பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆதார் கார்டு வடிவமைப்பு

ஆதார் கார்டு வடிவமைப்பு பற்றி தெரிந்துகொள்ளவும்.

தனித்த அடையாளம்

ஆதார் அட்டையில் தனித்த எண் இருப்பதால், அதனை போலியாக உருவாக்குவது கடினம். அதற்கு காரணம் நம் பயோமெட்ரிக்ஸ் தகவல் உடன் அதாவது கை விரல் ரேகை, கண் கருவிழியின் ரேகை மற்றும் முகம் போன்ற பல தகவல்கள் இந்த அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

எளிமையான வடிவமைப்பு

ஆதார் என்பது உலகளாவிய எண்ணாகும். சென்ட்ரல் யூனிக் ஐடென்டிஃபிகேஷன் டேட்டாபேஸை தொடர்பு கொண்டு பயனீட்டாளரின் அடையாளத்தை நாட்டில் எங்கு இருந்து வேண்டுமானாலும் ஏஜென்சிகளும் சேவை மையங்களும் உறுதி செய்து கொள்ளலாம்.

மின்னணு பணமாற்றல் பயன்கள்

UID-யுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு எண் மூலமாக பாதுகாப்பான முறையில் குறைந்த செலவில், பயனீட்டாளரின் கணக்கில் பணத்தை பரிமாற்றம் முடியும்.

ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம்

இந்த ஆதார் அட்டையின் மூலம் வங்கி பரிமாற்றத்தில் வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான பரிமாற்றம் செய்துக்கொள்ள முடியும். இதனால் வங்கிச் சேவையில் தரம் மேம்படும். இந்த அட்டையின் எந்த ஒரு ஏஜென்சிகளுக்கும் பயனீட்டாளரின் அடையாளத்தை சரிப்பார்க்க முடியும், மேலும் இத்தகவல்கள் 100% உத்திரவாதத்துடன் கிடைக்கும்.

சுய சேவை பயனீட்டாளர்கள்

ஆதார் அட்டையை மத்திய அரசால் அங்கீகாரிக்கப்பட்ட ஒரு அடையாள ஆவணம், இந்த அட்டையின் மூலம் பயனாளிகள் தங்களின் உரிமைத் தகுதி, கோரிக்கை சேவைகள் மற்றும் தாங்கள் எழுப்பியுள்ள புகார்களை பற்றி இன்றைய தேதி வரையிலான தகவல்களை தங்களின் கைப்பேசி மூலமாக, kiosks மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

ஆதாரம் : மாநில ஆதார் மையம். தமிழ்நாடு அரசு

2.91111111111
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
முஹமது நசுருதீன் Sep 09, 2016 06:52 PM

ஆதார் கார்ட் ஐ ரேஷன் கார்டில் இனனைக்கும் போது பதிவிறக்கம் செய்த
ஆதார் கார்ட் செயலி செயல்படாமல் தங்கள் துரித குறியீடு தவறானது என
பதில் வருகிறது அதற்க்கு என்ன செய்யவேண்டும் தயவு செய்து பதில் அளிக்கவும்.

Anonymous Jul 04, 2016 04:26 PM

கணினி மையம் வைத்திருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் இ சேவை மையம் தொடங்கலாமா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top