பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / டிஜிட்டல் இந்தியா / பயோ மெட்ரிக் – தொழில்நுட்பம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பயோ மெட்ரிக் – தொழில்நுட்பம்

அலுவலக பாதுகாப்பில் பயோ மெட்ரிக் தொழில்நுட்பத்தின் பங்கு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இன்றைய கால கட்டத்தில் தொழில் கூடங்கள் அலுவலகங்கள் ஆகியவைகளில் பாதுகாப்பு என்பது மிக அவசியமாகிறது. பாதுகாப்பின் ஒரு பகுதியாக மனிதர்களின் நடமாட்டம் (human access) என்பது கவனிக்கப் படவேண்டிய ஒன்று. மேலும் ஒருவர் நிறுவனத்தின் பிரதான வாயிலில் நுழைவதிலிருந்து வெளியேறும் வரை கண்காணிக்கப்படுவது அவசியமாகிறது. இதில் அவரது அடையாளம் முக்கியமாக கண்காணிக்கப் பட வேண்டும். ஒருவரது அடையாளத்தை கண்டறிய மூன்று விதமான செயல்பாடுகள் உள்ளன.

  1. 1. What you have? "உங்களிடம் என்ன உள்ளது?
  2. 2. What you can? ''நீங்கள் என்ன செய்ய வேண்டும்?''
  3. 3. What you are? ''நீங்கள் யார்?''

(What you have) (உங்களிடம் என்ன உள்ளது)? என்பது ஒரு நபரின் அடையாளத்தை நிரூபிக்க அவர் வைத்திருக்கும் அடையாள அட்டை, Entry Pass, போன்றவை. இதை வைத்துக் கொண்டு அவர் தன் அடையாளத்தை நிரூபிக்கின்றார்.

What you can (நீங்கள் என்ன செய்ய வேண்டும்) என்பது ஒரு நபருக்கு பிரத்யேகமாக கொடுக்கப்பட்டுள்ள சங்கேதக் குறிகள், (Pass word) போன்றவை. அவரிடம் உள்ள இது போன்ற சங்கேதக் குறிகளை பதிவு செய்து தன் அடையாளத்தை நிரூபிக்கின்றார்

What you are (நீங்கள் யார்?) என்பது நம்முடைய உடற்கூறே நம்முடைய அடையாளத்தை நிரூபிக்கின்றது. இந்த முறையில் பாதுகாப்பு என்பது மற்ற இரு முறைகளைக் காட்டிலும் மிக அதிகம் என்பது உண்மை.

இதைத்தான் பயோமெட்ரிக் என்கிறோம். Bio-Metrics என்பது உடற்கூறு அளவியல் மூலமாக தங்கள் அடையாளத்தை நிரூபணம் செய்து கொள்ளும் ஒரு உயரிய தொழில்நுட்பம்.

"மனிதனின் குணங்களுக்குத் தகுந்தவாறு அடையாளம் கண்டுபிடிப்பதே பயோ மெட்ரிக் என்பதாகும். Physiological பயோமெட்ரிக் என்பது உடலின் அடையாளங்களை நேரடியாகவே தெரிவிப்பது. அதாவது கைரேகை, Scan, Retina Scan, Hand Geometry மேலும் முகம் ஆகியவற்றை அளவிட்டு அடையாளத்தை நிரூபணம் செய்வது. Behavioral Characteristics என்பது, மனிதனுடைய குரல், கையெழுத்து போன்றவைகளை ஆதாரமாகக் கொண்டு, அவர்களின் அடையாளங்களை நிரூபணம் செய்வது.

பயோ மெட்ரிக் பாதுகாப்பு முறை

பயோ மெட்ரிக் பாதுகாப்பு முறை என்பது இப்பொழுது வளர்ந்து வரும் தொழில் நுட்பமும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தொழில்நுட்பமுமாகும். இதனால் அங்கீகரிக்கப்பட்ட நபர் மட்டுமே தங்களுடைய உடற்கூறு அடையாளங்களை நிரூபணம் செய்து நிறுவனத்துக்கு செல்ல இயலும். உடற்கூறு அடையாளம் என்பது அந்த நபரின் கைரேகையாகவோ அல்லது வேறு Bio Metric Characteristics ஆகவோ இருக்கலாம்.

ஒரு நிறுவனத்தில் ஆயிரம் ஊழியர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அனைவரது கைரேகையும் பதிவு செய்யப்பட்டு, கணினியில் வைத்து விடுவார்கள். நிறுவனத்தில் நுழைவு வாயிலில் உள்ள விரல் ரேகை இயந்திரத்தில் ஊழியர்கள் தங்களது கைரேகையை பதிவு செய்வார்கள். அந்த கைரேகை கணினியில் ஒப்பிடப்பட்டு ஊழியரின் அடையாளம் நிரூபம் ஆனபின்பு உள்ளே அனுமதிக்கப்படுகிறார்.

இந்த முறையினால் அங்கீகரிக்கப்படாத, பொய்யான நபர்கள் நிறுவனத்திற்க்குள் செல்வது தடுக்கப்படுகிறது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட நபரின் வருகை பதிவேடும் பதிவு செய்யப்படுகின்றது./ கீழே உள்ள வரைபடம் பயோ மெட்ரிக் எவ்வாறு செயல்படுகிறது என்பதை காட்டுகிறது. Bio-Metric என்பது உபயோகத்திற்கு மிகவும் கடினமானதாக இருக்குமா என்ற எண்ணம் தோன்றுவது இயற்கை. ஆனால் இது மிகவும் சுலபமான தொழில் நுட்பம். ஒரு நபரின் கைரேகையை பதிவு செய்து நிறுவனத்திற்கு உள்ளே அனுமதிக்க 2லிருந்து 3 நொடிகள் தான் ஆகும்.

பயோமெட்ரிக் உபயோகிப்பதால் யார் யார்க்கு என்ன பலன்கள்?

நிறுவனத்திற்கு :

  1. Pass - word Maintainance / Punching போன்ற செலவுகள் மிச்சமாகின்றன.
  2. அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் மட்டுமே நிறுவனத்திற்க்குள் அனுமதிக்கப்படுவதால் நிறுவனத்தின் பாதுகாப்பு பன் மடங்கு உயருகிறது.

ஊழியர்களுக்கு :

  1. Pass-word நினைவில் நிறுத்த வேண்டிய அவசியமில்லை .
  2. அதிவிரைவில் நிறுவனத்திற்க்குள் செல்ல முடியும்.
  3. நிறுவனத்தின் பாதுகாப்பில் தானும் பங்கு வகிக்கிறோம் என்பதால் ஏற்படும் திருப்தி.

ஒரு நிறுவனத்தின் பாதுகாப்பு நவீன தொழில் நுட்பத்துடன் திறம் பட செயல்படுத்த BioMatrics அவசியம் என்பதில் சந்தேகமில்லை .

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
3.18181818182
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top