பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாநில இணைய சேவைகள்

மாநில சேவை இணையதளம் (State Portal)

அறிமுகம்

தமிழ்நாடு அரசின் தகவல்கள் மற்றும் இணைய சேவைகளை வழங்கும் ஓரிட அணுகலாக செயல்படும் மாநில சேவை இணையதளமானது கடந்த 24.02.2014 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த மின் மாவட்ட சேவைகள், உள்ளடக்க மேலாண்மை அமைப்பு, இதர துறைகளின் சேவைகளுக்கான இணைப்புகள், கைபேசி இணக்கமுறை, பொதுமக்களின் பதிவுகள் ஆகியவற்றை மாநில சேவை இணையதளம் உள்ளடக்கியிருக்கும்.

திறன் மேம்பாடு (Capacity Building)

 • திறன் மேம்பாடு என்பது அரசு அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட குறிக்கோள் திட்டங்களில் ஒன்றாகும்.
 • அரசியல் மற்றும் கொள்கை அளவிலான முடிவுகளை எடுப்பவர்களுக்கு துணைபுரிவது திறன் மேம்பாட்டு திட்டத்தின் குறிக்கோளாகும். பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களை மையப்படுத்திய சூழலை உருவாக்குவதன் மூலம், பொதுமக்களுக்கு வழங்கப்படும்
 • சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதை மின் ஆளுமை செயல்திட்டங்கள் நோக்கமாக கொண்டுள்ளது. அனைத்து மட்டங்களிலும் உள்ள அரசு அலுவலர்களின் திறன் வளர்ச்சி மற்றும் நிர்வாக அறிவினைக் கவனம் செலுத்துவதன் மூலம் இத்திட்டம் திறம்பட செயல்படுத்தப்படும்.

பயிற்சி மற்றும் தீர்வு பகிர்வு

 • சிறப்பு பயிற்சி அறிவு வகுப்புகள்
 • மென்பொருள் பயிற்சி
 • உள்ளூர் தேவைக்கேற்ப பயிற்சிகளில் மாற்றங்கள்
 • மின் ஆளுமை சார்ந்த இணையவழி பயிற்சிகள்
 • மின் மாவட்ட மேலாளர்கள் சார்ந்த பயிற்சிகள்
 • பயிற்றுநர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் நிதி ஆதாரம் வழங்கப்படுபவை
 • மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கான பயிற்சிகளை வலுப்படுத்தல்
 • மாவட்ட மேலாளர்களுக்கான பயிற்சி
 • பயிற்சி மற்றும் திறன் பகிர்வு முயற்சிகள்
 • வெளிப்புற வளங்கள்/ வெளிப்புற பயிற்றுநர்கள்
 • CSC ஆப்ரேட்டர்களுக்கான பயிற்சிகள்
 • இதர பயிற்சிகள்

பயிற்சி விவரங்கள்

தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் கீழ் பின்வரும் தலைப்புகளின் கீழ் 303 அரசு அலுவலர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

 • மின்னாளுமை
 • இணைய பாதுகாப்பு (Cyber Security)
 • மின் கையொப்பம் விழிப்புணர்வு பயிற்சி

தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பு (TNGIS)

புவிசார் தகவல் அமைப்பு இடம்சார் அல்லது புவிசார் தரவுகளைக் கண்டறிந்து சேமிக்கவும், கையாளவும், பகுப்பாய்வு செய்யவும், நிர்வகிக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். புவியியல் தகவல்களை ஒருங்கிணைத்தல், சேமித்தல், பகுப்பாய்தல், பகிர்தல் மற்றும் வெளிக்காட்டுதல் ஆகியவற்றைச் செய்யும் ஒரு தகவல் மேலாண்மை  அமைப்பாகும். GIS அமைப்புகளானது பயனர்கள் ஊடாடும் வினவல்களை (பயனர் உருவாக்கிய தேடல்களை) உருவாக்க, இடஞ்சார்ந்த தகவலைப் பகுப்பாய்வு செய்ய, வரைபடங்களில் உள்ள தரவைத் திருத்த மற்றும் கொள்கை நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு முடிவுகளை அளிக்க உதவும் கருவிகள் ஆகும்.

புவிசார் தகவல் அமைப்பினைச் செயல்படுத்துதல்

தரவுகளில் பிரதிகள் உருவாதலைத் தவிர்க்க, தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பிற்குள் (TNGIS) தமிழ்நாடு மாநில இடம்சார் தரவு உட்கட்டமைப்பை (TNSSDI) உருவாக்கி, மாநிலத்தின் பல்வேறு துறைகளிலிருந்து பெறப்படும் புவிசார் தரவுத் தொகுப்புகளை ஒருங்கிணைத்து ஒற்றைத் தளத்தில் பயன்படுத்தும் முடிவை அரசு எடுத்துள்ளது. TNGIS அமைப்பின் இடம்சார் தரவு அடுக்குகளை www.tngis.tn.gov.in எனும் இணைய முகவரி மூலம் அனைத்து பங்குதாரர்களும் அணுக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  அனைத்து இடம்சார் தரவுகளை ஒருங்கிணைப்பதற்கு முன்னர், பின்வரும் முக்கிய பிரச்சனைகள் பரிசீலிக்கப்பட்டன.

 1. செயல்திட்ட அபிவிருத்தி: செயலியானது பல்வேறுபட்ட இடம்சார் தரவுத் தொகுப்புகள், பல தரப்பட்ட  பயனர்கள் மற்றும் பொறுப்புகள் சார்ந்த அணுகலைக் கொண்டு தரவுகளைப் பார்வையிடவும் / திருத்தவும் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
 2. அடிப்படை தரவுகளை வடிவமைத்தல்
 3. தரவு மாதிரிகளை வடிவமைத்தல்
 4. வரைபடங்கள் மற்றும் பல அடுக்குகளின் வெவ்வேறு அளவுகள்  நிறைவுப் பெற்றவை இத்திட்டத்திற்காக இதுவரை 29 துறைகள் / நிறுவனங்கள் தங்களது அடுக்குகளைப் பகிர்ந்துள்ளன.
 5. NGIS வலைதளத்தில் 348 அடுக்குகள் நிறுவப்பட்டுள்ளன.
 6. 473 பயனர் அங்கீகாரத் தகவல்கள் அரசு முகமைகளின் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
 7. சிப்காட்டின் 31 அடுக்குகள் TNGIS வலைதளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
 8. இணைய தொகுதிகள் உருவாக்கப்பட்டு www.tngis.tn.gov.in எனும் இணைய முகவரியில் பல கட்டம் இடையக்பகுப்பாய்வுகளாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
 9. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் அங்கன்வாடி மையங்கள், பொது சேவை மையங்கள் பிற்படுத்தப்பட்டோர்,
 10. 10. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய அரசுத் துறைகள் TNGIS இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
 11. சிட்கோ, சிப்காட் (ம) டிட்கோ திட்டங்கள் தேசிய புவியியல் தகவல் மையத்தில் (NCOG) பதிவிட உதவுகிறது.
 12. நில அளவை துறை உதவி இயக்குனர் மற்றும் மின்மாவட்ட மேலாளர்கள் உதவியுடன் வருவாய்/ பஞ்சாயத்து அளவிலான கிராம வரைப்படங்கள் திருத்தப்பட்டு அவை வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
 13. மொத்தமுள்ள 17,652 வருவாய் கிராமங்களில், 16,721 வருவாய் கிராமங்களின் வரைபடங்கள் புவிசார் தகவலமைப்புடன் இணைக்கப் பட்டுள்ளன.
 14. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் சென்னையில் உள்ள விளையாட்டு மைதானங்கள் குறித்த வரைபடங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

திட்டம் நடைபெற்று வருபவை :

 1. தமிழ்நாடு காவல்துறை குடியிருப்பு மனைகள்
 2. மருத்துவத் துறை : கர்ப்பிணி பெண்கள் /

தாய்மார்கள், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைகளை காட்டும் வரைபடங்கள்

முறைப்படுத்தப்பட்ட டிஜிட்டல் முகவரி எண் உருவாக்குதல்

 • முறைப்படுத்தப்பட்ட டிஜிட்டல் முகவரி எண் (Standard Digital Address Number) திட்ட மானது 2016-17-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் ஒன்றாகும்.
 • இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளானது தமிழகத்தில் முகவரியுடன் கூடிய அல்லது முகவரியற்ற அனைத்து இருப்பிடங்களுக்கும் எண் - எழுத்து (Alpha-Numeric) வடிவக் குறியீட்டு எண் வழங்குவதாகும். இத்திட்டம் மாநில நிதியிலிருந்து 6.34 கோடி உத்தேச செலவினத்தில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையம் (SRDH)

மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையமானது, தமிழ்நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களின் இருப்பிட விவரங்கள் அடங்கிய ஒரு தகவல் தொகுப்பு ஆகும். இத்தகவல் களஞ்சியமானது குறிப்பிட்ட கால இடைவெளியில் பல்வேறு துறைகளின் தரவுகளை ஒருங்கிணைத்து கட்டமைக்கப்பட்டது. இதன் வாயிலாக, அரசால் திட்டங்களுக்கான இலக்கினை நிர்ணயம் செய்யவும், சிறந்த சேவைகளை வழங்கவும், திட்டங்களை கண்காணிக்கவும் இயலும். இத்திட்டத்திற்காக 25.93 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

மாநில குடியிருப்போர் தகவல் மையத்தின் நோக்கங்கள்:

 • மாநில அளவிலான குடிமக்கள் தகவல்களை மின்னாக்கம் செய்து, மையப்படுத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல் ஆதார் எண்ணை தனித்த அடையாளமாக பயன்படுத்தி, குடிமக்களைக் கண்டறிதல். இதன் வாயிலாக சரியான பயனாளிகளை அடையாளம் காண இயலும்.
 • ஆதார் எண் இணைக்கப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டுடன் அரசுத் துறைகளின் தரவுத் தளங்களை நிகழ்நிலையில் பயன்படுத்துதல்.
 • அனைத்து பயன்பாடுகளையும் ஆதார் எண் வாயிலாக சரிபார்த்தல்.
 • இதுவரை முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் (CMUPT) முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டம் (CMCHIS), கருவூல இணையவழி ஓய்வூதியத் திட்டம் (Treasury e-Pension) மற்றும் நில பதிவேட்டு துறை போன்ற துறைகளின் தரவுகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

மின் அலுவலகம் (e-Office)

மின் அலுவலகம் (e-Office) செயலியின் முக்கிய குறிக்கோளானது அரசு அலுவலகங்களைக் காகிதமற்ற அலுவலகமாக மாற்றும் சூழலை உருவாக்குவதும், மேலும் அதன் வழியாக அனைத்து அரசுத்துறைகளிலும் வெளிப்படைத் தன்மை, பொறுப்புடைமை மற்றும்

அலுவலக கோப்புகளைத் தடையின்றி பரிமாற்றம் செய்துக்கொள்ள வழிவகுப்பதாகும்.

மின் அலுவலக (e-Office) மென்பொருளானது தகவல் தொழில்நுட்பவியல் துறையிலும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையிலும் முன்மாதிரியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயலியை படிப்படியாக இதர அரசு துறைகளிலும் / முகமைகளிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மின் ஆளுமைக்கான விருதுகள்

மாணவர்களுக்கான மாண்புமிகு முதலமைச்சரின் மின் ஆளுமைக்கான உயரிய விருது

மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மின் ஆளுமை ஆர்வலர்களிடையே மின் ஆளுமையின் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசானது, மாணவர்களுக்கான "மாண்புமிகு முதலமைச்சரின் மின் ஆளுமைக்கான உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2015-16-ஆம் ஆண்டிற்கான அனைத்து பிரிவுகளிலும் பங்கேற்க திருத்தி அமைக்கப்பட்ட நெறிமுறைகளின் அடிப்படையில் பரிந்துரைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, (i) மாவட்ட அளவில் (i) மாநில அளவில் என இரண்டு நிலைகளில் பின்வரும் தலைப்புகளில் நடத்தப்பட்டு மாவட்ட அளவிலான விருது இறுதி செய்யப்பட்டது.

 1. கைபேசி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் செயலிகள்
 2. மாற்றுத்திறனாளி நபர்களுக்காகப் புதுமையான செயலிகள்.
 3. நரம்பியல் வலையமைப்பு (Neural Network) தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் செயலிகள்.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME Awards) தமிழ்நாடு அரசின் மின் ஆளுமை விருது

மேம்படுத்தப்பட்ட மின் ஆளுமை தீர்வுகளை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையிலும், சமூக தேவைகளுக்கேற்ப புதிய முயற்சிகள், தொழில்நுட்பப் பங்களிப்பினை கருத்திற்கொண்டு செயல்திட்டங்களை உருவாக்கும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களைக் கண்டறியவும், தமிழ்நாடு அரசானது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் 3 பிரிவுகளிலும் பங்கேற்க பரிந்துரைகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

 1. பல்வேறு துறைகளில் சிறந்த மின் ஆளுமை மென்பொருள் பயன்பாடு.
 2. கைபேசி சேவைகள் / பொதுமக்கள் சேவைகளை வழங்கும் சிறந்த மின் ஆளுமை மென்பொருள் பயன்பாடு.
 3. நூதன மின் ஆளுமை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான மின் ஆளுமை விருது தேர்வுக்குழுவானது சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து பெற்ற பரிந்துரைகளை மறுசீராய்வு செய்துள்ளது. விருதுகளின் இறுதிப்பட்டியலுக்கான பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் உள்ளது.

தகவல் தொழில் நுட்பப் பாதுகாப்பு தணிக்கை (இட் Security Audit)

உலகளவில் இணையவழி தாக்குதல் மற்றும் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து அரசு இணையதளங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப மென்பொருட்களைப் பாதுகாத்திட, தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு தணிக்கை 51.76 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ் நாடு மின் ஆளுமை முகமையானது, CERT-IN நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைத் தேர்வு செய்து தகவல் தொழில்நுட்பத் தணிக்கையினை மேற்கொண்டு வருகிறது. இந்நாள் வரை பல துறைகளிலிருந்து 212 இணையதள முகவரிகள் பாதுகாப்பு தணிக்கைக்கான கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளது. இதுவரை 120 இணையதள முகவரிகளின் பாதுகாப்பு தணிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள இணைய தளங்களின் பாதுகாப்பு தணிக்கைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

குறுந்தகவல் மூலமாக சேவை நிலை தெரிந்து கொள்ளும் வசதி (SMS Based Service Tracking Facility)

குடிமக்களுக்கு சேவை தொடர்பான தகவல்களை அளிப்பதும், பெற்றிடுவதும் என இருவழி தகவல் தொடர்பு வசதிகளாகும். அரசு இ-சேவை மையங்களில் பயனாளர்கள் தங்களின் விண்ணப்பத்தினைப் பதிவு செய்தவுடன் குறுந்தகவல் மூலமாக விண்ணப்பம் குறித்த தகவல் அனுப்பப்படும். பின்னர், விண்ணப்பத்தின் ஒப்புதல், நிராகரிப்பு அல்லது திருப்பி அனுப்புதல் போன்ற தகவல்களும் குறுந்தகவல் மூலமாக பயனாளர்களுக்கு அனுப்பப்படுகின்றது. பயனாளர்கள் 155250 என்ற எண்ணிற்கு விண்ணப்ப எண்ணை அனுப்புவதன் மூலம் அதன் தற்போதைய நிலையை உடனடியாக அறிந்து கொள்ளும் வசதியை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சேவை மூலம் 20.05.2018 வரை 6.68 இலட்சம் பயனாளர்கள் பயனடைந்துள்ளனர்.

திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு மையம் (Centre of Excellence for Capacity Building)

அரசு ஊழியர்களின் தகவல் தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்கு உதவியாக "திறன் மேம்பாட்டு சிறப்பு மையம்" நிறுவப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு 894.15இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மின் ஆளுமை தர கையேடு (e-Governance Standard Manual) தேசியத் தர நிர்ணய வழிமுறைகளுக்கு ஏற்ப தேசியத் தகவலியல் மையம் (NIC), தமிழ்நாடு இணையக் கல்விக்கழகம் (TVA), எல்காட் (ELCOT), மேம்பட்ட கணினி  வளர்ச்சி மையம் (CDAC) மற்றும் மாநில தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (STQC) ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு மின்-ஆளுமை முகமையால் (TNeGA) தயாரிக்கப்பட்டுள்ளது.

மின் கையொப்பமிடல் வசதி (e-Sign Facility)

ஆதார் மூலமாக இணையவழியில் கோப்புகளில் டிஜிட்டல் முறையில் கையொப்பமிட வழிவகை செய்கிறது. மின் கையொப்பமானது ஆதார் விவர சரிபார்ப்பு சேவை மூலம் இணையவழியில் மிக எளிதாக சரிபார்க்கப்படும். மின் கையொப்பமிடல் வசதியைப் பயன்படுத்த ஆதார்

எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது ஆதார் எண்ணுடன் புலன்சார் அங்கீகாரக் கருவி கொண்டு பயன்படுத்தலாம். பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு வசதிகள், இதன் முக்கிய நன்மைகளாகும். பத்திரப் பதிவுத் துறை, தொழிலாளர் நலத்துறை, சர்வ சிக்ஷா அபியான் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு மின் கையொப்பமிடல் வசதியினை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  3.20.2017-2018 ஆம் ஆண்டின் சாதனைகள்

இ-தால் (Electronic Transaction Aggregation and Analysis Layer)

இ-தால் (eTaal) என்பது மத்திய மற்றும் மாநில அளவிலான திட்டங்களின் மின் பரிவர்த்தனை புள்ளி விவரங்களை காட்டும் இணையத் தரவுத்தளமாகும்.

நமது மாநிலத்தை பொறுத்த வரை இதாலில் கடந்த ஆண்டு இதால் இணையதளத்தில் 14 கோடி பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 38 கோடி பரிவர்த்தனைகளாக உயர்ந்து தேசிய அளவில் நமது மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது. 320.2.மின் மாவட்டங்கள் மின் மாவட்ட திட்டம் மூலம் வழங்கப்படும் சேவைகளில் நடைபெற்ற பரிவர்த்தனைகளின் விவரம்:

ஆதார் நிரந்தர பதிவு மையம் (Aadhaar பெர்மனெண்ட் Enrolment Centre)

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 23.09.2016 அன்று தமிழகம் முழுவதும் ஆதார் பதிவுகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் (TNEGA) வாயிலாக மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), நிரந்தர ஆதார் பதிவு மையங்களை தமிழகத்தில் செயல்படுத்த, மின் ஆளுமை இயக்குநரகம் | தமிழ்நாடு மின் ஆளுமை முகமையை ஆதார் பதிவுகள் மேற்கொள்வதற்கான பதிவாளராகவும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV) மற்றும் எல்காட் நிறுவனத்தையும் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளும் முகவர்களாகவும் நியமித்தது.

தமிழகம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வாயிலாக நிரந்தர பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை நீங்கலாக அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் எல்காட் வாயிலாக நிரந்தர ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் எல்காட் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தப் பதிவு மையங்கள் வாயிலாக பொதுமக்கள் அனைவரும் தங்களது வாழ்விடம் சார்ந்த தரவுகளை மாற்றுதல் மற்றும் புதுப்பித்தலை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளங்கையில் சான்றிதழ் திட்டம் (Tiny URL)

"உள்ளங்கையில் சான்றிதழ்" திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 23.05.2017 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. "இணைய முகவரி சுருக்கம் (tiny url)” பயன்பாடு CDAC உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்ட சான்றிதழின் விவரம் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்குக் குறுஞ்செய்தியாக (SMS) இணைய முகவரி சுருக்கமாக அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் இணையத்தின் உதவியுடன் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமல் அவர்களது உள்ளங்கையில் உள்ள ஸ்மார்ட் போன்கள் மூலமாக சான்றிதழ்களைத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்க்ஷார்தா அபியான் (PMGDISHA)

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 6 கோடி மக்களை 31 மார்ச் 2019க்குள் டிஜிட்டல் கல்வியறிவு பெற்றவர்களாக மாற்றவும், 40% கிராமப்புறக் குடும்பங்களிலிருந்து  குறைந்தது ஒரு நபர் டிஜிட்டல் கல்வியறிவு

பெற்றவராகவும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்ஷார்தா அபியான் (PMGDISHA) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் கிராமப்புறங்களில் உள்ள குடிமக்கள் கணினி இயக்க மற்றும் டிஜிட்டல் சாதனங்களான டேப்லட், ஸ்மார்ட் போன் போன்றவற்றை இயக்க, மின் அஞ்சல் அனுப்ப/பெற, இதர அரசு சேவைகளைப் பெறவும் மற்றும் ரொக்கமில்லா பணப் பரிவர்தனைகள் செய்யவும் வழிவகை செய்யும். இத்திட்டமானது கிராமப்புறங்களில்

குறிப்பாக ஒதுக்கப்பட்ட சமூக பிரிவுகளான அட்டவணை பிரிவினர் / பழங்குடியினர், சிறுபான்மையினர், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள், பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகள் என அனைவரும் பயன்பெற உதவுகின்றது.

மாநிலத்தின் இலக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம மற்றும் நகர்புறங்களில் (சென்னை , மதுரை மற்றும் கோவைமாநகராட்சிகள் நீங்கலாக) உள்ள 26.79 இலட்சம் மக்கள் டிஜிட்டல் கல்வியறிவு பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு கிராம  பஞ்சாயத்திலிருந்தும் சராசரியாக 200-300 பயனாளிகள் பயன் பெறுவர். இப்பயனாளிகளை மாவட்ட மின் ஆளுமை சங்கம், மாவட்டத்தின் மக்கள் தொகை மற்றும் அப்பகுதியின் தேவைக்கேற்ப தேர்ந்தெடுக்கும். மேலும், டிஜிட்டல் படிப்பறிவு இல்லாத ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவர் மற்றும் 14.60 வயதுக்குட்பட்டவர்கள் இத்திட்டத்தில் பயிற்சி பெற தகுதியானவர்கள் ஆவார்கள். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் நகர்புறங்களில் இத்திட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அம்மா இ கிராமம்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சட்டபேரவை விதி எண் 110 கீழ் அம்மா இ கிராமம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் முன்னோடியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் நோக்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள மக்களுக்குத் தொலைத்தொடர் மருத்துவம், தொலைத்தொடர் கல்வி, LED மின்விளக்குகள், WIFIHotspot, திறன் மேம்பாடு சேவை, டிஜிட்டல் அறிவாற்றல் மையம், பொது சேவை மையம் போன்ற சேவைகளைக் கொண்டு சேர்ப்பதாகும்.

இத்திட்டம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் CSR நிதியின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இது நாள் வரை 1.62 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டம் 6கிராமங்களில் செயல்படுத்தப்படும்.

அம்மா இ-சேவைகைபேசி செயலி Assured Multi Model Access to e-Services (AMMA)

மக்களை மையமாக கொண்ட 25 இ-சேவைகளைஅம்மா இ-சேவை கைபேசி செயலி (Mobile App) மூலம் உருவாக்க அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது. மின் மாவட்ட திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்களை மையப்படுத்திய சேவைகளை கைபேசி செயலி மூலம் வழங்குவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். இந்தக் கைபேசி செயலி மூலம், குடிமக்கள் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் சேவைகளைப் பெற முடியும்.

இ-சேவை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1 பயன்பாட்டு சேவைகள் முதற்கட்டமாக அம்மா கைபேசி செயலி மூலம் ஒருங்கிணைத்து வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் அரசின் சேவைகளை ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி விண்ணப்பம் செய்து பொதுமக்கள் சான்றிதழ்களை பெற முடியும்.

இச்செயலி வாயிலாக சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் கட்டணம் செலுத்தும் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

புதுயுக ஆளுகைக்கான பொது அலைபேசி செயலி (UMANG- Unified Mobile Application for New Age Governance)

இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Meity) கீழ் செயல்பட்டுவரும் தேசிய மின் ஆளுமை திட்டத்தின் மூலம் அலைபேசி ஆளுமைக்காக உமாங் (UMANG) செயலி தேசிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுத்துறைகள் முதல் உள்ளாட்சித் துறைகள் வரை நாடு முழுவதும் மின்ஆளுமை மூலம் வழங்கப்பட்டு வரும் சேவைகளை ஒரே தரவுதளத்தின் கீழ் இச்செயலி சேவைகளை வழங்கும்.

முதல் கட்டமாக மின்-மாவட்டத்தின் கீழ்செயல்படுத்தப்பட்டுவரும் சேவைகளில் வருவாய்த் துறையைச் சார்ந்த மூன்று சேவைகள் உமாங் (UMANG) செயலியில் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசின் சேவைகளை ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி விண்ணப்பம் செய்து பொதுமக்கள் சான்றிதழ்களைப் பெற முடியும்.

நமது அரசு (My Gov)

2017-18 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் அவர்களால் 'நமது அரசு" திட்டம் அறிவிக்கப்பட்டது.

நமது அரசு (namadhuarasu.in) திட்டமானது அரசின் குடிமக்கள் தளத்தின் வாயிலாக ஆட்சி மற்றும் கொள்கை தயாரிப்பில், குடிமக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கிறது. இத்திட்டத்தினை <9180 இலட்சம் செலவில் செயல்படுத்துவதற்கு அரசு நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இ-மடல் (e-Newsletter)

 • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 11.10.2017 அன்று இ-மடல்  (e-Newsletter) வெளியிடப்பட்டது. இமடல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்படுகிறது. இதுவரை 10 இதழ்கள் வெளிவந்துள்ளன. இதில் மத்திய மற்றும் மாநில
 • அரசுகளின் தகவல் தொழில்நுட்பத் திட்டங்கள் பொது கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. இதன் மூலம், சமீபத்திய தொழில்நுட்ப நிகழ்வுகளைப் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எளிதில் அறிந்து கொள்ள உதவும்.

மின் ஆளுமை கொள்கை (eGovernance Policy)

மாண்புமிகு தமிழ்நாடு முதமைச்சர் அவர்களால் மின்02.01.2018 அன்று ஆளுமைக் கொள்கை வெளியிடப்பட்டது.

இக்கொள்கையின் நோக்கங்கள்

 • மாநில அரசின் பல்வேறு துறைகளில் மின்-ஆளுமை செயல்பாடுகளுக்கு வழிகாட்டுதல்.
 • கணினி, மென்பொருள் மற்றும் தரவு ஆகியவற்றுக்கு இடையே பொதுவான கட்டமைப்பு தரநிலைகள் மற்றும் தடையற்ற இடைசெயல்பாட்டு மற்றும் பெயர்வுத்திறனை உறுதிசெய்தல்.
 • குடிமக்களுக்கு இணையவழி சேவைகளை செயல்திறனுடன் வழங்குவதை ஊக்குவித்தல்.
 • மேலும், அரசு துறைகளின் உற்பத்தி திறனை மேம்படுத்துதல்.
 • தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் வன்பொருள் ஆதாரங்களை பகிர்வு செய்தல் மற்றும் மீண்டும் பயன்படுத்துதலை எளிதாக்குதல்,
 • பிராட்பேண்ட் இணைப்புகளின் ஊடுருவலை அதிகரித்தல். அனைத்து மின் ஆளுமை பயன்பாடுகள்/ இணையதளங்கள் / வலைதளங்களில் தமிழ் மொழி மற்றும் தமிழ் ஒருங்குறித் தரநிலை பயன்பாட்டை ஊக்குவித்தல்.
 • மிக குறைந்த செலவில் அரசு - குடிமக்கள் (G2C), அரசு ஊழியர்கள் (G2E), அரசு அரசு (G2G) மற்றும் அரசு - வணிகம் (G2B) சேவைகள் வழங்குவதற்கு ஒரு ஒருங்கிணைந்த சூழலை உருவாக்குதல்.

நிதி நிலை செயல்பாடுகள்

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மாநில அரசால்நிர்வாக செலவுகளுக்கு மானிய உதவி பெற்று செயல்படுகிறது. மின் மாவட்டத் திட்டம், திறன் மேம்பாடு (Capacity building), மாநிலச் சேவைகள் விநியோக நுழைவாயில் (SSDG), மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையம் (SRDH) ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியுள்ளது.

மேகக் கணினி சொத்து மேலாண்மை திட்டம் (Cloud Based Asset Management System), குறுந்தகவல் மூலமாக சேவை நிலை தெரிந்து கொள்ள வசதி, தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பு (TNGIS), திறன் மேம்பாட்டு மையம், தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு தணிக்கை ஆகிய திட்டங்களுக்கு மாநில அரசால் நிதி வழங்கப்படுகிறது. டிசம்பர் 2016 முன்பு வரை தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் வருவாய் பங்கினை மாவட்ட மின்னாளுமை சங்கங்கள் வாயிலாக பெறப்பட்டு வந்தன. அதன் பின்னர்  மின் பணப்பை (e-Wallet) நடைமுறைப்படுத்தப்பட்டு நேரடியாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் வங்கி கணக்கிற்கே வருவாய் பெறப்பட்டு வருகிறது.,

ஆதாரம் : தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் துறை

2.95652173913
Badmanaban Jul 11, 2020 02:36 PM

மிகவும் பயன் உள்ளன நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top