பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சிதம்பரம் நகராட்சி

சிதம்பரம் நகராட்சி துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

துறை / பிரிவு பற்றிய தகவல்

நிதித்துறை அரசாணை (எம்எஸ்) எண் 33 நாள் 25.03.1873-ன் படி இந்நகராட்சி மூன்றாம் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பிறகு நிதித்துறை அரசாணை (எம்எஸ்) எண் 2302 ஆர்டி மற்றும் எல்ஏ நாள் 11.04.1949-ன் படி இந்நகராட்சி இரண்டாம் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பிறகு நிதித்துறை அரசாணை (எம்எஸ்) எண் 1815 ஆர்டி மற்றும் எல்ஏ நாள் 09.08.1974-ன் படி இந்நகராட்சி முதல் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பிறகு 15.06.1998 முதல் தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நகரம் கடலூர் மாவட்டத்திலுள்ள தாலுக்காவின் ஒன்றாக திகழ்கிறது.

தலைப்புவிபரம்
நகராட்சி சிதம்பரம் நகராட்சி
மண்டலம் செங்கல்பட்டு
தரம் தேர்வுநிலை நகராட்சி
முகவரி 2, கச்சேரி தெரு,சிதம்பரம் ,பின்கோடு : 608001
தொலைபேசி 04144 – 222231
மின்னஞ்சல் commr.chidambaram[at]tn.gov.in

பொது தகவல்

விபரம்எண்னிக்கை
பரப்பளவு 4.80 சகிமீ
மொத்த வார்டுகள் 33
மொத்த தெருக்கள் 132
மொத்த தெருக்களின் நீளம் 66.025 கிமீ
மொத்த குடிநீர் குழாய்களின் நீளம் (கிமீ) 19.372 கிமீ
மொத்த பாதாள சாக்கடை நீளம் (கிமீ) 26 கிமீ
மொத்த திறந்தவெளி கழிவு நீர் பாதை நீளம் (கிமீ) 36.320 கிமீ
மொத்த பொது குடிநீர் குழாய்கள் 227
மொத்த வரிவிதிப்பு 13868
மக்கள் தொகை 2011 61153
மொத்த குடிநீர் இணைப்புகள் வீடுகள் – 6016

கடைகள் – 168

Total – 6184

மொத்த குடிநீர் தொட்டிகள் 4
மொத்த குப்பை அகற்றும் லாரிகள் 5
மொத்த துப்புரவு பணியாளர்கள் 66 (மொத்தம் -155)
மொத்த குப்பை தொட்டிகள் 67
மொத்த குப்பை சேகரிக்கும் இடம் மற்றும் அளவு 1 (4.80 சதுர ஏக்கர்)
மொத்த தெருவிளக்குகள் 1850
மொத்த பூங்காக்கள் 7
மொத்த நகராட்சி பள்ளிகள் 9
மொத்த நகராட்சி சத்துணவு மையங்கள் 9

மின்னாளுமை

இந்நகராட்சியில் அனைத்து சேவைகளும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மின்னாளுமையால் செயல்படுத்தப்பட்டுள்ளது. சொத்துவரி, குடிநீர் கட்டணம், வரியில்லா இனங்கள், அச்சம் மற்றும் அருவருக்கதக்க இனங்கள், பிறப்பு, இறப்பு சான்றுகள், கட்டிட உரிமம் ஆகிய சேவைகள் மின்னாளுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வீட்டில் இருந்தபடியே சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றுகள் இணையதளம் மூலம் சான்றுகள் எடுப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளம் மூலம் விரைவாக அனைத்து சேவைகளும் பொதுமக்களே வீட்டில் இருந்தபடியே பெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நகரத்தை பற்றி விளக்கம்

இந்நகரம் பழமையான நகரமாகும். இங்கு புகழ்பெற்ற நடராஜர் ஆலயம் உள்ளது. இங்கு இந்தியாவிலிருந்தும் மற்றும் பல நாடுகளிலிருந்தும் பொதுமக்கள் இவ்வாலயத்திற்கு வருகை புரிகின்றார்கள். இந்த ஆலயத்தில் நடராஜர் நடனம் புரிந்த சிற்சபை உள்ளது. இந்த ஆலயம் கி.மு 6 முதல் 8 வரை உள்ள நூற்றாண்டுகளில் சோழ, பாண்டிய, விஜயராக அரசர்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக வரலாறு தெரிவிக்கிறது. மாணிக்கவாசகர் இவ்வாலயத்தில் வழிபட்டதாக புராணம் கூறுகிறது. சைவபுராணத்தில் இந்நகரம் தில்லை வனம் என்று குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை திருவிழா நடைபெறுகிறது.

நகரம் அமைந்துள்ள இடம்

இந்நகரம் கிழக்கு அச்சரேகை படி 97-44-ம் வடக்கு அச்சரேகை படி 11 24-ம் அமைந்துள்ளது. இந்நகரம் வடக்கே 250 கிமீ தொலைவில் சென்னையும், 50கிமீ தொலைவில் கடலூரும், 75கிமீ தொலைவில் பாண்டிசேரியும் உள்ளது. மேற்கண்ட நகரத்திற்கு செல்ல அனைத்து சாலைகளும் தேசிய நெடுஞ்சாலைகளில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் சீர்காழி, மாயவரம் தெற்கு பக்கம் 20 கிமீ மற்றும் 40 கிமீ தொலைவில் உள்ளது. இந்நகரம் அனைத்து நகரத்திற்கும் புகைவண்டி அகலபாதை வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

முக்கிய இடங்கள்

நடராஜர் ஆலயம்

நடராஜர் ஆலயம் 43 ஏக்கர் நில பரப்பளவில் மூன்று பிரகாரங்களுடன் உள்ளடங்கியது. முதல் பிரகாரத்தில் நடராஜர் ஆலயம் உள்ளது. இரண்டாவது பிரகாரத்தில் தாயார் அம்மன் உள்ளது. மூன்றாவது பிரகாரத்தில் சிவகாமியம்மன் மற்றும் பாண்டியநாயகி அம்மன் உள்ளது.

தில்லைகாளியம்மன் ஆலயம்

நடராஜருக்கும் பார்வதிக்கும் நடந்த நடன போட்டியில் நடராஜர் வென்றதால் பார்வதி கோபம் கொண்டு ஊர் எல்லையில் கோவில் கொண்டுள்ளார் என்பது இக்கோவில் வரலாறு. இந்தகோவில் கோப்பெருஞ்சோழனால் கட்டப்பட்டது.

இளமையாக்கினார் கோவில்

வயதான தோற்றதுடன் நோயின் பிடியிலிருந்த திருநீலகண்டநாயானார் தனது மனைவியுடன் கோவில் குளத்தில் நீராடியவுடன் இளமை தோற்றத்தில் காட்சி அளித்தார் என்பது கோவில் வரலாறு. இத்திருகோவிலில் ஆண்டுக்கு இருமுறை திருவிழா நடைபெறுகிறது. இக்கோவிலில் காளபுலநாயனார் திருவிழா மற்றும் திருநீலகண்ட நாயனார் திருவோடு தரும் காட்சி திருவிழா ஆகியவை நடைபெறுகிறது.

ஆதாரம் : https://cuddalore.nic.in/

Filed under:
3.25
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top