பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - தேர்தல் ஆணையம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 4(1)ன கீழ் வெளியிடப்படும் தகவல்கள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முகவுரை

பயன்பாடு குறித்த பின்னணி மற்றும் குறிக்கோள்

பொது மக்களுக்கு தகவல் அறியும் உரிமையை வழங்கிரும் பொருட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (மத்திய சட்டம் 22/2005) மத்திய அரசால் இயற்றப்பட்டது. அதாவது, அரசின் தகவல்களை அறிவதும் மற்றும் வெளிப்படையான மற்றும் பொறுப்புடைமையை வெளிக்கொணரவும் இச்சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் பிரிவு 4(அ)(1)ன்படி நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின தேர்தல்கள் தொடர்பான தகவல்களை பெற்றிட வகை செய்யப்பட்டுள்ளது.

பயன்பாட்டாளர்கள் குறித்த விவரம்

பொது மக்கள், அரசியல் கட்சிகள், உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்.

தகவல்

இவ்வாணையம் தொடர்பான விவரங்கள் பகுதி-2 -ல் தொகுக்கப்பட்டுள்ளன.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

சம்பந்தப்பட்ட தகவல்களை பெறுவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர், பொது தகவல் அலுவலர் / தலைமை நிர்வாக அலுவலர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம். வாதி கோரும் தகவல்களை ஆணையத்திலுள்ள சம்பந்தப்பட்ட பலதரப்பட்ட பிரிவுகளிலருந்து பெற்று ஒருங்கிணைத்து அதனை வாதிக்கு தகவலளிப்பார்.

மேல் முறையீட்டு அலுவலர்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பொறுத்த வரை மேல் முறையீட்டு அலுவலராக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சட்ட அலுவலரை வரையறை செய்யப்பட்டுள்ளது.

தகவல்களை பெறுவதற்குரிய வழிமுறை மற்றும் கட்டணம்

(அரசாணை எண். 989, பொது (நிர்.1 & சட்டம்) துறை, நாள் 07.10.2005)

(அ) தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் பிரிவு 6 உட்பிரிவு (1)ன் கீழ் தகவல்களைப் பெறுவதற்கான ஒவ்வொரு மனுவுடன் ரு.10/-ஐ மனுக் கட்டணமாக செலுத்த வேண்டும். அதனை பணமாகவோ அஞ்சல் ஆணையாகவோ அல்லது நீதிமன்ற கட்டணவில்லை ஒட்டுவதன் மூலமாகவோ அல்லது வங்கி வரைவோலையாகவோ அல்லது வங்கி பணவோலையாகவோ பின்வரும் கணக்குத் தலைப்பில் செலுத்த வேண்டும்.

“O075 00 - Miscellaneous General Services - 800. Other receipts - B.K. Collection of fees under Tamil Nadu Right to Information (Fees) Rules, 2005" (DP Code: 0075 00 800 BK 0006)

மனுதாரர் மேற்கண்ட கணக்குத் தலைபபில் மேற்படி கட்டணத் தொகையை கருவூலம்/சம்பளக் கணக்கு அலுவலகம்/பாரத ஸ்டேட் வங்கி/இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் செலுத்தி அதற்கான பற்றுச் சீட்டினை மனுவுடன் இணைத்து பொது தகவல் அலுவலருக்கு கட்டணம் செலுத்தியதற்கான அத்தாட்சியாக அனுப்ப வேண்டும்.

(ஆ) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 7 உட்பிரிவு (1)ன் கீழ் தகவல் பெறும் பொருட்டு உரிய ரசீதுடன் கூடிய பணமாக செலுத்தும் வகையிலோ அல்லது வங்கி வரைவோலையாகவோ அல்லது வங்கி பணவோலையாகவோ மேற்கண்ட கணக்குத் தலைப்பில் செலுத்தத்தக்க வகையில் கீழ்காணும் தொகையை செலுத்த வேண்டும்.

1) ரூ.2/- ஒவ்வொரு பக்கத்திற்கும் (A4 அல்லது A3 அளவிலான தாளில்) உருவாக்கப்பட்டது அல்லது நகலெடுக்கப்பட்டது.

2) உரிய தொகை அல்லது நகலெடுக்க ஆன உரிய தொகை பெரிய அளவிலான தாளில் அளிப்பதற்கு.

3) உரிய தொகை அல்லது மாதிரிகளுக்காக செலவிடப்பட்ட உரிய தொகை மற்றும்

4) ஆவணங்களை பார்வையிடுவதற்கு முதல் ஒரு மணி நேரத்திற்கு எவ்வித கட்டணமும் கிடையாது. அதற்கு மேல் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் அல்லது அதன் பகுதிக்கும் ரு5/- வீதம் செலுத்த வேண்டும்.

(இ) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 7 உட்பிரிவு (5)ன் கீழ் தகவல்களை உள்ளடக்கி பெறும் பொருட்டு உரிய ரசீதுடன் கூடிய பணமாக செலுத்தும் வகையிலோ அல்லது வங்கி வரைவோலையாகவோ அல்லது வங்கி பணவோலையாகவோ மேற்கண்ட கணக்குத் தலைப்பில் செலுத்தத்தக்க வகையில் கீழ்காணும் தொகையை செலுத்த வேண்டும்

1) குறுந்தகடு அல்லது பிளாப்பியில் உள்ளடக்கி தகவல்களை பெறுவதற்கு ஒவ்வொரு குறுந்தகடு அல்லது பிளாப்பிக்கும் ரு.50/- வீதம் மற்றும்

2) அச்சிடப்பட்ட வடிவில் தகவல்களை பெறுவதற்கு வெளியிடப்பட நிர்ணயிக்கப்பட்ட தொகை

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் மேற்கண்ட பத்திகளில் கூறப்பட்ட கட்டணங்களை தகவல்களை பெறுவதற்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள நபர்கள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளார்கள். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள நபர்கள் குறித்த பட்டியலை கிராம ஊராட்சி அல்லது உள்ளாட்சி அமைப்பு அளிப்பதை அடிப்படையாகக் கொண்டு கட்டணம் செலுத்துவதிலிருந்து சலுகை பெற போதுமானதாகும்.

அமைப்பு செயல்பாடு மற்றும் கடமைகள் குறித்த விவரங்கள்

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 243K மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994ன் பிரிவு 239 மற்றும் பல்வேறு தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்டங்களின் பிரிவுகளின்படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமான, தன்னிச்சையான மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதாகும்.

அமைப்பு குறித்த வரைபடம்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நிர்வாக அமைப்பு

பெயர் மற்றும் முகவரி

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்,

எண். 208/2, ஜவகர்லால் நேரு சாலை, (கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில்),

அரும்பாக்கம், சென்னை 600 106.

வேலை நேரம்

அனைத்து வேலை நாட்களிலும் ஆணையம், காலை 10.00 மணி முதல் மாலை 05.45 வரை இயங்கும். அதனுடன் மதியம் 01.00 மணி முதல் 02.00 மணி வரை அரை மணி நேரம் உணவு இடை வேளை ஆகும்.

(குறிப்பு: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் விண்ணப்பங்கள் / மனுக்கள், வேலை நாட்களில், அலுவலக நேரங்களில் மட்டுமே பெறப்படும்)

குறை தீர்க்கும் இயந்திரம்

தமிழ் நாட்டிலுள்ள குடிமகன்/குடிமகள் இடமிருந்து உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பாக மனுக்கள்/உரிய குறைகள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்திலும் மற்றும் மாநில தேர்தல் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோர்களாலும் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலக நேரங்களில் பெற்றுக் கொள்ளப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள்

மாநில தேர்தல் அலுவலர் (ஊரகம்)

ஊரக உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரே மாநில தேர்தல் அலுவலர் ஆவார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு வழிகாட்டுதல் மற்றும் கட்டுபாட்டின்கீழ் மாநில தேர்தல் அலுவலர் ஊரக வாக்காளர் பட்டியல்கள் தயாரிப்பது மற்றும் வெளியிடுவது தொடர்பாகவும் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நேரடி மற்றும் மறைமுக தேர்தல்களை நடத்துவது தொடர்பான ஒருங்கிணைத்தல் மற்றும் மேற்பார்வையிடுதல் பணிகளையும் மேற்கொள்கிறார்.

மாநில தேர்தல் அலுவலர் (நகர்ப்புறம்)

பேருராட்சிகளைப் பொறுத்தவரையில் பேருராட்சிகளின் ஆணையர் / இயக்குநர், நகராட்சிகளைப் பொறுத்தவரையில் நகராட்சிகளின் ஆணையர்/இயக்குநர் ஆகியோரே மாநில தேர்தல் அலுவலர்கள் ஆவார்கள். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு வழிகாட்டுதல் மற்றும் கட்டுபாட்டின்கீழ் மாநில தேர்தல் அலுவலர் நகர்ப்புற வாக்காளர் பட்டியல்கள் தயாரிப்பது மற்றும் வெளியிடுவது தொடர்பாகவும் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நேரடி மற்றும் மறைமுக தேர்தல்களை நடத்துவது தொடர்பான ஒருங்கிணைத்தல் மற்றும் மேற்பார்வையிடுதல் பணிகளையும் மேற்கொள்கிறார்கள்.

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர்

தொடர்புடைய மாவட்ட ஆட்சித் தலைவரே மாவட்ட தேர்தல் அலுவலர் ஆவார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு வழிகாட்டுதல் மற்றும் கட்டுபாட்டின்கீழ் மாநில தேர்தல் அலுவலர் ஊரக மற்றும் நகாப்புற வாக்காளர் பட்டியல்கள் தயாரிப்பது மற்றும் வெளியிடுவது தொடர்பாகவும் மற்றும் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நேரடி மற்றும் மறைமுக தேர்தல்களை நடத்துவது தொடர்பான ஒருங்கிணைத்தல் மற்றும் மேற்பார்வையிடுதல் பணிகளையும் மேற்கொள்கிறார். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை மாநகராட்சி ஆணையரே மாவட்ட தேர்தல் அலுவலர் ஆவார்.

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவரின் கடமைகள்

(1) தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமிருந்து பெறப்படும் கருத்துருக்களின் அடிப்படையில் தொடர்புடைய மாவட்டத்திற்கான வாக்குச்சாவடிகளை அங்கீகரித்தல்

(2) ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கான வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்களின் நியமனம் குறித்த பட்டியலை அங்கீகரித்தல்

(3) தேர்தல் அலுவலர்களுக்கான தீவிர பயிற்சி வகுப்புகளை (இருப்புப் பட்டியலிலுள்ளவர்கள் உட்பட) நடத்துதல்

(4) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தி தேர்தல் நடத்தப்படும் நேர்வில் அதன் பயன்பாடு மற்றும் வேலை செய்யும் விதம் குறித்து பொது மக்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல்

(5) தேர்தல் பணியில் இருக்கும் பணியாளர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டுகளை அச்சிடுதல் மற்றும் அவற்றை வாக்காளர்களுக்கு அனுப்புகை பணி மேற்கொள்ளுதல்

(6) வேட்பாளர்களின் தேர்தல் செலவினக் கணக்கு குறித்த விவரங்களை ஆய்வு செய்து அதன் விவரங்களை ஆணையத்திற்கு அனுப்புதல்

(7) தேர்தல் முடிவுற்ற பிறகு மற்றும் குறிப்பிடப்பட்ட காலத்திற்கு வாக்குப் பெட்டிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் தாள்கள் மற்றும் தேர்தல் பொருட்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்தல்

(8) தற்செயல் காலியிடம் ஏற்பட்ட ஒரு வார காலத்திற்குள் காலியிட விவரத்தை மாவட்ட தேர்தல் அலுவலர்/தேர்தல் நடத்தும் அலுவலர், மாநில தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்புவது சட்டபூர்வ கடமையாகும்.

வாக்காளர் பதிவு அலுவலர் (ஊரகம்)

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 பிரிவு 30 உட்பிரிவு (2)ன் கீழ் தொடர்புடைய எல்லைக்குட்பட்ட ஊராட்சியின் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது மற்றும் வெளியிடுவது போன்ற பணிகளுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள்/வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டார ஊராட்சி) ஊராட்சி வாக்காளர் பதிவு அலுவலர் ஆவார்கள்.

வாக்காளர் பதிவு அலுவலர் (நகர்ப்புறம்)

பேருராட்சிகளைப் பொறுத்தவரை தொடர்புடைய செயல் அலுவலர்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளைப் பொறுத்தவரை தொடர்புடைய ஆணையர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை வருவாய் அலுவலர் தொடர்புடைய எல்லைக்குட்பட்ட வாக்காளர் பட்டியல் தயாரிப்பது மற்றும் வெளியிடுவது போன்ற பணிகளுக்கு, வாக்காளர் பதிவு அலுவலர் ஆவார்கள்

தேர்தல் நடத்தும் அலுவலர்

ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புக்கும், ஒவ்வொரு தேர்தலுக்கும் அரசு அலுவலரையோ அல்லது உள்ளாட்சி நிர்வாக அலுவலரையோ மாநில தேர்தல் ஆணையம்/மாவட்ட தேர்தல் அலுவலர் உள்ளாட்சி அமைப்பின் பதவியிடத்தை நிரப்பிடும் பொருட்டு தேர்தல் நடத்தும் அலுவலரை நியமிக்கும்.

தேர்தல் நடத்தும் அலுவலர் அவருக்கு ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பிற்கு தேர்தல் நடத்திடும் பொறுப்பே முதன்மையானதாகும். அவருடைய செயல்பாடுகள் (மாவட்ட தேர்தல் அலுவலருக்கு உட்பட) பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

 • தேர்தலுக்கான ஏற்பாடுகளை வரையறுத்தல்
 • தேர்தல் பொருட்களை கொள்முதல் செய்தல்
 • மாவட்ட தேர்தல் அலுவலரின் ஒப்புதலுடன் வாக்குச்சாவடியை தேர்வு செய்து முடிவு செய்தல்
 • தேர்தல் பணியாளர்களை நியமனம் செய்து அவர்களுக்கு பயிற்சி வழங்குதல் (இருப்புப் பட்டியலில் உள்ளவர்கள் உட்பட)
 • வேட்பு மனுக்களை பெறுதல், வைப்புத் தொகையை பெறுதல், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் குறித்த விவரங்களை பெறுதல்
 • வேட்பாளர்களின் தேர்தல் செலவினக் கணக்கு தாக்கல் செய்வது மற்றும் அதற்கான பதிவேடு பராமரித்தல் குறித்த அறிவுரைகளின் நகல்களை வழங்குதல்
 • தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தல்
 • தேர்தலுக்கான சின்னங்களை ஒதுக்கீடு செய்தல்
 • வேட்பு மனுக்களின் பட்டியலை வெளியிடுதல், ஏற்கத்தக்க மற்றும் போட்டியிடும் வேட்பு மனுக்களின் பட்டியல் தயார் செய்தல்
 • தேர்தல் பணியாளர்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுகளை அச்சிட்டு அவர்களுக்கு அனுப்புகை செய்தல்
 • மாதிரி நன்னடத்தை விதிகளை செயல்படுத்துதல் மற்றும் தேர்தல்களை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்திடும் பொருட்டு வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் கூட்டம் நடத்துதல் மற்றும் தொடர்பு கொள்ளுதல்
 • தேர்தல் நடக்கும் பொருட்டு தேர்தல் பணியாளர்களை அப்பணியில் இருப்பதை உறுதி செயதல் மற்றும் வாக்குச் சீட்டுகள் மற்றும் தொடர்புடைய தேர்தல் பொருட்களை வாக்குச்சாவடிக்கு அனுப்புவதை உறுதி செய்தல்
 • தேர்தலை மேற்பார்வையிடுதல் மற்றும் அது குறித்த அறிக்கைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புதல்
 • பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்தல் முடிவுற்றவுடன் வாக்குப்பெட்டிகளை வாக்குச்சாவடிகளிலிருந்து எடுத்து இருப்பு வைத்தல்
 • வாக்குகளை எண்ணும் மையங்களை நிர்ணயித்தல்
 • வாக்கு எண்ணுகை முடிவுற்றவுடன் தேர்தல் தொடர்பான பொருட்களை பாதுகாப்பாக வைத்தல்
 • வேட்பாளர்களின் தேர்தல் செலவினக் கணக்கு குறித்த விவரங்களை பரிசீலனை செய்து அதன் விவரங்களை மாநில தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்தல்
 • அனைத்து தேர்தல் பணிகளையும் மேற்பார்வையிடுதல்

உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்

மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தும் அலுவலரின் பணிகளில் அவருக்கு உதவி செய்திடும் பொருட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்களால் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்/களை நியமனம் செய்திட வேண்டும். ஒவ்வொரு உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும் தேர்தல் நடத்தும் அலுவலரின் அனைத்து அல்லது ஏதாவது பணிகளை செய்திட தேர்தல் நடத்தும் அலுவலரின் கட்டுபாட்டின்கீழ் செயல்பட வேண்டும். இருப்பினும், தேர்தல் நடத்தும் அலுவலரின் பணியான வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யும் பணியினை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் மேற்கொண்டிட வழிவகை இல்லை. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்தல் நடத்தும் அலுவலர் அப்பணியினை செய்வதிலிருந்து விலக்கு அளித்து அதனை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் மேற்கொள்ளலாம்.

வாக்குச்சாவடி தலைமை மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்கள்

மாவட்ட தோதல் அலுவலர் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் / அலுவலர்களை நியமிக்க வேண்டும். ஆனால், அந்நபர்கள் போட்டியிடும் வேட்பாளர்களால் பணியமர்த்தப்பட்டோ அல்லது அவர்களுக்காக பணிபுரிபவர்களாகவோ இருக்க கூடாது. வாக்குச்சாவடி தலைமை அலுவலர் செய்யும் அனைத்து பணிகளையும் அவரின் கட்டுப்பாட்டின் கீழ் வாக்குப் பதிவு அலுவலர் செய்யலாம். வாக்குச்சாவடி தலைமை அலுவலர் எதிர்பாராத விதமாக திடீரென்று நோய்வாய்ப்பட்டாலோ அல்லது வாக்குச்சாவடிக்கு வராமல் இருந்தாலோ மாவட்ட தேர்தல் அலுவலரின் ஆணைக்கிணங்க பிற வாக்குப் பதிவு அலுவலர் அவரின் பணிகள் அனைத்தையும் மேற்கொள்ளலாம்.

வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் பொதுவான கடமை என்னவெனில் வாக்குச்சாவடியில் அமைதி காப்பதிலும், தேர்தல் நேர்மையாக நடப்பதை உறுதி செய்வதாக அமைய வேண்டும். அவரின் கட்டுப்பாட்டிலுள்ள வாக்குச்சாவடியின் நடவடிக்கைகளை கட்டுப்பாட்டிற்கு கொணர அனைத்து விதமான சட்டபூர்வமான அதிகாரம் உண்டு. தலைமை அலுவலரின் பணிகளில் அவருக்கு உதவி செய்வதே மற்ற வாக்குப் பதிவு அலுவலர்களின் கடமையாகும்.

வாக்காளர் பட்டியல்கள்

தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் என்பது தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தொகுதிகளுக்கு தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியல்களைப் போன்றதேயாகும். சட்டப்பேரவைக்கான வாக்காளர் பட்டியல்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகள், 1960 ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டும், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளுககான உரிய விதிகளின்படி அதற்கான வாக்காளர் பட்டியல் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புக்கான வாக்காளர் பதிவு அலுவலரால் தொடர்புடைய பகுதிக்கு உரியவாறு வெளியிடப்படுகிறது.

வாக்காளருக்கான தகுதிகள் (ஊரக உள்ளாட்சி அமைப்புகள்)

தமிழ் நாடு சட்டப் பேரவைக்கான வாக்காளர் பட்டியலில் சம்பந்தப்பட்ட வாக்காளின் பெயர் இடம் பெற்று, அப்பெயர் சம்பந்தப்பட்ட ஊராட்சியின் வாக்காளர் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தால் அவ்வாக்காளர் வாக்களிக்க தகுதியுடையவராவார்.

வாக்காளருக்கான தகுதிகள் (நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்)

தமிழ் நாடு சட்டப் பேரவைக்கான வாக்காளர் பட்டியலில் சம்பந்தப்பட்ட வாக்காளரின் பெயர் இடம் பெற்று, அப்பெயர் சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சியின் வாக்காளர் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தால் அவ்வாக்காளர் வாக்களிக்க தகுதியுடையவராவார்.

தேர்தல்கள் - அத்தியாவசியமானவை

சுருங்கக்கூறின், தோதல்கள் என்பது குறிப்பிட்ட ஒரு நபரை குறிப்பிட்ட ஒரு பதவியிடத்திற்கு தேர்ந்தெடுக்க நடக்கும் ஒரு நடைமுறை ஆகும். அத்தேர்தல்கள் நேர்முகமாகவும் அல்லது மறைமுகமாகவும் இருக்கலாம். நேர்முகத் தேர்தல்களைப் பொறுத்தவரை தொடர்புடைய வரையறுக்கப்பட்ட பகுதியிலுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க உரிமையுடையவர்களாவார்கள். ஆனால், மறைமுகத் தேர்தல்களைப் பொறுத்தவரை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே வாக்களிக்க உரிமையுண்டு. தேர்தல்கள் என்பது ஜனநாயகத்திற்கு மிகவும் இன்றியமையாதது. மேலும், அதன் வெற்றிக்கு அத்தேர்தல்களை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவது தலையாய பணியாகும்.

தேர்தல்களின் நடைமுறைகள் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ளவைகளை உள்ளடக்கி இருக்கும். அதாவது,

1. பதவியிடங்கள் விவரத்தை குறிப்பது

2. பதவியிடத்திற்கான வேட்பாளர்களின் தகுதியை விளக்குவது

3. சரியாக வரையறுக்கப்பட்ட ஒரு தொகுதியின், அதாவது, வாக்காளர்களின் பட்டியல்களை அத்தொகுதியின் வரையறுக்கப்பட்ட பகுதிக்கென தயாரிப்பது

4. போட்டியுள்ள தொகுதிகளுக்கு தேர்தலை நடத்திரும் பொருட்டு அதற்கான பணிக்கு பணியாளர்களை நியமிப்பது

5. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அட்டவணைக்கான அறிவிக்கையை வெளியிடுவது

6. தேர்தல் நடத்தும் அலுவலரால் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவது

7. வேட்பு மனு தாக்கல் செய்வது

8. வேட்பு மனுக்களை பரிசீலனை செய்வது

9. வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவது

10. போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது

11. தேர்தல் நடத்துவது

12. வாக்கு எண்ணுகை செய்வது

13. வெற்றி பெற்றவர்களை தீர்மானிப்பது

14. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பது (நேர்முகத் தேர்தல்கள்)

15. தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான தேர்தல்களை நடத்துவது (மறைமுகத் தேர்தல்கள்)

தேர்தல்கள் நடத்தப்படும் பதவியிடங்கள்

ஊரக உளளாட்சி அமைப்புகள்

நேர்முகத் தேர்தல்கள்

 • கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்
 • கிராம ஊராட்சி தலைவர்கள்
 • ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்
 • மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்

மறைமுகத் தேர்தல்கள்

 • கிராம ஊராட்சியின் துணைத் தலைவர்கள்
 • ஊராட்சி ஒன்றியக் குழுவின் தலைவர்கள்
 • ஊராட்சி ஒன்றியக் குழுவின் துணைத் தலைவர்கள்
 • மாவட்ட ஊராட்சியின் தலைவர்கள்
 • மாவட்ட ஊராட்சியின் துணைத் தலைவர்கள்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்

நேர்முகத் தேர்தல்கள்

 • பேருராட்சியின் வார்டு உறுப்பினர்கள்
 • நகராட்சியின் வார்டு உறுப்பினர்கள்
 • மாநகராட்சியின் வார்டு உறுப்பினர்கள்

மறைமுகத் தேர்தல்கள்

 • பேருராட்சி தலைவர்கள் / துணைத் தலைவர்கள்
 • நகராட்சி தலைவர்கள்/ துணைத் தலைவர்கள்
 • மாநகராட்சியின் மேயர்கள் / துணை மேயர்கள்
 • மாநகராட்சியின் வார்டு குழு தலைவர்கள்
 • பலதரப்பட்ட சட்டபூர்வ மற்றும் நிலைக் குழு உறுப்பினர்கள்

வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய வைப்புத் தொகை

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் / மலை சாதியினர் அல்லாத வேட்பாளர்கள்

தேர்தல்

வைப்புத் தொகை ரூ.

மாநகராட்சி வார்டு உறுப்பினர்

2,000

நகராட்சி வார்டு உறுப்பினர்

1,000

பேருராட்சி வார்டு உறுப்பினர்

500

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

1,000

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்

600

கிராம ஊராட்சி தலைவர்

600

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்

200

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் / மலை சாதி வேட்பாளர்கள்

தேர்தல்

வைப்புத் தொகை ரு.

மாநகராட்சி வார்டு உறுப்பினர்

1,000

நகராட்சி வார்டு உறுப்பினர்

500

பேருராட்சி வார்டு உறுப்பினர்

250

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

500

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்

300

கிராம ஊராட்சி தலைவர்

300

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்

100

வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள்

ஊரகம்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்சி அடிப்படையிலோ அல்லது கடசி அடிப்படையில்லாமலோ நேர்முகமாக நடைபெறும் தேர்தல்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலுக்கென செலவிடும் தொகையின் உச்சகட்ட வரம்பு உரிய விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊராட்சிகள் (தேர்தல்கள்) விதிகள், 1995ன் விதி 121 உள்விதி (1)ன்படி போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுத் தொகையின் உச்சவரம்பு பின்வருமாறு :-

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்

ரூ.1,70,000

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல்

ரூ.85,000

கிராம ஊராட்சி தலைவர் தேர்தல்

ரூ.34,000

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்

ரூ.9,000

மேற்கண்ட விதியின் விதி 121 உள்விதி (2)ன்படி வேட்பாளரோ அல்லது அவரது தேர்தல் முகவரோ மேற்படி நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல் செலவு செய்திருந்தால் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994ன் உரிய பிரிவின்படி வேண்டாத வகையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்று கொள்ளப்படும்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தேர்தல் செலவினக் கணக்கினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நிர்ணயித்த படிவத்தில் உரிய அலுவலர்களிடம் அளிக்க வேண்டும்.

தேர்தல் செலவினக் கணக்கினை பின்வரும் அலுவலர்களிடம் அளிக்க வேண்டும்

தேர்தல்

அலுவலர்

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்

மாவட்ட ஊராட்சியின் செயலாளர்

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல்

தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய ஆணையர்

கிராம ஊராட்சி தலைவர் தேர்தல்

தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய ஆணையர்

நகர்ப்புறம

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறும் வார்டு உறுப்பினர்கள் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சம் மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்ட தேர்தல் செலவினத் தொகை கீழ்க்கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பேருராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்

ரூ. 17,000

நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் (முதல் மற்றும் இரண்டாம் நிலை)

ரூ. 34,000

நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் (தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை)

ரூ. 85,000

மாநகராட்சி வார்டு உறுப்பினர் (சென்னை மாநகராட்சி தவிர) தேர்தல்

ரூ. 85,000

சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் தோதல்

ரூ. 90,000

வேட்பாளரோ அல்லது அவரது தேர்தல் முகவரோ மேற்படி நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல் செலவு செய்திருந்தால் சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்டத்தின்படி வேண்டாத வகையில் ஊழல் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்று கொள்ளப்படும்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தேர்தல் செலவினக் கணக்கினை தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையம் நிர்ணயித்த படிவத்தில் உரிய அலுவலர்களிடம் அளிக்க வேண்டும்.

தேர்தல் செலவினக் கணக்கினை பின்வரும் அலுவலர்களிடம் அளிக்க வேண்டும்

தேர்தல்

அலுவலர்

மாநகராட்சி வார்டு உறுப்பினர்

தொடர்புடைய மாநகராட்சியின் ஆணையர்

நகராட்சி வார்டு உறுப்பினர்

தொடர்புடைய நகராட்சியின் ஆணையர்

பேருராட்சி வார்டு உறுப்பினர்

தொடர்புடைய பேருராட்சியின் செயல் அலுவலர்

மாவட்ட திட்டமிடும் குழு

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை ஒருங்கிணைத்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 74வது திருத்தத்தின்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கென மாவட்ட திட்டமிடும் குழுவினை அமைப்பதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் மனுக்கள்

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டத்தின்படி நடத்தப்பட்ட எந்தவொரு தேர்தல் குறித்தும் யாரும் கேள்வி எழுப்ப இயலாது. ஆனால், மேற்படி அமைப்பின் சட்டம் அல்லது விதிகளின்படி தொடர்புடைய ஊராட்சி/நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு/மாவட்ட திட்டமிடும் குழு/மற்ற சட்டபூர்வ குழுக்கள் தொடர்பாக வேட்பாளராலோ அல்லது எந்தவொரு வாக்காளராலோ வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி முன்னிலையில் தேர்தல் மனு மூலம் பரிகாரம் காணலாம்.

தேர்தல் மனுக்களை சமர்ப்பிக்க அளிக்கப்பட்டுள்ள காலக்கெடு

ஒரு தோதல் மனு, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள் மாவட்ட நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

தொடர்பு தொலைபேசி எண்கள்

பொது: 044-23635010, 044-2363 5011

நிகரி 2363 8282 / 2363 8283

மின்னஞ்சல் முகவரி : tnsec.tn@nic.in

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்

நேரடி 044-2363 5020

செயலாளர்

நேரடி 044-2363 5050, 044-23635010 - விரிவு 2005

முதன்மைத் தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்)

நேரடி 044-2363 5014, 044-2363 5010 - விரிவு 3000

முதன்மைத் தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்)

நேரடி 044-2363 5015, 044-2363 5010 - விரிவு 3004

சட்ட ஆலோசகர் (மேல் முறையீட்டு அலுவலர்)

நேரடி 044-2363 5013 044-2363 5010 - விரிவு 2008

நிதி ஆலோசகர் (ம) தலைமை கணக்கு அலுவலர்

நேரடி 044-2363 5012 044-2363 5010 - விரிவு 3001

தலைமை நிர்வாக அலுவலர் (பொது தகவல் அலுவலர்)

நேரடி 044-2363 5016 044-2363 5010 - விரிவு 3006

மக்கள் தொடர்பு அலுவலர்

நேரடி 044-2363 5017 044-2363 5010 - விரிவு 3002

கணினி நிரலர்

044-26635010 - விரிவு 2009

கண்காணிப்பாளர் (நிர்வாகம்)

044-2363 5010 - விரிவு 4001

கண்காணிப்பாளர் (ஊராட்சித் தேர்தல்கள்)

044-2363 5010 - விரிவு 4003

கண்காணிப்பாளர் (நகராட்சித் தேர்தல்கள்)

044-2363 5010 - விரிவு 3008

கண்காணிப்பாளர் (சட்டம்)

044-2363 5010 - விரிவு 3003

கணினி அறை

044-2363 5010 - விரிவு 2009

மாநில தேர்தல் அலுவலர்கள்

 • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இயக்குநர் - O44 24323794, 24343205
 • நகராட்சி நிர்வாக இயக்குநர் / ஆணையர் - O44 28513259, 28518079
 • பேருராட்சிகளின் இயக்குநா - O44 25340352, 25358742

ஆதாரம் : http://tnsec.tn.nic.in/

3.25925925926
9487035074 Mar 15, 2020 05:56 PM

நான்வார்டு உறுப்பினராக உள்ளேன் எனது வார்டில் சில கோரிக்கைகளை தலைவர்களும் வைத்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை

சந்தோஷ் குமார் க May 20, 2019 07:45 AM

நான் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட நினைக்கிறேன், தற்போது வங்கி ஊழியராக உள்ளேன் இதனால் பாதிப்பு ஏற்படுமா?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top