வழி அங்கீகரிக்கப்பதற்கான வழிகாட்டி நெறிகளின்படி செய்யபடுகிறது. கையொப்பம் இடுபவர் ஆதார் எண் மூலமாக அடையாளம் காணப்படுகிறார். அவரது கையொப்பம் பாதுகாப்பான சர்வர் மூலம் பெறப்படுகிறது. இதற்கென அரசால் சான்றளிக்கப்பட்ட நம்பகமான மூன்றாம் தரப்பான முகமைகள் மூலம் இந்தச் சேவை வழங்கப்படுகிறது. இந்த வசதியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், பாதுகாப்பினை மேம்படுத்தவும் தனிப்பட்ட சாவிகள் உருவாக்கப்பட்டு ஒருமுறை பயன்படுத்தியவுடன் அழிக்கப்பட்டுவிடுகின்றன.

மின்னணு கையொப்பம் எவ்வாறு வேலை செய்கிறது

மின்னணு கையொப்பச் செயலி ஊடுமுகம் (Application programming Interface) கையொப்பக் கட்டமைப்பின் பெரிய கூறுகளை வரையறுக்கின்றது. மேலும் கையொப்ப சேவை வழங்குபவர் மின்னணு கையொப்பத்திற்கு சான்று வழங்கும் முகமைகள் ஆதார் மூலமான மின்னணு ரிதியான சேவை, செயலி நுழைவாய் வழி (Application Gateway) ஆகிய ஏனைய சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு இடையேயான தகவல் தொடர்பு வடிவங்கள் மற்றும் சிறப்புக் கூறுகள்யின்றி, சேவை வழங்கும் முகமைகள் எளிதாக சேவையை வழங்கிட முடியும். இதில் CDAC நுழைவாய் வழியாக (Gateway) செயல்படுகிறது.

மின்னனு கையொப்பத்தை யார் எங்கே பயன்படுத்தலாம்?

தனிமனிதர்கள், தொழில்/வணிக நிறுவனங்கள், அரசுத்துறையினர் ஆகியோருக்கு ஏற்றுவாறு நீக்குப் போக்குடைய வசதிகள் மின்னனு கையொப்ப சேவையில் உள்ளன. ஒருமுறை கடவுச்சொல் (OTP)(தேவை என்றால் PIN சேர்த்துக்கொள்ளலாம்) மூலமாக மின்னனு கையொப்பத்தை உறுதி செய்யும் முறையில் இடர் அபாயங்கள் இல்லை ஆனால் தகவல்விவரம் மிகச்சொற்ப அளவில் கசிய வாய்ப்பிருக்கிறது என்றாலும் பாதிப்பு இருந்தது. பயோமெட்ரிக் என்கிற விரல்ரேகை மூலமாக மின்னனு கையொப்பங்களை உறுதிச்செய்யும் முறையானது, இடர் அபாயங்கள் மற்றும் விளைவுகள் கண்ணோட்டத்தில் பாதுகாப்பானது. பெருமளவிலான பணப் பரிமாற்றம் தனிமனித விவரங்கள் எளிதாகக் கிடைக்கக்கூடிய சூழல் போன்றவற்றில் பாதுகாப்பாக விரல் ரேகை மூலமாக மின்னனு கையொப்பங்களை உறுதிசெய்யலாம்.

ஆதாரம் : இ கையொப்பம்

2.98529411765
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top