অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பட்டா மாறுதல் செய்வது எப்படி?

பட்டா மாறுதல் செய்வது எப்படி?

  • சொத்து வாங்குபவர்கள் அந்த சொத்தை தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்துவிடுவதுடன்  பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட சொத்து எந்த தாலுகா எல்லைக்கு உட்பட்டது என்பதை அறிந்து, அந்த பகுதி தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்திலும் பட்டா மாற்றம் செய்வதற்கு விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. அதனை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களை குறிப்பிட வேண்டும்.
  • விண்ணப்பதாரர் பெயர், தகப்பனார் அல்லது கணவர் பெயர், இருப்பிட முகவரி போன்ற விவரங்களை தெளிவாக எழுத வேண்டும். அத்துடன் பட்டா மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரங்களை கவனமாக நிரப்ப வேண்டும்.
  • அந்த விவரங்களை பிழை இல்லாமல் பதிவு செய்ய வேண்டும். அதில் சர்வே எண் போன்ற இலக்கங்களை தவறு இல்லாமல் எழுத வேண்டும்.
  • சொத்துக்குரிய சர்வே எண் உள்ளடக்கிய இடம் முழுவதும் வாங்கப்பட்டு இருக்கிறதா? சொத்தின் ஒரு பகுதி மட்டும் வாங்கப்பட்டு இருக்கிறதா? என்பதை குறிப்பிட்டு அது தொடர்பான சர்வே எண்ணை குறிப்பிட வேண்டும்.
  • ஒரு பகுதியை மட்டும் வாங்குவதாக இருந்தால் உட்பிரிவு சர்வே எண்ணை சரியாக குறிப்பிட வேண்டும். அத்துடன் பட்டா மாறுதலுக்கு கட்டணம் செலுத்திய விவரங்களை இணைக்க வேண்டும்.
  • சொத்து விண்ணப்பிப்பவரின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சொத்துவரி செலுத்திய ரசீது, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைக்க வேண்டும்.
  • சொத்தானது பாகப்பிரிவினை, செட்டில்மெண்ட், உயில் என ஏதாவது  ஒரு ஆவணம் மூலம் கிடைத்திருக்கலாம். அது பற்றிய விவரத்தையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

ஆதாரம் : டெய்லி தந்தி

கடைசியாக மாற்றப்பட்டது : 6/22/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate