பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பட்டா - உரிமைக்கு ஆதாரம்

பட்டா வாங்குதல் குறித்த சில தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன

நிலத்தை வாங்கும்போது கிரய பத்திரம் செய்துகொண்டால் மட்டும் போதாது. கண்டிப்பாக பட்டா மாறுதலையும் செய்ய வேண்டும். விலை கொடுக்கப்பட்டது என்பதற்கு சாட்சி கிரய பத்திரம். ஆனால் நிலத்தின் உரிமை மாறிவிட்டது என்பதற்கு பட்டாதான் சாட்சியம்.

பட்டாவில் பட்டா எண், சர்வே எண், கிராமம், வட்டம், மாவட்டம், சொத்தின் உரிமையாளர் அவரது தந்தையார் பெயர் ஆகிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும். பட்டாவில் நிலத்தின் பரப்பளவு சதுர மீட்டர் அல்லது ஏர் அளவுமுறையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

கிரய பத்திரத்திலும் பட்டாவிலும் நிலத்தின் அளவு மாறுபட்டிருக்கலாம். அப்போது பட்டாவில் உள்ள அளவே இறுதியாக கொள்ளப்படும்.

பொதுவாக பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் பெறப்படும். அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அதைப்போல ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாசில்தார் அலுவலகத்தில் பட்டா மாற்றத்திற்கான உத்தரவுகள் வழங்கப்படும்.

பட்டாவுக்கு விண்ணப்பிப்பவர் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று தாசில்தார் அலுவலகத்தில் பட்டாவை பெற்றுக்கொள்ளலாம் என்ற நடைமுறை இருக்கிறது.

கூட்டு பட்டாவை தனித்தனி பட்டாக்களாக மாற்றம் செய்வதற்கு தாசில்தார் அலுவலகத்தில் உள்ள சர்வேயருக்கு விண்ணப்பித்து நிலத்தை அளக்க வேண்டும். அதன்பிறகு தனிப்பட்டாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதாரம் : தினத்தந்தி

3.12765957447
G. Priya Mar 29, 2020 07:04 PM

பட்டா யார் பெயரில் உள்ளது என்பதை எப்படி கண்டுபிடிப்பது

துரைராஜ் Jul 28, 2017 08:34 PM

என்னுடைய நிலம் 15 சென்டில் 4 சென்ட் நிலத்தில் சர்வே எண் மட்டும் வேறொருவருடைய பெயரில் உள்ளது. ஆனால் அவர் யார் என்றே தெரியவில்லை, இதை எப்படி சரிசெய்வது

sakthivel Apr 19, 2017 12:28 PM

951 பத்திரம் பாட்டன் பெயரில் வாங்கியது இப்போ வேறு சம்மந்தமில்லாத பெயரில் வருகிறது கேட்டால் udr இல் மாறிவிட்டதாக சொல்றார்கள் மாற்றம் செய்வது எப்படி .நன்றி

sivaarts20@gmail.com Jan 30, 2017 11:07 AM

1951 பத்திரம் பாட்டன் பெயரில் வாங்கியது இப்போ வேறு சம்மந்தமில்லாத பெயரில் வருகிறது கேட்டால் udr இல் மாறிவிட்டதாக சொல்றார்கள் மாற்றம் செய்வது எப்படி .நன்றி.

R.C.சுந்தரவள்ளி Oct 05, 2016 03:10 PM

மூதாதையர் வழி குடும்ப சொத்தின் கூட்டுபட்டாவில்வாரிசுகளின் பெயர்சேர்க்க என்ன செய்ய வேண்டும்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top