பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / குடிமக்களுக்கான சேவைகள் / ஆஃப்லைன் சேவைகள் / வரியில்லா கடன் பத்திரங்களை வாங்குவது எப்படி?
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வரியில்லா கடன் பத்திரங்களை வாங்குவது எப்படி?

வரியில்லா கடன் பத்திரங்களை வாங்குவது எப்படி?

வரியில்லா கடன் பத்திரங்கள்

வருமான வரி செலுத்தும் பலர், தங்களது முதலீட்டுக்கான லாபத்தில் வரி விலக்கு பெற வரியில்லா கடன் பத்திரங்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பலருக்கு இதை எங்கு எவ்வாறு வாங்குவது என்பதைக் குறித்த அனுபவம் இருப்பதில்லை. சில வருடங்களுக்கு முன் வரிச் சேமிப்பு கடன் பத்திரங்களை வழங்கிய பல நிறுவனங்கள் இருந்தன. உதாரணமாக இந்திய ரயில்வே நிதி நிறுவனக் கடன் பத்திரங்கள், ஹட்கோ நிறுவன கடன் பத்திரங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையப் பத்திரங்கள் இன்னும் பல..

வரிப் பயன்

நீங்கள் ஒரு வரிச் சேமிப்புப் பத்திரத்தை வாங்கும்போது அதில் இருந்து கிடைக்கும் வட்டிக்கு வரிச் செலுத்துவதில் இருந்து விளக்கு உண்டு. இதன் மூலம் வருமான வரியைக் கணக்கிடும் போது இந்த வட்டித் தொகையை மொத்த வருமானத்தில் சேர்க்க வேண்டியதில்லை.

உதாரணம்

நீங்கள் ஒரு வங்கியில் டெபாசிட்டை தொடங்கி அதன் மூலம் பத்தாயிரம் ரூபாய் வட்டி வருமானால் அதனை மொத்த வருமானத்தில் கணக்கில் கொள்ள வேண்டும். ஆனால் வரிச் சேமிப்புப் பத்திரங்கள் வாங்கினால் அதனைக் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை. எனவே இதன் மீது நீங்கள் எந்த வரியையும் செலுத்த வேண்டியதில்லை என்பது தெளிவாகிறது.

எங்கு வாங்கலாம்?

இவற்றை நீங்கள் பங்குகளை வாங்க பயன்படுத்தும் அதே வணிகக் கணக்கின் மூலம் வாங்கலாம். உங்கள் முகவரை அழைத்து இதற்கான ஆணையைக் கொடுக்கலாம் அல்லது நீங்களே கூட ஆன்லைனில் கணக்கு வைத்திருந்தால் அதன்மூலம் வாங்கலாம்.

இது போன்ற பத்திரங்களை வாங்கும் போது அவற்றின் விலை, வட்டி விகிதம், கணக்கு முடிவு நாள் ஆகிய விவரங்களைச் சரி பார்த்து வாங்குவது நல்லது.

ஆய்வு

மேலும் www.nseindia.com என்ற இணையத் தளத்தில் சென்று நீங்கள் வாங்க விரும்பும் பத்திரத்தை குறித்த தகவல்களைப் படித்து அறியலாம். அதற்கான தொடர்பை க்ளிக் செய்த பின்னர் மேற்கூறப்பட்ட உங்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்கும்.

வட்டி விகிதம்

இதில் மிகவும் முக்கியம் அதன் விலையும் வட்டி விகிதமும். உதாரணமாக 8.1 சதவிகித வட்டியுடன் 1,000 ரூபாய் மதிப்புடைய ஒரு பத்திரத்தை 1100 ருபாய் கொடுத்து நீங்கள் வாங்கும் போது உங்களின் வட்டி வருவாய் குறைந்து போகவே வாய்ப்புள்ளது. உங்களுக்கு 8.1 சதவிகித வட்டி கிடைக்கலாம் என்றாலும், நீங்கள் முதலில் வாங்கியவரைப் போல் அல்லாமல் 1,000ரூபாய்க்கு பதிலாக 1100 ருபாய் செலுத்த வேண்டியுள்ளதால் உங்களுடைய மொத்த வருவாய் அதிகளவில் குறையும்.

மதிப்பீடு

இந்தியாவில் பட்டியலிடப்பட்ட பத்திரங்களில் AAA மதிப்பீட்டினை பெற்றவை பெரும்பாலும் அரசு நிறுவன பத்திரங்களாகும்.

இத்தகைய பத்திரங்களின் முதிர்வு காலம் பொதுவாக வெளியிட்ட நாட்களிலிருந்து 10, 15 அல்லது 20 வருடங்களாக  இருக்கும்.

அடுத்த முறை நீங்கள் பத்திரம் வாங்கும் போது அனைத்து விவரங்களையும் நன்கு ஆராய்ந்து முக்கியமாக விலை மற்றும் வட்டி விகித விவரங்களைத் தெரிந்து கொண்டு பின்னர் முடிவெடுங்கள்.

ஆதாரம் : குட்ரிட்னஸ்

3.10344827586
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top