பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் மாவட்டத்தின் புள்ளி விபரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

விவரங்கள்

வரிவாக்கம்

பரப்பளவு

7,469 சதுர கி.மீ.

மக்கள் தொகை

34,58,045

மாவட்ட தலைமையகம்

கோயம்புத்தூர்

மொழி

தமிழ்

வலைதளம்

http://www.coimbatore.tn.nic.in/

வரலாறு

கோயம்புத்தூர், மாநிலத்தில் மூன்றாவது பெரிய நகரம், தமிழ் நாட்டில் ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இங்கு வெற்றிகரமாக விளங்கும் பருத்தி விளைச்சல், நெசவு தொழிற்சாலைகளுக்கு சிறந்த அடித்தளத்தை அமைக்க வழி செய்துள்ளது. முதல் நெசவு நூற்ப்பாலை 1888ல் அமைக்கப்பட்டது. இங்கு இப்பொழுது நூற்றுக்கு அதிகமான நூற்ப்பாலைகள் இயங்கி வருகின்றது. இதன் விளைவாக நிலையான பொருளாதாரம் மற்றும் கோயம்புத்தூர் புகழ் மிக்க நூற்ப்பாலை நகரமாக உருவெடுக்க காரணமாக அமைந்தது. இங்கு 25,000க்கு மேல் சிறு நடுத்தர பெரிய தொழிற்சாலைகள் மற்றும் நூற்பாலைகள் உள்ளன. கோயம்புத்தூர் நீர் ஏற்றுக் குழாய் மற்றும் (Motor pump sets), இயந்திர பொறியமைப்பு கருவிகளின் சிறந்த உற்பத்தி மையமாக விளங்குகிறது. 1930ல் பைகாரா நீர்மின் திட்டம் செயல்பட தொடங்கியதன் காரணமாக கோயம்புத்தூர் நகரம் தொழில் வளர்ச்சியில் உச்சத்தை அடைந்தது. இம்மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க கனிம வளங்கள், கருங்கல், சுண்ணாம்பு குவார்ட்ஸ் என்னும் பொருட்கள் சிறிய அளவில் கிடைக்கின்றன. இவைகளைக் கொண்டு மதுக்கரையில் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.

சுற்றுலா

கோவை மாவட்ட சமயத் திருத்தலங்கள்

பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில் ஈச்சனாரி விநாயகர் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் தண்டு மாரியம்மன் கோவில் பேரூர் சாந்தலிங்கர் திருமடம் சிரவணபுரம் கெளமார மடாலயம் கோவை ஸ்ரீ ஜெகந்நாதர் ஆலயம் புனித மிக்கேல் அதிதூதர் பேராலயம் கிருஸ்துவ அரசர் ஆலயம் இம்மானுவேல் ஆலயம் அத்தார் ஜமாத் பள்ளி வாசல் ஹீதயாத்து இஸ்லாம் ரபிஹீய்யா ஜமாத் பள்ளி வாசல் குருத்துவார கோயில் (சிங்) ஜெயின் கோவில் போன்றவை முக்கிய சமய திரு தலங்களாக விளங்குகின்றன.

கோவை மாவட்ட வரலாற்று சிறப்பிடங்கள்

 • தொல்பழங்கால ஓவியங்கள் வெள்ளருகம்பாளையம்,
 • வேடர் பாத்தி
 • சோமனூர் குமிட்டிபதி,
 • பதிமலை

ஆகிய ஊர்களின் தொல்பழங்கால ஓவியங்கள் உள்ள குகைகள் உள்ளன. இக்குகைகளில் வெள்ளருகம்பாளைய குகை 400 அடி உயரத்தில் உள்ளது. மற்ற குகைகள் தரைப்பகுதியில் உள்ளன. இந்த ஓவியங்கள் கி.மு. 1,000 – கி.பி. 100 வரையிலான காலகட்டத்தை சேர்ந்தவை. வேட்டை காட்சிகள் சண்டை காட்சிகள், நடனக்காட்சிகள், தேர்வடிவம், கட்டிடங்கள் ஆகியவை வரையப்பட்டுள்ளன. அரசி, புத்தர், மைத்ரேயர் ஆகிய பொம்மைகள் கிடைத்துள்ளன. இங்குள்ள கோவில் கல்வெட்டுக்கள் இவ்வூரின் வரலாற்றை அறிய உதவுகின்றது. நாகேஸ்வரம் (சின்ன கோவில்), திருமலைக்கோயில், முட்டத்துஅம்மன் கோயில் ஆகிய கோயில்கள் பழமை வாய்ந்தவை. இங்கு நிலை பெற்றுருந்த கட்டிடங்கள் அழிந்துவிட்டன. அவை கி.பி 8ஆம் நூற்றாண்டை சார்ந்தவை. பேரூர் திருமுருகன் பூண்டி இராசக்கேசரிப் பெருவழி ஆனைமலை சமணப்பள்ளிகள் அமராவதி ஆற்றங்கரை மருதமலை போன்றவை முக்கிய வரலாற்று சிறப்பிடங்கள் ஆகும்.

கோவை மாவட்ட சுற்றுலா தலங்கள்

 • வெள்ளியங்கிரி மலை
 • ஆனைமுடி
 • சிறுவாணி அணைக்கட்டு
 • நொய்யல்
 • அமராவதி ஆறு
 • ஆழியார்

போன்றவை சிறந்த சுற்றுலா தலங்கள் ஆகும்

ஆதாரம் : தமிழ்நாடு அரசு

2.84931506849
முகமத் யாசர் May 03, 2017 08:11 PM

கரூர் தற்பொழுது நெசவு தலைநகரமா???

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top