பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சுகாதாரம்

கடலூர் மாவட்டத்தின் சுகாதார துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இணை இயக்குநரகம்

கடலூர் சுகாதாரத்துறை இரண்டு இயக்குநரகம் மூலமாக செயல்பட்டு வருகிறது.

*இணை இயக்குநரகம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், கடலூர்.

*இணை இயக்குநரகம் ஆரம்ப சுகாதாரத்துறை, கடலூர்.

இணை இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மருத்துவமனைகள்

 1. அரசு தலைமை மருத்துவமனை, கடலூர்.
 2. காமராஜ் அரசு மருத்துவமனை, சிதம்பரம்
 3. அரசு மருத்துவமனை, விருத்தாசலம்.
 4. அரசு மருத்துவமனை, பண்ருட்டி.
 5. அரசு மருத்துவமனை, குறிஞ்சிப்பாடி.
 6. அரசு மருத்துவமனை, திட்டக்குடி.
 7. அரசு மருத்துவமனை, காட்டுமன்னார்கோயில்.
 8. அரசு மருத்துவமனை, பரங்கிப்பேட்டை.
 9. அரசு மருத்துவமனை, புவனகிரி.
 10. அரசு மருத்துவமனை, வேப்புர்.
 11. அரசு காசநோய் மருத்துவமனை, கேப்பர் மலை.

இ-கவர்னன்ஸ்

அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் தகவல்கள் அனைத்தும் மருத்துவமனை மேலாண்மை திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பார்க்கும் வகையில் இந்த திட்டம் தமிழ்நாடு அரசு சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சேவைகள்

 1. பொது மருத்துவம்
 2. பொது அறுவையியல்
 3. மூட்டு மற்றும் எலும்பு சிகிச்சை
 4. குழந்தைகள் நலப்பிரிவு
 5. கண் சிகிச்சைப் பிரிவு
 6. பெண்ணோயியல்
 7. மகப்பேறு மருத்துவம்
 8. காது மூக்கு மற்றும் தொண்டை சிகிச்சை பிரிவு
 9. பல் மருத்துவம்
 10. தோல் சிகிச்சைப் பிரிவு
 11. மயக்கயியல்
 12. மனநல மையம்
 13. அவசரம் மற்றும் விபத்து எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு
 14. தீவிர சிகிச்சைப் பிரிவு
 15. அதிதீவிர சிகிச்சைப்பிரிவு
 16. பச்சிளம் குழந்தை சிகிச்சைப் பிரிவு
 17. தீப்புண் சிகிச்சைப் பிரிவு
 18. குடும்ப நல அறுவை சிகிச்சைப் பிரிவு
 19. முடக்கு நீக்கியல்
 20. நுண்கதிர் வீச்சுப் பிரிவு
 21. C- ஆர்ம்
 22. CT Scan பிரிவு
 23. ஆய்வுக்கூடப் பிரிவு
 24. இரத்த வங்கி
 25. மருந்தகம்

புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் கட்டுப்பாடு தேசிய திட்டம்

 1. தமிழ்நாட்டின் மக்கள் நலன்களை மேன்படுத்துவதற்காக ஏழை மற்றும் பின்தங்கியவர்களுக்காக உருவாக்கபட்டது தான் இந்த தொற்றாத நோய்கள் பிரிவு.
 2. தொற்றாத நோயால் ஏற்படும் மரணங்களை தடுப்பதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்களில் மற்றும் அரசு மருத்துவ மனைகளிலும் வரும் நோயாளிகளுக்கு தொற்றாத நோய்க்கான பாரிசோதனையும் மற்றும் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
 3. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் அரசு மருத்துவ மனைகளிலும் தொற்றாத நோய்க்கான தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
 4. 18 வயது மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் கண்டறியும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
 5. 30 வயது மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்று நோய் கண்டறியும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
 6. மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்று நோய் உறுதி செய்வதற்காகவும் மேற்படி சிகிச்சைக்காகவும் அனுப்பபடுகிறார்கள்.
 7. தொற்றாத நோய்களினால் ஏற்படும் பின் விளைவுகளுக்கான சிகிச்சைக்கு அரசு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
 8. தொற்றாத நோய்கள் பிரிவுகளில் படிவங்கள், அட்டைகள் மற்றும் பதிவேடுகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் மற்றும் அரசு மருத்துவ மனைகளிலும் பராமரிக்கப்படுகிறது.
 9. தொற்றாத நோய்கள் பிரிவு சம்மந்தமான விவரங்களை இணையதளங்களில் பராமரிக்கவும் பகிரவும் படுகிறது.

தேசிய குழந்தைகள் நலவாழ்வு திட்டம்

தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் தேசிய குழந்தைகள் நலவாழ்வு திட்டம் (RBSK) டிசம்பர் 2014ல் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வளரிளம் பருவத்தினர் வரை ஏற்படக்கூடிய பிறவிக்குறைபாடுகள், வளர்ச்சிக்குறைபாடுகள், ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் நோய்கள் ஆகியவற்றை கண்டறிந்து அவற்றிற்கான சிகிச்சைகளை மேற்கொள்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்

ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் சத்தான உணவுக்கு ஆகும் செலவை மேற்கொள்ளல், கர்ப்ப காலத்தில் ஏற்படும் வருமான இழப்பை ஈடு செய்தல், குறைந்த எடையுள்ள குழந்தைகள் பிறப்பதை தடுத்தல் போன்ற உயரிய நோக்கங்களுக்காக நிதியுதவி வழங்கிட டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு பயனாளிக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி 6000 ரூபாய் என்று இருந்ததை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 01.06.2011 முதல் 12000 ரூபாயாக உயர்த்தி ஆணையிட்டுள்ளார் இந்த நிதியுதவி நிபந்தனைகளின் பேரில், மூன்று தவணைகளாக இரண்டு மகப்பேறுகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. 01.10.2012 முதல் பயளாளிகளுக்கு நோரிடையாக அவர்களது வங்கி கணக்கில் மின்னணு பகிர்மான முறை (ECS) மூலம் வழங்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் அரசு மருத்துவமனைகளில் கர்ப்பகால சேவைகளை பெற்றுக்கொண்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவத்திற்கு முன்பு முதல் தவணையும், அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த கர்ப்பிணிகளுக்கு இரண்டாவது தவணையும், குழந்தைகளுக்கு அனைத்து தடுப்புசிகளும் பெற்றுக்கொண்ட பின் மூன்றாவது தவணையும் வழங்கப்படுகிறது. புலம்பெயர்ந்த இலங்கை அகதிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர் ஆவர். இத்தொகை தற்போது நபர் ஒருவருக்கு ரு.18.000 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம்

வருடத்திற்க்கு 2 மாதத்திற்க்கு ஒரு முறை (12) பாக்கெட் எண்ணிக்கை 10-19 வயதில் உள்ள வளர் இளம் பெண்களுக்கு தரப்படுகிறது.

வாராந்திர இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டம்

பிரதி வாரம் வியாழன் தோறும் இரும்பு சத்து மாத்திரை 10-19 வயது (6 முதல் 12 வகுப்பு) மாணவ. மாணவியருக்கு வழங்கப்படுகிறது.

தேசிய குடற்புழு நீக்கம்

வருடத்திற்கு இருமுறை (பிப்ரவரி மற்றும் ஆக்ஸ்ட் மாதங்களில்) நடைபெறுகிறது. (1-19 வயது) பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

வைட்டமின் A திரவம் வழங்குதல்

வருடத்திற்க்கு இருமுறை (செப்டம்பர் மற்றும் மார்ச்) மாதங்களில் 6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

பிறப்பு இறப்பு பதிவு முறை

மத்திய பிறப்பு இறப்பு பதிவுச்சட்டம் 1969ன் படி, அனைத்து பிறப்பு இறப்புகளை பதிவு செய்வது 01.04.1970 முதல் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிறப்பு இறப்பு பதிவு சட்டத்தின் படி பிறப்பு மற்றும் இறப்புகளை அவை நிகழ்ந்த இடத்திலேயே 21 நாட்களுக்குள் பிறப்பு இறப்பு பதிவாளரிடம் பதிவு செய்வது கட்டாயமாகும். தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000 ன் படி பிறப்பு இறப்பு பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பொது சுகாதாரத் துறையால் உருவாக்கப்பட்ட புதிய பிறப்பு இறப்பு பதிவு மென்பொருளினை 01.10.2017 முதல் பிறப்பு இறப்பு பதிவு குறித்து தொடர்புடைய அனைத்து துறைகளிலும் அமல்படுத்திட அரசு ஆணை எண். 353 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை நாள்.09.10.2017 ஆணையிடப்பட்டது 01.10.2017 முதல் மேற்குறிப்பிட்ட மென்பொருள் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் அமைந்துள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுக்கா மற்றும் தாலுக்கா அல்லாத மருத்துவமனைகளில் நிகழும் பிறப்பு இறப்பு பதிவுகளை உடனடியாக பதிவு செய்திடவும் அம்மருத்துவமனையை விட்டு செல்லும் முன் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கிட பொது சுகாதாரத் துறையின் பல்நோக்கு மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்களை பிறப்பு இறப்பு பதிவாளர்களாக நியமித்திடவும், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலர்களை பிறப்பு இறப்பு பதிவாளர்களாக மேற்குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளில் நியமித்திடவும் அரசு ஆணை எண். 353 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை (AB2) நாள்.09.10.2017 ஆணையிடப்பட்டுள்ளது.

அலுவலக முகவரி விபரம்

இணை இயக்குநர்,
சுகாதார துறை,
கடலூர் 607 001,
தொலைபேசி – 04142 230052.

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் நெ.5, பீச் ரோடு கடலூர் என்ற முகவரியில் தலைமையகமாக செயல்பட்டு கிராமப்புற நோய் தடுப்பு மற்றும் நோய் சிகிச்சைப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த துறையின் கட்டுப்பாட்டில் 63 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 7 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 319 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் 190 மருத்துவர்கள் மற்றும் 280 செவிலியர்கள் 325 பிற பணியாளர்கள் ஆரம்ப சுகாதார நிலைய அளவில் பணியாற்றி வருகிறார்கள்.

 • 30 படுக்கை வசதியுடன் மேம்படுத்தப்பட்ட 19 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகிறது.
 • இரத்த சேமிப்பு 16 ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுகிறது.
 • 21 ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடும்ப நல அறுவை சிகிச்சை அரங்கு செயல்படுகிறது.
 • 13 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் செயல்படுகிறது.
 • 26 பள்ளி சிறார் கண்காணிப்பு குழுக்கள் செயல்படுகிறது.
 • 12 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவர் கொண்ட குழுக்கள் செயல்படுகிறது.
 • 16 ஆரம்ப சுகாதார நிலையங்கள் எக்ஸ்-ரே வசதியுடன் செயல்படுகிறது.
 • மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இ.சி.ஜி, ஸ்கேன் மற்றும் ஆய்வக வசதி உள்ளது.
 • ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினசரி தோராயமாக 16,000 வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 • ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதந்தோறும் தோராயமாக 7500 உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 • ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதந்தோறும் தோராயமாக 350 பிரசவங்கள் நடைபெறுகிறது.
 • ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதந்தோறும் தோராயமாக 150 முதல் 175 குடும்ப நல அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

பொது சுகாதார துறையின் சிறப்புத் திட்டங்கள்

 1. எம்.ஆர்.எம்.பி.எஸ். (டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம்) கர்ப்பினி தாய்மார்களுக்கு முதல் இரண்டு பிரசவங்களுக்கு ருபாய் 18000/- பிரசவத்தின் போது ஊட்டச்சத்து குறைவால் ஏற்படும் மரணத்தை தவிர்ப்பதற்காக வழங்கப்படுகிறது.
 2. JSY (ஜனனி சுரஷ்ஷ யோஜனா) மருத்துவ மனைகளில் நிகழும் பிரசவங்களுக்கு ரு.700/- பிரசவத்தின் போது ஊட்டச்சத்து குறைவால் ஏற்படும் மரணத்தை தவிர்ப்பதற்காக வழங்கப்படுகிறது.
 3. ஜே.எஸ்.எஸ்.கே. (ஜனனி சிசு சுரக்க்ஷா கரியகாம்) பிரசவத்திற்கு முன் பின் இலவசமாக வாகன வசதி செயல்படுகிறது.
 4. WIFS (வாராந்திர இரும்பு சத்து மாத்திரை கூடுதல்) வளர் இளம் பெண்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை இரும்புச்சத்து மாத்திரை ரத்த சோகை வராமல் தடுப்பதற்காக வழங்கப்படுகிறது.
 5. நடமாடும் மருத்துவ குழு: கிராமத்திற்கே நேரடியாகச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. (நெடுந்தொலைவு, கடினமாக பகுதி)
 6. மாதவிடாய் பஞ்சு வழங்கும் திட்டம்: வளர் இளம் பெண்களுக்கு சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது.
 7. பள்ளி சிறார் நலத்திட்டம் : பள்ளிகளுக்கு நேரடியாக ஆண் பெண் மருத்துவர் கொண்ட குழு பரிசோதனை செய்தல்
 8. 108 அவசர சேவைகள் : முதல் உதவி, விபத்து, பிரசவத்திற்கு இலவச மருத்துவ மற்றும் வாகன வசதி
 9. 104 மருத்துவ சிக்சை உதவி எண் : மருத்துவம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தல்
 10. பல் மருத்துவம் : வெளி நோயாளிகளுக்கும் பள்ளி சிறார்களுக்கும் பல் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தல்
 11. கண்னொளி காப்போம் திட்டம்: கண் குறைபாடு உள்ள பள்ளி சிறார்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்குதல்
 12. தொற்றாவகை நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சைத் திட்டம்: 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. (அம்மா ஆரோக்கியத்திட்டம்)
 13. இரத்த சேமிப்பு அலகு: அதிக இரத்த சோகை உள்ள கர்ப்பினிகளுக்கு இரத்தம் செலுத்தப்படுகிறது.
 14. தாய் சேய் இறப்பு ஆய்வு: மாவட்ட ஆட்சியர் தலைமையில் தாய் சேய் இறப்பு குறைப்பதற்கான ஆய்வு நடைபெறுகிறது.
 15. தேசிய தடுப்பூசித் திட்டம்: பிறந்த குழந்தை முதல் கர்ப்பினிகள் வரை நோய் வராமல் காப்பதற்காக தடுப்பூசி போடப்படுகிறது.
 16. தொற்று நோய் கண்காணிப்பு திட்டம் குறிப்பிட்ட பகுதியில் நோய் பரவுவதை கண்காணித்து நோய் பரவுவதை தடுக்கும் வழிமுறைகள் மேற்கொள்ளுதல்

அலுவலக முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்

மரு.கே.ஆர். ஜவகர்லால் எம்.பி.பி.எஸ்

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்

கடலுர் – 607001

அலுவலக தொலைபேசி எண்கள் – 04142-295134 – 04142 294134

ஆதாரம் : https://cuddalore.nic.in/

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top