பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கரூர்

கரூர் மாவட்டத்தின் புள்ளி விவரங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

விவரங்கள்

விரிவாக்கம்

பரப்பளவு

2,895.57 சதுர கி.மீ. sq.kms

மக்கள் தொகை

933,791

மாவட்ட தலைமையகம்

கரூர்

மொழி

தமிழ்

வலைதளம்

http://karur.tn.nic.in/

வரலாறு மற்றும் புவியியல்

கரூர் சேர, சோழ மற்றும் நாயக்கர்களால் ஆளப்பட்டு இறுதியில் ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டது. தங்க ஆபரணங்களை வடிவமைக்கும் பணி இங்கு பழங்காலம் தொட்டே நடைபெற்றுள்ளது. இந்து புராணப்படி, பிரம்மதேவன் தனது படைப்பை இங்கு இருந்தே தொடங்கினார் என்று கூறுவர். மேலும் கரூர் பல்வேறு தமிழ் அரசர்களின் போர்களமாகவும் இருந்துள்ளது. இது கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது வளம்மிக்க நாடாக விளங்கிற்று. மேலும் இதன் சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்பம் மிகவும் இதமானதாகவும் உள்ளது.

சுற்றுலா

கரூர் பல வரலாற்று சிறப்புமிக்க கோயில்களை கொண்டுள்ளது. இது போர்களமாக விளங்கியதால் பல்வேறு மன்னர்களின் வீரத்தை பறைசாற்றும் சிலைகளை காணமுடிகிறது. ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர், ஸ்ரீ கரூர் மாரியம்மன் கோயில், வெண்னை மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயில், ஆத்தூர் சோழியம்மன் கோயில், மகாதானபுரம் மகாலக்ஷ்மி அம்மன் கோயில், கிருஷ்ணராயபுரம் திருக்கண்மல்லேஸ்வரர் கோயில், குழித்தலை கடம்பர் கோயில், ஐயர் மலை சிவன் கோயில், லால்பேட் ஐயப்பன் கோயில், தோகைமலை முருகன் கோயில், வியாக்கரபுரீஸ்வரர் கோயில், புகழிமலை அறுபடை முருகன் கோயில், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயில், மண்மங்களம் புது காளியம்மன் கோயில் மற்றும் பல கோயில்கள் இங்கு சிறந்த வழிபாட்டு தலங்களாக உள்ளன.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு வலைதளம்.

3.06666666667
ஈசநத்தம் R . செல்வராஜ் Mar 06, 2018 06:01 AM

அரவக்குறிச்சி வெஞ்சமாங்கூடலூர் ஈஸ்வரன் கோவிலையும் பதிவிட்டு இருக்களாம்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top