பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நிர்வாகம்

கடலூர் மாவட்டத்தின் நிர்வாகம் சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வருவாய்த்துறை

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

மாவட்ட நிர்வாகம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் இந்திய ஆட்சிப்பணி மூலம் நியமிக்கப்படுகிறார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவரின் நிர்வாகத்தின் கீழ் சட்டம் மற்றும் ஒழுங்கு, திட்டங்கள், வளர்ச்சி, பொது தேர்தல்கள், ஆயுத உரிமம் புதுப்பித்தல் போன்ற முக்கிய பிரிவுகள் உள்ளன. மாவட்ட வருவாய் அலுவலரின் கீழ் வருவாய்த்துறை செயல்படுகிறது. இவர் மாவட்ட துணை மாஜிஸ்ரேட்டாகவும் செயல்படுகிறார். மாவட்ட நுகர்பொருள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் சுரங்கம், கிராம அலுவலர்கள் நிர்வாகம் போன்ற துறைகள் மாவட்ட வருவாய் அலுவலரின் கீழ் செயல்படுகின்றன.

மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மாவட்ட வருவாய் அலுவலரும், துணை ஆட்சியர்களும் நிர்வாகத்தில் உதவிபுரிகின்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் முக்கியமாக மாவட்ட அளவில் பொது நிர்வாகத்தினையும், அன்றாட நிர்வாக பணிகளையும் மேற்பார்வையிடுகிறார். மேலும் வருவாய்த்துறையில் கோட்ட அளவில் வருவாய் கோட்டாட்சியர்களும், துணை ஆட்சியர்களும், வட்ட அளவில் வருவாய் வட்டாட்சியர்களும் மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

வருவாய் நிர்வாகம்

கடலூர் மாவட்டம் நிர்வாக நலன் கருதி 3 வருவாய் கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருவாய் கோட்டமும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் இயங்குகிறது.

வருவாய் கோட்டாட்சியர்கள் தங்கள் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நிர்வாக நடுவர்களாக செயல்படுகின்றனர். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போலவே ஒத்த நி்ர்வாக அமைப்பினை கொண்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகத்திற்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் இணைப்பு பாலமாக செயல்படுகிறது. ஒவ்வொரு வருவாய் கோட்டமும் தனது அதிகாரத்திற்குட்பட்ட வட்ட அலுவலகங்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றன.

வருவாய் கோட்டங்கள் நிர்வாக நலன் கருதி வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டத்திற்கும், வருவாய் வட்டாட்சியர் தலைவராக செயல்படுகிறார். மேலும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தி்ன் கீழ் பல வருவாய் குறு வட்டங்கள் செயல்படுகின்றன. அவை வருவாய் ஆய்வாளரால் நிர்வகிக்கப்படுகின்றன. வருவாய் நிர்வாகத்தில் கடைநிலையில் கிராம நிர்வாக அலுவலர்களும், கிராம உதவியாளர்களும் அரசுக்கு உறுதுணையாக நிர்வாகத்தில் உதவி புரிகின்றனர்.

மாவட்ட நிர்வாகம்

பதவி

பெயர்அலைபேசி எண்
மாவட்ட ஆட்சியர் திரு வே.ப.தண்டபாணி,இ.ஆ.ப., 9444193000
மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கோ.விஜயா, எம்.ஏ., 9445000907
துணை ஆட்சியர், கடலூர் திரு ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., 9445000426
வருவாய் கோட்டாட்சியர், சிதம்பரம் திரு சி.ராஜேந்திரன் 9445000425
வருவாய் கோட்டாட்சியர், விருத்தாசலம் திருமதி சி.சந்தோஷிணி சந்திரா 9445000427
வருவாய் வட்டாட்சியர், கடலூர். திரு என்.ஜெயகுமார் 9445000529
வருவாய் வட்டாட்சியர், பண்ருட்டி திரு எம். ஆறுமுகம் 9445000530
வருவாய் வட்டாட்சியர், குறிஞ்சிப்பாடி திருமதி ஆர்.விஜயா 9994259454
வருவாய் வட்டாட்சியர், சிதம்பரம் திருமதி ஏ.அமுதா 9445000527
வருவாய் வட்டாட்சியர், புவனகிரி திருமதி பி.ஹேமா ஆனந்தி 9486169189
வருவாய் வட்டாட்சியர், காட்டுமன்னார்கோயில் திருமதி எஸ். சிவகாம சுந்தரி 9445000528
வருவாய் வட்டாட்சியர், ஸ்ரீமுஷ்ணம் திரு ப்பி. சாமிகண்ணு 9488947614
வருவாய் வட்டாட்சியர், விருத்தாசலம் திரு ஆர்.ஸ்ரீதரன் 9445000531
வருவாய் வட்டாட்சியர், திட்டக்குடி திரு ஆர். சத்தியன் 9095132388
வருவாய் வட்டாட்சியர், வேப்புர் திரு என்.செந்தில்குமார் 975187544

வருவாய் கோட்டங்கள்

வருவாய் கோட்டங்கள்வட்டங்கள்குறு வட்டங்கள்
கடலூர் கடலூர் மஞ்சகுப்பம்
ரெட்டிசாவடி
திருவந்திபுரம்
பண்ருட்டி பண்ருட்டி
நெல்லிகுப்பம்
காடாம்புலியுர்
மருங்கூர்
குறிஞ்சிப்பாடி குறிஞ்சிப்பாடி
குள்ளஞ்சாவடி
சிதம்பரம் சிதம்பரம் ஒரத்தூர்
திருவக்குளம்
சிதம்பரம்
புவனகிரி பரங்கிபேட்டை
புவனகிரி
சேத்தியாதோப்பு
காட்டுமன்னார்கோயில் மன்னார்குடி
உடையார்குடி
புத்தூர்
குமராட்சி
ஸ்ரீமுஷ்ணம் காவனூர்
திருமுட்டம்
விருத்தாசலம் விருத்தாசலம் கம்மாபுரம்
ஊமங்கலம்
விருத்தாசலம் வடக்கு
விருத்தாசலம் தெற்கு
மங்கலம் கோ
திட்டக்குடி திட்டக்குடி கிழக்கு
பெண்ணாடம்
திட்டக்குடி மேற்கு
தொழுதூர்
வேப்புர் வேப்புர்
சிறுபாக்கம்

வருவாய்த்துறை கீழ்க்கண்ட பரந்த குறிக்கோள்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

 1. தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்களை சிறந்த முறையில் மக்களிடையே கொண்டு செல்வது.
 2. இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளித்தல்.
 3. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நிலங்களைப் பாதுகாத்து, முறையாக நில ஆவணங்கள் பராமரித்தல்
 4. நிலச்சீர்த்திருத்த சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தேவையின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு நிலம் வழங்குதல்.

இத்துறையானது விவசாயிகள், மாணவர்கள், வேலைவாய்ப்பில்லாதவர்கள், தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள், சமூகத்தின் அடித்தட்டு மக்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோருக்கான சேவைகள் வழங்குவது மற்றும் தேவையான சான்றிதழ்களான சாதிச்சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், வருமான சான்றிதழ், நில உடமைகளில் உரிய திருத்தம் மற்றும் பல்வேறு உரிமங்கள் வழங்குவதன் மூலம் அவர்களின் மேம்பாட்டிற்கு இத்துறை வழிவகுக்கிறது. மேலும் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து வகையான தேர்தல்களிலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் பங்கு மகத்தானது.

இத்துறை தொடங்கப்பட்டது முதல், இயற்கை சீற்றம் மற்றும் மனித சக்தியால் ஏற்படும் அழிவுகளிலிருந்து மீட்பு பணியை முன்னின்று மேற்கொள்கிறது. இயற்கை சீற்றத்தின் போது பாதிக்கப்படும் மக்களை மீட்டு, நிவாரணம், மறுவாழ்வு மற்றும் குடியமர்த்துதல் பணிகளை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறை, பேரிடர் மேலாண்மை சம்மந்தமான எல்லா பணிகளையும் மேற்கொள்வதில் மையமாக விளங்குவதால் தமிழக அரசால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை என தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அலுவலக முகவரி விபரம்

மாவட்ட வருவாய் அலுவலர்

கடலூர் 607001,

தொலைபேசி – 04142 220492

நிலஅளவை துறை

நிலஅளவைப் பதிவேடுகள் துறை, கடலூர் மாவட்டம்

ஆணையரகம்

ஆணையர், நிலஅளவை மற்றும் நிலவரி திட்டம், சென்னை-5 அவர்கள் துறை தலைவர் ஆவார். ஆவணங்களை பொறுத்தமட்டில் இணை இயக்குநர், மத்திய நிலஅளவை அலுவலகம், சென்னை அவர்கள் பொறுப்பு அலுவலர் ஆவார்.

மாவட்டம்

உதவி இயக்குநர், நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை, கடலூர் அவர்கள் மாவட்ட நிலையிலான நிர்வாக தலைமை அலுவலர் ஆவார். இவர் மாவட்டத்தில் அனைத்து நிலஅளவை பணிகள் மற்றும் ஆவணங்கள் பராமரித்தல் தொடர்பாக பணியிலுள்ள நிலஅளவர், குறுவட்ட அளவர், சார் ஆய்வாளர், துணை ஆய்வாளர், ஆய்வாளர், தொழில்நுட்ப மேலாளர் ஆகியோர்களின் பொறுப்பு அலுவலர் ஆவார். இவர் நிலம் தொடர்புடைய பணிகளில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். நிலஅளவை மற்றும் எல்லைகள் குறித்த சட்டம் 1923-ன்படி பணிகள் மேற்கொள்வார்.

அலுவலக தொலைபேசி எண் – 04142 – 232856

அலுவலக முகவரி :

மாவட்ட நிலஅளவை அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

இரண்டாம் தளம், அறை எண்.341, கடலூர்.

இ-மெயில் – adsurcud[at]nic.in

நிலஅளவை பிரிவு

கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய மூன்று கோட்டங்களுக்கும் ஆய்வாளர் பொறுப்பில், அலுவலர்கள் உள்ளனர். இதே போல் வட்ட அலுவலகத்தில் வட்டத்துணை ஆய்வாளர் தலைமையில் குறுவட்ட அளவர்கள், சார் ஆய்வாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளனர். இவர்களுடைய முக்கிய பணி நிலஅளவை தொடர்பான அனைத்து தாவாக்களுக்கும் தீர்வு காண்பது, நிலஅளவை கற்களை பராமரிப்பது ஆகும்.

பட்டா மாறுதல் பணிகளுக்கு இணையவழி மூலம் மனுக்கள் பெறப்படுகிறது. இம்மனுக்களை பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் செல்லாமல், அருகில் உள்ள பொதுசேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன் இணையவழி மூலம் தாக்கல் செய்யலாம்.

தொழில்நுட்ப பிரிவு

தொழில்நுட்ப மேலாளர் தலைமையில் தொழில்நுட்ப பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவில் தலைமை வரைவாளர், முதுநிலை வரைவாளர், வரைவாளர் பணிபுரிகின்றனர். நிலஅளவை பரப்புகளை கணக்கிடுதல், நிலஅளவை ஆவணங்களை கணினிமயமாக்கல், மாவட்ட, வட்ட வரைபடங்கள் பராமரித்தல் இப்பிரிவின் பணிகளாகும். வரைபடம் விற்பனை பிரிவும் இங்கு இயங்கி வருகிறது.

நிர்வாக பிரிவு

கண்காணிப்பாளர் தலைமையில் நிர்வாக பிரிவு இயங்குகிறது. பணியாளர்களின் நலன்கள் இப்பிரிவில் பேணப்படுகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005

நிர்வாக பிரிவிற்கு பொது தகவல் அலுவலர் கண்காணிப்பாளர், தொழில்நுட்ப பிரிவிற்கு பொது தகவல் அலுவலர் தொழில்நுட்ப மேலாளர், நிலஅளவை பிரிவிற்கு பொது தகவல் அலுவலர் ஆய்வாளர். இவர்களின் மேல்முறையீட்டு அலுவலர் உதவி இயக்குநர், நிலஅளவைப் பதிவேடுகள் துறை, கடலூர் ஆவார்.

நகர நிலவரித்திட்டம்

இம்மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சிகளில் தனி வட்டாட்சியர் தலைமையில் நிலவரித்திட்ட பணி நடைபெற்று பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

நிலஅளவை ஆவணங்கள் கணினிமயமாக்கல்

இம்மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் “அ” பதிவேடு மற்றும் சிட்டா கணினிமயமாக்கப்பட்டு இணையவழி மூலம் பொதுமக்கள் பார்வையிட்டு நகல் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நத்தம் மற்றும் நகர ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. புலப்படச் சுவடிகள் கணினிமயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. கணினி இணையதளவழி மூலம் இ-சேவை மையங்களில் நிலஅளவை பட்டா மாற்றம் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு, இணையதள வழி மூலம் பட்டா மாற்றம் பணிகள் நடைமுறையில் உள்ளது.

குறுவட்ட அளவர் குடியிருப்பு

கடலூர் திருவந்திபுரம் குறுவட்டம், சிதம்பரம் குறுவட்டம், விருத்தாசலம் குறுவட்டம் ஆகிய குறுவட்ட அளவர்களுக்கு குடியிருப்புடன் கூடிய அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் எந்த நேரமும் குறுவட்ட அளவரை சந்திக்கலாம்.

மடிக்கணினி தகவல் அட்டை மற்றும் சிம் கார்டு வழங்கல்

இம்மாவட்டத்தில் அனைத்து வட்டத்துணை ஆய்வாளர்கள் மற்றும் குறுவட்ட அளவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அளவைப் பணி மேற்கொள்ளவும் புலத்திலேயே இணையவழி மூலம் ஆவணங்கள் பரிசீலித்து தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நில ஆவண மேலாண்மை மையம்

தேசிய நில ஆவணங்கள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய வட்டங்களில் நில ஆவண மேலாண்மை மையம் செயல்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் ஆவணங்கள் பார்வையிடுவது, சான்றுகள் பெறுவது மனுக்கள் அளிப்பது போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தொடர் இயக்க குறிப்பு நிலையம்

தொடர் இயக்க குறிப்பு நிலையம் என்கிற மென் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதற்கான கட்டமைப்பு, கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மாடியிலும், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலக மாடியிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் துல்லிய அளவை பணி நவீன கருவிகளை கொண்டு மேற்கொள்ளப்படும்.

முக்கிய அலுவலர் தொலைபேசி எண்கள்
வ. எண்பெயர் (திருவாளர்கள்)பதவிகைப்பேசி எண்
1 காலியிடம் உதவி இயக்குநர், மாவட்ட நிலஅளவை அலுவலகம், கடலூர் 04142-232856
2 த.சீனிவாசராகவன் கண்காணிப்பாளர், மாவட்ட நிலஅளவை அலுவலகம், கடலூர் 9994942854
3 எஸ்.சாந்தி தொழில்நுட்ப மேலாளர், மாவட்ட நிலஅளவை அலுவலகம், கடலூர். 9791552418
4 ஜி.திருநாவுக்கரசு ஆய்வாளர், விருத்தாசலம் 9940502424
5 கே.குணசேகரன் ஆய்வாளர், கடலூர் 9442441364
6 ட்டி.கார்த்திக்குமார் ஆய்வாளர், சிதம்பரம் 8122111547
7 டி.ராஜமகேந்திரன் வட்டத்துணை ஆய்வாளர், கடலூர் 9578315247
8 எம்.செந்தில்குமார் வட்டத்துணை ஆய்வாளர், குறிஞ்சிப்பாடி 8124289747
9 எ.நாராயணன் வட்டத்துணை ஆய்வாளர், பண்ருட்டி 9442150116
10 டி.வெங்கடேசன் வட்டத்துணை ஆய்வாளர், சிதம்பரம் 9944454948
11 ஆர்.ராமரகோத்தமன் வட்டத்துணை ஆய்வாளர், புவனகிரி 8608624059
12 கே.தண்டபாணி வட்டத்துணை ஆய்வாளர், விருத்தாசலம் 6380551862
13 எஸ்.சண்முகம் வட்டத்துணை ஆய்வாளர், திட்டக்குடி 8438258214
14 டி.நந்தகோபால கிருஷ்ணன் வட்டத்துணை ஆய்வாளர், வேப்புர் 8248596538 – 9842615649
15 அ.சாகுல் அமீது வட்ட சார் ஆய்வாளர், காட்டுமன்னார்கோயில் 9787252425
16 ப்பி.சக்திவேல் வட்டத்துணை ஆய்வாளர், ஸ்ரீமுஷ்ணம் 9597788282

உள்ளுா் திட்ட குழுமம்

கடலூா் உள்ளுா் திட்ட குழுமமானது நகா் ஊரமைப்புச்சட்டம் 1971 பிரிவு 10(1) –ன்படி அரசாணை எண்.1138 ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, நாள்.24.07.1974-ன் படி அறிவிப்பு செய்யப்பட்டு பிரிவு 28-ன்படி அரசாணை எண்.803, வீட்டு வசதி மற்றும் நகா்புற வளா்ச்சி துறை, நாள்.20.09.1984 ல் ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. மீண்டும் முழுமைத்திட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு அரசாணை எண்.257, வீட்டு வசதி மற்றும் நகா்புற வளா்ச்சி துறை, நாள்.05.02.1996 ல் மறு ஆய்வு ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

கடலூா் கூட்டு உள்ளுா் திட்ட குழும பகுதி கடலூா் நகராட்சி, கடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் 31 கிராமங்கள் மற்றும் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 2 கிராமங்கள் உள்ளடக்கி 144.66 ச.கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. வருங்கால மக்கள் தொகை மற்றும் பொருளாதார வளா்ச்சியினை கருத்தில் கொண்டு முறையற்ற வளா்ச்சியை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், திட்டங்கள் தயாரித்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.

1994-ம் ஆண்டு முதல் கடலூா் உள்ளுா் திட்ட குழும அலுவலகம் (எண்.6/4 சீனிவாசன் தெரு, புதுப்பாளையம், கடலூா்) இயங்கி வருகிறது.

துறையின் பிரதான பணிகள்

 • முழுமைத்திட்டம் தயாரித்தல்
 • விரிவு அபிவிருத்தி திட்டம் தயாரித்தல்
 • மனைப்பிரிவுகளுக்கு தொழில்நுட்ப ஒப்புதல் அளித்தல்
 • அனைத்து கட்டுமானங்களுக்கும் திட்ட அனுமதி மற்றும் ஒப்புதல் அளித்தல்
 • நகா்ப்புற வளர்ச்சி திட்டங்கள் தயாரித்தல்

பின்பற்றப்படும் சட்ட விதிமுறைகள்

கடலூா் உள்ளுா் திட்ட குழும அலுவலகம் நகா் ஊரமைப்புச்சட்டம் 1971 –ன் கீழ் செயல்படுகிறது.

பின்பற்றப்படும் விதி மற்றும் வரன்முறைகள்

 • நகராட்சி கட்டிட விதி 1972
 • தமிழ்நாடு பொது மற்றும் பலமாடி கட்டிட விதி
 • தேசிய கட்டிட குறியீடு
 • ஊராட்சி கட்டிட விதிகள் 1997
 • வளா்ச்சி கட்டுப்பாட்டு விதிகள் 2010
 • முழுமைத்திட்டம் மற்றும் விரிவு அபிவிருத்தி திட்ட விதிகள்.

அதிகாரப்பகிர்வு

 • நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதியில் கட்டிடம் கட்ட கீழ்கண்டவாறு அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது.
 • 4000 ச.அடி. (4 குடியிருப்புகள்), தரை தளம் மற்றும் முதல் தளம் குடியிருப்பு கட்டிடம்.
 • 2000 ச.அடி. வரை (தனித்த வணிகக் கட்டிடம்) தரை தளம் மற்றும் முதல் தளம் வணிகக் கட்டிடம்

கடலூா் உள்ளுா் திட்டக்குழுமம் அதிகாரப்பகிர்வு

 • 4000 ச.அடி முதல் 25,000 ச.அடி – தரைகீழ்தளம் மற்றும் 4 தளங்கள் (குடியிருப்பு மற்றும் வணிகக்கட்டிடம்)
 • தனிக்கட்டிடம் – தொழில் நிறுவனக்கட்டிடம்
 • தரைதளம் மற்றும் 2 தளங்கள் – பள்ளிக்கட்டிடங்கள்
 • தரைதளம் மற்றும் முதல் தளம் – கல்வி நிறுவன கட்டிடங்கள்
 • மனைப்பிரிவுகள் நகராட்சி பகுதியில் 5 ஏக்கா் வரையிலும், ஊராட்சி பகுதியில் 10 ஏக்கா் வரையிலும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

கடலூா் உள்ளுா் திட்டக்குழுமம்

தலைவா் : மாவட்ட ஆட்சியா்

உறுப்பினா் செயலா் : நகர ஊரமைப்புத் துறையின் துணை இயக்குநர், உதவி இயக்குநா்

உறுப்பினா்கள் : குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினா், கட்டிடக்கலை வல்லுநா், பொது நலவாதி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா்கள் -2, நகராட்சி வார்டு உறுப்பினா்கள் -2

உள்ளுா் திட்டக்குழும கூட்டம் : இரு மாதங்களுக்கு ஒரு முறை

கடலூா் உள்ளுா் திட்டக்குழுமத்தில் அமையும் உள்ளாட்சிகள்

கடலூா் பெருநகராட்சி

கடலூா் ஊராட்சி ஒன்றியம்

 • திருமாணிக்குழி
 • இராமாபுரம்
 • மாவடிப்பாளையம்
 • ஓட்டேரி
 • செஞ்சிகுமாரபுரம்
 • தோட்டப்பட்டு
 • நத்தப்பட்டு
 • கோண்டூா்
 • வெளிச்செம்மண்டலம்
 • பெரியகங்கணாங்குப்பம்
 • சின்னகங்கணாங்குப்பம்
 • உச்சிமேடு
 • சுபஉப்பலவாடி
 • குண்டுஉப்பலவாடி
 • கூத்தப்பாக்கம்
 • பாதிரிக்குப்பம்
 • திருவந்திபுரம்
 • குமாரப்பேட்டை
 • அரிசிபெரியாங்குப்பம்
 • கருப்படித்துண்டு
 • கறையேரவிட்டக்குப்பம்
 • வெட்டுக்குளம்
 • கடலூா் ஓடி
 • பொன்னியாங்குப்பம்
 • பச்சையாங்குப்பம்
 • குடிகாடு
 • காரைக்காடு
 • சேடப்பாளையம்
 • அன்னவல்லி
 • கங்கமாநாயக்கன்குப்பம்
 • செம்மாங்குப்பம்

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம்

 • தொண்டமாநத்தம்
 • தியாகவல்லி.

ஊரக வளர்ச்சி

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கடலூர்

கடலூர் மாவட்டத்தில் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முதன்மையான அலுவலகமாக உள்ளது. வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதிலும், அதன் முக்கிய நோக்கங்களை கிராமபுற மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், ஊரக வளர்ச்சி முகமை தொழில்நுட்பத்துடன்கூடிய தனித்தன்மை வாய்ந்த நிறுவனமாக உள்ளது. கிராமங்களின் வறுமை மற்றும் பிற்பட்ட நிலையை நீக்குவதற்கு அதன் கட்டமைப்புகளை பலப்படுத்துவதிலும், பொருளாதார வளங்களை மேம்படுத்துவதிலும் உதவி செய்கிறது. கடலூர் மாவட்ட கிராமபுற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, வறுமை ஒழிக்கும் நோக்கத்துடன் பற்பல திட்டங்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயல்படுத்துகிறது. பொருளாதார வேறுபாடுகளை களைந்து வறுமை கோட்டிற்குகீழ் உள்ள மக்களின் பொருளாதார வளர்ச்சியே இந்ததிட்டங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.
1980 ஆம் வருடத்திய தமிழ்நாடு அரசின் சங்கங்கள் சட்டப்படி ஊரக வளர்ச்சி முகமை தொடங்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இதன் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், மற்றும் அதன் செயல்பாட்டையும் நிர்வகிக்கவும் உள்ள நிர்வாகக்குழு, இதனை கட்டுபடுத்தி மேற்பார்வையிடும் பணியினையும் செய்கிறது. இதன் நிர்வாக செலவினம் மத்திய, மாநில அரசுகளால், 75:25 என்ற விகிதத்தில் பிரித்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது. .

கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகள் விபரம்

வ. எண்ஊராட்சி ஒன்றியங்கள்கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை
1 அண்ணாகிராமம் 42
2 கடலூர் 51
3 பண்ருட்டி 42
4 குறிஞ்சிப்பாடி 51
5 கீரப்பாளையம் 63
6 மேல்புவனகிரி 47
7 பரங்கிப்பேட்டை 41
8 விருத்தாச்சலம் 51
9 கம்மாபுரம் 53
10 நல்லூர் 64
11 காட்டுமன்னார்கோயில் 55
12 குமராட்சி 57
13 மங்களூர் 66
மொத்த ஊராட்சிகள் 683

திட்ட ஆண்டு – 2014-15

 1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் : இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.18564.19 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 39762 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 39762 பணிகள் ரூ.18564.19 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 2. முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.4,883.40 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 2713 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 2713 பணிகளும் ரூ.4,883.40 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 3. முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் – நெசவாளர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.64.40 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 28 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 28 பணிகளும் முடிவுற்றது என தெரிவிக்கப்பட்டது.
 4. பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.891.88 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 169 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 169 பணிகளும் ரூ.891.17 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 5. சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.1,800.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 492 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 492 பணிகளும் ரூ.1,684.70 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 6. தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.3,803.21 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 1515 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 1515 பணிகளும் ரூ.3,803.21 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 7. ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.283.82 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 234 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 234 பணிகளும் ரூ.282.71 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 8. தன்னிறைவுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.414.58 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 72 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 72 பணிகளும் ரூ.414.58 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 9. ஊரக கட்டிடங்கள் பராமரிப்பு திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.913.77 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 1689 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 1689 பணிகளும் ரூ.913.77 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 10. ஊரக உட்கட்டமைப்பு திட்டம் - சாலைகள் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.661.05 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 51 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 51 பணிகளும் ரூ.661.05 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 11. ஊரக உட்கட்டமைப்பு திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.415.49 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 51 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 51 பணிகளும் ரூ.414.75 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 12. ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் – பாலங்கள் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.200.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 1 பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.196.86 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 13. ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் – தார் சாலைகள் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.340.63 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 10 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 10 பணிகளும் ரூ.339.11 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 14. நபார்டு சாலைகள் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.1,054.23 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 26 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 26 பணிகளும் ரூ.1,054.23 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 15. பேருந்து சாலைகள் – முன்னேற்ற திட்டம்இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.690.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 16 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 16 பணிகளும் ரூ.690.00 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 16. தூய்மை பாரத இயக்கம் தனி நபர் இல்ல கழிவறைத் கட்டுதல்) - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.1,816.32 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 16673 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 16,673 பணிகளும் ரூ.1,816.32 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 17. ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.96.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 24 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 24 பணிகளும் ரூ.96.00 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 18. அங்கன்வாடி – கழிவறை கட்டுதல் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.4.14 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 23 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 23 பணிகளும் ரூ.4.14 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 19. பள்ளி கழிவறை கட்டுதல் - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.77.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 211 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 211 பணிகளும் ரூ.76.18 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 20. ஊரக சாலைகள் பராமரிப்பு - இத்திட்டத்தின் கீழ் 2014-15ம் நிதியாண்டில் ரூ.577.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 35 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 35 பணிகளும் ரூ.577.00 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

திட்ட ஆண்டு – 2015-16

 1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.28868.59 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 19464 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 19238 பணிகள் ரூ.24879.41 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 226 பணிகள் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 2. முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.1335.60 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 742 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 742 வீடுகளும் ரூ.1335.60 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 3. இந்திரா அவாஸ் யோஜனா – வெள்ள நிவாரண வீடுகள் வழங்கும் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.4567.90 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 2687 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 235 வீடுகளும் ரூ.845.37 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 2452 பணிகள் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 4. பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.617.19 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 134 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 134 பணிகளும் ரூ.616.93 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 5. சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.1,800.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 498 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 491 பணிகளும் ரூ.1,800.00 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 7 பணிகள் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 6. தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.3556.88 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 1066 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 1063 பணிகளும் ரூ.3469.83 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 3 பணிகள் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 7. ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.216.23 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 173 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 173 பணிகளும் ரூ.215.67 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 8. தன்னிறைவுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.428.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 46 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 46 பணிகளும் ரூ.427.69 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 9. பிரதம மந்திரி சாலைகள் மேம்பாட்டு திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.616.85 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 7 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 7 பணிகளும் ரூ.603.55 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 10. நபார்டு - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.325.02 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 9 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 9 பணிகளும் ரூ.322.92 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 11. தமிழ்நாடு ஊரக சாலைகள் திட்டம் – சாலைகள் புதுப்பித்தல்இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.812.91 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 45 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 45 பணிகளும் ரூ.803.39 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 12. தமிழ்நாடு ஊரக சாலைகள் திட்டம் – சாலைகள் அமைத்தல் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.1448.23 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 54 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 54 பணிகளும் ரூ.1448.23 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 13. தமிழ்நாடு ஊரக சாலைகள் திட்டம் – சாலைகள் அமைத்தல் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.1033.86 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 31 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 31 பணிகளும் ரூ.989.60 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 14. ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் – தார் சாலைகள் அமைத்தல் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.847.66 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 25 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 24 பணிகளும் ரூ.743.29 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 1 பணி முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 15. ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் - ஊராட்சி ஒன்றிய கட்டிடம் கட்டுதல் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.477.03 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 2 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 1 பணியினை ரூ.305.46 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள1 பணி முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 16. ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் – பாலங்கள் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.396.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 2 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, ரூ.62.79 இலட்சம் நிதி விடுவிக்கப்பட்ட நிலையில் 2 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 17. மாநில இயற்கை பேரிடர் சீரமைப்பு நிதி - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.181.34 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 450 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 450 பணிகளும் ரூ.180.88 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 18. புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டுதல் - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.552.50 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 85 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 35 பணிகளும் ரூ.227.36 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 50 பணிகள் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 19. தூய்மை பாரத இயக்கம் (தனி நபர் இல்ல கழிவறைத் கட்டுதல்) - இத்திட்டத்தின் கீழ் 2015-16ம் நிதியாண்டில் ரூ.7303.60 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 60864 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 60838 பணிகளும் ரூ.7253.25 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 26 பணிகள் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.

திட்ட ஆண்டு – 2016-17

 1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.30245.25 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 11069 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 10569 பணிகள் ரூ.29654.60 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
 2. முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.619.20 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 344 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, ரூ.16.71 இலட்சம் நிதி விடுவிக்கப்பட்ட நிலையில் 344 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 3. பிரதம மந்திரி அவாஸ் யோஜனா( கிராமின்) - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.10915.70 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 6421 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 99 வீடுகளும் ரூ.2418.63 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 6322 வீடுகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 4. பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.529.20 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 89 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 65 பணிகளும் ரூ.367.35 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 24 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 5. பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் – வெள்ள நிவாரண சிறப்பு திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.1,377.50 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 14 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 12 பணிகளும் ரூ.1377.22 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 2 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 6. சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.1,800.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 420 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 290 பணிகளும் ரூ.1143.43 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 130 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 7. தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.2822.10 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 309 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 237 பணிகளும் ரூ.1903.92 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 72 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 8. அம்மா உடற்பயிற்சி கூடம் அமைத்தல் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.150.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 15 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, ரூ.5.71 இலட்சம் நிதி விடுவிக்கப்பட்ட நிலையில் 15 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 9. அம்மா பூங்கா அமைத்தல் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.300.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 15 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 1 பணி ரூ.19.93 இலட்சம் செலவனித்தில் முடிக்கப்பட்டு மீதமுள்ள 14 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 10. ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.215.72 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 103 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 100 பணிகளும் ரூ.199.23 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, 3 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 11. தன்னிறைவுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.200.25 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 18 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 17 பணிகளும் ரூ.195.69 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 1 பணி முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 12. தமிழ்நாடு ஊரக சாலைகள் திட்டம் – சாலைகள் புதுப்பித்தல் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.697.21 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 39 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 38 பணிகளும் ரூ.652.09 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 1 பணி முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 13. தமிழ்நாடு ஊரக சாலைகள் திட்டம் – சாலைகள் அமைத்தல் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.1593.89 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 57 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 56 பணிகளும் ரூ.1513.43 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 1 பணி முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 14. தமிழ்நாடு ஊரக சாலைகள் திட்டம் – சாலைகள் அமைத்தல் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.1001.90 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 31 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 30 பணிகளும் ரூ.923.54 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 1 பணி முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 15. பிரதம மந்திரி சாலைகள் மேம்பாட்டு திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.556.17 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 5 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 2 பணிகளும் ரூ.386.46 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 3 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 16. நபார்டு சாலைகள் திட்டம் 2016-17 - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.2158.85 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 36 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 16 பணிகளும் ரூ.767.54 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 20 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 17. தூய்மை பாரத இயக்கம் (தனி நபர் இல்ல கழிவறைத் கட்டுதல்) - இத்திட்டத்தின் கீழ் 2016-17ம் நிதியாண்டில் ரூ.9731.25 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 81107 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 19030 பணிகளும் ரூ.2285.31 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 62077 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.

திட்ட ஆண்டு – 2017-18

 1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.35886.39 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 14758 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 6286 பணிகள் ரூ.25523.01 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 8472 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 2. முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.615.60 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 342 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு வீடுகள் முன்னேற்றத்தில் உள்ளன.
 3. பிரதம மந்திரி அவாஸ் யோஜா(கிராமின்) - இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.15046.70 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 8851 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.90.22 இலட்சம் செலவினத்தில் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 4. பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.597.63 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 104 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 13 பணிகள் ரூ.57.95 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 91 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 5. சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.2250.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 502 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 132 பணிகள் ரூ.429.58 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 370 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 6. நபார்டு சாலைகள் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.1,181.72 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 30 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 7. பிரதம மந்திரி சாலைகள் பராமரிப்பு திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.3619.93 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 26 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 8. தமிழ்நாடு ஊரக சாலைகள் திட்டம் – சாலைகள் புதுப்பித்தல் - இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.2877.53 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 80 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 9. ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் – தார் சாலைகள் அமைத்தல் - இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.560.14 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 21 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 10. தூய்மை பாரத இயக்கம் ( தனி நபர் இல்ல கழிவறைத் கட்டுதல்) - இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.12447.1 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 103728 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 6691 பணிகள் ரூ.802.95 இலட்சம் செலவினத்தில் முடிக்கப்பட்டு, மீதமுள்ள 97037 பணிகளும் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.
 11. திடக்கழிவு மேலாண்மை திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 2017-18ம் நிதியாண்டில் ரூ.2088.57 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.1422.79 இலட்சம் செலவினத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் பணிகள் முன்னேற்றத்திலுள்ளதென தெரிவிக்கப்பட்டது.

அலுவலக முகவரி விபரம்

திட்ட இயக்குநர் / கூடுதல் இயக்குநர்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,
கடலூர் 607001,
தொலைபேசி – 04142 294159
மின்னஞ்சல் – drdacud[at]gmail[dot]com

இ-பஞ்சாயத்து திட்டம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மத்திய அரசின் இ-பஞ்சாயத்து திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கிராம சுவராஜ்ய இயக்கம்

கடலூர் மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட 164 கிராம ஊராட்சிகளில் கிராம சுவராஜ்ய இயக்கம் என்னும் பிரச்சாரம் ஏப்ரல் 14 முதல் மே 5 வரை நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கீழ்காணும் 7 திட்டங்கள் மூலம் கிராம ஊராட்சி பொது மக்களுக்கு பயன்கள் முழு அளவில் கொண்டு செல்லப்பட்டது

 • அம்பேத்கர் ஜெயந்தி
 • பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா
 • சௌபாக்கியா உஜாலா திட்டம்
 • பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா
 • பிரதம மந்திரி ஜீவன்ஜோதி பீமா யோஜனா
 • பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா
 • இந்திரா தனுஷ் திட்டம்.

ஊரக வளர்ச்சித்துறை இணையதள முகவரிகள் :

ஆதாரம் : https://cuddalore.nic.in/

2.6875
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top