பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி?

வாரிசுச் சான்றிதழ் பெறுவது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வாரிசுச் சான்றிதழ்

ஒரு குடும்பத்தின் தலைவர் இறந்து விட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணப் பலன்களையோ பெறுவதற்கு வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக பெறப்படும் சான்றிதழ் தான் வாரிசு சான்றிதழ். ஒருவர் இறந்த பின் அவரின் சொத்துக்களைப் பிரச்சனை இல்லாமல் வாரிசுகள்  பகிர்ந்துகொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் மிகவும் அவசியம்.

வாரிசுச் சான்றிதழ் எப்போது அவசியமாகிறது?

நிதி நிறுவங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்பு தொகையைப் பெற கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்பு பெற எனப் பலவிதங்களில் பயன்படுகிறது. இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையைக் காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.

பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசு பணியில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணியின் பலன்கள் பெறுவதற்கும் பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது. மேலும், இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையைக் காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.

இதை எப்படி பெறுவது?

சாதிச் சான்றிதழ் வாங்குவதற்கு என்ன நடைமுறையோ அதுதான் வாரிசு சான்றிதழ் வாங்குவதற்கும். வாரிசுச்சான்றிதலுக்கான விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்ககளில் கிடைக்கும். வாரிசு சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுகள் யார் யார், அவர்களின் இருப்பிட சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலமாக விசாரணை நடத்திய பிறகு வட்டாசியரால் வாரிசு சான்றிதழ் வழங்கப்படும்.

ஆதாரம் : வட்டாச்சியர் அலுவலகம்

3.18139534884
Arunkumar Sep 14, 2020 04:37 PM

வாரிசு சான்றிதல் எத்தனை நாட்களில் கிடைக்கும்

கபிலன் Aug 22, 2020 03:07 PM

வாரிசு சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் என்ன?

அருண்ராஜ் Aug 07, 2020 11:17 PM

வாரிசு சான்று வாங்க யாரு யாருடைய ஆவணங்கள் வேண்டும் என்ன மாதிரியான ஆவணங்கள் வேண்டும்

Naveen Aug 04, 2020 08:10 AM

வாரிசு சான்றிதழ் பெற எத்தனை நாட்கள் ஆகும்

புருஷோத்தமன் Jun 22, 2020 12:33 PM

நான்
வாரிசு சான்றிதழ் க்காக 29/04/2020 இணைய தளம் வழியாக பதிவு செய்து இருக்கிறேன்.இன்னமும் submitted to HQDT
என்று இருக்கிறது. இது எப்போதும் confirm ஆகும். பிறகு இதை நான் இணைய தளம் வழியாக எப்படி எடுப்பது கூறுங்கள்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top