பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / குடிமக்களுக்கான சேவைகள் / ஆஃப்லைன் சேவைகள் / மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்

பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய விரும்பாதோர் பரஸ்பர நிதிகள் எனப்படும் மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்து அதிகளவிலான லாபத்தைப் பெற முடியும். சில நேரங்களில் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் இவை அனைத்தும் பங்குச்சந்தையைப் பொறுத்தது. மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய வரும்புவோர் முதலிட்டு ஆவணங்களை முழுவதும் படித்துத் தயாரிப்பினைப் பற்றி அறிந்து கொள்வது மிக அவசியம்

திட்ட வகைகள்

வருவாய் திட்டங்கள், திரவத் திட்டங்கள், வரிச் சேமிப்புத் திட்டங்கள், பங்கு முதலீட்டுத் திட்டங்கள் போன்ற பல திட்டங்கள் இதன் கீழ் செயல்படுகிறது. சரி நம்முடைய முதலீட்டு அளவிற்கும் ஏற்றார் போல், ஆபத்துக்களைக் கணித்து எப்படி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது என்பதைப் பற்றியும் இதற்கான முக்கியக் காரணிகளையும் இங்கே காணலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தினை முதலீடு மற்றும் ஆபத்து அளவுகளைக் கொண்டு அதனைக் தேர்ந்தெடுக்கலாம். மேலும் இத்திட்டத்தில் முதலீடு செய்வது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு நிகர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

செயலாக்கம் அடிப்படை

நிங்கள் முதலீடு செய்யத் தேர்ந்தெடுக்கும் திட்டத்தின் முந்தைய நிலைப்பாட்டை ஆராய்ந்து அதைப் பிற திட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும். இது நிதி மேலாளர்கள் நிர்வகிக்கும் செயல்திறன் பற்றிய எண்ணத்தைக் கொடுக்கும். எனினும் திட்டத்தின் முந்தைய நிலைப்பாட்டின் மூலம் எதிர்காலச் செயலாக்கத்திற்கு எந்த உத்திரவாதமும் இல்லை

கடன் முதலீட்டுத் திட்டங்கள்

கடந்த செயலாக்கத்தை விடுத்து, கடனீட்டு மதிப்பீட்டையும் பார்க்க வேண்டும். நல்ல மதிப்பீட்டை உடைய அதிக வருமானம் தரும் திட்டமே நல்ல பாதுகாப்பான கருவி.

பங்குச்சந்தை முதலீட்டுத் திட்டங்கள்

பங்குச்சந்தை முதலீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் போது இத்திட்டத்தின் போர்ட்போலியோவை முழுமையாகப் பார்க்க வேண்டும். இதில் சிக்கல்கள் இருப்பின் நிபுணர்களின் ஆலோசனை பெற வேண்டும்.

விவரங்களைப் பாருங்கள்

பெரும்பாலும் பரஸ்பர நிதி திட்டங்கள் அதற்கென வலைத்தளங்கள் கொண்டிருக்கும், அதில் விரிவான தகவல்களைக் காணலாம். இல்லையெனில் AMFII வலைத்தளத்தில் காணலாம். SEBI தளத்தில் உள்நுழைந்து பரஸ்பர நிதி திட்டத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

நிகரச் சொத்து மதிப்பு (NAV)

சில முதலீட்டாளர்கள் அதிக நிகரச் சொத்து மதிப்பை உடையத் திட்டத்தை விடக் குறைந்த நிகரச் சொத்து மதிப்பு உடைய திட்டத்தையே தேர்வு செய்வர். குறைந்த அல்லது அதிக நிகரச் சொத்து மதிப்புக் கொண்ட ஒரே மாதிரியான வெவ்வேறு பரஸ்பர நிதி திட்டங்களுக்குள் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதை முதலீட்டாளர்கள் அறிய வேண்டும்.

சொத்து ஒதுக்கீடு

திட்டக் காலம், ஆபத்து மற்றும் முதலீட்டு நோக்கத்தின் அடிப்படையில் சொத்து ஒதுக்கீடு (Asset Allocation) செய்தல் வேண்டும்.   எனினும், சந்தைப் போக்கைக் கொண்டு சொத்து ஒதுக்கீட்டில் நீங்கள் மாற்றங்களைச் செய்துகொள்ள முடியும்.

பிற காரணிகள்

பரஸ்பர நிதி திட்டத்தின் செயல்திறன், சேவை நிலை, மேலாண்மை இது போன்ற காரணங்களின் மேன்மையை நோக்கி முதலீட்டாளர்கள் திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். திட்டத்தில் சேரும் பொழுதும் வெளியேறும் பொழுதும் இருந்த விலை மற்றும் திரும்பப் பெறுதலில் உள்ள தாக்கமும் ஒரு காரணியாகும்.

ஆதாரம் : குட்ரிட்ன்ஸ்

3.28301886792
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top