பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சுகாதாரம்

சுகாதார துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு பிரிவானது மாநில மற்றும் தேசிய சுகாதார திட்டங்களை செயல்படுத்தும் முக்கிய பிரிவாகும். மேலும் இப்பிரிவு தொற்றா நோய்களை தடுப்பதற்கான நலவடிக்களை செயல்படுத்தி இம்மாவட்டத்தின் மக்களின் சுகாதாரத்தை பேனுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

சேவைகள்

இப்பிரிவின் கீழ் கீழ்கண்ட சேவைகள் வழங்கப்படுகின்றன,

 • ஆரம்ப சுகாதாரம் (தாய்சேய் நலப் பிரிவு உட்பட)
 • நோய்த்தடுப்பூசி சேவை
 • தொற்றா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு
 • உணவுக்கலப்பட தடுப்பு
 • ஐயோடின் குறைபாடுகளுக்கான மருத்துவ பரிசோதனை
 • பொது மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு மற்றும் கல்வி
 • பிறப்பு இறப்பு பதிவு
 • சுற்றுப்புற தூய்மை பணிகள்
 • பால் வினை நோய்கள் தடுப்பு
 • நீர் / உணவு வழி பரவும் வியாதிகள் தடுப்பு (வயிற்றுபோக்கு நோய், டைப்பாய்டு)

இப்பிரிவின் கீழ் இயங்கும் நிறுவனங்கள்

 • சமுதாய நல மையங்கள்
 • அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்
 • நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்
 • 30 படுக்கை வசதியுடைய மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்
 • மனிதயின, விலங்கின நோய்பரிவர்த்தனை கட்டுப்படுத்தும் நிலையம், ஓசூர்
 • துணை சுகாதார நிலையம்

திட்டங்கள்

 1. தொற்றாநோய் பிரிவு தடுப்பு பிரிவு
 2. மக்கள்தொகை அடிப்படையிலான தொற்றாநோய்களை கண்டறியும் திட்டம்
 3. ராஷ்ட்ரிய பால் ஸ்வஷ்திய காரியகரம்
 4. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்
 5. அம்மா குழந்தைகள் நலபெட்டகம்
 6. பிறப்பு மற்றும் இறப்பு
 7. புதுயுகம்
 8. தேசிய குடற்புழு நீக்க நாள்
 9. வாரந்திர இரும்புச் சத்து மாத்திரை
 10. தடுப்பூசி
 11. தேசிய வளர் இளம் பருவத்தினர் நலத்திட்டம்

தொற்றாநோய் தடுப்பு பிரிவு

தமிழகத்தில் 10.4% பேர் நீரிழிவு நோயாலும், 20 % பேர் உயர் இரத்த அழுத்தத்தாலும், 23 % பேர் உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருதய நோயிகளிலான இறப்பு விகிதம் தமிழகத்தில் 360 டொ 430 / 100000 ஆகும். இது இந்திய அளவில் மிக அதிகமாக உள்ளது. எனவே தொற்றா நோய்களானது மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்ப்படுத்துகின்றது.

இப்பிரிவில் 30 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் இரத்தகொதிப்பு, சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை கொடுக்கபடுகிறது. மேலும் 30 வயதிற்க்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மார்பக புற்று நோய் பரிசோதனை மற்றும் கர்ப்பபைவாய் புற்றுநோய் பரிசோதனை செய்யப்படுகின்றது.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

30 வயதிற்குமேற்பட்ட அனைவரும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகி பயன் பெறலாம்.

பயனாளி:

30 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும்

பயன்கள்:

30 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் இரத்தகொதிப்பு, சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை கொடுக்கபடுகிறது

மக்கள்தொகை அடிப்படையிலான தொற்றாநோய்களை கண்டறியும் திட்டம்

பொதுவாக மொத்த மக்கள்தொகைகளை 30% – 40% மட்டுமே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை மேற்கொள்கின்றனர். மீதமுள்ள மக்களுக்கு தொற்றாநோய்களுக்கான கண்டறியும் பரிசோதனைகள் அடைவது கடினமாகவே உள்ளது எனவே மக்கள்தொகையின் அடிப்படயிலான துனை சுகாதார நிலைய அளவில் தொற்றாநோய்களுக்கான கண்டறியும் பரிசோதானைகளை மேற்கொள்வது அவசியமகிறது.

மக்கள்தொகை அடிப்படையிலான தொற்றாநோய்களை கண்டறியும் இத்திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20 நவம்பர் 2017 அன்று மேலும் புதுக்கோட்டை,பெரம்பலூர் மாவட்டத்துடன் சேரத்து ஆரம்பிக்கப்பட்டது.ஒவ்வொரு துனை சுகாதார நிலைய அளவில் ஒரு களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் இப்பணியை மெற்கொள்கின்றனர்.

இத்திட்டத்தில் ஒவ்வொரு களப்பணியாளர்களும் வீடு வீடாக சென்று 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இரத்தகொதிப்பு மற்றும் இரத்த சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்கின்றனர்.இப்பறிசோதனையில் அதிக இரத்தகொதிப்பு மற்றும் சர்க்கறையின் அளவு உள்ளவற்களை நோயை உறுதி செய்ய அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பிவைக்கின்றனர். மேலும் 30 வயதிற்க்கு மேற்ப்பட்ட அனைத்து பெண்களையும் கர்பப்பைவாய் மற்றும் மார்பக பறிசோதானைக்கான அரசு ஆரம்ப சுகாதார நிலையஙளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

30 வயதிற்குமேற்பட்ட அனைவரும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகி பயன் பெறலாம்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

வீடு வீடாக வரும் களப்பணியாளர்களிடம் இச்சேவையை பெற்றுக்கொள்ளாம்.

பயனாளி:

30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்

பயன்கள்:

இரத்தகொதிப்பு மற்றும் இரத்த சர்க்கரையின் அளவு பரிசோதனை

பால் ஸ்வஷ்திய காரியகரம்

ராஷ்ட்ரிய பால் ஸ்வஷ்திய காரியகரம் என்ற திட்டம் ஏப்ரல் 2015-ஆம் வருடம் மத்திய அரசால் நிருவப்பட்டது.இத்திட்டத்தின் நோக்கமானது பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து ஆரம்ப நிலையில் உள்ள நோயினை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே ஆகும்.

இப்பரிசோதனை நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டு மேல் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.

 1. பிறவிக்குறைபாடு
 2. சத்துக்குறைபாடு
 3. நோய்கள்
 4. வளர்ச்சிக்குறைபாடு

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தை பிறந்தவுடன் முதல் நிலை பரிசோதனையானது மருத்துவ அலுவலர், சுகாதார செவிலியர் மற்றும் துனை செவிலியரால் பரிசோதிக்கப்படுகிறது. வீட்டளவிலான குழந்தைகள் பராமரிப்புத் திட்டத்தின்கீழ் (HBNC) குழந்தை பிறந்து 48 மணி நேரம் முதல் 6 வாரம் வரை ஆஷா (ASHA) பணியாளர்களால் வீடு வீடாக சென்று மருத்துவ சேவையளிக்கப்படுகிறது.

நமது கிருஷ்ணகிரி சுகாதார மாவட்டத்திற்கு உட்பட்ட 10 வட்டாரத்தில் 20 நடமாடும் பள்ளி சுகாதார குழு உள்ளன. இச்சுகாதார குழு மூலம் 0 முதல் 18 வயதுவரை உள்ள 3 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர்.

முன் பயன திட்டத்தின்படி வருடத்திற்கு இரண்டு முறை அங்கன்வாடி மையங்களுக்கும் மற்றும் ஒரு முறை பள்ளிகளுக்கும் சென்று குழந்தைகளுக்கு மருத்துவ சேவையளிக்கப்படுகிறது.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

இலவசமக சிகிச்சை, பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பெருவது. இலவச சிகிச்சை பெருவதற்கு முதலமைச்சர் காப்பிட்டு திட்ட அட்டை வைத்திருக்க வேண்டும்.முதலமைச்சரின் காப்பிட்டு திட்டம் அட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்படுகிரது. எடுத்து வரவேண்டிய ஆவணங்கள், ஆதார் கார்டு மற்றும் குடும்ப அட்டை.

பயனாளி:

பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள்

பயன்கள்:

இலவசமக சிகிச்சை, பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பெருவது

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தில் பேறுகால நிதி உதவித் தொகையாக ரூ.12000 ரூபாயிலிருந்து ரூ.18000 ரூபாய் வழங்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆணை வழங்கியுள்ளது.

இத்திட்டம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் போன்றவற்றை குறைக்க காரணமாக இருந்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5 தவணை முறைகளில் ரூபாய் 18000 வழங்கப்படுகிறது. மேலும் ரூ.4000 மதிப்பிலான ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது.

தவணை

தவணை

நிபந்தனைகள்

தொகை

I தவணை

கர்ப்பமுற்று 12 வாரத்திற்குள் கிராம நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து பிக்மி எண் பெற்றவுடன்

2000/-

பயன்

ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் மூன்றாம் மாத நிலையில்

2000/-

II தவணை

நான்காம் மாதம் நிறைவடைவதற்குள் கர்ப்பகால மற்றும் இரத்த பரிசோதனைகள் அரசு மருத்துவமனைகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செய்திருந்தால்.

2000/-

பயன்

இரண்டாம் ஊட்டச்சத்து பரிசு பெட்டகம்

2000/-

III தவணை

அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நிகழ்ந்தவுடன்

4000/-

IV தவணை

குழந்தைகளுக்கு 3-ஆம் தவணை OPV/ROTA/PENTA VALENT தடுப்பூசிகள் போட்ட பிறகு

4000/-

V தவணை

குழந்தைகளுக்கு 9 மாதம் (270 நாட்கள் முடிந்து) தடுப்பூசி போட்ட பிறகு

2000/-

மொத்தம்

18000/-

ரூபாய் 2000 மதிப்பிலான ஊட்டச்சத்து பரிசு பெட்டக பொருட்களில் பட்டியல்

வழங்கப்படும் பொருட்கள்

அளவு (ம) எண்ணிக்கை

கர்ப்பிணி தாய்க்கான ஊட்டச்சத்து மாவு

1 கி.கி.

இரும்புச் சத்து திரவம் 200 மி.லி.

3

உலர் பேரிச்சம்

1 கி.கி.

புரதசத்து பிஸ்கட்

500 கிராம்

ஆவின் நெய்

500 கிராம்

அல்பெண்டசோல் பூச்சி மாத்திரை

3

துண்டு

1

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

 • கர்ப்பிணித்தாய்மார்கள் 19 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
 • மேற்கண்ட 5 தவணை உதவித்தொகையினை இரண்டு பிரசவத்திற்கு மட்டுமே பெற முடியும்.
 • உயர் பிறப்பு வரிசை (இரண்டு குழந்தைகளுக்கு மேல்) தாய்மார்கள் முதல் மற்றும் ஜந்தாம் தவணை பெறலாம். (நிபந்தனைக்கு உட்பட்டது.)

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

கர்ப்பிணித் தாய்மார்கள் கர்ப்பம் தெரிந்தவுடன் 12 வாரத்திற்குள் கிராம மற்றும் நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து RCH எண் பெற்று இருக்க வேண்டும். அல்லது 12 வாரத்திற்குள் முன் பதிவு செய்திருக்க வேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள்

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர்கள் மற்றும் அனைத்து கிராம நகர சுகாதார செவிலியர்கள்

பயனாளி:

ஏழை கர்ப்பிணி தாய்மார்கள்

பயன்கள்:

ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தில் பேறுகால நிதி உதவி

அம்மா குழந்தைகள் நலபெட்டகம்

அனைத்து அரசு மருத்துவனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடக்கும் பிரசவத்திற்கு ரூ.1000 மதிப்பிலான அம்மா நலப் பெட்டகம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இப்பெட்டகத்தில் 16 பொருட்கள் அடங்கியுள்ளது.

குழந்தைக்கு – ஆடை துண்டு படுக்கை கொசு வலை எண்ணெய் சோப் நகவெட்டி விளையாட்டுப் பொருள் ஷாம்பு, தாய் கை கழுவும் திரவம் சோப் சௌபாக்ய லேகியம் மேற்கூறிய பொருட்கள் பாதுகாப்புடன் கூடிய பெட்டியில் வைத்து பிரசவித்த தாய்மார்களுக்க வழங்கப்படுகிறது.

பயனாளி:

தாய் மற்றும் பிறந்த குழந்தை

பயன்கள்:

குழந்தைகள் நலபெட்டகம்

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு

 • பிறப்பு இறப்பு பதிவானது நிகழ்வு நடைபெற்ற இடங்களில் மட்டும் பதிவு செய்ய வேண்டும்.
 • தமிழ்நாடு அரசு பிறப்பு மற்றும் இறப்பு விதி 2000 –ன் படி 1.1.2000 முதல் பிரிவு 30-ன் படி பிறப்பு மற்றும் இறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
 • பிறப்பு மற்றும் இறப்புகளை 21 நாட்களுக்கு மேல் ஓராண்டிற்குள் பதிவு செய்வதற்கு கால தாமதப் பதிவு கட்டணம் செலுத்தவேண்டும்.
 • ஓராண்டிற்கு மேல் பிறப்பு மற்றம் இறப்புகளை பதிவு செய்ய அரசாணை 293 ன் படி வருவாய் கோட்டசியர் அவர்களிடம் ஆணை பெற்று பதிவு செய்ய வேண்டும்.
 • குழந்தையின் பெயரினை பதிவு செய்யப்பட்டிருப்பின் பின் குழந்தையின் பெயரை மாற்றி தர இயலாது. தேவை ஏற்பின் அரசு இதழில் மாற்றி வெளியிடாலம்.
 • மருத்துவமனையில் இறப்பு நிகழ்ந்திருந்தால் மருத்துவ சான்றிதழ் படிவம் 4 மற்றும் மருத்துவமனைங்கள் அல்லாத இடங்களில் இறப்பு நிகழ்ந்திருந்தால் படிவம் 4அ போன்றவற்றை இறப்பினை பதிவு செய்யும் போது பதிவாளரிடம் தகவல் அளிப்பவர் சமர்ப்பிக்க வேண்டும்.
 • பிறப்பு மற்றும் இறப்புகள் நடைபெற்ற இடங்களில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். நிலையான முகவரி அல்லது புதைக்கும் இடங்களை சார்ந்து பதிவு செய்ய முடியாது.
 • குழந்தைக்கான பிறப்பு சான்றிதழ் பெற பேறு கால குழந்தை எண் (RCH ID) கிராம நகர சுகாதார செவிலியரிடம் பெற்றிருக்க வேண்டும்.

பயனாளி:

அனைத்து குடிமகனும்

பயன்கள்:

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல்

புதுயுகம்

தமிழக அரசின் முத்தான புதிய திட்டம்

வளரிளம் பெண்களின் பிரச்சனைகளை மனதில் கொண்டு தமிழக அரசு 10 வயது முதல் 19 வயதுடைய வளர் இளம் பருவ பெண்களுக்கு விலையில்லா சானிடரி நாப்கின்கள் வழங்கும் ஒரு புதிய திட்டத்தை தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் இளம் பெண்கள் ஒவ்வொருவருக்கும் 6 சானிடரி நாப்கின்கள் கொண்ட ஒரு பை வீதம் மூன்று பைகள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்.

பள்ளி செல்லும் இளம் பெண்கள் பள்ளி ஆசிரியையிடம் நாப்கின்கள் பெற்றுக் கொள்கின்றனர். பள்ளி செல்லாத இளம் பெண்கள் கிராம சுகாதார செவிலியரிடம் (அ) அங்கன்வாடி பணியாளரிடம் பெற்றுக் கொள்கின்றனர்.

பயனாளி:

10 வயது முதல் 19 வயதுடைய வளர் இளம் பருவ பெண்கள்

பயன்கள்:

விலையில்லா சானிடரி நாப்கின்

தேசிய குடற்புழு நீக்க நாள்

தேசிய குடற்புழு நீக்க நாள் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது.

1 முதல் 19 வரை உள்ள குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரை அனைத்து அரசு அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படுகிறது.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பள்ளி ஆசிரியர் அல்பெண்டசோல் மாத்திரை வழங்குவார்.

1-5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கு பள்ளி செல்லா குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர் வழங்குவார்

பயனாளி:

குழந்தைகள்

பயன்கள்:

புழுக்கள் பாதிப்பில்லா குழந்தைகளை உருவாக்குவது

வாரந்திர இரும்புச் சத்து மாத்திரை

வாரந்திர இரும்புச் சத்து மாத்திரை 10-19 வயது வரை உள்ள வளர் இளம் பருவத்தினருக்கு பிரதி வாரம் வியாழக்கிழமை மதிய உணவுக்குப்பின் வழங்கப்படுகிறது.

இத்திட்டம் வளர் இளம் பருவத்தினரிடம் காணப்படும் இரத்த சோகையை அகற்ற பெரும் உதவியாக உள்ளது.

பள்ளி செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி ஆசிரியரிடம் IFA(100MG) பெற்றுக் கொள்கின்றனர்.

பள்ளி செல்லாத வளர் இளம் பெண்கள் அங்கன்வாடி பணியாளரிடம் பெற்றுக் கொள்கின்றனர்.

பயனாளி:

10-19 வயதான பெண்கள்

பயன்கள்:

வாரந்திர இரும்புச் சத்து மாத்திரை 10-19 வயது வரை உள்ள வளர் இளம் பருவத்தினருக்கு வழங்குதல்

தடுப்பூசி

தேசிய தடுப்பூசி திட்டத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசி போடுவதன் மூலம் குழந்தைகள் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது.

பிரதி வாரம் புதன்கிழமைகளில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் கிராம மற்றும் நகர்புற சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் இலவசமாக போடப்படுகிறது.

மாதத்தின் முதல் புதன்கிழமைகளில் துணை சுகாதார நிலையத்திலும் மற்ற புதன்கிழமைகளில் மையத்திற்குட்பட்ட மற்ற கிராம மற்றும் நகர்புற அங்கன்வாடி மையத்தில் போடப்படுகிறது.

பயனாளி:

அனைத்து கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும்

பயன்கள்:

அனைத்து கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் இலவசமாக தடுப்பூசி

தேசிய வளர் இளம் பருவத்தினர் நலத்திட்டம்

வாரந்திர இரும்புச்சத்து மாத்திரை மற்றும் போலிக் அமிலம் திட்டம் அடிப்படையில் இளம் பருவத்தினருக்கான மருத்துவ சேவை மற்றும் மாதவிடாய் கால ஆலோசனை சுகாதாரத்திட்டம் சமுதாயம் சார்ந்த வளர் இளம் பருவத்தினருக்கான சேவைகள்.

சக கல்வியாளர்களை தேர்வு செய்வதற்கான நிபந்தனைகள்

ஒவ்வொரு கிராமத்திலும் ஆயிரம் மக்களுக்கு ஒரு சமுதாய நல்வாழ்வு ஊக்குநர் இருப்பார். அவ்ஊக்குநர் மற்றும் பள்ளி ஆசிரியர் பரிந்துரையின் அடிப்படையில் இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் சக கல்வியாளர்களை தேர்வு செய்யப்படும்.

நான்கு சக கல்வியாளர்களில் இரண்டு சக கல்வியாளர்கள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பள்ளிக்கு செல்பவர்களாக இருக்க வேண்டும். அவர்களது வயது பதிநான்கு முதல் பத்தொன்பது வரை இருக்க வேண்டும். இதில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

இரண்டு சக கல்வியாளர்கள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பள்ளிக்கு செல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

தகுதிகள்

10 முதல் 19 வயது வரையில் உள்ள குழந்தைகள் அனைவரும் தகுதியானவர்கள்.

இச்சேவை சமுதாய நல மையம் மற்றும் வட்டார ஆராம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும். இச்சேவைகள் வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை

 • சத்துணவு, பாலியல் மற்றும் இனப்பெருக்கம்
 • சுகாதாரக்கல்வி
 • தொற்றா நோய்கள்
 • போதைப் பொருள் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்
 • பாலியல் சார்ந்த தொந்தரவுகள்

வளர் இளம் பருவத்தினர் நல சிகிச்சை பிரிவில் கொடுக்கப்படும்

நம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2017-18ல் மொத்தம் 4076 வளர் இளம் பருவத்தினர் (அதில் 2187 பெண்கள் 1887 – ஆண்கள்) பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. வளர் இளம் பருவத்தினர் சுகாதார நாள் அனைத்து ஊராட்சி கிராமங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது.

பயனாளி:

வளர் இளம் பருவத்தினர்

பயன்கள்:

இளம் பருவத்தினருக்கான மருத்துவ சேவை மற்றும் மாதவிடாய் கால ஆலோசனை

தொடர்பு அலுவலர் விவரம்

பெயர் / பதவி

தொடர்பு எண்

மின்னஞ்சல் முகவரி

முகவரி

துனை இயக்குநர் சுகாதார பணிகள், கிருஷ்ணகிரி சுகாதார மாவட்டம்

04343 – 232830 / 237517

dphkgi[at]nic.in

துனை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், ராமபுரம் – 635115 கிருஷ்ணகிரி

ஆதாரம் : https://krishnagiri.nic.in/

Filed under:
3.06666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top