பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / இ-சேவை / அரசு பொது இ சேவை மையங்களில் சான்றிதழ்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அரசு பொது இ சேவை மையங்களில் சான்றிதழ்கள்

அரசு பொது இ சேவை மையங்களில் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இ-சேவை மையங்கள்

தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ்களை அரசு பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

பெறும் மையங்கள்

  1. மக்கள் கணினி மையம் (அரசு பொது இ சேவை மையம் )
  2. எல்காட்
  3. வட்ட அலுவலகங்கள்,
  4. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள்,
  5. புது வாழ்வு திட்ட அலுவலகங்கள்

சான்றிதழ்கள்

6-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

சான்றிதழ்களைப் பெறாத மாணவர்கள் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ்களை தங்களுக்கு அருகிலுள்ள அரசு பொது இ சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இந்த சான்றிதழ்களை பெற வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அரசு பொது இ சேவை மையங்களுக்கு மாணவர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பிப்பதால் காலதாமதம் ஏற்படும் என்பதற்காக இந்த முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அனைத்து பள்ளி மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


பொது இ - சேவை மையம்

ஆதாரம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

2.99425287356
ராஜேந்திரன் Feb 15, 2016 02:50 PM

அனைத்து மக்கள் கணினி மையங்களின் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.இதனால் மக்கள் கணினி மையங்கள் நடத்துபவர்களும் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
இதை தமிழக அரசு கவனித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறோம்

Siva VLE Dec 09, 2015 08:03 PM

இது கண்டிப்பாக ஆலோசனை செய்யவேண்டியதுதான் ஒரு கூட்டம் ரெடி செய்து ஆலோசனை செய்து பரிசீலிக்கவேண்டும்

சந்திரசேகரன் Nov 07, 2015 10:16 PM

தமிழகத்தில் 2008 -ம் ஆண்டு சஹாஜ் பொது சேவை மையம் என்று தனியார் பங்களிப்புடன் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது.பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தவுடன் பெயர் மாற்றம் செய்து மக்கள் கணினி மையம் மாற்றப்பட்டதே தவிர இதுவரை அரசு வி .எல். இ மீது எந்தவித அக்கறையும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.பல்வேறு சலுகைகளை மக்களுக்கு வழங்கும் இந்த அரசு இவர்களின் நலனை எப்போது கண்டுகொள்ளுமோ?

TASNA Oct 13, 2015 02:09 PM

http://www.esevaworld.com/Home.aspx என்ற இணையத்தைக் காணவும்.

mkm Sep 27, 2015 03:44 PM

ப்ரைவைட் இ-சேவை மையம் தொடங்கலாமா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top