பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தொழில் துறை

தொழில் துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மாவட்ட தொழில் மையம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் கிழ் இயங்கி வருகிறது. இவ்வலுவலகத்தின் மூலம் தொழில் முனைவோர்களுக்கு தேவையான திட்ட விவரங்கள் தயாரித்தல், நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெறுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் மானியம் வழங்குதல் போன்ற சேவைகளை செய்து வழங்குகிறது. மேலும் ஒற்றை சாளர இசைவு குழுமூலம் தொழில் தொடங்க அரசு துறைகளிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்கான வழிமுறைகள் பணிகளை செய்து வருகிறது.

திட்டங்கள்

  1. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்
  2. பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
  3. படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்

பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற் கல்வி படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து வங்கிகள் (அ) தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் ரூ.10 இலட்சம் முதல் ஐந்து கோடி வரை கடனுதவி பெற்று தொழில் துவங்க செய்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்கி வேலை வாய்ப்பினை அதிகரிக்கச் செய்வது.

திட்டத்தின் பயன் பெறுவதற்கான தகுதிகள்

ஐ.டி.ஐ., பட்டய படிப்பு (டிப்ளமோ), இளங்கலை பட்டம் அல்லது தொழில் பயிற்ச்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பொது பயனாளிகளுக்கு வயது வரம்பு 21 வயதிற்கு மேல் அதிகபட்சமாக 35 வரை இருத்தல் வேண்டும். சிறப்பு பயனாளிகளான மகளிர், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு அதிகபட்ட வயது வரம்பு 45.

திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள்

இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்த பட்சம் ரூ.10.00 இலட்சத்திற்கு மேல் அதிகபட்சமாக ரூ.500.00 லட்சம் வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவை தொழில் துவங்கலாம். பொது பயனாளி தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் 5% செலுத்த வேண்டும். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அல்லது பல்லவன் கிராம வங்கிகள் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25% அதிக பட்சமாக ரூ.25.00 இலட்சம் வரை முதலீட்டு மானியமும் 3% வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய பயனாளிகள் http://www.msmeonline.tn.gov.in/needs/ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி தொலைபேசி எண்: 04343 235567 முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பயனாளி:

பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற் கல்வி படித்த இளைஞர்கள்.

பயன்கள்:

பொது பயனாளி தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் 5% செலுத்த வேண்டும். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அல்லது பல்லவன் கிராம வங்கிகள் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25% அதிக பட்சமாக ரூ.25.00 இலட்சம் வரை முதலீட்டு மானியமும் 3% வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய பயனாளிகள் http://www.msmeonline.tn.gov.in/needs/ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகளின் மூலமாக உற்பத்திபிரிவிற்கு 25 லட்சம் மற்றும் சேவைப் பிரிவிற்கு 10 இலட்சம் வரை கடனுதவி அளிக்கப்படுகிறது.

திட்டத்தின் பயன் பெறுவதற்கான தகுதிகள்

18 வயது பூர்த்தி அடைந்த எவரும் இத்திட்டத்தின் கீழ் பயன் அடையலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை ரூ. 5.00 லட்சத்திற்கு மேலான சேவை சார்ந்த தொழில் திட்டங்களுக்கும், ரூ. 10.00 லட்சத்திற்கு மேலான உற்பத்தி சார்ந்த தொழில் திட்டங்களுக்கும் பயனாளி குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள்

இத்திட்டத்தில் உற்பத்தி சார்ந்த தொழில் துவங்க ரூ.25.00 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில் துவங்க ரூ.10.00 லட்சம் வரையிலான திட்டங்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. பொது பிரிவு பயனாளிகளுக்கு ஊரக பகுதியில் தொடங்கப்படும் தொழில்களுக்கு மொத்த திட்ட மதிப்பீட்டில் 25% மானியமும், நகர் பகுதியில் தொடங்கப்படும் தொழில்களுக்கு 15% மானியமும் வழங்கப்படும். l சிறப்பு பிரிவு பயனாளிகளுக்கு ஊரக பகுதியில் தொடங்கப்படும் தொழில்களுக்கு மொத்த திட்ட மதிப்பீட்டில் 35% மானியமும், நகர் பகுதியில் தொடங்கப்படும் தொழில்களுக்கு 25% மானியமும் வழங்கப்படும். 18 வயது பூர்த்தி அடைந்த எவரும் இத்திட்டத்தின் கீழ் பயன் அடையலாம்.

மேற்குறிப்பிட்ட தகுதிவாய்ந்த தொழில் தொடங்குவதற்கான ஆர்வமுடைய தொழில் முனைவோர்கள் கிருஷ்ணகிரி சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று www.kviconline.gov.in இணையதள முகவரியில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பயனாளி:

18 வயது பூர்த்தி அடைந்த எவரும் இத்திட்டத்தின் கீழ் பயன் அடையலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை ரூ. 5.00 லட்சத்திற்கு மேலான சேவை சார்ந்த தொழில் திட்டங்களுக்கும், ரூ. 10.00 லட்சத்திற்கு மேலான உற்பத்தி சார்ந்த தொழில் திட்டங்களுக்கும் பயனாளி குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயன்கள்:

இத்திட்டத்தில் உற்பத்தி சார்ந்த தொழில் துவங்க ரூ.25.00 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில் துவங்க ரூ.10.00 லட்சம் வரையிலான திட்டங்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. பொது பிரிவு பயனாளிகளுக்கு ஊரக பகுதியில் தொடங்கப்படும் தொழில்களுக்கு மொத்த திட்ட மதிப்பீட்டில் 25% மானியமும், நகர் பகுதியில் தொடங்கப்படும் தொழில்களுக்கு 15% மானியமும் வழங்கப்படும். சிறப்பு பிரிவு பயனாளிகளுக்கு ஊரக பகுதியில் தொடங்கப்படும் தொழில்களுக்கு மொத்த திட்ட மதிப்பீட்டில் 35% மானியமும், நகர் பகுதியில் தொடங்கப்படும் தொழில்களுக்கு 25% மானியமும் வழங்கப்படும். 18 வயது பூர்த்தி அடைந்த எவரும் இத்திட்டத்தின் கீழ் பயன் அடையலாம்.

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

தமிழ்நாடு அரசு வேலையில்லாத இளைஞர்களுக்கு குறிப்பாக சமுதாயம் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பிரிவு மக்கள் உற்பத்தி/சேவை மற்றும் வியாபார நிறுவனங்கள் அமைத்து சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டத்தின் பயன் பெறுவதற்கான தகுதிகள்

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 35 வயது வரை பொது பிரிவினருக்கும், 45 வயது வரை சிறப்பு பயனாளிகளான மகளிர், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள்

இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ.3 இலட்சம் வரையிலும், வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் வரையிலும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது திட்ட மதிப்பிட்டில் 25% அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் மானியம் அளிக்கப்படும். பொது பயனாளி தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் 5% செலுத்த வேண்டும. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய பயனாளிகள் http://www.msmeonline.tn.gov.in/uyegp/ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி தொலைபேசி எண்: 04343 235567 முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பயனாளி:

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 35 வயது வரை பொது பிரிவினருக்கும், 45 வயது வரை சிறப்பு பயனாளிகளான மகளிர், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

பயன்கள்:

இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ.3 இலட்சம் வரையிலும், வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் வரையிலும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது திட்ட மதிப்பிட்டில் 25% அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் மானியம் அளிக்கப்படும். பொது பயனாளி தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் 5% செலுத்த வேண்டும. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய பயனாளிகள் http://www.msmeonline.tn.gov.in/uyegp/ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்பு அலுவலர் விவரம்

பெயர் / பதவி

தொடர்பு எண்

மின்னஞ்சல் முகவரி

முகவரி

பொது மேலாளர்

04343-235567

dickri2013[at]gmail[dot]com

பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி

ஆதாரம் : https://krishnagiri.nic.in/

Filed under:
2.66666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top