অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

வேளாண் வணிகத் துறை

வேளாண் வணிகத் துறை

விவசாயிகளை வியாபாரிகளாக்கி அவர்களின் உபரி உற்பத்தியை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்த ஏற்படுத்தப்பட்டு வேளாண் துறையுடன் அங்கம் வகிக்கும் ஒரு முக்கிய சகோதரத்துறையே வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையாகும்.

திட்டம் மற்றும் செயல்பாடுகள்

I. வேளாண் வணிகம்

அ) தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (NADP)

  1. வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு குழு அமைத்து உழவர் உற்பத்தியாளர் அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
  2. பண்ருட்டியில் ஊரக வேளாண் வளர்ச்சி மையம் அமைக்கப்பட்டு அதில் விவசாயிகளுக்கான பயிற்சி மையம், இடுபொருள் மையம், சேமிப்புக் கிடங்கு மற்றும் உலர் களங்கள் பயன்பாட்டிலுள்ளன.
  3. பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு முப்பது முந்திரி விளைபொருள் குழுக்கள் அமைக்கப்பட்டு, முந்திரி பதப்படுத்தும் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
  4. கடலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மின்னணு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
  5. கூட்டு பண்ணையம் (Collective Farming) மூலம் வேளாண் துறையில் 55 FPG தோட்டக்கலைத்துறையில் 25 FPG ஏற்படுத்தப்பட்டு கீரப்பாளையம், குமராட்சி, விருத்தாசலம் தலைமையில் 3 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பதியப்பட்டுள்ளன.

ஆ) தேசிய நீடித்த நிலையான வேளாண்மை (NMSA)

  1. இத்திட்டத்தின்கீழ் வாழை மற்றும் தென்னையில் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இ) ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF)

இத்திட்டத்தின்கீழ் 25 மெ.டன் அளவிலான குளிர்பதன கிடங்குகள் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஈ) நீடித்த நிலையான மானாவாரி திட்டம் (MSDA)

இத்திட்டம் மூலம் மங்களுர் மானாவாரி விவசாயிகளுக்கு அறுவடைக்குப் பின் செய் நேர்த்தி மற்றும் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

உ) நீர் வள நிலவள திட்டம் (TN-IAMWARM)

இத்திட்டம் மூலம் உலர்களம், சேமிப்புக் கிடங்கு, தார்ப்பாய்கள் வழங்கப்பட்டன. தற்பொழுது இப்பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

II. உழவர் சந்தை

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, வடலூர் ஆகிய ஐந்து இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது.

நோக்கம்

விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறி மற்றும் பழங்களை இடைத்தரகர் இன்றி நேரடியாக மொத்த அங்காடி விலையைக் காட்டிலும் 20% கூடுதலாக விற்பனை செய்தல். நுகர்வோர்களுக்கு அங்காடி விலையை விட 15%  குறைவான விலையில் பசுமையான புதிய காய்கறி மற்றும் பழங்கள் கிடைக்கச் செய்தல்.

III. அக்மார்க்

உணவுப் பொருட்களுக்கு தரச்சான்று அளிக்கும் தன்னார்வ திட்டமாகும். உணவுப் பண்டங்களில் கலப்படம் இல்லாமல் பொதுமக்களுக்கு அளிப்பதுதான் அக்மார்க்கின் நோக்கமாகும். கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியில் அக்மார்க் தரம் பிரிக்கும் ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இந்த தரத்தின் அடிப்படையில் அக்மார்க் முத்திரைச் சீட்டுகள் வழங்கப்படுகிறது. இவ்வாய்வகத்தின்மூலம் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுகின்றனர்.

இதர பணிகள்

விளைபொருள் குழு அமைத்தல், புரிந்துணர்வு ஒப்பந்தம், அறுவடைக்குப் பின் செய் நேர்த்தி, மதிப்புக்கூட்டுதல், சந்தை நுண்ணறிவு, பொருளீட்டுக் கடன் மாதிரி எடுத்தல், வணிகமுறை தரம் பிரிப்பு, வேளாண் வணிக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துதல், உழவன் செயலி பதிவிறக்கம் முதலிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பணியமைப்பு விபரம்

வ.எண்பதவிஒப்பளிக்கப்பட்ட பணியிடம்நிரப்பப்பட்ட பணியிடம்காலிப் பணியிடம்
1 வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) 1 1
2 வேளாண்மை அலுவலர் 6 5 1
3 வேளாண்மை உதவி அலுவலர் 22 22
4 கண்காணிப்பாளர் 1 1
5 உதவியாளர் 3 3
6 இளநிலை உதவியாளர் 1 1
7 தட்டச்சர் 1 1
8 ஆய்வக உதவியாளர் 1 1
9 ஈப்பு ஓட்டுநர் 1 1
10 அலுவலக உதவியாளர் 1 1
11 இரவுக் காவலர் 1 1
மொத்தம் 39 36 3

ஆதாரம் : https://cuddalore.nic.in/

கடைசியாக மாற்றப்பட்டது : 6/18/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate