অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கடலூர் மாவட்ட மக்கள்தொகை

கடலூர் மாவட்ட மக்கள்தொகை

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 புள்ளி விவரம்

2011 ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட மக்கள் தொகை 2,605,914 ஆகும், இதில் ஆண்கள் 1,311,697, பெண்கள் 1,294,217 ஆக இருந்தனர். 2001 ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,285,395 ஆக இருந்தனர் இதில் 1,150,908 ஆண்களும், 1,134,487 பெண்களும் இருந்தனர். தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 3.61 சதவிகிமாக கடலூர் மாவட்ட மக்கள் தொகை உள்ளது. 2001 ஆம் கணக்கெடுப்பின்படி கடலூர் மாவட்ட மக்கள் தொகை 3.66 சதவீதமாக இருந்தது.

மக்கள்தொகை வளர்ச்சி விகிதம்

2001 ஆம் ஆண்டிற்குள் மக்கள் தொகையில் ஒப்பிடும்போது 14.02 சதவிகிதம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2001 இன் முந்தைய இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பில் கடலூர் மாவட்டத்தில் 1991 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதன் மக்கள் தொகைக்கு 7.66 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை அடர்த்தி

இந்தியாவின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் வெளியிடப்பட்ட முதல் தற்காலிக தகவல்களின் படி கடலூர் மாவட்டத்தின் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 704 நபர்கள் இருப்பதாக காட்டுகிறது. 2001 ஆம் ஆண்டில், கடலூர் மாவட்ட மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 617 நபர்கள் இருப்பதாக காட்டுகிறது. கடலூர் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 3,703 சதுர கிலோமீட்டர் ஆகம்.

எழுத்தறிவு விகிதம்

2011 ஆம் ஆண்டு மற்றும் 2001 ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட சராசரி கல்வி அறிவு விகிதத்தை ஒப்பிடுகையில் முறையே 2011 ஆம் ஆண்டு 78.04, 2001 ஆம் ஆண்டு 71.01 ஆக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு பாலின விகிதத்தில் ஆண்களில் எழுத்தறிவு விகிதம் 85.93, பெண்களின் எழுத்தறிவு விகிதம் 70.14 ஆக இருந்தன. 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 81.64, பெண்களின் எழுத்தறிவு விகிதம் 60.27 என பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த கல்வி அறிவு பெற்றவர்கள் 1.815.281 ஆகும். இவர்களில் ஆண்கள் 1.000.322, பெண்கள் 814.959 ஆகும். 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த கல்வி அறிவு பெற்றவர்கள் 1,420,488 ஆகம்.

பாலின விகிதம்

கடலூர் மாவட்டத்தின் பாலின விகிதத்தை ஒப்பிடுகையில் 2011 ஆம் ஆண்டில் 1000 ஆண்களுக்கு 987 பெண்களாக இருந்தது. 2001 ஆம் ஆண்டில் 1000 ஆண்களுக்கு 986 பெண்களாக இருந்தது. இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சராசரி தேசிய பாலின விகிதம் 940 ஆக உள்ளது. சிறுவர்கள் பாலின விகிதத்தை ஒப்பிடுகையில் 2011 ஆம் ஆண்டு 1000 சிறுவர்களுக்கு 896 சிறுமிகள் என பதிவாகியுள்ளது. 2001 ஆம் ஆண்டு 1000 சிறுவர்களுக்கு 957 சிறுமிகள் இருந்ததாக பதிவாகியுள்ளது.

குழந்தை மக்கள்தொகை

மக்கள் தொகை கணக்கெடுப்பில், 0-6 வயதிற்கு உட்பட்ட குழந்தை பற்றிய தகவல்கள் கடலூர் உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் சேகரிக்கப்பட்டன. 2011 ஆம் ஆண்டு 0-6 வயதுக்குள் 279,950 குழந்தைகள் இருந்தனர், 2001 கணக்கெடுப்பின்படி 284,964 குழந்தைகள் இருந்தனர். மொத்தம் 279,950 குழந்தைகளில் 147,644 ஆண்குழந்தைகளும் 132,306 பெண்குழந்தைகளும் இருந்தனர். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குழந்தைகளின் பால் விகிதம் 2011 இல் 896 ஆகவும், 2001 இன் படி 957 ஆகவும் உள்ளன. 0- 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2011 இல் 10.74 சதவிகிதமாகவும் 2001 இல் 12.47 சதவிகிதமாகவும் உள்ளன. முன்தைய கணக்கெடுப்பு ஒப்பிடுகையில் 1.73 சதவீதம் நிகர மாற்றமாக உள்ளது.

நகர்ப்புற மக்கள்தொகை

2011 ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பின் படி கடலூரில், 33.97 சதவிகிதம் நகர்ப்புற மாவட்டங்களில் வாழ்கின்றனர். நகர்ப்புறங்களில் வாழும் 885,189 நபர்களில் ஆண்கள் 442, பெண்கள் 836 ஆக உள்ளனர். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு புள்ளி விவரத்தின்படி கடலூர் மாவட்டம் நகர்ப்புறத்தில் பாலின விகிதம் 999 ஆக உள்ளது. இதேபோல் கடலூர் மாவட்டத்தில் குழந்தை பாலின விகிதம் 2011 ல் 934 ஆக இருந்தது. நகர்ப்புறத்தில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை (0-6) 87,249 ஆகும், இதில் ஆண்குழந்தைகள் 45,119 பெண்குழந்தைகள் 42,130 ஆக இருந்தனர். கடலூர் மாவட்டத்தின் குழந்தைகள் மக்கள்தொகை மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 10.19% ஆகும். கடலூர் மாவட்டத்தில் சராசரி கல்வியறிவு விகிதம் 2011 கணக்கெடுப்பின்படி 86.38% ஆகும், இதில் ஆண்கள் 91.88% பெண்களும் 80.90% எழுத்தறிவு பெற்றவர்கள். 689,236 மக்கள் நகர்ப்புறத்தில் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர், இதில் ஆண்கள் 365,439 பெண்கள் 323,797 ஆகும்.

கிராமப்புற மக்கள்தொகை

2011 கணக்கெடுப்பின்படி கடலூர் மாவட்டத்தில் 66.03% கிராமங்களில் வசிக்கின்றனர். கடலூர் மாவட்ட கிராமப்புற பகுதிகளில் வாழும் மொத்த மக்கள் தொகை 1,720,725 இதில் ஆண்கள் 868,861 பெண்கள் 851,864 ஆக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில், பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 980 பெண்கள் ஆகும். கடலூர் மாவட்டத்தின் குழந்தை பாலின விகிதம் பற்றிய புள்ளிவிவரங்கள் கருத்தில் கொள்ளப்பட்டால், 1000 சிறுவர்களுக்கு 880 பெண்கள் உள்ளனர். 0-6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கிராமப்புறங்களில் 192,701 ஆகும், இதில் ஆண்களின் எண்ணிக்கை 102,525 மற்றும் பெண்களின் எண்ணிக்கை 90,176 ஆகும். கடலூர் மாவட்டத்தில் உள்ள மொத்த கிராமப்புற மக்கள் தொகையில் 11.80% குழந்தைகளின் மக்கள்தொகை அடங்கியுள்ளது. 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி கடலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் எழுத்தறிவு விகிதம் 73.69% ஆகும். ஆண்களின் எழுத்தறிவு 82.85%, பெண்களின் எழுத்தறிவு 64.48% என்ற அளவில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் எழுத்தறிவு பெற்றவர்கள் 1,126,045 நபர்கள், இதில் ஆண்கள் 634,883, பெண்கள் 491,162 நபர்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர்.

ஆதாரம் : https://cuddalore.nic.in/

கடைசியாக மாற்றப்பட்டது : 6/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate