பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தின் புள்ளி விபரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

விவரங்கள்

வரிவாக்கம்

பரப்பளவு

7857.00 சதுர கி.மீ.

மக்கள் தொகை

39,98,252

மாவட்ட தலைமையகம்

காஞ்சிபுரம்

மொழி

தமிழ்

வலைதளம்

http://www.kanchi.tn.nic.in

வரலாறு மற்றும் புவியியல்

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர பேரரசர்கள், முகமதியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களாலும் ஆளப்பட்டது. இந்திய சுதந்திரத்திற்கு முன்பு தொண்டைமண்டலம் என்று அழைக்கப்பட்டது. அதில் சென்னை திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களும் அடக்கம். 1788ஆம் ஆண்டு தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கருங்குழி எனும் பகுதியை தலைமையிடமாக கொண்டு ஆளப்பட்டது. பின்பு 1968ஆம் ஆண்டு காஞ்சிபுரம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு ஆளப்பட்டது.

சுற்றுலா

காஞ்சிபுரம் மாவட்டம் கோயில் நகரமென்று அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் பாரம்பரியத்தையும், தொன்மையையும் விளக்கும் நகரமாக விளங்குகின்றது. பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மாமல்லபுர கற்கோயில்கள் தமிழர்களின் கலை நுணுக்கத்தை பறைசாற்றும்படியாக அமைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் பிறந்த இடம். வைஷ்ணவம் உருவாக காரணமான ராமானுஜர் வசிஷ்ட தத்துவத்தை தோற்றுவித்த இடம். இன்றும் வைஷ்ணவர்களின் புனித யாத்திரை தலமாகவுள்ளது. ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் சிவன் கோயில், 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் ஆகியவை பெரும் பெயர் பெற்றவை. சிவனின் ருத்ர தாண்டவத்தை விளக்கும் பல்லவர்களின் கலை புகழ்பெற்ற ஒன்றாகும். மேலும் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஸ்ரீஉலகநாதர் கோயில், ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயில், சுப்பரமணிய சுவாமி கோயில் போன்றவை பெயர் பெற்றவை. இவை தவிர முட்டுக்காடு ஏரி, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், அண்ணா நினைவிடம் போன்றவையும் சுற்றுலாத்தலமாக உள்ளன.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு

3.04347826087
Rajendranjayaraman Jan 17, 2018 10:35 AM

Good news

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top