பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / இ-சேவை / அரசு பொது இ சேவை மையங்களில் சான்றிதழ்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அரசு பொது இ சேவை மையங்களில் சான்றிதழ்கள்

அரசு பொது இ சேவை மையங்களில் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இ-சேவை மையங்கள்

தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ்களை அரசு பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

பெறும் மையங்கள்

  1. மக்கள் கணினி மையம் (அரசு பொது இ சேவை மையம் )
  2. எல்காட்
  3. வட்ட அலுவலகங்கள்,
  4. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள்,
  5. புது வாழ்வு திட்ட அலுவலகங்கள்

சான்றிதழ்கள்

6-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

சான்றிதழ்களைப் பெறாத மாணவர்கள் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ்களை தங்களுக்கு அருகிலுள்ள அரசு பொது இ சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இந்த சான்றிதழ்களை பெற வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அரசு பொது இ சேவை மையங்களுக்கு மாணவர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பிப்பதால் காலதாமதம் ஏற்படும் என்பதற்காக இந்த முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அனைத்து பள்ளி மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


பொது இ - சேவை மையம்

ஆதாரம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

2.99425287356
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
என் பெயர் p சக்திவேல் Aug 02, 2020 05:38 PM

ஐயா எனக்கு இ பாஸ் தேவை நான் யாரை பார்க்க வேண்டும் எனக்கு கொஞ்சம் தெரிய படுத்தவும்

சசி Jul 15, 2020 12:58 PM

நான் பெத்தானூர் கூடுறவு வங்கில் வேலை பார்த்து வருகிறேன் தங்கள் இ -சேவை ஓபன் பண்ணனும் அது எப்படி சொல்லுக

R. மதன் Apr 28, 2020 12:23 PM

ஐயா நான் எலக்ட்ரிஷியன் நான் வெளியே சென்று பழுது நீக்குக அனுமதி கிடைக்குமா

ஏ.சிவகுமார் 9786070450 Aug 02, 2019 10:51 PM

நான் எங்கள் கிராமத்தில் பொது இ சேவை மையம் அமைக்க எந்த துறை அதிகாரிகளை பார்க்க வேண்டும் துறை அதிகாரிகளின் அலுவலக போன் நெம்பர் அல்லது செல்நெம்பர் வேண்டும் ஒரே கிராமத்தில் இரண்டு பொது இ சேவை மையம் வைக்க அனுமதி உண்டா ஏதாவது குறைந்த பட்சம் கல்வித் தகுதி உண்டா அரசுக்கு செலுத்தும் தொகை எவ்வளவு தெரிவிக்கவும் நன்றி

சிவா Mar 28, 2019 05:08 PM

வணக்கம்,
நான் ஒசூர் நகரின் பத்தலப்பள்ளி என்னும் கிராமத்தில் உள்ள மக்கள் கணினி மையத்தில் ஒரு சேவையை பெற்று அரசு குறிப்பிட்டபடி அதற்கான ரூபாய் 60-ஐ கட்டணமாக செலுத்தினேன். ஆனால், அந்த கணினி மையத்தில் இருப்பவர்கள் ரூபாய் 300-ஐ கட்டணமாக கேட்டனர். ஏன் என்று கேட்டதற்கு உங்கள் ஆவணங்களை நாங்கள் ஸ்கேன் செய்ததற்காகவும் இது தனியார் என்பதால் எங்களுக்கான கட்டணமும் சேர்த்து 300 என்று கூறினர். நான் இது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சேவை மையம் தானே என்று கேட்டதற்கு கடினமான வார்த்தைகளில் என்னை அவமானப்படுத்தி ரூபாய் 300-ஐ பெற்றுக் கொண்டனர். நான் வேறு வழியில்லாமல் அங்கிருந்து வெளியேறி விட்டேன். தமிழக அரசின் புகார் எண்ணிற்கு தொடர்புக் கொள்ள முயற்சித்தேன் ஆனால் அழைப்பை எவரும் ஏற்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று எவராவது கூற இயலுமா ?
நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top