பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மதுரை

மதுரை மாவட்டத்தின் புள்ளி விவரங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

விவரங்கள்

விரிவாக்கம்

பரப்பளவு

3741.73 சதுர.கி.மீ. sq.kms

மக்கள் தொகை

2,562,279

மாவட்ட தலைமையகம்

மதுரை

மொழி

தமிழ்

வலைதளம் http://www.madurai.tn.nic.in/

வரலாறு மற்றும் புவியியல்

புராணக்கதைப்படி, மதுரை மாவட்டம் கதம்பவனம் எனும் காடாக இருந்துள்ளது. ஒரு நாள் தனஞ்செயன் எனும் விவசாயி அந்த காட்டின் வழியே செல்லும் போது. கதம்ப மரத்தின் கீழ், தானாக தோன்றிய சுயம்பு லிங்கத்தை இந்திரன் வழிபடுவதை கண்டான். உடனே அதை அவன் அரசனுக்கு தெரிவிக்க, அரசன் குலசேகர பாண்டியன் அந்த காட்டினை சுத்தம் செய்து சுயம்பு லிங்கத்தை சுற்றி ஒரு கோயில் கட்டினான். அந்த இடத்திற்கு பெயர் சூட்டுகின்ற நாளன்று இறைவன் அங்கு தோன்றினார். அப்போது அவர் தலைமுடியிலிருந்து தேன் துளிகள் சொட்டியதால் மதுரை (இனிப்பை குறிக்கும் சொல்) என பெயர் பெற்றது.

சுற்றுலா

மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தை மையமாக கொண்டே மதுரை மாநகரம் வளர்ந்துள்ளது. அரச வம்சங்களால் இந்த கோயிலும் நன்கு வளர்ந்தது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோயிலானது திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் மேலும் எழிலூட்டப்பட்டு நான்கு பிரம்மாண்ட நுழைவாயிலும் அமைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இதுவும் மதுரையின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. அழகர் திருகோயில் விஷ்ணுவின் கோயில்களில் முக்கியமான ஒன்றாகும். சோலைமலை மீது அழகான சூழலில் அமைந்துள்ள இந்த கோயில் அழகான சிற்பங்களையும் கொண்டுள்ளது. பழமுதிர்ச்சோலை முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். மலை மீது ரம்மியமான சூழலில் அமைந்துள்ள இது சிறந்த சுற்றுலாத்தலமாக இருக்கிறது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு வலைதளம்

2.89830508475
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top