பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பிறப்பு / இறப்பு பதிவு செய்வதற்கான ஆவணங்கள்

பிறப்பு / இறப்பு பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

(பிறப்பு இறப்பு பதிவு சட்டம் பிரிவு 14,21 மற்றும் தமிழ்நாடு தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுறுத்தல் கடிதம் எண்.RNo.87721/vS/A/2000 நாள்:08.07.2000 & RNo.8345/VS/-A/2000 நாள்:12.02.2000 -ன்படி கீழ்கண்ட ஆவணங்கள் வழங்கவேண்டும்)

குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்குள் இலவசமாக குழந்தையின் பெயர் சேர்ப்பு செய்யலாம். ஒரு வருடம் நிறைவுற்ற பின்னர் ரூ.5/- காலதாமதக் கட்டணமாகப் பெற்று கீழ்கண்ட ஆதார் ஆவணங்களை பெற்று பெயர் சேர்ப்பு செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட குழந்தையின் பெயரை எக்காரணம் கொண்டும் முழுமையாக திருத்தம் செய்யக்கூடாது.

பதிவு செய்வதற்கான ஆவணங்கள்

பிறப்பு பதிவு செய்து 6 ஆண்டுகளுக்குள்

• பெற்றோரின் அடையாளம் & முகவரிக்கான ஆதாரங்கள் - குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை , ஓட்டுநர் உரிமம்,

• சான்றுரைப் படிவம்

பிறப்பு பதிவு செய்து 6 ஆண்டுகளுக்கு மேல்:

* குழந்தையின் பெயர், பிறந்த தேதி & தந்தை பெயர் குறிப்பிட்டு வழங்கப்படும் பள்ளியின் Encoj (Bonafide certificate)

* பெற்றோரின் அடையாளம் & முகவரிக்கான ஆதார ஆவணங்களான குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், நிரந்தர வருமான கணக்கு அட்டை, பாஸ்போர்ட் போன்றவை

* சான்றுரைப் படிவம்

பிறப்பு பதிவு செய்து 15 ஆண்டுகளுக்கு மேல்:

> SSLC பள்ளி மதிப்பெண் பட்டியல் நகல்

> பெற்றோரின் அடையாளம் & முகவரிக்கான ஆதாரங்கள் - குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வருமானம் அட்டை, பாஸ்போட் போன்றவை

> சான்றுரைப் படிவம்

> பெற்றோரால் நோட்டரி பப்ளிக் முன்பாக 20 ரூபாய் முத்திரைத் தாளில் வழங்கப்படும் பிரமாண பத்திரம். பிரமாண பத்திரத்தில் பெற்றோர் மற்றும் குழந்தையின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

திருத்தங்களுக்காக வழங்கப்படவேண்டிய ஆவணங்கள்

பிறப்பு பதிவில் திருத்தம் செய்ய

* திருத்தங்களுக்காக குழந்தையின் பெற்றோர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பெற்றோர் மரித்துள்ள நிலையில் தனியர் 18 வயது பூர்த்தியடைந்திருந்தால் பெற்றோரின் இறப்புச் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம், தனியார் 18 வயது பூர்த்தியாகாத நிலையில் பாதுகாவலர் தங்கள் அடையாள ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

* குழந்தை பிறந்த காலத்திற்கான பெற்றோரின் அடையாளம் & முகவரிக்கான ஆதார ஆவணங்களாவன : குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பெற்றோரின் திருமணச் சான்று, நிரந்தர வருமான கணக்கு அட்டை, பாஸ்போர்ட் போன்றவை

* பெற்றோரால் நோட்டரி பப்ளிக் முன்பாக 20 ரூபாய் முத்திரைத் தாளில் வழங்கப்படும் பிரமாண பத்திரம். பிரமாண பத்திரத்தில் பெற்றோர் மற்றும் குழந்தையின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

* இரண்டு நம்பதகுந்த நபர்களிடமிருந்து பெறப்படும் சான்றிதழ்.

* குழந்தையின் பெயரை எக்காரணங்கொண்டும் முழுமையாக திருத்தம் செய்ய இயலாது, துணை பெயர், குடும்பப் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் செய்யலாம், இனிசியல் விரிவாக்கம் செய்யலாம்.

இறப்பு பதிவில் திருத்தம் செய்ய

• இறந்த நபரின் சட்டபூர்வ வாரிசுகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

* இறந்த காலத்திற்கான அடையாளம் & முகவரிக்கான ஆதார ஆவணங்களான குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், திருமணச் சான்று, நிரந்தர வருமான கணக்கு அட்டை, பாஸ்போர்ட் போன்றவை

• இறந்த நபரின் வாரிசுகளின் அடையாளம் & முகவரிக்கான ஆதாரங்கள்

* இறந்த நபரின் வாரிசுகள் நோட்டரி பப்ளிக் முன்பாக 20 ரூபாய் முத்திரைத் தாளில் வழங்கப்படும் பிரமாண பத்திரம். பிரமாண பத்திரத்தில் இறந்தவரின் சட்டவாரிசுகளின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

காலம் தாழ்ந்த பிறப்பு / இறப்பு நிகழ்வுகளை பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்

ஓராண்டுக்குள் காலம் தாழ்ந்த பிறப்பு நிகழ்வுகளை பதிவு செய்ய வழங்கப்படவேண்டிய ஆவணங்கள்

* பெற்றோரிடமிருந்து விண்ணப்பம் மற்றும் நோட்டரி பப்ளிக் முன்பாக ரூ.20-க்கான முத்திரைத் தாளில் வழங்கப்படும் பிரமாணப்பத்திரம். பிரமாண பத்திரத்தில் பெற்றோரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

* பெற்றோரின் அடையாள அட்டை நகல்கள் (குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அடையாள அட்டை, நிரந்தர வருமான கணக்கு அட்டை, பாஸ்போர்ட் போன்றவை)

* தாயார் கருவுற்றிருந்த காலத்தில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதற்கான அட்டை (Ante Natal Care Card)

* குழந்தை பிறந்த பின்னர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதற்கான அட்டை (Post Natal Care Card)

* பிரசவம் பார்த்த நபர் வழங்கும் கடிதம் மற்றும் அவருடைய அடையாள அட்டை நகல்

* வீட்டில் பிரசவம் நடந்ததை அறிந்த இரண்டு நபர்களிடமிருந்து பெறப்படும் கடிதம்.

• உரிய கோட்ட சுகாதார ஆய்வாளரின் கள விசாரணை அறிக்கை

ஓராண்டுக்குள் காலம் தாழ்ந்த இறப்பு நிகழ்வுகளை பதிவு செய்ய வழங்கப்படவேண்டிய ஆவணங்கள்

> இறந்தவரின் சட்ட வாரிசுகளிடமிருந்து விண்ணப்பம் மற்றும் நோட்டரி பப்ளிக் முன்பாக ரூ.20-க்கான முத்திரைத் தாளில் வழங்கப்படும் பிரமாணப்பத்திரம். பிரமாண பத்திரத்தில் இறந்தவரின் வாரிசுகளின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

> இறந்தவரின் சட்ட வாரிசுகளின் அடையாள அட்டை நகல்கள் (குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அடையாள அட்டை நிரந்தர வருமான கணக்கு அட்டை, பாஸ்போர்ட் போன்றவை)

> இறப்பின் காரணத்திற்கான மருத்துவச் சான்று (உரிய படிவத்தில் படிவம் 4 அல்லது படிவம் 4A)

> இறந்தவரின் உடலை அடக்கம் / தகனம் செய்த மயான சான்று அல்லது சடலத்தை மருத்துவ கல்லுாரி மாணவர்களின் ஆய்வுக்காக தானமாக வழங்கப்பட்டதற்கான சான்று

> விபத்தில் நடைபெற்ற இறப்பு நிகழ்வுகளுக்கு காவல் நிலைய இறப்பு அறிக்கை

ஓராண்டுக்கு மேல் காலம் தாழ்ந்த பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளை பதிவு செய்ய வழங்கப்படவேண்டிய ஆவணங்கள்

நிகழ்வு நடைபெற்று ஓராண்டு நிறைவுற்ற பின்னர் உரிய குற்றவியல் நடுவர் நீதிமன்ற ஆணை மற்றும் மனுதாரரால் பூர்த்தி செய்யப்பட்ட பிறப்பு / இறப்பு படிவம் ஆகியனவற்றுடன் ரூ.10- கால தாமதக் கட்டணம் பெற்று உரிய நிகழ்வினை பதிவு செய்யவேண்டும்.

கிடைக்கப் பெறாச்சான்று பெற வழங்கப்பட வேண்டியவை

(பிறப்பு இறப்பு பதிவு சட்டம் 1969 பிரிவு 17, தமிழ்நாடு பிறப்பு இறப்பு பதிவு விதிகள் 2000 விதி 13, தமிழ்நாடு இந்திய தலைமை பதிவாளர் அவர்களின் அறிவுறுத்தல் கடிதம் எண்.1/10/2004Vs(CSR) நாள் 31.01.2007 மற்றும் துணை ஆணையர் (சுகாதாரம்) அவர்களின் சுற்றறிக்கை சு.து.ந.க.எண்.ம.சு.அபு.வி)/0013/2015 நாள்:25.02.2015 -ன்படி கீழ்க்கண்ட ஆவணங்கள் வழங்கவேண்டும்)

பிறப்புக்கான கிடைக்கப்பெறாச் சான்று பெறுவதற்கு வழங்கப்படவேண்டிய ஆவணங்கள்:

* பிறப்பு நிகழ்ந்த இடத்தை நிரூபிக்கும் ஆதாரச் சான்று

* குடும்ப அட்டை, பள்ளிச் சேர்க்கைக்கான ஆவணம், முதலில் படித்த பள்ளியிலிருந்து பெறப்பட்ட சான்று, பள்ளி கல்வி இறுதியாண்டு சான்றிதழ்

* பிறப்பு சான்று கோருகிற நபரின் தந்தை தாயார் ஆகியோரது சொந்த ஊர், பிறந்த போது குடியிருந்த இடம் / ஊர், பிறப்பு நிகழ்ந்த ஊர் ஆகிய விபரங்கள் மனுதாரரால் மறைக்காமல் பிறப்பு இறப்பு பதிவாளருக்கு அளிக்கப்படவேண்டும்.

* குழந்தை பிறந்தபோது பெற்றோர் வசித்த இருப்பிடத்திற்கான ஆதார ஆவணங்கள் கட்டாயம் வழங்கப்படவேண்டும் அவ்வாறான ஆதாரங்கள் இல்லையெனில் பிறந்த இடம் எந்தக் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறதோ அக்காவல் நிலையத்திலிருந்து பெறப்படும் சரிபார்ப்பு சான்றிதழ் (Police Verification Certificate) கட்டாயம் வழங்கப்படவேண்டும்.

* மற்றக் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள்

* பிறப்பு விபரங்கள், பிறப்பு பதிவில்லாச் சான்று எந்த காரணத்திற்காக தேவைப்படுகிறது என்பதையும், தனியாரின் பிறப்பு சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட மருத்துவமனைகளில் வேறு தேதிகளில் நிகழவில்லை என்பதையும் தனியார் தனது பெயர் மற்றும் பெற்றோரின் பெயரை இதுவரை அரசிதழில் பெயர் மாற்றம் செய்யவில்லை என்பதையும் சட்டம் சார்ந்த எந்த பின்விளைவுகளுக்கும் மனுதாரரே பொறுப்பு என்பதையும் தெரிவிக்கும் புகைப்படத்துடன் கூடிய நோட்டரி பப்ளிக் முன்பாக வழங்கப்படும் பிரமாண பத்திரம் (அபிடவிட்).

> பெயர் மாற்றம் செய்திருந்தால் அதன் ஆதாரம் இணைக்கப்படவேண்டும், குழந்தை பிறப்பின் போது எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாரோ அப்பெயரில்தான் கிடைக்கப்பெறாச் சான்று வழங்கப்படும்.

• பிறப்புக்கான கிடைக்கபெறாச் சான்று பெற பெற்றோர், பெற்றோர் மரித்துள்ள நிலையில் தனியார் 18 வயது பூர்த்தியடைந்திருந்தால் பெற்றோரின் இறப்புச் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம், தனியார் 18 வயது பூர்த்தியாகாத நிலையில் பாதுகாவலர் தங்கள் அடையாள ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

• பிறப்புக்கான கிடைக்கபெறாச் சான்று உரிய மண்டல நல அலுவலரால் கையொப்பமிட்டு வழங்கப்படும்.

இறப்புக்கான கிடைக்கப்பெறாச் சான்று பெறுவதற்கு வழங்கப்படவேண்டிய ஆவணங்கள்:

* இறந்தவர் இறந்ததற்கான மருத்துவச் சான்று (இறந்த காலத்தில் வழங்கப்பட்டிருக்க வேண்டும்)

* இறப்பு நிகழ்ந்த இடத்தை நிரூபிக்கும் ஆதாரச் சான்று / மருத்துவமனையால் வழங்கப்பட்ட இறப்பு அறிக்கை / காவல் துறையால் வழங்கப்பட்ட இறப்பு அறிக்கை

* இறந்தவர் அடக்கம் / தகனம் செய்யப்பட்டதற்கான மயானச்சான்று

* அவ்வாறான ஆதாரங்கள் ஏதும் இல்லாத நிலையில் இறந்த இடம் எந்தக் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறதோ அக்காவல் நிலையத்திலிருந்து பெறப்படும் சரிபார்ப்பு சான்றிதழ் (Police Verification Certificate) மனுதாரரால் கட்டாயம் வழங்கப்படவேண்டும்.

* இறப்பு பதிவில்லாச் சான்று எந்த காரணத்திற்காக தேவைப்படுகிறது என்பதையும், தனியரின் இறப்பு சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட மருத்துவமனைகளில் வேறு தேதிகளில் நிகழவில்லை என்பதையும் சட்டம் சார்ந்த எந்த பின்விளைவுகளுக்கும் தாங்களே பொறுப்பு என்பதையும் இறந்தவரின் சட்ட வாரிசுகள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய நோட்டரி பப்ளிக் முன்பாக வழங்கப்படும் பிரமாண பத்திரம் (அபிடவிட்).

* இறப்புக்கான கிடைக்கபெறாச் சான்று பெற இறந்தவரின் சட்ட வாரிசுகள் மட்டுமே தங்களின் ஆதார ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

* இறப்புக்கான கிடைக்கபெறாச் சான்று உரிய மண்டல நல அலுவலரால் கையொப்பமிட்டு வழங்கப்படும்.

வ.

எண்

பிறப்பு / இறப்பு பதிவு செய்யப்பட்ட வருடம்

தொடர்பு கொள்ள வேண்டிய மண்டலம் / பகுதி

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

தொலைபேசி எண்

1

பழைய சென்னை மாநகராட்சியின் 1879-ம் வருடம் முதல்1990-ம் வருடம் வரை)

தலைமையிடம்

மண்டல நல அலுவலர் (பு.வி) / துப்புரவு அலுவலர்

044-25619251

2

விரிவாக்கம் செய்யப்பட்ட திருவொற்றியூர் கத்திவாக்கம் பகுதிகளின் வருட பதிவேடுகள்

மண்டலம் 1 / திருவொற்றியூர்

மண்டல நல அலுவலர் -1/ துப்புரவு அலுவலர்

9941171771 9445190061

3

விரிவாக்கம் செய்யப்பட்டமணலி பகுதிகளின்வருட பதிவேடுகள்

மண்டலம்2/ மணலி

மண்டல நல் அலுவலர் –2/ துப்புரவு அலுவலர்

9445190682 9445190062

4

விரிவாக்கம் செய்யப்பட்டமாதவரம் பகுதிகளின்வருட பதிவேடுகள்

மண்டலம்3/ மாதவரம்

மண்டல நல அலுவலர் -3/துப்புரவு அலுவலர்

9445190683 9445190063 9445025830

5

பழையசென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை பகுதியின்1991-ம்வருடம் முதல் நடப்பு

மண்டலம்4/ தண்டையார் பேட்டை

மண்டல நல அலுவலர் -4/துப்புரவு அலுவலர்

9444362700 9445190064

6

பழைய சென்னை மாநகராட்சி ராயபுரம் பகுதியின் 1991-ம் வருடம் முதல் நடப்பு தேதி வரை

மண்டலம் 5 / ராயபுரம்

மண்டல நல அலுவலர் -5  துப்புரவு அலுவலர்

9884237071 9445190065

7

பழைய சென்னை மாநகராட்சி அயனாவரம் பகுதியின் 1991-ம் வருடம் முதல் நடப்பு தேதி வரை

மண்டலம்6 அயனாவரம்

மண்டல நல அலுவலர் - 6 துப்புரவு அலுவலர்

9445190686 9444292124 9445190066

8

விரிவாக்கம் செய்யப்பட்ட அம்பத்துார் பகுதிகளின் வருட பதிவேடுகள்

மண்டலம்7 அம்பத்துார்

மண்டல நல அலுவலர் - 7 துப்புரவு அலுவலர்

9445190687 9445190067

9

பழைய சென்னை மாநகராட்சி கீழ்பாக்கம், செனாய்நகர் பகுதிகளின் 1991-ம் வருடம்

மண்டலம்8 செனாய் நகர்

மண்டல நல அலுவலர் - 8 துப்புரவு அலுவலர்

9445025904 9444141920 9445190068

10

பழையசென்னை மாநகராட்சி நுங்கம்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதிகளின்

மண்டலம் 9 / நுங்கம்பாக்கம்,

மண்டல நல அலுவலர் - 9 துப்புரவு அலுவலர்

9445190689 9445190069 9444272679

11

பழைய சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் பகுதியின் 1991 ம் வருடம் முதல் நடப்பு தேதி

மண்ட லம் 10 / கோடம்பாக்கம்

 

மண்டல நல அலுவலர் - 9 துப்புரவு அலுவலர்

9445190690 9445190070

 

12

விரிவாக்கம் செய்யப்பட்ட வளசரவாக்கம் பகுதிகளின் வருட பதிவேடுகள்

மண்டலம் 11 / வளசரவாக்கம்

 

மண்டல நல அலுவலர் - 11 துப்புரவு அலுவலர்

9884426650 9444340831 9445190071

13

விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலந்துார் பகுதிகளின் வருட பதிவேடுகள்

மண்டலம் 12 / ஆலந்துார்

மண்டல நல அலுவலர் - 12 துப்புரவு அலுவலர்

9445190692 9445190072

14

பழைய சென்னை மாநகராட்சி அடையாறு பகுதியின் 1991 ம் வருடம் முதல் நடப்பு தேதி

மண்டலம் 13 அடையாறு

 

மண்டல நல அலுவலர் – 13 துப்புரவு அலுவலர்

9445190213 9445190073

 

15

விரிவாக்கம் செய்யப்பட்ட உள்ளகரம் புழுதிவாக்கம் பகுதிகளின் வருட பதிவேடுகள்

மண்டலம் 14 / உள்ளகரம் புழுதிவாக்கம்

மண்டல நல அலுவலர் – 14 துப்புரவு அலுவலர்

9445191442 9445190074

 

16

விரிவாக்கம் செய்யப்பட்ட சோழிங்கநல்லுார் பகுதிகளின் வருட பதிவேடுகள்

மண்டலம் 15 /  சோழிங்கநல்லுார்

மண்டல நல அலுவலர் – 11 துப்புரவு அலுவலர்

9791107907 9445190075

 

ஆதாரம் - சென்னை மாநகராட்சி

3.3
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top