பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தூத்துக்குடி மாவட்ட புள்ளி விவரங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தின் புள்ளி விவரங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

வரலாறு

தூத்துக்குடி மாவட்டம் பல நூற்றாண்டுகளாக கடல் வழி வாணிபத்துக்கும் முத்துக் குளிப்புக்கும் சிறந்து விளங்குவதால் இந்நகரம் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது. கி.பி.7ம் நூற்றாண்டு (ம) 9ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனின் அரசில் இங்கு துறைமுகம் நிறுவப்பட்டது. இந்நகரம் கி.பி9ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரை சோழ மன்னனின் அரசாட்சியின் கீழ் இருந்தது. முதலாவதாக தூத்துக்குடிக்கு கிபி1532ல் போர்ச்சுக்கீசியர்களும் அதனை தொடர்ந்து கி.பி1658ல் டச்சு நாட்டவரும் வந்தனர். கி.பி 1782ல்டச்சு நாட்டவரிடமிருந்து தூத்துக்குடி நகரத்தினை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி கிழக்கு இந்திய கம்பெணியினை நிறுவினார்கள்.

20ம் நூண்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசத்தின் விடுதலைக்காகவும் ஆங்கிலேயினரின் கொடுமைக்கு எதிராகவும் போராடி தங்களது உடல் உயிர் உடமை அனைத்தையும் இழந்த உன்னத தலைவர்களாகிய வீரபாண்டிய கட்டப்பொம்மன், மகாகவி பாரதி, வ.உ.சிதம்பரனார் போன்ற தலைவர்கள் பலர் இம்மாவட்டத்தில் பிறந்தவர்கள். வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் முதல் முதலாக கி.பி.1907ம் ஆண்டு ஜூன் 1ம்தேதி எஸ்.எஸ்.காலியா என்ற சுதேசி கப்பலை வெற்றிகரமாக இயக்கினார்.

பழமை வாய்ந்த சிறிய துறைமுகமாகிய இத்துறைமுகத்தின் கலங்கரை விளக்கு கடல் வாணிபத்திற்கு மிகவும் உதவி உள்ளது. கி.பி.1864ம் ஆண்டு மரத்தினால் செய்யப்பட்ட சிறிய கப்பல்களில் வாணிபம் செய்யப்பட்டது. தற்போது இத்துறைமுகத்தின் வாயிலாக உப்பு, பருத்திநூல், சென்னா இலைகள், பனைபொருட்கள், நார், உலர்மீன்கள் மற்றும் உள்நாட்டு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இத்துறைமுகத்தின் வாயிலாக நிலக்கரி, கொப்பரைகள், பருப்பு வகைகள் மற்றும் தானிய வகைகளும் இறக்குமதி செய்யப்படுகிறது. இத்துறைமுகம் நாட்டின் 10வது பெரிய துறைமுகமாகும். இத்துறைமுகம் வருடத்திற்கு 1மில்லியன் சரக்குகளை கையாள்கிறது என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இத்துறைமுகநகரம் மன்னார்வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. கடற்கரை கன்னியாகுமரி வரை தொடர்ந்து நாட்டின் எல்லையாகவும் அமைந்துள்ளது. தூத்துக்குடியை சுற்றியுள்ள பகுதியில் மானாவாரி குளங்கள் அமைந்துள்ளது. நகரின் தென்பகுதி செம்மண் நிறைந்த பகுதியாகவும் சிவந்த அடுக்குபாறைகளாகவும் அதன் துகள்களாகவும் அமைந்துள்ளது. இந்நகரம் மிதமான தட்பவெட்ப நிலையை கொண்ட பகுதியாகும். சிறய அளவிலான தீவுகளும் ஆபத்தான முனைகளையும் கொண்ட இவ்வளைகுடா பகுதி புயல் மழை போன்றவற்றிலிருந்து உள்நாட்டவரை பாதுகாக்கும் அரணாக அமைந்துள்ளது.

தூத்துக்குடி தென்னிந்தியாவிலேயே மிக வேகமாக வளரும் தொழிற்சாலை நகரமாக வளர்ந்து வருகிறது. தொழில் நகரமாக வேகமான வளர்ச்சியையும் நகர்புற விரிவாக்கத்தையும் கருத்தில் கொண்டு நகர்புற வளர்ச்சி மற்றும் நகரவளர்ச்சி திட்ட துறை தூத்துக்குடி நகரை சுற்றியுள்ள 29 கிராமங்களை நகர்புற வளாச்சி திட்டத்தில் சேர்த்து நகரத்தின் வளர்ச்சியை முறையாக மேலாண்மை செய்து வருகிறது.

மாவட்ட சுருக்கக் குறிப்புகள்

 

தூத்துக்குடி மாவட்டம், 3 கோட்டங்களையும், 10 வட்டங்களையும், 480 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது.

வருவாய் கோட்டங்கள்:

வ.எண்.வருவாய் கோட்டங்கள்வருவாய் கோட்டங்களிலுள்ள வருவாய் வட்டங்கள்
1. தூத்துக்குடி அ) தூத்துக்குடி
ஆ) திருவைகுண்டம்
2. திருச்செந்தூர் அ) திருச்செந்தூர்
ஆ) சாத்தான்குளம்
இ)ஏரல்
3. கோவில்பட்டி அ) கோவில்பட்டி
ஆ) எட்டையாபுரம்
இ) விளாத்திக்குளம்
ஈ) ஓட்டப்பிடாரம்
உ) கயத்தார்
 • வருவாய் குறுவட்டங்கள் :41
 • வருவாய் கிராமங்கள் : 480

தூத்துக்குடி மாவட்டம் 6 சட்டமன்ற பேரவை தொகுதிகளாகவும் 1 பாராளுமன்ற தொகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தொகுதி

 • தூத்துக்குடி

சட்ட மன்ற பேரவை தொகுதி

 • விளாத்திகுளம்
 • தூத்துக்குடி
 • திருச்செந்தூர்
 • திருவைகுண்டம்
 • ஓட்டப்பிடாரம்
 • கோவில்பட்டி

உள்ளாட்சி அமைப்பு:

உள்ளாட்சி அமைப்புஎண்கள்
மாநகராட்சி 1
நகராட்சிகள் 2
ஊராட்சி ஓன்றியங்கள் 12
பேரூராட்சிகள் 19
கிராம ஊராட்சிகள் 403
வருவாய் குறுவட்டங்கள் 41
வருவாய் கிராமங்கள் 480

மின்னாளுமை

 

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை (ICT) பயன்படுத்தி, தகவல் பரிமாற்றம், நடவடிக்கைகள், மற்றும் பல்வேறு தனித்தனியான சேவை முறைமைகள் ஒருங்கிணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.

தேசிய மின்னாளுமை திட்டம்:(NeGP)

மின்னனு ஊடகங்கள் வழியாக எல்லா அரசு சேவைகளையும் அளிப்பதற்கான மத்திய அரசின் முன்னெடுப்பாக தேசிய மின்னாளுமை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் மின்னாளுமையின் நீண்டகால வளர்ச்சிக்கு தேவையான அடிப்படையையும், உத்வேகத்தையும் தேசிய மின்னாளுமை திட்டம் (2003-2007) வழங்கியது. இந்த திட்டத்தின் மூலம் சரியான நிர்வாகத்தையும், அலுவலக அமைப்பையும் உருவாக்க, தேவையான கட்டுமானங்களையும், கொள்கைகளையும் ஏற்படுத்தி, மத்திய, மாநில மற்றும் ஒருங்கிணைந்த சேவை தளங்களில், பல, கொள்கை முனைப்பு திட்டங்களை (Mission Mode Project) நடைமுறைபடுத்தி, மக்கள் மைய ஆட்சி சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய மின்னாளுமை திட்ட பார்வை: பொது மக்களுக்கு அவர்களுடைய வசிப்பிடத்திற்கு அருகாமையிலேயே அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கிடைக்கூடியதாகவும், மக்களுக்கு எளிமையானதாகவும், வெளிப்படை தன்மையுடையதாகவும், நம்பகத்தன்மையும், திறனுள்ளதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துதல்.

மின்னாளுமை மாவட்ட திட்டம்

மின்னாளுமை மாவட்ட திட்டம் என்பது தேசிய மின்னாளுமை திட்டத்தின் கீழ் மாநில கொள்கை முனைப்பு திட்டங்களின் (State Mission Mode Project) ஒரு பகுதியாக விளங்குகிறது. மிக அதிக அளவில் சேவை வழங்கப்படும் அரசு சேவைகளில், சேவைகளின் தரத்தை உயர்த்தி, இணையம் மூலமாக வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசு செயல்பாடுகள் மறுசீரமைப்பு தொழில்நுட்பங்களை இந்த திட்டத்தில் பயன்படுத்துகிறது. 06.12.2012 தேதியிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை அரசாணை எண்.22 படி எல்லா மாவட்டங்களிலும் மின்னாளுமை மாவட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் எல்லா மாவட்டங்களிலும், மாவட்ட மின்னாளுமை சங்கம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக்கொண்ட மாவட்ட மின்னாளுமை சங்கம், 18.03.2013 அன்று ஏற்படுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையம்:

வ.எண்சேவை துறைமையங்களின் எண்ணிக்கைமுனையங்களின் எண்ணிக்கை
1. அரசு கேபிள் தொலைக்காட்சி 16 26
2. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 152 152
3. மகளிர் திட்டம் 249 249
4. கிராமப்புற தொழில் முனைவோர் 12 12
மொத்தம் 429 439

மின்னாளுமை மாவட்ட சேவைகள்

மின்னாளுமை மாவட்ட வருவாய்துறை சேவைகள் 01.07.2013 முதல் தூத்துக்குடி மாவட்ட அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதில் வருவாய் துறையின் 5 சேவைகள் வழங்கப்படுகின்றன. அவையாவன

 1. சாதிச்சான்றிதழ்
 2. இருப்பிட சான்றிதழ்
 3. வருமானச் சான்றிதழ்
 4. முதல் பட்டதாரி சான்றிதழ்
 5. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ்

மின்னாளுமை மாவட்ட சமூக நலத்துறை சேவைகள் 24.02.2014 முதல் 20 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதில் பின்வரும் 7 சேவைகள் வழங்கப்படுகிறது.

 1. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்
 2. அன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம்
 3. ஈவேரா மணியம்மை நினைவு விதவை மகள் திருமண உதவி திட்டம்
 4. தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம்
 5. டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்
 6. பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் -I
 7. பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – II

இணைய வழி பட்டா மாறுதல் 01-09-2015 முதல் அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

 1. தமிழ்நிலம்– உட்பிரிவுகளுடன் கூடியது (ஊரகம்)
 2. தமிழ்நிலம்– உட்பிரிவுகள் இல்லாதது (ஊரகம்)
 3. தமிழ்நிலம்– கூட்டு பட்டா மாறுதல் (ஊரகம்)
 4. தமிழ்நிலம்– உட்பிரிவுகளுடன் கூடியது (நகர்புறம்)
 5. தமிழ்நிலம்– உட்பிரிவுகள் இல்லாதது (நகர்புறம்)

மின்னாளுமை மாவட்ட வருவாய்துறை கூடுதல் சேவைகள் 01.03.2018 முதல் தூத்துக்குடி மாவட்ட அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதில் வருவாய் துறையின் 15 சேவைகள் வழங்கப்படுகின்றன. அவையாவன

 1. விவசாய வருமான சான்றிதழ்
 2. சிறு, குறு விவசாயி சான்றிதழ்
 3. கலப்பு திருமண சான்றிதழ்
 4. விதவை சான்றிதழ்
 5. வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ்
 6. வாரிசு சான்றிதழ்
 7. வசிப்பிட சான்றிதழ்
 8. சொத்து மதிப்பு சான்றிதழ்
 9. அடகு வணிகர் உரிமம்
 10. கடன் கொடுப்போர் உரிமம்
 11. குடிபெயர்வு சான்றிதழ்
 12. ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்
 13. திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ்
 14. இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ்
 15. இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் வகுப்பு சான்றிதழ்

மின்னாளுமை சேவைகள் –சேவை கட்டணம்

வ.எண்.துறையின் பெயர்சேவையின் பெயர்துறை கட்டணம் (ரூ.)சேவைக் கட்டணம் சேவை வரி உட்பட (ரூ.)
1. வருவாய்த் துறை சாதி சான்றிதழ் 0 60
2. வருவாய்த் துறை பிறப்பிட சான்றிதழ் 0 60
3. வருவாய்த் துறை வருமான சான்றிதழ் 0 60
4. வருவாய்த் துறை முதல் பட்டதாரி சான்றிதழ் 0 60
5. வருவாய்த் துறை கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ் 0 60
6. வருவாய்த் துறை விவசாய வருமான சான்றிதழ் 0 60
7. வருவாய்த் துறை இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ் 0 60
8. வருவாய்த் துறை குடிபெயர்வு சான்றிதழ் 0 60
9. வருவாய்த் துறை கலப்பு திருமண சான்றிதழ் 0 60
10. வருவாய்த் துறை வாரிசு சான்றிதழ் 0 60
11. வருவாய்த் துறை அடகு வணிகர் உரிமம் 0 60
12. வருவாய்த் துறை கடன் கொடுப்போர் உரிமம் 0 60
13. வருவாய்த் துறை ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் 0 60
14. வருவாய்த் துறை இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்றிதழ் 0 25
15. வருவாய்த் துறை வசிப்பிட சான்றிதழ் 0 25
16. வருவாய்த் துறை சிறு குறு விவசாயி சான்றிதழ் 0 25
17. வருவாய்த் துறை சொத்து மதிப்பு சான்றிதழ் 0 25
18. வருவாய்த் துறை வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ் 0 25
19. வருவாய்த் துறை திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ் 0 25
20. வருவாய்த் துறை விதவை சான்றிதழ் 0 25
21. வருவாய்த் துறை – தமிழ்நிலம் முழு புல பட்டா மாறுதல் 0 60
வருவாய்த் துறை – தமிழ்நிலம் கூட்டு பட்டா மாறுதல் 0 60
வருவாய்த் துறை – தமிழ்நிலம் உட்பிரிவு 0 60
வருவாய்த் துறை – தமிழ்நிலம் அ-பதிவேடு பெறுதல் 0 25
வருவாய்த் துறை – தமிழ்நிலம் சிட்டா பெறுதல் 0 25
22. சமூக நலத்துறை அன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம் 0 120
சமூக நலத்துறை தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம் 0 120
சமூக நலத்துறை டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம் 0 120
சமூக நலத்துறை ஈ.வெ.ரா மணியம்மை நினைவுவிதவை மகள் திருமண உதவி திட்டம் 0 120
சமூக நலத்துறை பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – I 0 120
சமூக நலத்துறை பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – II 0 120
சமூக நலத்துறை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் 0 120
23. தீயணைப்பு துறை தடையின்மை சான்றிதழ் – பல மாடி குடியிருப்பு திட்ட அனுமதி 0 120
பல மாடி குடியிருப்பு-தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல் 0 120
தீயணைப்பு துறை தடையின்மை சான்றிதழ் –குடியிருப்பு திட்ட அனுமதி 0 120
தீயணைப்பு துறை தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல் 0 120
24. காவல் துறை FIR நிலை 0 15
காவல் துறை CSR நிலை 0 15
காவல் துறை ஆன்லைன் புகார் பதிவு செய்தல் 0 25
காவல் துறை நிலையைப் பார்க்க 0 15
காவல் துறை வாகன நிலை தேடல் 0 15
25. பொது வினியோகத்திட்டம் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க 0 60
பொது வினியோகத்திட்டம் குடும்ப அட்டை திருத்தம் 0 60
பொது வினியோகத்திட்டம் குடும்ப அட்டை அச்சிட 0 30
26. மின்சார வாரியம் (TANGEDCO) மின் உபயோக கட்டணம் 0 15 – (1000 வரை)
25 – (1001 – 3000)
40 – (3001 – 5000)
50 – (5001 – 10000)
60 – (10001 மற்றும் அதற்கு மேல்)

முக்கிய இணைப்புகள்

பொது மக்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:

https://edistricts.tn.gov.in/revenue/status.html – வருவாய்த்துறை சான்றிதல்களுக்கான விண்ணப்ப நிலை
https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html – சமூக நலத் திட்டங்களுக்கான விண்ணப்ப நிலை
https://edistricts.tn.gov.in/revenue/verifyCertificate.html – சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்ப்பு
http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/status.html – குழந்தை பாதுகாப்புத் திட்ட விண்ணப்ப நிலை

பொது சேவை மையங்கள்:

https://edistricts.tn.gov.in:8443/certificates_csc – மின்னாளுமை மாவட்ட திட்டம்
https://tnesevai.tn.gov.in/ – இ-சேவை திட்டம்
http://urbantamilnilam.tn.gov.in/Urban_CSC – நிலம்-நகர்புறம்
https://edistricts.tn.gov.in/csc_reports/login.jsp – மின்னாளுமை மாவட்ட திட்டம் அறிக்கைகள்

அலுவலர்கள் பயண்பாடு:

https://edistricts.tn.gov.in/revenue/login.jsp – மின்னாளுமை மாவட்ட திட்டம்
https://edistricts.tn.gov.in/revenue_report/login.jsp – மின்னாளுமை மாவட்ட திட்டம் அறிக்கைகள்
http://tamilnilam.tn.gov.in/Revenue/ – தமிழ்நிலம்
http://tnedistrict.tn.gov.in/eda/DepartLogin.xhtml – இ-சேவை திட்டம்
http://tnedistrict.tn.gov.in/eda/reportLogin.xhtml – இ-சேவை திட்டம் அறிக்கைகள்
https://edistricts.tn.gov.in/socialwelfare/login.jsp – சமூக நலத்துறை
http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/login.jsp – சமூக நலத்துறை

ஆதாரம் - தூத்துக்குடி மாவட்டம்

3.13043478261
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top