অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்

கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கீழ்கண்டவாறு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

  • 1 முதல் 5 வகுப்பு வரை ரூ.1000/-
  • 6 முதல் 8 வகுப்பு வரை ரூ.3000/-
  • 9 முதல் 12 வகுப்பு வரை ரூ.4000/-
  • இளங்கலை பட்டம் ரூ.6000/-
  • முதுகலை பட்டம் ரூ.7000/-

வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டம்

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கீழ்கண்டவாறு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

  • 9 முதல் 12 வகுப்பு வரை ரூ.3000/-
  • இளங்கலை பட்டம் ரூ.5000/-
  • முதுகலை பட்டம் ரூ.6000/-

பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம்

  • 40% மேல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.
  • 75% மேல் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.
  • 40% மேல் தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.
  • 40% மேல் தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.

சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று சுயத்தொழில் புரியும் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு வங்கி கடன் மானியமாக ரூ.10,000/- அல்லது கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இதில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படுகிறது.

திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் (பட்டபடிப்பு படிக்காதவர்களுக்கு)

  • பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ. 12500/- காசோலை)
  • காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ. 12500/- காசோலை)
  • கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ.12500/- காசோலை)
  • மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ.12500/- காசோலை)

குறிப்பு :

மேற்காணும் அனைத்து திருமண உதவி திட்டங்களிலும் பட்டயம் மற்றும் பட்டபடிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.25000/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ.25000/- காசோலை)

பேருந்து பயண சலுகை வழங்கும் திட்டம்

  • பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மாவட்டம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இலவச பேருந்து பயணசலுகைத் திட்டம்.
  • இதர மாற்றுத்திறனாளி நபர்களுக்கு கல்வி பயிலுவதற்கு, பணிக்கு செல்வதற்கு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு 100 கி.மீ. மிகாமல் பயணம் செய்ய பேருந்து பயணசலுகைத் திட்டம்.
  • 75% கட்டண சலுகையின் மூலம் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் திட்டம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம்

  • மூன்று சக்கரவண்டி
  • சக்கர நாற்காலி
  • சிறப்பு சக்கர நாற்காலி
  • முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நவீன சிறப்பு சக்கர நாற்காலி
  • பிளாஸ்டிக் முட நீக்கியல் சாதனம்
  • உலோகத்திலான முட நீக்கியல் சாதனம்
  • செயற்கை கால்
  • ஊன்றுகோல்
  • இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்
  • நவீன செயற்கை கால்
  • கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல்
  • பிரெய்லி கைகடிகாரம்
  • எழுத்துகளை பெரிதாக்கும் கருவி
  • மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம்
  • காதொலிக்கருவி
  • சூரிய ஒளியால் சக்திபெறும் பேட்டரி
  • காதுக்கு பின்னால் பொருத்தும் காதொலி கருவி

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

  • தனிநபர் விபத்து நிவாரணம் – இழப்பினை பொருத்து ரூ.1,00,000/- வரை
  • ஈமச்சடங்கு செலவு – ரூ.2,000/-
  • இயற்கை மரண உதவி – ரூ.15,000/-
  • கல்வி உதவித்தொகை – ரூ.1000/- முதல் 4000/- வரை
  • திருமண உதவித்தொகை – ரூ.2000/-
  • மகப்பேறு உதவி – ரூ.6000/-
  • மூக்கு கண்ணாடி வாங்குவதற்கு – ரூ.500/-

ஆதாரம் - நீலகிரி மாவட்டம்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate