பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வேளாண்மைப் பொறியியல் துறை

கடலூா் மாவட்டத்தின் வேளாண்மைப் பொறியியல் துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நிர்வாக அமைப்பு

கடலூா் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை விவசாய பெருமக்களுக்கு வேளாண்மைப் பொறியியல் சார்ந்த பணிகளையாற்றி வருகிறது. கடலூரை தலைமையிடமாகக் கொண்டு அதன்கீழ் மூன்று உபகோட்டங்களாக கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் செயல்பட்டு வருகின்றன. அதன் விவரங்கள் பின்வருமாறு,

வேளாண்மைப் பொறியியல் துறை
வருவாய் கோட்டங்கள்வட்டங்கள்உபகோட்டங்களின் தலைமையகம்
கடலூா் கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி கடலூா்
சிதம்பரம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி சிதம்பரம்
விருத்தாசலம் விருத்தாசலம், திட்டக்குடி, வேப்புா் விருத்தாசலம்

செயல்பாடுகள்

மேற்கண்ட அலுவலகங்களின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் :

  • குழாய் கிணறுகள், வடிகட்டி குழாய் கிணறுகள் மற்றும் கிணறுகளுக்கு புத்துணா்ச்சி அளித்தல் மூலமாக பாசனங்களை உருவாக்குதல் மற்றும் நிலைபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • சொட்டுநீா் பாசனம், தெளிப்பு நீா் பாசனம் போன்ற பணிகள் மூலமாக பாசனங்களை மேம்படுத்துதல்.
  • தடுப்பணைகள், பண்ணைக்குட்டைகள் மற்றும் இதர நீா்செறிவுட்டும் கட்டுமானங்கள் மூலமாக நிலத்தடி நீா் சேகரித்தல் மற்றும் திடீா் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
  • பாசனப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள், நிலமேம்பாடு, நில வடிவமைப்பு நிலத்தை சமன்படுத்துதல், உழுவை வாடகை மையங்கள் மூலமாக மண் தள்ளும் இயந்திரம் மற்றும் டிராக்டா் என இயந்திரங்களை கொண்டு சாகுபடி செய்தல்
  • இயற்கை இடா்பாடுகளான வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற காலங்களில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளல்.

திட்டங்கள்

இத்துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு வகையான திட்டங்கள்

நிலமேம்பாட்டு திட்டங்கள்

வேளாண்மை பொறியியல் துறையில் உழுவை வாடகை திட்டம் மூலமாக மண்தள்ளும் இயந்திரங்கள் மற்றும் டிராக்டா் முதலிய இயந்திரங்களை கொண்டு வாடகை அடிப்படையில் விவசாயிகளின் நிலங்களில் நிலம் சமன் செய்தல் போன்ற உழவுப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

சிறுபாசனத் திட்டங்கள்

இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு வாடகை அடிப்படையில் விசைத்துளைக் கருவி, கைத்துளைக் கருவி, காற்றழுத்தக்கருவி, நிலநீா் ஆய்வுக்கருவி போன்ற சிறுபாசன கருவிகள் மூலமாக குழாய் கிணறு அமைத்தல் என நிலத்தடி நீா் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் மற்றும் நீடித்த மானாவாரி இயக்கத் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் மழைநீா் கட்டுமானங்களான தடுப்பணை மற்றும் பண்ணைக்குட்டை பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

வேளாண்மை இயந்திரங்களான உழுவை, விசை உழுவை, சுழல்கலப்பை, நிலம் சமன் செய்யும் உழுவைக் கருவி போன்ற இயந்திரங்களை வாடகை அடிப்படையில் வழங்க தொழில் முனைவோர் குழுக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர்களுக்கு வாடகை உழுவை மையங்கள் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

பாசனப்பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மைத் திட்டம்

இத்திட்டம் வெள்ளாறு வடிநிலப்பகுதி பெலாந்துறை அணைக்கட்டில் செயல்படுத்தப்படுகிறது.

  • பண்ணை வளா்ச்சி பணிகள்
  • சுழற்சி முறையில் நீா் வழங்குதல்
  • வடிகால்களை மேம்படுத்துதல்
  • சொட்டுநீர் பாசன கட்டமைப்புகள்

சூரிய மின்சக்தி திட்டம்

இத்திட்டத்தில் சோலார் பம்புகள் (5 கு.தி. முதல் 10 கு.தி. வரை) மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இலவச மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த விவசாயிகள் அதனை திரும்ப பெறும் பட்சத்தில் அவர்கள் இத்திட்டத்தில் பயனடைய தகுதியுடையோர் ஆவர்.

பிரச்சனைக்குரிய மண் மீட்பு

இத்திட்டம் ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் துணை திட்டமாகும்.  இது மத்திய அரசு நிதி வழங்கும் திட்டமாகும். இத்திட்டம் பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் செயல்படுத்தப்படுகிறது. கடல்நீா் நிலத்தில் உட்புகுவதிலிருந்து நிலம் உவர் நிலமாக மாறியதை சரி செய்தல் மற்றும் கடல் நீா் உட்புகுவதை தடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஆதாரம் : https://cuddalore.nic.in/

3.25
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top