பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தேசிய வேலைவாய்ப்புகள் சேவை

தேசிய வேலைவாய்ப்புகள் சேவை (National Career Service (NCS)) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

வேலை தேடுபவர்களுக்கும், வேலைக்கு ஆள் தேடுபவர்களுக்கும், வேலைவாய்ப்புகள் குறித்து ஆலோசனைகளை நாடுபவர்களுக்கும், வேலைவாய்ப்புத் தரக்கூடிய பயிற்சிகளைப் பெற விரும்புவர்களுக்கும், இடையே தொடர்பை ஏற்படுத்துவதுதான் தேசிய வேலைவாய்ப்புகள் சேவையின் நோக்கமாகும். இவர்கள் அனைவருக்கும் வேண்டிய தகவல்களை வழங்கி ஒரு புள்ளியில் அவர்களை இந்தச் சேவை சந்திக்கச் செய்கிறது.

தகவல் தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையில் நன்கு வடிவமைக்கபட்ட இணையதளம், நாடேங்கிலும் உள்ள வேலைவாய்ப்பு மையங்கள் பலமொழிகளிலும் பினரையும் இணைத்து, நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டிசேசை வழங்குவதே இதன் இலட்சியமாகும்.

தேசிய வேலைவாய்ப்புகள் சேவையின் கூறுகள்

தேசிய வேலைவாய்ப்புகள் சேவையின் இணையதளம்

வேலை தேடுவோர், வேலை அளிப்பவர்கள், வேலை ஆலோசகர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் ஆதார் எண் மூலம் அடையாள நிரூபணம் செய்த பின்னர் இந்தத் தளத்தில் ஒருங்கிணைக்கின்றனர். ஆன்லைன் மூலம் இதில் இலவசமாக பதிவு செய்யலாம். தகவல் தொழில் நுட்பத்துறைமுறை ஜவுளித்துறைவரை, கட்டுமானத்தொழில் முதற்கொண்டு வாகனத்தொழில் வரை, மருந்துத் தொழில் முதற்கொண்டு இன்னும் பற்பல தொழில்துறைகள் என சுமார் 53 முக்கியமான துறைகளில் 3000த்திற்கும் மேற்பட்ட தகவல்கள் இந்தத் தளத்தில் உள்ளன. வேலைதேடுபவர்கள், பொது எதிர்பார்க்கப்படுகின்ற நிலவரத்தை எளிதாகத் தெரிந்து கொள்ளும்படியாகவும் இந்தத்தளம் உள்ளது.

வேலை மையங்கள் (Career Centres)

ஆன்லைன் மூலமாக தேசிய வேலைவாய்ப்புகள் சேவைமையத்தில் பதிவுசெய்ய இயலாதவர்கள், அருகில் உள்ள வேலை மையங்களில் நேரில் சென்று பதிந்துகொள்ளலாம். அதன்மூலமாக, எல்லாவிதமான வேலைகள், வேலைகளில் சேருவதற்கான ஆலோசனைகள் வேலைவாய்ப்பு மூகாம்கள் உள்ளிட்ட பலவிதமான தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். வேலைவாய்ப்பு மூகாம்கள் பல்கலைக்கழகங்களின் வேலைவாய்ப்பு வழிகாட்டு மையங்கள், போன்றவற்றை வேலைமையங்களாக அரசு மாற்றி வருகிறது.

கால்சென்டர்

ஆன்லைன் மூலமாகப் பதிவுசெய்வதற்கு சிரமப்படுபவர்கள் அல்லது வேறு ஏதேனும் விளக்கம் பெற விரும்புபவர்களுக்காக, பல மொழிகளிலும், விளக்கம் தரக்கூடிய கால் சென்டர் உள்ளது. இது செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை எட்டு மணி முதல் இரவு எட்டுமணிவரை பெயல்படும். இந்தக் கால் சென்டரின் எண் 1800 425 1514.

நடுநிலை முதலீட்டாளர்களின் ஈடுபாடு

வேலை தேடுவோருக்கான வசதிகள்

தேசிய வேலைவாய்ப்புகள் சேவையின் இணையதளத்தில் தற்போது கிடைக்கின்ற 53 தொழில்துறைகளின் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வேலைகளைப் பற்றி அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு உகந்த ஒரு முடிவினை இளைஞர்கள் மேற்கொள்ளலாம். ஆன்லைன் மூலமாகவோ அல்லது வேலைமையங்களில் நேரில் சென்றோ பதிகன்றவர்களுக்கு கீழ்காணுட சேவைகள் கிடைக்கும்.

 • பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் அல்லது தற்போது தான் பட்டப்படிப்பில் தேறியவர்கள் வேலைபெறுவதற்கான தமதுதிறனை மேம்படுத்திக்கொள்ள தகவல் தொழில் நுட்பப் பயிற்சி மென்திறன் பயிற்சி போன்றவற்றை அளிக்க கூடியவர்கள் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
 • கிடைக்க கூடிய சில வேலைகளில் தனது எதிர்காலத்திற்கு உகந்தது எது என்றோ அல்லது வருங்காலத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய வேலை எது என்றோ குழப்பங்கள் இருந்தாலும். இப்போதைய வேலையைவிட மேலும் நல்ல வேலைக்கு மாறிக்கொள்ள எந்தவிதமான திறன் பயிற்சிகளைப் பெற வேண்டும் என்று தெரிந்து கொள்ளவும், இதற்கான ஆலோசகர்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம், இளைஞர்களுக்குத் தேவையான இதுபோன்ற நல்ல ஆலோசனைகளை வழங்கும் நிபுணர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அந்த ஆலோசகர்களின்; முழுவிவரங்களையும் தொலைபேசி எண்களையும் இணைய தளத்தில் பார்த்துத் தெரிந்து சந்திப்புக்கு நேரம் பெற்றுக் கொள்ளலாம். ஆலோசனைகளை நேரிலும், தொலைபேசி மூலமாகவும் அல்லது வீடியோ கான்பரன்சிஸ் மூலமாகவும் பெறலாம்.
 • வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்கலாம்
 • வேறு உதவிகளைப் பெற தமது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள உள்ளுர் உதவியாளர் பற்றி தொடர்பினைப் பெறலாம்.
 • வேலைகள் மற்றும் பயிற்சிகள் பற்றிய அறிக்கைகளைக் காணலாம்.

பணி அமர்த்துவோர்

வேலைக்கு ஏற்ற சரியான நபரைத் தேடிக்கொண்டிருக்கும் பணி அமர்த்துவோர். நாடு முழுவதும் இருந்த பதிவுசெய்துள்ள வேலைதேடுவோர் பற்றிய விவரத்தொகுப்பில் இருந்து நபர்களைத் தெரிவு செய்து கொள்ளளலாம். அலுவலகப் பணிமுதற்கொண்டு தொழிற்சாலைப் பணியாளர்கள் வரை பலதரப்பட்ட வேலைகளுக்கும் ஏற்றவர்களைக் கண்டறிந்து பணியில் அமர்த்திக் கொள்ளலாம். எவ்விதக் கட்டணமும் இன்றிக் ஆன்லைன் மூலமாக அல்லது நேரிடையாகச் சென்று தமது விவரங்களைப் பணி அமர்த்துவோர் பதிவு செய்து கொண்டால், கீழ்க்காணும் வசதிகளைப் பெறலாம்.

 • தம்மிடம் உள்ள வேலைகளைப் பற்றி அறிவிப்பு வெளியிடலாம்.
 • தமக்கு ஏற்ற பணியாளர்களைத் தெரிவு செய்து கொள்ளலாம்.
 • நேர்முகத் தேர்வுக்கு அழைப்புகள் அனுப்பலாம்.
 • வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கெடுக்கலாம்
 • தமக்கு அருகில் உள்ள உதவிதருபவரைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
 • வேலைத்தேடுவோர் / பயிற்சிகள் பற்றிய அறிக்கைகளைக் காணலாம்.

ஆலோசகர்கள்

ஆலோசகர் என்பவர் ஒரு பிரச்சினை பற்றி தெளிவினை ஏற்படுத்தி அதனை திர்ப்பதற்கான பல்வேறு மாற்று வழிகள் பற்றி எடுத்துரைத்தும் அதனை எதிர்கொள்வதற்கான உத்திகளை உருவாக்கி கொள்ள வழிகாட்டியும் நம்மைப் பற்றியே வழிப்புணர்வை ஏற்படுத்துகிறவர். இதற்கென முறையான பயிற்சிகளைப் பெற்ற தொழில்முறை ஆலோசகராகத் திகழ்பவர். வேலை தேடுபவர் தனது திறமைகளையும் பலவீனங்களையும் தெரிந்துகொள்ள உதவும் உளவியல் தேர்வான சைக்கோ மெட்ரிக் போன்ற தேர்வுகளை எதிர்கொள்ளவும் இந்தச் தளத்தில் ஏற்பாடுகள் உள்ளன. அத்தகைய தேர்வுகளில் பங்கேற்றவர்களின் அறிக்கைகள் அவர்களைப் பற்றிய விவரங்களோடு சேர்த்து பதிவேற்றப்படும். ஆலோசகர்கள் இந்த விவரங்களைப்பார்த்து, வேலை தேடுகின்ற நபருக்கு இன்னும் தேவையான திறன்பயிற்சிகள் எவையென்று பரிசீலித்து ஆலோசனைகளை வழங்குவார்கள். இங்கே பதிவு செய்து கொள்ளும் ஆலோசகர்களுக்கு கீழ்க்காணும் சேவைகள் கிடைக்கும்.

 • தமது ஆலோசனை வகுப்புகளின் கால நிரலை வெளியிடலாம்.
 • தேவைக்கு ஏற்றவாறு தமது ஆலோசனை வகுப்புகளைத் தொடங்கலாம்.
 • ஆலோசனை பெற நேரம் கேட்பவர்களுக்கு ஒப்புதல் அளிக்கலாம். அல்லது ஏற்கனவே ஒதுக்கிய நேரத்தை ரத்துசெய்யலாம்.
 • தன்னுடைய விவரங்களை அப்-டேட் செய்யலாம். புதிய ஆலோசனை சேவைகளை பற்றிய விவரங்களைப் பதிவேற்றலாம்.
 • வேலைவாய்ப்பு மூகாம் போன்றவற்றில் பங்கேற்கலாம்.

வேலைமையங்கள்

வேலை தேடுபவர்களின் நலனுக்காகப் பலவிதமான நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கின்ற வேலை மையங்கள், புதிய வாய்ப்புகளுக்கான வழிகளையும் கண்டறியலாம். மேலும் பலதரப்பினருக்கும் இடையே கலந்துறவாடலும் ஏற்பாடு செய்யலாம். பதிவு செய்து கொள்ளும் வேலை மையங்களுக்குக் கீழ்க்காணும் வசதிகள் கிடைக்கும்.

 • தளத்தைப் பயன்படுத்துவோரையும் அவர்களது பணிகளையும் நிர்வகித்தல்
 • வேலை தேடுவோர், பணி அமர்த்துவோர், உள்ளுர் உதவி ஆலோசகர், வேலைவாய்ப்பு சேவைமையங்கள் போன்றவற்றைப் பதிவு செய்தல்
 • ஏதேனும் ஒரு விவர அடிப்படையில் வேலை தேடுவோர் பற்றிய விவரங்களைத் தேடுதல்.
 • வேலை தேடுவோர் பற்றிய விவரங்களைப் பதிவிறக்கம் செய்தல்
 • வேலை மையத்தின் விவாதக் களமாகத் திகழ்தல்
 • வேலை வாய்ப்பு முகாம்களையும் மற்ற நிகழ்ச்சிகளையும் நடத்துதல்
 • ஆலோசனை கால நிரலைத் தெரிந்துகொள்ளுதல்

திறன் அளிப்பவர்கள்

வேலை தேடுபவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக சிறப்புப்பயிற்சிகளை அளிக்கின்றவர்களுக்கு, தேசிய வேலைவாய்ப்புகள் சேவை இணைய தளம் கீழ்க்காணும் வசதிகளை அளிக்கிறது.

 • திறன் பயிற்சி அளிப்பவர் பற்றிய விவரங்களை அப்டேட் செய்யலாம்
 • பயிற்சி வேண்டும் என்று பதிந்துள்ள பலருடைய விவரங்களைப் பெறலாம்.
 • திறன் பயிற்சி வகுப்புகள் மற்றும்வேலையில் அமர்த்தும் பயிற்சிகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
 • அருகில் உள்ள உள்ளுர் உதவி தருநர் பற்றி விவரம் அறியலாம்.

பணியமர்த்தும் அமைப்புகள் / அரசுத்துறைகள்

பணியமர்த்தும் அமைப்புகள் என்பவை தனியார் தொழில் முகமைகளாகும். தமக்கு வேண்டிய தகுதிகள் கொண்ட பணியாளர்களைக் கண்டறிந்து ஆளெடுப்பதற்கு தேசிய வேலைவாய்ப்புகள் சேவையின் இணையதளம் பெரிதும் உதவியாக இருக்கும். இவை தம்மைப்பற்றிப் பதிந்து கொண்டால் கீழ்க்காணும் சேவைகளைப் பெறலாம்.

 • புதிய வேலைகள் பற்றிய விவரங்களை பதிவேற்றலாம்.
 • பதிவேற்றிய வேலைவிவரங்களில் மாறுதல் செய்யலாம்.
 • தகுதியான நபர்பற்றிய விவரங்களைக் காணலாம் / பதிவிறக்கம் செய்யலாம்.
 • நேர்முகத் தேர்வுக் கடிதங்கள் அனுப்பலாம்
 • நிகழ்வுகளிலும், வேலை வாய்ப்பு முகாம்களிலும் பங்கேற்கலாம்.
 • அருகில் உள்ள உள்ளுர் உதவி தருநர்பற்றி விவரம் அறியலாம்.
 • பதிவேற்றப்பட்டுள்ள வேலைகள் பற்றிய விவரங்களைக் காணலாம்.

அரசுத்துறைகளும், இதே போலப்ப பதிவு செய்து கொண்டு தமது தேவைக்கு ஏற்ற தகுதிகள் கொண்ட நபர்கரைளத் தெரிவு செய்து பணி அமர்த்தலாம். பணி அமர்த்தும் அழைப்புகளுக்கு உரிய அனைத்து சேவைகளும் அரசுத்துறைகளுக்கும் கிடைக்கும்.

இதர சேவைகள்

உள்ளுர் சேவைகள் :

தேசிய வேலைவாய்ப்புகள் சேவை இணையதளத்தின் பிரத்யேக சேவைகளில் ஒன்று, வீடுகளுக்குத் தேவையான ஓட்டுநர், மின்பணியாளர்,. குழாய் பணியாளர்கள், தச்சர், போன்றவர்களைப் பற்றிய விவரம் அளிப்பதாகும். சிறுவேலைகளுக்கு எளிதாக ஆட்கள் கிடைப்பதை உறுதிசெய்வதுடன் உள்ளுரில் உள்ளவர்களுக்கும் வேலைகள் கிடைக்க இந்த ஏற்பாடு உதவுகிறது. பதிவுசெய்யப்படுபவர்களின் அடையாளம் ஆதார் எண் மூலம் உறுதிசெய்யப்படுவதால் பாதுகாப்பம் பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.

தொழில் முனைவோருக்கான விவரங்கள்

நிதிவசதி, தொழில்நுட்ப வசதி, சந்தை வசதி போன்ற அனைத்தும் எளிதாக கிடைக்கிற தற்காலச் சூழலில் சுயதொழில் புரிகின்றவர்கள்,தொழில்முனைவோராக வளர்வதற்குப் பெரும் அளவில் வாய்ப்புகள் உள்ளன. அவர்களும் வளர்ந்து பலருக்கும் வேலைவாய்ப்புகளையும் அவர்கள் உருவாக்கித்தரமுடியும். இந்த நோக்கத்தில் தொழில்முனைவோருக்குத் தேவையான பலவிவரங்களையும் உதவிகரமான பல இணைப்புகளையும் இந்தத் தளத்தில் காணலாம்.

ஆதாரம் : தேசிய வேலைவாய்ப்புகள் சேவையின் இணையதளம்

3.18
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top