অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

குடிமைப் பொருள்கள்

குடிமைப் பொருள்கள்

பொது விநியோகத்திட்டம்

மாவட்டத்தில் தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவுபாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் பொது விநியோகத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் குறிக்கோள் குடும்ப அட்டை தாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சா்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற சிறப்பு அத்தியாவசியப்பொருட்கள் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்குகிறது.

ஆய்வு மற்றும் கண்காணிப்பு அமைப்பு

மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு வாரமும் (திங்கட்கிழமை) பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்படுவதற்காக நியாய விலைக் கடைக்கு செல்லும் அத்தியாவசியமான பொருட்களை ஆய்வு செய்வார்கள்.

பொது விநியோகத்திட்டத்தின் நோக்கங்கள்

  • அத்தியாவசியமான பொருட்களின் விலை உயா்வால் வரும் தவறான விளைவுகளில் இருந்து ஏழை எளிய மக்களை பாதுகாக்கவும்,
  • பருப்பு. சமையல் எண்ணெய் போன்றவற்றின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும்,
  • மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்கவும்,
  • குடும்ப அட்டைதாரா்கள் அருகில் அமைந்துள்ள நியாயவிலைக்கடைகளை எளிதாக அணுகி அத்தியாவசிய பொருட்களை பெற்றுச்செல்லவும்,
  • ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரா்களுக்கு சரியான நேரத்தில், அத்தியாவசிய / சிறப்பு அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் இத்திட்டம் பயன்படுகின்றது.
  • மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம் மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்களின் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது.
  • புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி இணையதளம் வாயிலாக பதியப்படும் மனுக்களின் மீது வட்ட வழங்கல் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலா்கள் தலத்தணிக்கை செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டு புதிய மின்னணு குடும்ப அட்டை அச்சிட்டு நியாயவிலை கடைகள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது.

நுகா்வோர் பாதுகாப்பு

  • நுகா்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-ஐ அடிப்படையாகக்கொண்டு நுகா்வோர் தொடா்புடைய பிரச்சினைகளுக்கு தீா்வு காணல்.
  • நோ்மையற்ற வணிக முறையினை பொருட்களின் உற்பத்தி மற்றும் சேவையினை தர ஆய்வின்வாயிலாக கண்ணுற்று நுகா்வோர் நீதிமன்றங்கள் வாயிலாக தீா்வினை அறிதல்.
  • கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவா் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் தன்னா்வ நுகா்வோர் அமைப்பு மூலமாக கல்லூரி மற்றும் அரசு மேனிலைப்பள்ளிகளில் நுகா்வோர் மன்றங்கள் தொடங்கப்பட்டு மாணவ, மாணவியா்களின் கலைநிகழ்ச்சிகள் மூலமாக பல்வேறு நோ்வுகளில் நுகா்வோர்களுக்கு விழிப்புணா்வு சேவைகள் செய்யப்பட்டு வருகிறது.

நியாய விலைக் கடை விபரம்

வ.எண்வட்டம்கூட்டுறவு துறைசுய உதவி குழுமொத்தம்மொத்த கடைகள்
பகுதி நேரம்முழு நேரம்பகுதி நேரம்முழு நேரம்பகுதி நேரம்முழு நேரம்
1 புவனகிரி 31 76 0 1 31 77 108
2 சிதம்பரம் (வ) 52 116 0 0 52 116 168
3 கடலூர் (வ) 87 102 0 1 87 103 190
4 காட்டு மன்னார் கோவில் (வ 31 107 0 0 31 107 138
5 குறிஞ்சிபாடி 68 75 0 0 68 75 143
6 பண்ருட்டி (வ) 110 90 0 1 110 91 201
7 ஸ்ரீமூஷ்ணம் 28 40 0 2 28 42 70
8 திட்டக்குடி (வ) 29 105 0 4 29 109 138
9 வேப்பூர் வட்டம் 18 49 0 0 18 49 67
10 விருத்தாசலம் (வ) 60 133 0 0 60 133 193
மொத்தம் 514 893 0 9 514 902 1416

குடும்ப அட்டை விபரம்

வ.எண்வட்டம்அரிசிசர்க்கரைAAY அரிசிஎப்பொருளும் வேண்டாதோர் அட்டைகாவாலர் அட்டைமொத்த அட்டை
1 புவனகிரி 46952 335 8151 35 70 55543
2 சிதம்பரம் (வ) 64418 2740 7442 80 159 74839
3 கடலூர் (வ) 97415 4640 10161 20 783 113019
4 காட்டு மன்னார் கோவில் (வ) 44852 331 6753 5 65 52006
5 குறிஞ்சிபாடி 60785 6065 7945 8 123 74926
6 பண்ருட்டி (வ) 89596 1135 16445 316 167 107659
7 ஸ்ரீமூஷ்ணம் 25935 130 4012 409 37 30523
8 திட்டக்குடி (வ) 54035 571 8410 805 30 63851
9 வேப்பூர் வட்டம் 24374 51 6277 163 9 30874
10 விருத்தாசலம் (வ) 84947 1781 9476 2 120 96326
மொத்தம் 593309 17779 85072 1843 1563 699566

ஆதார் பதிவு மற்றும் மொபைல் பதிவு எண்கள் விபரம்

மொத்த குடும்ப அட்டைகள்மொத்த வாடிக்கையாளர்கள்மொத்த ஆதார் பதிவு எண்கள்மொத்த மொபைல் பதிவு எண்கள்
699566 2503232 2308923 688353

முன்னுரிமை உறுப்பினர்களின் தற்காலிக பட்டியல்

AAY அட்டைகள்AAY பயனாளிகள்PHH அட்டைகள்PHH பயனாளிகள்மொத்த குடும்ப அட்டைகள்மொத்த வாடிக்கையாளர்கள்
85069 332009 375559 1349945 460628 1681954

அத்தியாவசிய பொருட்கள் தேவை விபரம்

அரிசி : 11908 மெட்ரிக் டன்

AAY அரிசி : 14886 மெட்ரிக் டன்

OAP அரிசி : 13 மெட்ரிக் டன்

சர்க்கரை : 1189 மெட்ரிக் டன்

கோதுமை : 3394 மெட்ரிக் டன்

மண்ணெண்ணய் : 1615 கி. லி.

பொது விநியோகத்திட்டம்

தமிழக அரசு அத்யாவசிய பொருட்கள் மானிய விலையில் / நியாய விலையில் நியாய விலை கடை மூலம் பின்வருமாறு விற்பனை செய்யப்படுகிறது.

பொது விநியோகத்திட்டம்
வ.எண்பொருள்விலை (கி)அளவு
1. பு அரிசி மற்றும் ப அரிசி விலையில்லாமல் 1 Unit 12 Kgs

1.5 Unit 14 Kgs

2 Unit 16 Kgs

2.5 Unit 18 Kgs

3 and 4 20 Kgs

Above 5 Unit 5 kg per unit

2 கோதுமை Rs.7.50/- 5 Kgs
3 சர்க்கரை Rs.25/- 500 gms per head per month. For Sugar option family cards an additional quantity of 3 kg of sugar in lieu of rice.
4 AAY சர்க்கரை Rs.13.50/- 500 gms per head per month.
5 மண்ணெண்ணய் கிராமபுறம் Rs.14.00

நகர்புறம் :Rs.13.90

Regular

மாநகராட்சி 10 Lts.

நகராட்சி 6 Lts

பேருராட்சி 3 Lts.

கிராம ஊராட்சி 3 Lts.

LOF

மாநகராட்சி 3 yp.

நகராட்சி 3 yp.

பேருராட்சி 3 yp.

கிராம ஊராட்சி 3 yp.

6 சிறப்பு அத்தியாவசிய பொருட்கள் துவரம் பருப்பு Rs.30/-.

பாமாயில் Rs.25/-

1 Kg

 

1 Lt

1.10.2008 முதல் காவலர் குடும்பங்களுக்கு பொது விநியோக திட்டம் மூலம் பின்வரும் விற்பனை செய்யப்படுகிறது.

திருமணமாகதவர் : 1 அலகு

பெற்றோருடன் வசிப்பவர் : 2 அலகு

திருமணமாகி குழந்தை இல்லாமல் வசிப்பவர் : 2 அலகு

திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசிப்பவர் : 3 அலகு

திருமணமாகி இரண்டு குழந்தையுடன் வசிப்பவர் : 4 அலகு

ஆதாரம் : https://cuddalore.nic.in/

கடைசியாக மாற்றப்பட்டது : 6/18/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate