பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டம்

கடலூர் மாவட்டத்தின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டம் பற்றிய விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்

* 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள், வளர் இளம் பெண்களின் நலத்தையும், ஊட்டச்சத்தையும் மாதந்தோறும் கண்காணித்து ஆலோசனை மற்றும் பரிந்துரை வழங்கப்பட்டு வருகிறது.

* கிஷோரி சக்தி யோஜனா மூலம் 11-18 வயது வளர் இளம் பெண்களுக்கு உடல் நலத்தையும், ஊட்டச்சத்தையும் அதிகரிக்க கல்வி அளித்தல் மற்றும் தொழில் பயிற்சி மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழி வகுக்கப்பட்டு வருகிறது.

* அனைத்து அங்கன்வாடி மையங்களில் புகையில்லா சுற்றுச்சூழல் அமைத்தல்.

* குழந்தைகளை ஊக்குவிக்க அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் இரண்டு செட் வண்ணச் சீருடை அனைத்துக் குழந்தைகளுக்கும் (2-5+ வயது) முன்பருவக் கல்வி குழந்தைகளுக்கு வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

* வருடந்தோறும் குடற்புண் நீக்கல் மருந்து வழங்கப்படுகிறது.

* வருடந்தோறும் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும், 5 வகை சாப்பாடு, 1-டசன் வளையல், குங்குமம், மஞ்சள், பூ, சுமங்கலி செட் மற்றும் மாலை அணிவித்து அவர்களின் நலனை மேம்படுத்த வழிவகுக்கிறது.

* முன்பருவக்கல்வி பயில ஏதுவாக 11 மாதங்களுக்குமான பாடத்திட்ட புத்தகம் 1 செட் அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மே மாதம் விடுமுறை மாதம் என்பதால் பாதி வருகை புரியும் குழந்தைகளுக்கு 11 மாத தலைப்புப் பாடம் திருப்புதல் வழங்கப்பட்டு வருகிறது.

* அனைத்து முன்பருவக்கல்வி குழந்தைகளின் திறனை மதிப்பிடுவதற்காக 2-3 வயது, 3-4 வயது மற்றும் 4-5 வயது குழந்தைகளுக்கு ஆய்வுத் தாள் அட்டை தனித்தனியாக வழங்கப்பட்டு மதிப்பிடப்பட்டு வருகிறது.

* செயல்பாட்டு புத்தகம் அனைத்து முன்பருவக்கல்வி குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் குழந்தைகளின் செயல்பாட்டுத்திறனை மேம்படுத்த இது வழி வகுக்கிறது.

* குழந்தைகள் விவரப் பதிவேடு அனைத்து முன்பருவக் கல்வி குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு அவர்களின் விவரம் முழுமையாக பதிவு செய்யப்படுகிறது.

* மிகவும் எடைக்குறைவாக இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் மருத்துவக் குழு மூலம் பரிந்துரை செய்யப்பட்டு வருடந்தோறும் ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

சத்துணவுத்திட்டம்

புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் சத்துணவுத்திட்டம்

தமிழகத்தில் புரட்சித் தலைவா்  எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டம் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆா். அவா்களால் ஊரக பகுதிகளில் 01.07.1982 அன்றும் நகா்புறங்களில் 15.09.1982 அன்றும் உருவாக்கப்பட்டது.

சத்துணவுத்திட்டத்தின் நோக்கம்

* பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வகைசெய்தல்.

* ஊட்டச்சத்து குறைபாடுள்ள பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவு வழங்குவதன் மூலம் கல்வித்தரத்தை மேம்படுத்துதல்.

* பள்ளி பயிலும் மாணவ, மாணவியா் கல்வி இடைநிறுத்தம் செய்வதை தடுத்திடுதல்.

அலுவலக முகவரி விபரம் :

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு),

கடலூர் 607 001,

தொலைபேசி – 04142 295452

ஆதாரம் : https://cuddalore.nic.in/

3.07692307692
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top