பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / இ-சேவை / பொது சேவை மையங்களை பயன்படுத்தி ஆதார் எண் வங்கிக் கணக்குடன் இனைத்தல்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பொது சேவை மையங்களை பயன்படுத்தி ஆதார் எண் வங்கிக் கணக்குடன் இனைத்தல்

பொது சேவை மையங்களை பயன்படுத்தி ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இனைத்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஆதார் எண் இணைப்பு

குடிமக்களின் ஆதார் எண்களை, சேவை வழங்கும் வங்கிகளின் தரவுத்தளத்துடன் இணைக்கும் வழிமுறையாகும் இது. சேவைகள் வழங்கப்படும் போதெல்லாம் ஆதார் எண்ணைக் கொண்டு அனுமதி அளிப்பதும், ஓரே பெயரில் பல இடங்களில் விவரங்கள் பதிவாவதைத் தடுப்பதும் இதன் மூலம் சாத்தியமாகிறது.

ஆதார் எண் என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் வழங்கப்படும் சிறப்பு எண் என்பதாலும், ஒரு தனி நபரின் வாழ்நாளில் இந்த எண் மாறவே போவதில்லை என்பதாலும் இந்த 12 இலக்க ஆதார் எண்ணே பணப் பரிவர்த்தனைகளுக்குப் போதுமானதாகும்.  இன்றைய நிலையில், அரசோ, நிறுவனங்களோ ஒரு பயனாளிக்குப் பணம் வழங்கும் போது பயனாளியின் வங்கிக் கணக்கு எண், IFSC குறியீட்டு எண், வங்கிக் கிளையின் விவரம் போன்றவற்றை ஒவ்வொரு முறையும் பெற வேண்டியிருக்கிறது. ஆதார் எண் வங்கிக் கணக்குடன் இனைக்கப்பட்டு விட்டால் ஆதார் எண்ணை மட்டுமே பயன்படுத்தி பயனாளிக்கு அவரது கணக்கில் பணத்தை செலுத்திவிடமுடியும். அவரது வங்கிக் கணக்கு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருந்தாலும் கூட இந்த பணம் சரியாக சென்று சேர்ந்து விடும். இதனால் நிர்வாகச்சுமை குறையும்.

CSC மிண்னணு நிர்வாகச் சேவைகள் இந்தியா லிமிடெட் என்ற பொதுச்சேவை மையங்கள் அங்கிகரிக்கப்பட்ட சேவை முகமையாகவும் அங்கிகரிக்கப்பட்ட பயன்படுத்துவோர் முகமையாகவும் உள்ளது.  இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UADAI) உங்கள்  வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் (KYC) என்பது தொடர்பான செயல்பாடுகளுக்கு இந்த அமைப்பை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மின்னணு வழிமுறையில் வாடிக்கையாளரைத் பற்றித் தெரிந்து கொள்வதற்கு ஏதுவான வகையில் இந்த CSC மையங்கள் அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளது.  தற்போது 166671 CSC மையங்கள் நாடு முழுவதும்  குடிமக்களுக்கு  பல்வேறு சேவைகளை அளித்துவருகின்றன.

CSC ஆதார் இனைப்புத்தளமானது நடுநிலையான தளமாகும். ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைப்பதற்கு பின்வரும் திட்டங்களைக் கொண்டதாக இந்தத்தளம் இருக்கிற பன்மடங்கு தொடுமுனைகள் இருக்கின்றன. இந்த மையங்கள் ஆதார் எண் இணைப்பிற்காக கூடுதல் முனையங்களாக இருக்கும்.

வாடிக்கையாளரைப் பற்றி தெரிந்துகொள்ளும் (KYC) மின்னணு வழிமுறைகள் மூலம் சேவைகளை வழங்கி வருவதால் அனைத்து  பொது சேவை மையங்களும் (CSC) ஆதார் எண் இணைப்பைச் செய்யும் திறன் கொண்டவையாக உள்ளன.

உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் எனும் மின்னணு சேவை ஏற்பாட்டில் மூன்று  விருப்பத்தேர்வுகள்  உள்ளன.  அவையாவன.  கருவிழி (IRIS) / விரல்ரேகை / ஓரே ஒருமுறை  மட்டும் வழங்கப்படும் கடவுச்சொல்.

 • ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாமா? என்று வாடிக்கையாளரிடம் கேட்டு இணையத்தின் வழியாகவே அவரது சேவை பெறும் வழிமுறையும் உள்ளது.
 • CSC க்கள் மூலம் KYC மேடையைப் பயன்படுத்திக் கொள்ளும் படிப்படியான வழிமுறைகள்.
 • www.apna.csc.gov.in என்ற இணையதள முகவரி மூலம் உள்நுழைய வேண்டும்.

சேவைகள் என்ற பக்கத்தில் இருக்கும் ஆதார் எண் இணைப்பு என்ற தொடர்பை கொடுக்க வேண்டும்.

கிராமப்புற அளவிலுள்ள குத்தகைக்காரர் (Village level Entreprenuer) KYC பதிவு.

கிராம அளவில் உள்ள குத்தகைக்காரர்  (VLE)

 • முதன்முதலாக பரிவர்த்தனைச் செய்யும்போது ஓரே ஒரு முறை மட்டும் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
 • இந்தப்பதிவு ஆதார் தளத்தில் செய்துக்கொள்ளப்படும்.
 • இதற்கான தரகுத் தொகை ஆதார் எண் இணைப்புடன்  கூடிய வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட வேண்டும்.
 • உங்கள் வாடிக்கையாளர்ப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள் (KYC) என்பதற்கான பதிவு செய்யப்படும் நேரத்திலேயே VLE தொடர்பான மற்ற விவரங்களையும் குத்தகைக்காரர் அளிக்கவேண்டும்.

அளிக்க வேண்டிய விவரங்கள்

 • வங்கிக் கணக்கு எண்
 • வங்கியின் IFSC குறியீட்டு எண்
 • நிரந்தரக் கணக்கு எண் (PAN NUMBER)
 • PAN எண் தரப்படாவிட்டால் வருவாயில் 20 சதவீதம் வரியாகப் பிடித்தம் செய்து கொள்ளப்படும்.
 • வாடிக்யாளர்கள் ஆதார் எண் இணைப்பு
 • ஆதார் எண் இணைப்பிற்கு வங்கியை தெரிவு செய்யவும்.
 • ஆதார் எண் இணைப்பு தேவைப்படும் வங்கியின் பெயரை வங்கிகளின் பட்டியலில் இருந்து  வாடிக்கையாளர் தெரிவு செய்ய வேண்டும்.
 • அந்த வங்கியின் இணையதள நுழைவாயில் புகுந்து சேவைகள் எனும் பகுதியின் கீழிருக்கும் ஆதார் எண் இணைப்பு என்ற இடத்தில் கொடுக்க வேண்டும்.

வாடிக்கையாளரின் இணைய வழி ஒப்புதல்

ஆதார் எண் அடையாளத்தை பயன்படுத்தி வாடிக்கையாளரை அறிந்து கொண்டு ஒப்புதல் அளித்தல்.

வாடிக்கையாளர் ஆதார் எண் இணைப்புப் படிவம்

 • ஆதார் ஒப்புதல் வெற்றிகரமாக நிறைவேறிய பிறகு வாடிக்கையாளர் பற்றிய விவரங்களை சேகரிக்கும் படிவம் திரையில் தோன்றும்.
 • இவற்றில் மாற்றங்களை செய்ய இயலாது.
 • நிரப்படாமல் உள்ள இடங்களில் வங்கிக்கணக்கு பற்றிய கூடுதல் விவரங்களை சமர்ப்பித்தபிறகு ஒரு ஏற்பு எண் வாடிக்கையாளருக்கு தரப்படும்.

VLE களுக்கான தரகுத்தொகை

 • வெற்றிகரமாகப் பதியப்பட்ட வேண்டுகோள்களுக்கு மட்டுமே கமிஷன் கொகை செலுத்தப்படவேண்டும்.
 • வெற்றிகரமாகப் பதியப்பட்ட ஒவ்வொருவேண்டுகோளுக்கும் ரூ.4/- என்ற விகித்தில் (வரிகள் தனி) பணம் செலுத்தப்பட வேண்டும்.

குடிமக்கள் எப்படி பயன்பெறுவார்?

 • குடிமக்கள் தங்களுக்கு அருகில் CSC மையங்களை ஆதார் இணைப்பிற்காக அனுகவும்.
 • CSC செயற்பாட்டாளர் ஆதார் எண்னை பயன்படுத்தி ஒப்புதல் தருவார்.அது முடிந்த பிறகு மற்ற விவரங்களை பதிவு செய்வார். வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் தனிப்பட்ட எண்ணை வழங்குவார்.
 • இந்தத்தரவுகளை வங்கி அவ்வப்போது புதுப்பித்துவரும். இது நிறைவேறிய பிறகு வங்கிக் கணக்கானது ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும்.

ஆதாரம் : http://www.apna.csc.gov.in/

2.98
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top