பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / தேர்தல் தகவல்கள் / தேர்தல் நடத்தை விதிமுறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன என்பதை பற்றிய குறிப்புகள்

நோக்கம்

தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதுடன் தேர்தல் விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்றி நடக்கின்றனவா என்பதை கண்காணிக்கும் பொறுப்பும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்புள்ள சவாலான பணியாகும்.

தலைமைத் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கு கட்டுப்பட்டாக வேண்டிய கட்டாயத்திற்கு அரசியல் கட்சிகள் ஆளாகியிருப்பதுடன், விதி மீறல்கள் நடந்தால் அதற்குரிய தண்டனையை எதிர்கொள்ளவும் நேரிடுகிறது.

எனவே, தேர்தல் நடைமுறைகள் தொடங்கியதும் அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுகின்றன.

நடத்தை விதிமுறைகள்

 • தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, தேர்தல் முடியும் வரை, ஆட்சியில் உள்ள அரசு புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது.
 • அரசு ஊழியர்களையோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளையோ பணியிட மாற்றம் செய்யக் கூடாது.
 • பதவி உயர்வும் அளிக்கக் கூடாது. வேறு வழியில்லை என்றால், தேர்தல் ஆணைய ஒப்புதல் பெற்ற பிறகு இடமாற்றமோ, பதவி உயர்வோ வழங்கலாம்.
 • அரசு விழாக்களில் அமைச்சர்கள் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.
 • அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது.
 • பொது மைதானங்கள், ஹெலிபேட் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிப்பதில் கட்சி பேதம் பார்க்கக் கூடாது. வாக்குச்சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை.
 • வேட்பாளராகவோ, வாக்காளராகவோ அல்லது கட்சியின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டாகவோ இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட அந்த இடங்களுக்கு அமைச்சர்கள் செல்லலாம்.
 • சாதி, மத, மொழி மற்றும் இன ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பரப்புரையில் ஈடுபடக் கூடாது.
 • கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது.
 • மற்ற கட்சிகளை கொள்கை, செயல் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள் அடிப்படையில் விமர்சிக்கலாமே தவிர, தனி நபர்களின் சொந்த வாழ்க்கை குறித்த விமர்சனம் கூடாது.
 • மற்ற கட்சிகளின் பரப்புரைக் கூட்டங்களில் குழப்பம் விளைவிக்கக் கூடாது.
 • அனுமதி பெறாமல் தனியார் இடங்களைப் பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது.
 • தொலைக்காட்சி, கேபிள் நெட்வொர்க், ரேடியோ போன்றவற்றில் பரப்புரை விளம்பரங்களை வெளியிட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 3 நாட்களுக்கு முன்னதாகவே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
 • வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, வாக்குச்சாவடிக்குச் செல்ல போக்குவரத்து வசதி செய்து தருவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

ஆதாரம் : தமிழ்நாடு தேர்தல் ஆணையம்

3.03571428571
பூமிநாதன் Sep 16, 2020 09:57 AM

தனி நபர் எத்தனை தொகுதிகளில் சுயேட்சையாக போட்டி இட முடியும் 234 தொகுதிகளிலும் போட்டி இட முடியுமா?

க.தியாகராஜன் Dec 19, 2019 10:55 AM

தேர்தல் நாளன்று வாக்காளர்கள் வெயிலில் நிற்க வேண்டியுள்ளது.மேலும் தண்ணீர் தாகம் வந்து தவிக்க வேண்டியுள்ளது.

வரதராஜன் Jul 08, 2019 12:29 PM

அரசு ஊழியர் தேர்தலில் நிற்க வேண்டும் என்றால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அரசு வேலை யை.ராஜிணமாசெய்யமுடியுமா

பாலாஜி Apr 13, 2019 04:24 AM

பணம் பிடிக்கும் விதிமுறைகள்

மகேஸ் Apr 11, 2019 10:45 PM

தோ்தல் நடக்கும் சமயத்தில் ஒவ்வொரு ஊாிலும் அரசு பொருட்காட்சி மட்டும் தனியாா் பொருட்காட்சி இப்படிநடத்தினால்...வேட்பளாா்கள் மூலம் ஈசியாக பண பட்டுவாடா நடத்த முடியும்..

இதனை தடை செய்ய வேண்டும் பொருட்காட்சி தடை ...!!
போட்டனம்...ஈசியாக பண பட்டுவாடா நடைபெறலாம்...


இரவில் மின்சாராம் கட் செய்வது பெருத்த சந்தேகத்தை ஏழுப்பிகிறது...??

தினமும்1மணிநேரம்...நடைபெறுவது பணபட்டுவாடா ஈசியாக செய்கிறாா்களோ என சந்தேகம் ஏழுக்கிறது..??

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top