অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

நிர்வாக அமைப்பு

நிர்வாக அமைப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார். அவரே மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார். அவர் மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள், சட்டம், ஒழுங்கு நிர்வாகம், பொது தேர்தல், துப்பாக்கி உரிமம் போன்ற பல முக்கிய பணிகளையும் செயல்படுத்துகிறார்.

கூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் துறையின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதிசெய்கிறார். அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது முக்கிய பணிகளாகும். வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும். உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக இருக்கிறார்கள்.

இந்திய ஆட்சிப்பணி அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மட்டத்தில், நியமிக்கப்படும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர், மற்றும் துனை ஆட்சியர் மட்டத்தில் நியமிக்கப்படும் அலுவர்கள் ஊரக உள்ளாட்சித்துறையின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை செயல் படுத்துவதில் ஆட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர். பேருராட்சிகளின் உதவி இயக்குனர், நகராட்சி, மாநகரட்சிகளின் கமிஷனர்கள் நகர்புற உள்ளாட்சிதுறை நிர்வாகத்தினை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர்.

  • பிரிவு எ – பணியாளர் தொகுதி, அலுவலக நடைமுறைகள், பொதுத்தேர்தல் மற்றும் முக்கிய அதிகாரிகளின் தங்கல் மற்றும் பயண ஏற்பாடுகள்
  • பிரிவு பி – நிலவுடமை - நிலம் – பட்டா மாறுதல்
  • பிரிவு சி – நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அது தொடர்பான வழக்குகள் கையாளுதல்
  • பிரிவு டி – சட்டம் ஒழுங்கு, நீதியியல் – வழக்குகள்
  • பிரிவு ஈ – அரசு தேர்வுகள்
  • பிரிவு – நில அலவை
  • பிரிவு ஜி – பதிவறை பாதுகாப்பு, அரசு அழுவலக இருப்பிட வசதி, மாவட்ட அரசிதழ்
  • பிரிவு ஜே – சுத்த நகல், தபால் அனுப்புதல்
  • பிரிவு எல் – நிலம் – நில ஆக்கிரமிப்பு – நில விடுவிப்பு – இரயில்வே நிலங்கள்
  • பிரிவு எம் – வரவு செலவு, தனிக்கை, சம்பளம்
  • பிரிவு பி – இயற்கை இடர்பாடுகள், மலை பகுதிகள்
  • பிரிவு ஆர் – மறுவாழ்வு, அகதிகள் நலம், இலங்கை தமிழர்கள் நலம்
  • பிரிவு ஜ – பொது மக்கள் குறைதீர் பிரிவு
  • பொது வினியோகம் - குடிமை பொருட்கள் பொது வினியோகம்
  • ஆயத்தீர்வை – மாநில ஆயத்தீர்வை – டாஸ்மாக் மேலாண்மை
  • பிரிவு – பிசி – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
  • பிரிவு – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்
  • AD(P) : கிராம பஞ்சாயத்துகள்
  • AD(audit) : தனிக்கை மற்றும் உயர்மட்ட குழு
  • PA(SS) : சிறு சேமிப்பு
  • PA(NM) : பள்ளி சத்துணவு திட்டம்
  • PO(DRDA) : ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்
  • A.D(TP) : பேரூராட்சிகள் நிர்வாகம்

வருவாய்த்துறை

நிர்வாக அமைப்புஎண்ணிக்கை
வருவாய் கோட்டங்கள் 4
வட்டங்கள் 11
வருவாய் கிராமங்கள் 507

வருவாய் கோட்டங்கள்

வ.எண்கோட்டத்தின் பெயர்
1 திருச்சிராப்பள்ளி

2

ஸ்ரீரங்கம்
3 லால்குடி
4 முசிறி

வட்டங்கள்

வ.எண்வட்டத்தின் பெயர்வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை
1 திருச்சிராப்பள்ளி மேற்கு 13 ( PDF 201 KB)
2 லால்குடி 93 ( PDF 384 KB)
3 மணப்பாறை 51 ( PDF 370 KB)
4 முசிறி 64 ( PDF 370 KB)
5 துறையூர் 64 ( PDF 213 KB )
6 மண்ணச்சநல்லூர் 46 ( PDF 371 KB )
7 ஸ்ரீரங்கம் 59 ( PDF 371 KB )
8 தொட்டியம் 30 ( PDF 364 KB)
9 திருவெறும்பூர் 31 ( PDF 349 KB )
10 மருங்காபுரி 45 ( PDF 366 KB)
11 திருச்சிராப்பள்ளி கிழக்கு 11 (PDF 362 KB)

உள்ளாட்சி அமைப்புகள்

உள்ளாட்சி வகை

எண்ணிக்கை

மாநகராட்சி

1

நகராட்சிகள்

3

பேருராட்சிகள்

16

மாநகராட்சி

வ.எண்

மாநகராட்சியின் பெயர்

வார்டுகள் எண்ணிக்கை

1

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி

65

நகராட்சிகள்

வ.எண்

நகராட்சியின் பெயர்

வார்டுகள் எண்ணிக்கை

1

மணப்பாறை

27

2

துறையூர்

24

3

துவாக்குடி

21

பேருராட்சிகள்

வ.எண்

பேருராட்சியின் பெயர்

வார்டுகள் எண்ணிக்கை

1

பாலகிருஷ்ணம்பட்டி

15

2

கல்லக்குடி

15

3

காட்டுப்புத்தூர்

15

4

கூத்தப்பர்

18

5

லால்குடி

18

6

மண்ணச்சநல்லூர்

18

7

மேட்டுப்பாளையம்

15

8

முசிறி

18

9

பொன்னம்ப்பட்டி

15

10

புள்ளம்பாடி

15

11

பூவாளூர்

15

12

எஸ்.கண்ணணூர்

15

13

சிறுகனூர்

15

14

தாத்தையங்கார்ப்பேட்டை

15

15

தொட்டியம்

15

16

உப்பிலியாபுரம்

15

பாராளுமன்ற தொகுதிகள்

திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதியில் (பாராளுமன்ற தொகுதி எண்.24 ) பின்வரும் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன,

  1. சட்டமன்ற தொகுதி எண்.139 – ஸ்ரீரங்கம்
  2. சட்டமன்ற தொகுதி எண்.140 – திருச்சிராப்பள்ளி (மேற்கு)
  3. சட்டமன்ற தொகுதி எண்.141 – திருச்சிராப்பள்ளி (கிழக்கு)
  4. சட்டமன்ற தொகுதி எண்.142 – திருவெறும்பூர்
  5. சட்டமன்ற தொகுதி எண்.178 – கந்தர்வக்கோட்டை (தனி)
  6. சட்டமன்ற தொகுதி எண்.180 – புதுக்கோட்டை

சட்டமன்ற தொகுதிகள்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன,

  1. சட்டமன்ற தொகுதி எண்.138 – மணப்பாறை
  2. சட்டமன்ற தொகுதி எண்.139 – ஸ்ரீரங்கம்
  3. சட்டமன்ற தொகுதி எண்.140 – திருச்சிராப்பள்ளி (மேற்கு)
  4. சட்டமன்ற தொகுதி எண்.141 – திருச்சிராப்பள்ளி (கிழக்கு)
  5. சட்டமன்ற தொகுதி எண்.142 – திருவெறும்பூர்
  6. சட்டமன்ற தொகுதி எண்.143 – லால்குடி
  7. சட்டமன்ற தொகுதி எண்.144 – மண்ணச்சநல்லூர்
  8. சட்டமன்ற தொகுதி எண்.145 – முசிறி
  9. சட்டமன்ற தொகுதி எண்.146 – துறையூர்(தனி)

ஆதாரம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம்

கடைசியாக மாற்றப்பட்டது : 6/18/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate