பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சேலம்

சேலம் மாவட்டத்தின் புள்ளி விவரங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன

விவரங்கள்

விரிவாக்கம்

பரப்பளவு

5205 சதுர.கி.மீ. sq.kms

மக்கள் தொகை

2,992,754

மாவட்ட தலைமையகம்

சேலம்

மொழி

தமிழ்

வலைதளம் http://www.salem.tn.nic.in/

வரலாறு மற்றும் புவியியல்

சேலம் மாவட்டத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் சமணம் மற்றும் புத்தம் ஆகிய மதங்கள் பரவ தொடங்கின. சேலம் மாவட்டம் 2,000 ஆண்டுகள் பழமையானவை என்பதற்கு ஆதரமாக அங்கு கோனேரிபட்டி என்ற இடத்தில் 1987-ல் கண்டுபிடிக்கப்பட்ட ரோமானிய பேரரசுகளின் வெள்ளி நாணயச் சான்றுள்ளது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டுகளில் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டதாகவும், பின் கி.பி. நான்காம் நூற்றாண்டுகளில் அது பல்லவ ஆட்சிக்கும், பின் கி.பி. பத்து மற்றும் பண்ணிரண்டாம் நூற்றாண்டுகளில் சைவ மதம் பரவியதால், இது சோழ பேரரசுகளின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. கி.பி.பதினான்காம் நூற்றாண்டில் இது விஜய நகர பேரரசுக்கு உட்பட்டது. கி.பி.18ம் நூற்றாண்டில் இது ஐதர் அலி வசம் சென்றது. பின்பு ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் சுதந்திரம் அடையும் வரை 1947 வரை இருந்தது.

சுற்றுலா

ஏற்காடு ஒரு சிறந்த கோடை சுற்றுலாத்தலம். ஏற்காடின் இதமான வெப்பநிலை அனைவரையும் கவர்ந்து இழுக்கும். இந்த மாவட்டத்தில் உள்ள மற்றொரு சுற்றுலாத்தலம் சேர்வராயன் கோவில், 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் இங்கு தான் பூக்கிறது. காபி, ஏலக்காய், ஆரஞ்சு, மற்றும் பலாப்பழம் ஆகியவை ஏற்க்காட்டில் விளைகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி கோட்டையில் தீரன் சின்னமலை வாழ்ந்ததாக குறிப்புகள் உள்ளன.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு வலைதளம்

3.1
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top