பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

முகவரி சான்று & வங்கி கணக்கு தொடர்பானவை

இத்தலைப்பில் முகவரி சான்றுக்கு விண்ணப்பித்தல் & வங்கி கணக்கு தொடங்குவதற்கான முறைகள் பற்றி விளக்கியுள்ளனர்.

முகவரி சான்றுக்கு விண்ணப்பம்

வங்கி கணக்கு ஆரம்பிக்கவோ, சிம் கார்டு பெறவோ, PAN அட்டை மற்றும் பாஸ்போர்ட் பெறவோ, அல்லது சமையல் எரிவாயு இணைப்பு பெறவோ, நாம் அந்தந்த அதிகாரிகளிடம் தகுந்த முகவரி சான்றை அளிக்கவேண்டியுள்ளது. புதிதாக நகரத்தில் குடிபெயர்ந்தவராக இருந்தாலோ, தனிப்பட்ட முறையில் வணிகம் புரிபவராக இருந்தாலோ அல்லது இதுவரை எந்த முகவரிச் சான்றையும் பெறாதவராக இருந்தாலோ இந்த சேவைகளை பெற இயவாது.

எனவே இந்திய தபால்துறை, குறைந்த செலவில் இந்திய மக்களுக்கு முகவரி சான்றை அளிக்க முன் வந்துள்ளது இந்த அட்டையில் நபரின் கையொப்பம், அலுவலகர் மற்றும் வீட்டு முகவரி, பிறந்த தேதி, இரத்த பிரிவு, அவரின் கையொப்பம் ஆகிய அனைத்தும் இருக்கும்.

எங்கு இந்த வசதி கிடைக்கிறது?

 • இது நகர்புறவாழ் மக்களுக்கே கிடைக்கிறது
 • தற்பொழுது புவனேஷ்வர் (ஒரிசா), சென்னை மற்றும் மதுரை (தமிழ்நாடு), ஹைதராபாத் மற்றும் வரங்கள் (ஆந்திரா) ஆகிய நகரங்களில் கிடைக்கிறது.

யார் முகவரி சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்?

 • எந்தவொரு இந்திய குடிமகனும் இதற்கு விண்ணப்பிக்கலாம்
 • இதை பெற வயது வரம்பில்லை

எவ்வளவு காலம் இந்த அட்டை செல்லும்?

 • இந்த அட்டையின் ஆயுள் மூன்று வருடங்கள்
 • மூன்று வருடம் கழித்து விருப்பம் உள்ளவர்கள் திரும்ப விண்ணப்பிக்க வேண்டும்
 • ஆயுள் மூன்று வருடம் இருந்தாலும் வருடா வருடம் இதை புதுப்பிக்க வேண்டும்

இதனை பெற கட்டணம்

 • விருப்பமுள்ளவர்கள் ரூபாய் 240-ஐ செலுத்தி முகவரி சான்றை பெறலாம் (விண்ணப்ப கட்டணம் ரூபாய் 10, கட்டணம் மற்றும் அட்டை விலை ரூ.240/-)
 • ஒவ்வோரு வருடம் புதுப்பிக்கும் போது ரூபாய் 140ஐ இந்திய தபால்துறைக்கு செலுத்த வேண்டும்

எங்கு முகவரி சான்றுக்கு விண்ணப்பிக்க வேண்டும்?

 • விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தில் விண்ணப்பிக்கலாம்

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

 • விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் கவனமாக பூர்த்தி செய்யவும் முழு குறிப்பையும் அளிக்கவும்
 • இரு வண்ண புகைப்படத்தை ஒட்டவும்
 • விண்ணப்பத்தில் கையொப்பம் இட்டு, கட்டணத் தொகை ரூபாய் 250-யுடன் விண்ணப்பிக்கவும்
 • கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும்

முகவரி சான்றை பெற வழிமுறை

 • விண்ணப்பத்தை பெற்றவுடன், இந்திய தபால் நிலையத்தின் பொது ஜன தொடர்பு அலுவலர், விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை சரிப்பார்ப்பார்கள்
 • விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில் திருப்தி அடைந்த பின்னர், முகவரி சான்று அட்டையை வழங்குவர்

அட்டையை புதுப்பித்தல்

 • அட்டைக்கு சொந்தகாரர்கள் வருடா வருடம் ரூபாய் 140ஐ செலுத்தி புதுப்பித்து கொள்ள வேண்டும்
 • மூன்று வருடம் முடிந்தவுடன் அட்டையின் ஆயுள் முடிந்து விடும். பின்னர் திரும்ப விண்ணப்பித்து புதிய முகவரி சான்று அட்டையை பெற வேண்டும்.

வங்கி கணக்கு ஆரம்பிப்பது எப்படி?

பயன்கள்

 • தங்களுடைய வருமானத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளலாம்.
 • சேமிப்பு தொகைக்கு வட்டியை பெறலாம்.
 • மூன்றாம் நபரிடமிருந்து பணத்தை எளிதாக தன் வங்கி கணக்கிற்கு சேர்க்கலாம் (காசோலை, டிராப்ட், ரொக்கம் மற்றும் ஆன்லைன் மூலம்)
 • பயன்பாட்டு பில்களை செலுத்தலாம் (LIC பிரிமியம் தொகை, ரெயில் பயணச் சீட்டு பதிவு ஆகியன)

வங்கி கணக்கு தொடங்குவதற்கு தேவையானவைகள்

 • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம் (வங்கிகளிலிருந்து பெறலாம்)
 • இரண்டு வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
 • அடையாளச் சான்றுக்கான நகல்
 • இருப்புச் சான்றுக்கான நகல்
 • ரூபாய் 1000 - க்கான ரொக்கம் (இது வங்கிகளுக்கு வங்கி வித்தியாசப்படும்)
 • ஒரு உத்திரவாத நபர் (விண்ணப்பத்தில் கையெழுத்திட, அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள நபர்)

குறிப்பு : அடையாள சான்று மற்றும் இருப்பு சான்றிற்கு தனித்தனி ஆவணம் சம்ர்ப்பிக்கவேண்டும்.

 • கீழே உள்ளவற்றில், ஏதேனும் ஒன்றை அடையாளச் சான்று ஆவணமாக சமர்ப்பிக்கலாம்.
 1. பாஸ்போர்ட்
 2. வாக்காளர் அடையாள அட்டை
 3. அட்டை
 4. அரசு அடையாள அட்டை
 5. அங்கீகரிக்கப்பட்ட அலுலவக அடையாள அட்டை
 6. வாகன ஓட்டுரிமை அட்டை
 7. தபால் நிலையத்தின் போட்டோ அடையாள அட்டை
 • கீழே உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றை குடியிருப்புச் சான்று ஆவனமாக சமர்ப்பிக்கலாம்.
 1. கிரெடிட் அட்டையின் வரவு செலவு கணக்கு
 2. வருமான சீட்டு (விலாசத்துடன்)
 3. வருமான வரி/சொத்து வரி நிர்ணய ஆவணம்
 4. மின் இரசீது
 5. தொலைபேசி இரசீது
 6. வங்கி கணக்கு விபரம்
 7. அங்கீகரிக்கப்பட்ட பணியமர்த்துவரிடம் இருந்து கடிதம்
 8. அங்கீகரிக்கப்பட்ட பொது ஆணையாளரிடம் இருந்து கடிதம்
 9. குடும்ப அட்டை
 10. LPG கேஸ் பில்

வங்கி கணக்கு ஆரம்பித்த பின்னர், கீழ் வரும் ஆவணங்களை நீங்கள் பெறுவீர்கள்

 • உங்கள் புகைப்படம் மற்றும் பெயருடன் கூடிய பாஸ்புத்தகம்.
 • ATM மற்றும் டெபிட் அட்டை (குறைந்தது கணக்கு ஆரம்பித்ததில் இருந்து இரண்டு வாரத்தில் கிடைக்கும்)
 • காசோலை புத்தகம் (இதுவும் குறைந்தது கணக்கு ஆரம்பித்ததில் இருந்து இரண்டு வாரத்தில் கிடைக்கும்)

மேலும் தகவலுக்கு: வங்கி கணக்கு ஆரம்பிக்ககூடிய வங்கிகளின் பெயர்களை அறிய

2.90909090909
மஞ்சுநாத் Aug 06, 2019 03:27 AM

நான் வங்கி கணக்கு தொடங்க வங்கிக்கு சென்றேன் வங்கி மேலாளர் pankard மற்றும் ஆதார் கார்டில் பிறந்த தேதி மாறியுள்ளது வங்கி கணக்கு தொடங்க முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டார் என்ன செய்ய வேண்டும்

சுந்தர் Nov 24, 2017 08:38 PM

பார்ம் 16 எவ்வாறு நிரப்புதல்

அப்துல் மாலிக் Nov 11, 2017 12:16 AM

வங்கி கணக்கின் தொலைபேசி எண் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் கடிதம் எவ்வாறு இருக்க வேண்டும்?

நித்யா Aug 01, 2016 12:06 AM

முகவரி மாற்றம்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top