பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மீன்வள துறை

மீன்வள துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை மற்றும் மார்கண்டேய நதி இரண்டும் மாவட்டத்திற்கான நீர்த்தேவையினை பூர்த்தி செய்கின்றது. இவ்விரு நதிகளுடன் இணைந்து காவிரி நதியும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பயன் தருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தினை பொறுத்தவரையில் 5 முக்கிய நீர்த்தேக்கங்கள், பாசன நீர்நிலைகள் மற்றும் ஏரிகள் உள்ளன. மேற்கூரிய நீர்வள ஆதாரங்களை கொண்டு கடந்த 05.10.2005 ஆம் ஆண்டு, மாவட்டத்தில் மீன்துறையானது தனது பணியினை மீன்துறை உதவி இயக்குநர் மற்றும் சார்நிலை அலுவலகங்கள் வாயிலாக செயல்படுத்த தொடங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தினை பொறுத்தமட்டில், கிருஷ்ணகிரி மீன்குஞ்சு விரலிகள் மையம், கிருஷ்ணகிரி வட்டத்திலும், பாம்பாறு மீன்குஞ்சு விரலிகள் மையம், ஊத்தங்கரை வட்டத்திலும், கெலவரப்பள்ளி மீன்குஞ்சு விரலிகள் மையம், ஓசூர் வட்டத்திலும் உள்ளன.

மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கீழ்காணும் 12 மீனவர் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 5173 மீனவர்கள் உள்ளனர்.

 • கிருஷ்ணகிரி மீனவர் கூட்டுறவு சங்கம்
 • கிருஷ்ணகிரி மீனவ மகளிர் மீனவர் கூட்டுறவு சங்கம்
 • ஓசூர் மீனவர் கூட்டுறவு சங்கம்
 • சூடாபுரம் மீனவர் கூட்டுறவு சங்கம்
 • காவேரிப்பட்டிணம் மீனவர் கூட்டுறவு சங்கம்
 • பிலிக்குண்டு மீனவர் கூட்டுறவு சங்கம்
 • நாகனூர் மீனவர் கூட்டுறவு சங்கம்
 • தளி மீனவர் கூட்டுறவு சங்கம்
 • ஊத்தங்கரை மீனவர் கூட்டுறவு சங்கம்
 • ஆனந்தூர் மீனவர் கூட்டுறவு சங்கம்
 • இராயக்கோட்டை மீனவர் கூட்டுறவு சங்கம்
 • தேன்கனிக்கோட்டை மீனவர் கூட்டுறவு சங்கம்

இவ்வலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் (வலை மற்றும் பரிசல்) மீன்பிடி உபகரணங்கள் வழங்குதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உள்நாட்டு மீனவர் / மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் பொருட்டும், அவர்களின் வருமானத்தினை அதிகப்படுத்தும் எண்ணத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 12 மீனவர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த சுமார் 5000 மீனவர்களுக்கு வலை மற்றும் பரிசல்கள் 50 சதவீதம் மானியத்தில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதிகள்

உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள்

 1. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தினை சார்ந்த பயனாளிகள், அந்தந்த வட்டத்தில் உள்ள மீன்துறை ஆய்வாளர்கள் / சார் ஆய்வாளர்களை நேரில் சென்று விண்ணப்ப படிவம், குடும்ப அட்டை(நகல்), ஆதார் அட்டை(நகல்), வங்கி கணக்கு புத்தகம்(நகல்) மற்றும் மீனவர் நலவாரிய அட்டை(நகல்) ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
 2. பயனாளிகள் விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்கும் முன்னர் சம்பந்தப்பட்ட மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவரின் வழியாக சமர்ப்பிக்க வேண்டும்
 3. பயனாளிகள் கடந்த 5 வருடத்திற்குள் இத்திட்டம் மூலம் பயன்பெற்றிருக்க கூடாது

திட்டத்தின் தாக்கம்

இத்திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மீன் உற்பத்தி திறனினை அதிகப்படுத்துகிறது.

பயன்கள்:

50 % மானியம்

பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் கிப்ட் திலேப்பியா மீன்விரலிகள் இருப்பு திட்டம்

உள்நாட்டு மீன்உற்பத்தி கடந்த ஆண்டுகளில் பெரும்பாலும் இந்திய பெருங்கெண்டைகள் மற்றும் இதர வகை சிறு கெண்டைகளை சார்ந்து இருந்து வந்தது. இவ்வகை கெண்டை ரகமீன்கள் நீர்நிலைகளில் முழு வளர்ச்சி அடைய அதிக காலம் எடுக்கும். கிருஷ்ணகிரி மாவட்டத்தினை பொறுத்தமட்டில் நீர்நிலைகள் அனைத்தும் நீர் இருப்பு திறன் கொண்டுள்ளதாலும், மாவட்டத்தின் மீன் உற்பத்தி திறனினை பெருக்கும் நோக்கத்திலும், தமிழ்நாடு மீன்வளத்துறை குறுகிய காலத்தில் அதிக எடை வளரக்கூடிய கிப்ட் திலேப்பியா மீன்குஞ்சு விரலிகளை கிருஷ்ணகிரி மீன்பண்ணையில் உற்பத்தி செய்து மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதிகள்

மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள்

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள முகமை உறுப்பினர்கள் தங்களது வட்டத்தில் உள்ள மீன்துறை ஆய்வாளர்கள் / சார் ஆய்வாளர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்களுடன் குடும்ப அட்டை (நகல்), ஆதார் அட்டை (நகல்), வங்கி கணக்கு புத்தகம் (நகல்), நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் நகல் (பட்டா, சிட்டா மற்றும் நில வரைபடம்) ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

திட்டத்தின் தாக்கம்

கிப்ட் திலேப்பியா வளர்ப்பு மூலம் குறைந்த காலத்தில் நிறைந்த லாபமும், மாவட்டத்தின் மீன்உற்பத்தியும் அதிகரிக்கலாம். கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளுக்கு குறைந்த விலையில் ஊட்டச்சத்து மிகுந்த உணவினை வழங்கலாம்.

பயன்கள்:

பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் கிப்ட் திலேப்பியா மீன்விரலிகள் இருப்பு

நீலப்புரட்சி திட்டம் - மீன்பண்ணைகள் புதுப்பித்தல் மற்றும் புணரமைத்தல் திட்டம்

மீன்கள் எளிதில் செரிக்ககூடிய மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும் புரதம் நிறைந்த அற்புத உணவாகும். சூற்றுச்சூழல் மாசு மற்றும் அதிக மீன்பிடிப்பு காரணமாக இயற்கை நீர்நிலைகளில் மீன்களின் இருப்பு விகிதம் மிகவும் குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையினை எதிர்கொள்ள வேண்டி நீலப்புரட்சி 2020 என்ற திட்டம் மூலம், ஒருங்கிணைந்த மீன்வளர்ப்பு முறை மற்றும் நீர்நிலைகளை ஆக்கபூர்வமாகவும், மீன்விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும் நிலையான மற்றும் பாதுகாப்பான மீன்வளர்ப்பு முறையினை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதிகள்

மாவட்ட மீன்வள்ர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள்

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள முகமை உறுப்பினர்கள் தங்களது வட்டத்தில் உள்ள மீன்துறை ஆய்வாளர்கள்/சார் ஆய்வாளர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்களுடன் குடும்ப அட்டை (நகல்), ஆதார் அட்டை (நகல்), வங்கி கணக்கு புத்தகம் (நகல்), நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் நகல் (பட்டா, சிட்டா மற்றும் நில வரைபடம்) ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

திட்டத்தின் தாக்கம்

கூட்டின மீன்வளர்ப்பு மூலம் அதிகப்படியான மீன் உற்பத்தி மற்றும் அதிக லாபம் பெறலாம். மேலும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை கூட்டின மீன்வளர்ப்பு மூலம் அதிகரிக்கலாம்.

பயனாளி:

மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்

பயன்கள்:

மீன்பண்ணைகள் புதுப்பித்தல் மற்றும் புணரமைத்தல்

தொடர்பு அலுவலர் விவரம்

பெயர் / பதவி

தொடர்பு எண்

மின்னஞ்சல் முகவரி

முகவரி

மீன்துறை ஆய்வாளர்

9943936243

adfkrishnagiri[at]gmail[dot]com

கிருஷ்ணகிரி மீன்பண்ணை, கிருஷ்ணகிரி

மீன்துறை ஆய்வாளர்

9384723959

adfkrishnagiri[at]gmail[dot]com

பாம்பாறு மீன்பண்ணை, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி

மீன்துறை சார் ஆய்வாளர்

9842091042

adfkrishnagiri[at]gmail[dot]com

கெலவரப்பள்ளி மீன்பண்ணை ஓசூர்

ஆதாரம் : https://krishnagiri.nic.in/

Filed under:
3.33333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top