பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் பதிவு செய்ய

வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் பதிவு செய்யவேண்டிய முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் அட்டைக்கு நமது பெயரை புதியதாக சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, பெயர் திருத்தம் செய்ய, முகவரி திருத்தம் செய்ய என ஆன்லைனில் வசதி செய்து கொடுத்துள்ளார்கள். அதற்கான இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களுக்கு எது தேவையானதோ அதை கிளிக் செய்யவும்.

புதியதாக வாக்காளர் பெயர் சேர்க்க register as voter என்பதனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

நீங்கள் பிறந்த இடம், முகவரி என அனைத்தையும் தெரிவிக்கவும். நீங்கள் தட்டச்சு செய்ய ஏதுவாக நேரடி கீபோர்ட் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் நீங்கள் எளிதில் தமிழில் தட்டச்சு செய்துகொள்ளலாம்.

அடுத்து உங்கள் புகைப்படத்தினை ஸ்கேன்செய்து அதன் அளவானது 350 கே.பி.க்கு மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனை அப்லோடு செய்யுங்கள். உங்கள் தொலைபேசி எண் மற்றும இ-மெயில் முகவரியை கொடுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அவர்களது பெயரையும் உங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவு முறையையும், அவர்கள் அட்டை எண்ணிணையும் குறிப்பிடவும்.

அனைத்து விவரங்களும் பதிந்த பின்னர் இதில் உள்ள வெரிபிகேஷன் கோடினை தட்டச்சு செய்து விண்ணப்பத்தினை சமர்ப்பணம் செய்யுங்கள். சில நாட்களில் உங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை உங்களை வந்து அடையும்.


ஆன்லைனில் பதிவு செய்யும் முறை

ஆதாரம் : மாநில தேர்தல ஆணையம்

3.08955223881
த.கார்த்திகேயன் Oct 15, 2019 08:03 PM

ஐயா வணக்கம். நான் காஞ்சிபுரம் மாவட்டம் ஐயன்பேட்டை கிராமம் வாலாஜாபாத் வட்டம். எனது வாக்காளர்கள் அட்டை தவறவிட்டு விட்டேன் மீண்டும் வாக்காளர்கள் அட்டை பெறுவது எப்படி. ப்ளாஸ்டிக் அட்டை வேண்டும் எங்கே விண்ணப்பிப்பது

அலேக்ஸாண்டர் Jun 09, 2018 11:52 AM

ஐயா என்னிடம் 6ஆம் வகுப்பு பள்ளி சான்றிதழ் மட்டும் உள்ளது புகைப்படத்துடன் கூடிய எந்த ஆதாரமும் இல்லை நான் எப்படி வாக்காளர் அடையாள அட்டை பெறுவது

மாதேஷ்வரன் May 18, 2018 11:35 AM

நான் 15/05/2000 அந்த தேதில் பிறந்தேன் நான் வாக்களிக்க தகுதி உடையவரா?

NITHYAA Dec 31, 2017 04:37 PM

திருமணமாகிவிட்டது. கணவனின் சொந்த ஊர், மாவட்டம் வேறு ஆகவே வேறு தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்வது எப்படி

ரா.வெள்ளைச்சாமி Nov 19, 2017 10:29 AM

ஐயா எனது வாக்காளர் அட்டை தவரவிட்டுடன் எனக்கு புதிய அடையாள அட்டை பெறுவது எப்படி?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top